காற்றினில் நச்சு நாதம்!!
கவனம் கொள்வோம் நாமும்!!
இயற்கை அளித்த உயிர் கொடைகளில், நாம் அறிந்த ஒன்று, காற்று, அல்லவா! அது மென்மையாக, இதமாய் வீசும் போது தென்றலாக நம்மை மகிழ்விக்கிறது! புயலாகி
உயிர்கள், உடமைகளை தாக்கி அழிக்கும் போது, நமக்கு அச்சத்தினை தந்து நிலை குலைய வைப்பதும் உண்மை!!.
ஆனால், நம் மனித இனம், அறிந்தும் அறியாமலும், இனிய காற்றின் தூய்மை கெட்டுப் போகும், வகையில் மாற்றி வரும் அவலம்!அதனால் மனிதர்களே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள், எண்ணெய் கிணறுகள், வெளியேற்றும் புகையில் உள்ள நச்சு, அளவீடு வரைமுறை தாண்டியும், வளிமண்டல காற்று பாதிக்கின்றது. பல ஆண்டுகளாக, நம் நாட்டின் தலைநகரம் புது தில்லி, காற்று மாசு பிரச்சனைகள் சந்தித்து வருகிறது 2015 ஆம் ஆண்டு முதல் இந்த மாநகரத்தின் , காற்று மாசு.
பிரச்சனை, பொது சுகாதாரம் பாதிக்கும் அளவிற்கு ஆகிவிட்டது. 2016-17 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றம் தாமாக, இந்த பிரச்சனை பற்றி முடிவு எடுத்து, டெல்லி உள்பட, இந்திய மாநகரங்களில் “காற்று மாசு நீக்க” செயல் திட்ட வரைவு ஒன்றினை உருவாக்க ஆணையிட்டது.இந்திய ஒன்றிய அரசின், சுற்று சூழல், வனம், பருவ கால மாற்றம் அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு, இந்தியா முழுவதும் ஏற்படும் காற்று மாசு பாதிப்புகளை அறவே அகற்ற “தேசிய தூய்மை காற்று திட்டம் “(NATIONAL CLEAN AIR PROGRAM -NCAP ) என்ற மிக சிறப்பான திட்டத்தினை உருவாக்கியது. அதே ஆண்டில் அக்டோபர் மாதம் தேசிய பசுமைதீர்ப்பாயம்(NGT -NATIONAL GREEN TRIBUNAL ) நம் நாட்டின் 102 மாநகரங்கள் காற்று மாசு பாதிப்பு அடைந்தவை என்றும், மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வரையறுத்துள்ள, நுண்ணிய திட மாசு பொருள் தர நிர்ணயம் அளவினை எட்டவில்லை என தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் NCAP அரங்கேற்றப்பட்டது. இந்த தூய்மை காற்று திட்டம், நுண்ணிய மாசு அடர்வினை (PM2.5 and PM10) 20 முதல் 30 சதவீதம் 2024 ஆம் ஆண்டுக்கு முன் குறைக்க முடிவு செய்யப்பட்டது.2017 ஆம் ஆண்டு
அடிப்படையாக கொண்டு அடர்வினை ஒப்புமை படுத்தி செயல்பட திட்டமிடப்பட்டது.
காற்று மாசு தடுக்க, கடினமான நடவடிக்கைகள் எடுக்க, காற்று தர கண்காணிப்பு நம்
நாட்டில்அனைத்து பகுதிகளிலும் அறிநது தரவு தளம் (DATA BASE ) உருவாக்க, பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலமாக பொது மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாசு அகற்ற உரிய பயிற்சி பெற திட்டங்கள் வகுக்கப்பட்டது. NCAP திட்டத்தை முதலில் செயல்படுத்த 132 மாநகரங்களை, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் முடிவு செய்து செயல்பாடுகளை மேற்கொண்டுவருகிறது. எனினும் NCAP திட்டம் உருவாக்கி செயல்பட்டு வரும் நான்காண்டுகளுக்குப் பிறகு அதில் உள்ள சவால்கள் மற்றும் குறைபாடு, முன்னேற்றங்கள் ஆகியவற்றையும் மீள் ஆய்வு செய்யும் நிலையில் உள்ளோம்.
காற்று தர கண்காணிப்பு நிலையில், செப்டம்பர் 2022 ஆம் ஆண்டுப்படி 10% நம் நாட்டில் சட்டபூர்வ மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரங்களில் மட்டுமே காற்று தர நிர்ணயம் ஆய்வு நிலையங்கள் செயல்படுகின்றன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, சட்ட பூர்வ நகரங்கள் 4041, மற்றும் 3894 மக்கள் தொகை தகவல் கணக்கெடுப்பு நகரங்கள் உள்ளன. ஆனால் மாநகரங்களில் மற்றும் நகரங்கள் 400 ல் மட்டும் pm 10 காற்று மாசு தர அளவீடு செய்யும் தேசிய காற்று தர கண்காணிப்பு, முறை மற்றும் தொடர் காற்று மாறும் தர கண்காணிப்பு முறை அமைப்புகள் அமைந்துள்ளன. இவற்றில் 51% நிலையங்கள் நேரடி மனித இயக்கும் கருவிகளை கொண்டும், மற்றவை 21%மட்டுமே துல்லியமாக கண்காணிக்கும் கருவிகள் கொண்டு அமைந்துள்ளவை ஆகும்.23%மட்டும் இரு வகை அமைப்புகள் கருவிகள் பெற்றுள்ளன.
NCAP திட்டத்தின் கீழே, காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் உருவாக்க எண்ணிக்கை மற்றும் விரிவு படுத்தவும்,10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகம் உள்ள நகரங்களில் இந்த வசதியினை மேம்படுத்த முடிவு எடுக்கபட்டுள்ளது.
NCAP செயல்பாடுகளுக்கு நிதி ஆதாரம் மா நகரங்களின் நிர்வாகம் பெற்று வருகின்றன. இந்த நிதி 15 ஆவது நிதி ஆணையம் மூலமாகவும் கிடைக்கிறது. இவை நகரங்களில் தூய்மை காற்று திட்டம் வெற்றி பெற பயன்படுத்தி வர முடிவு எடுக்கப் பட்டது. ஆனால், இந்த நிதி சாலைஅகலப் படுத்துதல், தூய்மை தொடர்பு கொண்ட செயல்களுக்கு பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. காற்றில் உள்ள மாசு பொருட்களை இனம் கண்டு,அவற்றின் தரம், அளவீடு அறிவியல் பூர்வமாக அவற்றை குறைக்க முயற்சி ஆகிய செயல்பாடுகள் இல்லை என்பது வருத்தம் தரக்கூடிய ஒன்று.2020- 22ஆம் ஆண்டுகளுக்கு 472 கோடி ரூபாய் நிதி,2023ஆம் ஆண்டுக்கு 596 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஸ்வச் பாரத் மிஷன், அம்ரூத், SMART CITY MISSION, SATAT மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தி திட்டம் மற்றும் மாநில வளங்கள்
மூலம் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளபடுகிறது.
ஆனால் 52 நகரங்கள் மட்டும் 60%நிதி முதல் தவணையாக பெற்றுள்ளன.பயன்பாட்டு சான்றிதழ் மற்றும் தொகை செலவழிக்கப்படாத தொகைக்கான வட்டி மற்றும் திட கழிவு மேலாண்மை திட்டம் கருத்துரு சமர்ப்பித்த பின், அந்த நகரங்களில் NCAP திட்டம் செயல் பாடு முன்னேற்ற அறிக்கை ஆய்வுக்கு பின் 40%நிதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் எதிர்பார்ப்புகள் ஆன,256 குறியீடு இலக்குகள் நிலை, பற்றி NCAP நிகழ்ச்சி அறிக்கைகளில் நிறைவு செய்வது மிக முக்கியம் ஆகும். பின்னர் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அறிக்கைகளை ஆய்வு செய்து 80-100 மதிப்பெண்கள் பெற்றால் முழு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப் படும்.2022ஆம் ஆண்டு தகவல் படி 43 இந்திய நகரங்கள் மட்டும் மீதம் 40%நிதி பெற்றுள்ளன.
34 நகரங்கள் எவ்வித நிதி பெற தகுதி இல்லை. 37 நகரங்கள் கூடுதல் ஊக்கத்
தொகை பெறுகின்றன. எனினும் இந்த திட்டத்தின் மூலம் அறிவியல் பூர்வ மாக மிக நுண்ணிய மாசு (pm2.5)குறைவு செய்யும் நடவடிக்கை தெளிவாக இல்லை என்பது NCAP நோக்கத்தினை மாற்றிவிடுமோ, என்ற ஐயம் உள்ளது.
NCAP திட்டம், pm2.5 என்ற நுண்ணிய துகள் மாசு, மனித நுரையீரல்கள் பாதிக்க செய்யும் அதனை குறைக்க நோக்கம் கொள்ள வேண்டும். எரித்தல் முறை மூலம் இது அதிகம் பரவும். இதனை துல்லியமாக கணக்கிடும் கருவிகள் மூலம் அறிந்து, பின்னr காற்றில் மாசு குறைப்பு அளவீடு அறியலாம். ஆனால், pm10 அளவுள்ள பெரிய துகள் மாசு மட்டும் நேரடி சாதாரண கருவிகள் மூலம் அறியப்பட்டு தரவு கணக்கெடுப்பு மூலம் மதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இது தவிர்க்கப்படவேண்டும்.
தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்கள், திடக் கழிவு எரித்தல் மூலம் வெளியேறும் pm2.5 நுண் துகள் மாசு குறைத்து மட்டும் தூய்மை காற்று திட்டம் செயல்படுத்த வேண்டும். pm2.5 நுண் துகள் மாசு துல்லியமாக அளவிடும் கருவிகள் மூலம் பெறப்படும் தரவுகள்,2022 ஆம் ஆண்டு, செப்டம்பர் வரை 43 நகரங்களிலிருந்துமட்டும் தேவையான அளவு கிடைத்துள்ளதாக டெல்லி, அறிவியல் சூழல் மையம் என்ற தன்னார்வ தொண்டு அறிவியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சில குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் NCAP செயல்பாடு உள்ளது.14 நகரங்களில் 10% காற்று மாசு (pm2.5)ஓரளவு குறைந்த நிலை காணப்படுகிறது.
காசியாபாத், நோய்டா, குர்ஜா, ஆல்வார் ஆகிய நகரங்களில் நேரடி (manual )காற்று மாசு அளவீடு கருவிகள் இல்லை. அதனால் காற்று மாசு குறைப்பு நகரங்கள் பட்டியலில் இவை காணப்படவில்லை. மேலும் துல்லியமாக கணக்கீடு கருவிகள் மூலம் கண்காணிக்கப் படுக்கையில் 26 நகரங்கள் அதிக காற்று மாசு உள்ளதாக தெரிகிறது. தேசிய அளவில் காற்று மாசு குறைக்க குறிக்கோள் இருக்கும்
நிலையில் ஒரே மாதிரியான அளவீடு, அருகருகில் உள்ள மாநில நிர்வாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட தீர்மானிக்க வேண்டும். டெல்லி, உத்தரப்ரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாறு செயல்படுகின்றன.
NCAP என்ற காற்று தூய்மை திட்டத்தின் மூலம், 2026 ஆம் ஆண்டு நிறைவில் 40%நுண்ணிய துகள் மாசு பொருள் காற்றில் குறைக்க இந்திய அரசு நோக்கம், குறிக்கோள் கொண்டு திட்டம் அமைத்துள்ளது. ஆனால், விழிப்புணர்வு பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு தருவது மட்டுமின்றி, ஒருங்கிணைந்த செயல்பாடு, நவீன கருவிகள், அறிவியல் அணுகுமுறை ஆகியவற்றிற்கு முன்னுரிமை தரப்படவேண்டும். காற்று மாசு நச்சு நுண்ணிய துகள் குறைக்க நகர நிர்வாகங்கள் கவனத்துடன் உரிய நடவடிக்கைகள் எடுத்தால் மட்டும், தான் நம் பொது மக்கள் சுகாதார நிலை மேம்படும் வாய்ப்புகள் உள்ளன.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.இப்பத

