• சகதியில் வீழ்ந்தும்

தூய்மை வெளிப்பட்டது

முளைவிட்ட விதை.

 

  • ஒற்றுமையாய் நின்று

சிதறியவற்றை ணைத்தது

துடைப்பம்.

 

  • இருக்கு ஆனா

இல்லை

மதம் கொண்டாடும் இறைவன்.

 

  • அடை இருள் சூழ்ந்து

நெஞ்சில் பால் வார்த்தது

பஞ்சத்தில் மழை.

 

  • தேவைக்கு வர வாழ்ந்தேன்

தேவைக்கு மேல் வர மடிந்தேன்

மழை வெள்ளம்.

 

  •  காத்திருக்காது  ஓடுவேன்

தடுத்தால் பலன் உண்டு

மழைநீர் சேகரிப்பு

 

  •  உடை அணிந்தும்

  உடல் கூசியது

  ஆணின்  பார்வை.

 

  • திறமை செழித்திருக்க

  ஊடுருவிப் பார்த்தாய்

  பெண்மையை.

 

  • ம்மா…. என்று கூவ

சோகம் கவ்வும்

மடி கனத்த பசு.

 

  • வண்ணம் தீட்டி

வீடு சென்றான்

மேற்கில் சூரியன்.

 

  • கை தீண்டும் வண்ணங்கள்

கூந்தல் உதைத்து மறுத்ததேன்

விதவை பூக்காரி

 

  • சுதந்திரம் கிடைத்தது

அடைக்கப்பட்ட கூண்டில்

மருமகள் பாடு

 

  • அவளுக்கென எழுதப்பட்ட

தனிச் சட்டம்

மாமியார் அரசியல்

 

  • தெளிக்கப்பட்ட பன்னீர்

சந்தோஷத்தில் மூதாட்டி

பேரனின் சிறுநீர்

 

  • சுப்ரபாதம் அனல் பறக்க

மனதில் திகில் கிளம்ப

பெற்றோர்ஆசிரியர் சந்திப்பில்.

 

  • ஒரே இரவில்

கொத்துக் கொத்தாய் மடிந்தது

ஈசல்

 

  •  நீ தொட்டதெல்லாம்

          பொன்னானது

           விடியும் வேளை.

 

  • திரும்பத் திரும்ப அடிக்க

பறந்து தப்பிக்கும்

பந்து.

 

 

பா.திவ்யா செந்தூரன்

விழுப்புரம்

 

 

 

 

 

 

10 thoughts on “ஹைக்கூ கவிதை – பா.திவ்யா செந்தூரன்”
  1. சிறப்பான ஹைக்கூ கவிதைகள் தோழர். வாழ்த்துகள்

  2. சிறப்பான முயற்சி…
    தரமான விளைவுகள்..
    தங்களது ஹைக்கூவல்கள்…

    அவசரப்படாமல் தெரிந்தெடுத்து… தேர்ந்தெடுத்து அனுப்பினால்… அட …யாரது…என் திரும்பி பார்க்க வைப்பீர்கள்…

    சிறப்பு..👍👍👍

    1. தங்களது கருத்துக்கு நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *