உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்..!

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்..!

 

நாமனைவரும் உறவினர்களா? சாதி மதம் குலம் கோத்திரம்.. மொழி நாடு இனம் என்று மனித இனம் எவ்வளவோ கூறுபட்டு கூறு கெட்டுப்போய் கிடக்கிறது.. நான் ரிச்சர்ட் டாக்கின்ஸின் சமீபத்திய ஒரு புத்தகம் வாசித்தேன். அதன் தலைப்பு THE ANCESTOR’S TALE .. கட்டுரை வடிவத்தில் இல்லாமல் அழகான கதை வடிவத்தில் அதே அவர் எழுதிச் செல்கிறார் நாம் அனைவரும் உறவினர்களா.. என்றால்.. ஆம் என்பதே விடை! இந்திய ஜனாதிபதி என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி இந்திய பிரதமரும் கூட …எதிர்கட்சி தலைவர் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்.. அமெரிக்க ஜனாதிபதியே என்னுடைய கசின் பிரதர்.. இங்கிலாந்தின் அரசர் சார்லஸ் என்னுடைய இன்னொரு கசின் பிரதர்.!!. இது எவ்வளவு ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்.

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

இந்தியாவின் பிரபலமான தாவரவியல் மூலக் கூறிய உயிரியல்.. டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும் நண்பருமான அனில் கோவர் சமீபத்தில் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.. முன்பெல்லாம் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது முழு உரையையும் சேர்த்து ஏதாவது ஒரே ஒரு பிரச்சனையை பேசுங்கள் என்று சொல்வார்கள் இப்போதெல்லாம் ஒரு பிரச்சனை என்பது கூட அதிகப்படியாக கருதப்படுகிறது ! நீங்கள் அறிமுகம் மட்டும் கொடுத்துவிட்டு பேசாமல் அமர்ந்து விடுங்கள் என்று சொல்வது..

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

தற்காலத்தில் ஃபேஷனாகிவிட்டது.. என்றார் அவர்.. ரிச்சர்ட் டாக்கின்ஸ் THE ANCESTOR’S TALE நூலில் ஒரே ஒரு விஷயத்தை பற்றி மட்டுமே விரிவாக எழுதிச் செல்கிறார்.. நம்முடைய உலகிலேயே மிகப் பழைய மூதாதையரை தேடி நாம் போகின்ற அற்புதமான புனித பயணமாக அந்த நூல் விரிவடைகிறது.

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

இப்போது நாம் விஷயத்திற்குள் செல்வோம் நாம் ஒவ்வொருவரும் இரண்டு பெற்றோர்கள் கொண்டவர்கள் அப்படியானால் நம்முடைய தாய்க்கும் தந்தைக்கும் அவரவர்களுக்கு இரண்டு பெற்றோர்கள் உண்டு எனவே நமக்கு நான்கு பேர் முந்தைய தலைமுறையின் பிரதிநிதிகள். அதாவது இரண்டு தாத்தாக்கள் இரண்டு பாட்டிகள். இந்த நான்கு பேருக்கும் அவருக்கு இரண்டு பெற்றோர்கள் என்று வைத்துக்கொண்டால் நம்முடைய கொள்ளுத்தாத்தா கொள்ளுப்பாட்டி இவர்களின் எண்ணிக்கை எட்டு.. நாலு கொள்ளுத் தாத்தா நாலு கொள்ளு பாட்டி.. அதற்கு அடுத்த தலைமுறை 16 பேரை கொண்டிருக்கும் அதுதான் பாட்டன் வகையறா.. அதற்கும் ஒருபடி மேலே போனால் நாம் ஒருவருக்கு மட்டுமே 32 முப்பாட்டன் வகையறா.. அந்த தலைமுறையும் கடந்தால் நாம் 64 பேர் கொண்ட அடுத்த தலைமுறையைச் சந்திக்கிறோம்.. இப்படியே போனால் என்ன ஆகும் என்பதுதான் ரிச்சர்ட் டாக்கின்ஸ்ன் கேள்வி..

இப்படி இரண்டு மடங்காகவும் கிட்டத்தட்ட நாம் 40 தலைமுறைகள் கடந்தால் அதாவது ஒரு நூற்றாண்டுக்கு நான்கு தலைமுறை என்று வைத்துக்கொண்டு கடப்போம்யானால் 1000 ட்ரில்லியன் மக்கள் நம்முடைய மூதாதையர்கள் ஆக இருப்பார்கள்! ஆனால் இந்த பூமியில் மொத்தம் வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கை 300 பில்லியன் தான் . இன்றும் கூட உலகின் மொத்த மனித எண்ணிக்கை ஏழு பில்லியன் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய தலைமுறை என்று பார்த்தால் இதைவிட 150 மடங்கு அதிகம் இது எப்படி சாத்தியம் இதை விட கொடுமையான விஷயம் உண்டு.

10 நூற்றாண்டுகள் 20 நூற்றாண்டுகள் வினால் சென்றால் என்ன ஆகும் என்று யோசிக்கிறேன்… நாம் ஜூலியஸ் சீஸர் காலத்துக்கு சென்றால்… சங்க காலத்தை அடைந்து விடுவோம்.. அது 80 தலைமுறையை தாண்டி இருக்கும்.. அதுல 1000 ட்ரில்லியன் ட்ரில்லியன் அளவுக்கு மனிதர்கள் இருந்தால் மட்டுமே நாம் நினைக்கும்.. தலை முறைகளை நாம் தனிமைப்படுத்தி பெயர் வைத்து அழைத்துக் கொள்ள முடியும்…. [நல்ல வேளை.. நாம் நம் பாட்டன்ங்கள் வரை மட்டுமே நீத்தார் திதி கொடுக்கிறோம்]- ஆனால் இதை ரிச்சர்ட் டாக்கின்ஸ் வேறு விதமாக நமக்கு முன் வைக்கிறார்..

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

ஒருவேளை அத்தை மகன் மாமன் மகன் திருமணம் செய்து- கொண்டால்.. அப்போது தலைமுறைகளின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைகிறது ஏறத்தாழ நாம் அனைவருமே தூரத்து உறவினர்கள் ஆகிவிடுகிறோம் ஒவ்வொரு திருமணத்தின்போதும்….. நம்முடைய உறவுகள் முழு உலகத்தினுடைய எல்லா மனிதர்களையும் ஒன்று கூட்டி விடுகின்றன. இதை கசின் பிரதர் சித்தாந்தம் என்று அழைக்கிறார் பரிணாமவியல் மற்றும் மரபணுவியல் விஞ்ஞானிகள் புவியில் இருக்கும் அனைவருமே உறவினர்கள் என்பதை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அடைந்துவிட்டார்கள் நாம் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் ஐம்பதாவது தலைமுறையிலாவது சாதி மத இனம் மொழி நாடு பேதங்களை கடந்து ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளாக இருந்திருப்போம் எல்லா மனிதர்களுக்கும் சேர்த்து ஒரு பொதுவான தலைமுறை 3,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இருக்கிறது. இதை வைத்து பைபிளில் வருவது போல ஆதாம் ஏவாள் சித்தாந்தத்தை நம்பி விட வேண்டாம் என்கிறார் டாக்கின்ஸ் ஒரே தாய் ஒரே தந்தையும் மூதாதையர் தங்களுக்குள் உடலுறவு செய்துகொண்டு இந்த தலைமுறை உருவாகவில்லை அது அப்படி அல்ல… 60,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி உலகம் முழுவதும் குழுக்களாக பிரிந்து நம்முடைய மூதாதையர்கள் பல நாடுகளை பல இடங்களை அடைந்து இருக்கிறார்கள் .. நம்முடைய மரபணுக்கள் கூட எல்லாம் ஒன்றாக இருக்கின்றன.

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

BRYAN SYKES எழுதிய செவன் டாட்டர்ஸ் ஆஃப் ஈவ்.. புத்தகம் வாசித்திருப்பீர்கள் நம்முடைய அனைவரது மரபணுக்களும் உலக அளவில் ஒரு காலத்தில் ஏழு ஆதி பெண்களிடம் இருந்து.. வந்துள்ளதை மரபணுவியல் நிரூபித்திருக்கிறது.. அதே போல ஸ்பென்ஸர் வெல்ஸ் எழுதிய தி ஜர்னி ஆஃப் மேன் புத்தகம் எனக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மனிதர்களை நோக்கியே நம்ம அனைவரது மரபணுக்களும் கட்டமைப்பு அடைகின்றன என்கிற விஷயத்தை புரிய வைத்தது.. அறிஞர் வால் நோவா ஹராரி.. குறிப்பிடுவதைப் போல ஹோமோ சாபியன்ஸ் எனப்படும் நாம்.. இந்த பூமியை நம் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த பிறகு நாம் மிகவும் குறுகிய உறவினர் வட்டத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..

CHAUCER எழுதி உலகளவில் பிரபலமான கான்டர்புரி டேல்ஸ்.. பாணியில் இந்த புத்தகத்தை ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியிருக்கிறார் புனித பயணம் மேற்கொள்ளும் ஒரு குழு காலத்தின் பின்னோக்கி பயணிக்க தொடங்குகிறது அவர்கள் தங்களுடைய மூதாதைவர்களை தேடிச் செல்கிறார்கள் என்கிற அறிவியல் புனைகதை வடிவம் இந்த நூலுக்கு அற்புதமான சுவாரசியத்தை வழங்குகிறது.. 40 அத்தியாயங்கள் உள்ளன எல்லாம் சேர்ந்து அவருடைய மூதாதையர்களை சந்திக்க ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இணைகின்ற இடம் இந்த புத்தகத்தின் அற்புதமாகும் மனித இனத்தினுடைய ஒட்டுமொத்த பரிணாமவில் ஃப் வளர்ச்சியை இதை விட அழகாக யாரும் சொல்ல முடியாது.. எனக்கு ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய வோல்கா முதல் கங்கை வரை புத்தகம் உட்பட பல புத்தகங்களை இது ஞாபகப்படுத்தியது.

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

வாழ்க்கை எப்படி தோன்றியது மனிதன் என் கலாச்சாரங்களை சிறைச்சாலைகளாக எப்படி மாற்றிக் கொண்டான் விதிகளை அமைத்துக்கொண்டு தங்களுக்குள் பிரிவினைகளை எப்படி உருவாக்கிக் கொண்டான் மதங்களின் தோற்றம் பணத்தின் தோற்றம் அதிகாரத்தின் தோற்றம் இவற்றை அறிஞர் நோவால் ஹராரி போலவே நமக்கு விளக்குகின்ற இன்னொரு அற்புத புத்தகம் தான் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எழுதியிருக்கும் தி அண்ட் செட்ர்ஸ் டேல்….

கொடூர ஆணவ படுகொலைகள் படுபாதகமான சாதிய குடிசை எரிப்பு சம்பவங்கள்…. சனாதனம்.. வர்ணாசிரம விவாதங்கள்.. குடிநீர் தொட்டியில் மலம் போடுவது… திருவள்ளுவருக்கு காவி உடை..அது இது என்று அனைத்து வகையிலும் நாறிக்கொண்டிருக்கும் நம்முடைய சமூக மானுடவியல் ஒட்டுறவு.. மதவெறியைத் தூண்டுகின்ற கார்ப்பரேட் காவி கலாச்சாரம் இவற்றையெல்லாம் இந்த நூலை வாசிக்கிறபோது -ஆத்திர உணர்வோடு தூ என்று துப்பிவிட தோன்றுகிறது.. பாரதி போல நெஞ்சு பொறுக்குதில்லையே என்று உண்மையிலேயே பதற வேண்டியிருக்கிறது..

மனிதர்கள் மட்டுமல்ல புவியில் முதலில் தோன்றிய பாலூட்டிகளை நோக்கி நம்முடைய மரபணுக்களை புனித பயணம் மேற்கொள்ள வைக்கிறார் ரிச்சர்ட் டாக்கின்ஸ்.. அவை அங்கிருந்து முதல் முதுகெலும்பு விலங்குகளிடம் நம்மை இட்டுச் செல்கின்றன இடையில் பறவைகள் பேராண்டி என்று நம்மை அரவணைக் கின்றன.. ஒன்று மட்டும் புரிந்தது இந்த பூமியின் ஆச்சரியமான பரிணாமவியல் மரபணுவியல் ரகசியம் ஒன்று என்னிடம் காதோடு காதாக இந்த புத்தகத்தின் மூலம் சொல்லப்பட்டது – நீங்கள் வளர்க்கும் உங்கள் வீட்டு வளர்ப்பு நாயின் கசின் பிரதர் களில் நானும் ஒருவன்..

 

கட்டுரையாளர் : 

உங்கள் வீட்டு நாயின் ஒன்று விட்ட சகோதரன் நான்| ரிச்சர்ட் | தலைமுறை | புத்தகம் | Ayesha Era Natarasan | https://bookday.in/

ஆயிஷா இரா.நடராசன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. S. HariKrishnan

    ரிச்சர்ட் டாக்கின்ஸின் the god delusion மற்றும் யுவால் நோவா ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகம் வாசித்திருக்கிறேன். அருமையான புத்தகங்கள். தி அண்ட் செட்டர்ஸ் டேலும் வாங்கிவிடுகின்றேன். புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி சார்.

    குறைந்தபடசம் இதைப் போன்ற புத்தகங்களால்தான் வளியார்களிடமிருந்து( மதவாத முண்டங்களிடமிருந்து) எளியோரை மீட்க முடிகிறது.

    மிக்க நன்றி சார் 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *