வரப்பு வெட்டியவனின்
முதுகும்
நீர் பாய்ச்சியவனின்
முதுகும்
பாத்தி கட்டியவனின்
முதுகும்
விதை விதைத்தவனின்
முதுகும்
உழுது பண்படுத்தியவனின்
முதுகும்
உரமிட்டவனின்
முதுகும்
நாற்று நட்டவனின்
முதுகும்
களை பிடிங்கியவனின்
முதுகும்
மருந்து தெளித்தவனின்
முதுகும்
விளைந்த கதிர்களின்
முதுகும்
அரிவாள்களின்
முதுகும்
அறுவடை செய்பவனின்
முதுகும்
கதிரடிப்பவனின்
முதுகும்
வளைவதால் தான்
தலை நிர்ந்து நிற்கிறது தேசம்
இந்த நிமிர்வு
இன்னும் எத்தனை காலமோ?
நஞ்சை நிலங்களில்
நடவு செய்யப்பட்டுவரும்
வானுயர்ந்த வாழிடங்களால்…
ஐ.தர்மசிங்