I. Dharma singh Writes Two Poetries in Tamil. ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள் (வெற்று வார்த்தைகள்). Book Day and Bharathi Puthakalayam

ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள்



1. கவிதை

கடந்து போகிறவர்கள்
எல்லோரும்
இருளின் நிறத்தில்
நிழலாய் தென்படுகிறார்கள்
கருப்பில் தோய்ந்த முகங்களை
பார்க்கும் போதெல்லாம்
இரகசியமாக
எனக்குள் நானே
நகைத்துக் கொள்கிறேன்
என்னிடமிருந்த நகைப்புகள்
வலுவிழந்த பிறகுதான் புரிகிறது
இதுவரையிலும்
அடர்ந்த இருளுக்குள் நின்று
அன்னியரை பார்த்துக் கொண்டிருந்ததே
நான் தான் என்பது…
எனக்குள் நானே
வெட்கப் பட்டுக் கொள்கிறேன்
என்னுள் படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரியாதெனும்
நம்பிக்கையில்…
” தெரிந்தால் யாரும் நகைத்து விடுவார்களோ எனும்
மெல்லிய பதட்டத்தில்…”

I. Dharma singh Writes Two Poetries in Tamil. ஐ. தர்மசிங் எழுதிய இரண்டு கவிதைகள் (வெற்று வார்த்தைகள்). Book Day and Bharathi Puthakalayam

2. “வெற்று வார்த்தைகள்”

வார்த்தைகளை வீசினான்
விழுந்தேன்
எழுந்து விட முயலும் போதெல்லாம்
வார்த்தைகளை இன்னும்
வசீகரமாக வீசுவதில்
கவனமாக இருந்தான்
எனக்கு விழுந்து கிடப்பதே
சுகமாகிப் போனது
அவன் வெற்றியை
உயர்த்திய பிறகுதான்
எனது தோல்வியின்
ஆழம் புரிந்தது
ஆவேசத்துடன் எழும்பி
திரும்பிப் பார்க்கிறேன்
என் மனமுதுகில் சுமையாய்
குவிந்து கிடக்கும்
புகழ்ச்சியின் முனையில்
அவனது
வெற்று வார்த்தைகள்…

ஐ. தர்மசிங்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *