அவனை “ சீ நாயே ”
என்று உமிழாதீர்கள்
எந்த நாயும்
இன்னொரு நாய் மீது
சிறுநீர் கழிப்பதில்லை
அவனை ” எருமை மாடு ”
என்று திட்டாதீர்கள்
எந்த எருமையும்
இன்னொரு எருமை மீது
சிறுநீர் கழிப்பதில்லை
அவனை ” கழுதை ”
என்று வசைபாடாதீர்கள்
எந்தக் கழுதையும்
இன்னொரு கழுதை மீது
சிறுநீர் கழிப்பதில்லை
” எளியவன் மீது
சிறுநீர் கழித்தது
இதயம் இல்லாதவனின்
வளர்ப்பில் நேர்ந்த பிழை”
அவனை
மக்கள் தொகை
கணக்கில் இருந்து மட்டும்
கழித்து விடுங்கள்
அடையாளம் காட்டுவதற்கு
அந்த அவனிடம்
மிஞ்சி விடக்கூடாது
மூச்சு…

