கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal) நூலை வாசிக்கத் தெரிந்த எவராலும் நூல் எழுத முடியும். நூல் எழுத முடிகிற எவராலும் இந்த உலகத்தை மாற்றவும் முடியும். என்று சொல்லுகிற மிசல் கமன்கெங் வார்த்தையிலிருந்து இந்த நூலினை அறிமுகம் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று என்னுகிறேன்.
குழந்தை எழுத்தாளர்கள் 16 பேர் எவ்வாறு குழந்தை எழுத்தாளர்களாகவும், கதை சொல்லிகளாகவும் ஆனார்கள் என்பனை பதிவு செய்திருக்கிறது இந்த புத்தகம்.
இந்த நூல் குழந்தைகளிடம் நேரடியாக பேசுவது போல மிக எளிய நடையில் விரைவாக புரிந்து கொள்ளும் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.
குழந்தைகள் எவ்வளவு திறமையானவர்கள் என்பதை அறிந்து கொள்ள 6 வயதில் தன்னுடைய எழுத்துக்களை புத்தகங்களாக கொண்டுவருவதற்காக கத்தை கத்தையாக எழுதி கொடுத்த மிசல் கமன்கெங் அறிந்து கொள்ளுவது அவசியம்.
பொதுவாகவே நமது பொது புத்தியில் குழந்தைகளுக்கு ஒன்றும் தெரியாது என்ற சிந்தனையிலேயே நாம் அணுகுகிறோம். அப்படிதான் மிசல் அம்மாவும் அப்பாவும். அவள் கொடுத்த கதைகளை பிரசுரம் செய்யாமலு, வாசிக்காமலும் அலமாரியில் வைத்துவிட நான் எழுதுவதை நிறுத்திவிடுவேன் என்று சொல்ல பின்னர் தான் வாசித்துப் பார்க்கிறார்கள். தங்கள் தவற்றை உணர்ந்தனர்.
இப்படியான சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை எந்த வயதிலும் கதைசொல்லிகளாகவும், எழுத்தாளர்களாகவும் ஆக முடியும் என்பதற்கான பல்வேறு வாழும் உதாரணமாக முன்வைக்கிறது இந்த புத்தகம்.
புத்தகத்தில் கதைசொல்லிகளை அறிமுகப்படுத்துவதன் ஊடே பல்வேறு அரசியல், வரலாற்றை சொல்லும் வித மிகமிக அருமை. நிச்சயமாக இதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். குறிப்பாக இந்தியா பிரிட்டீஸ் அரசாங்கத்துடன் எதிர்த்து போரிட்டது போல இன்றைக்கு இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனம் மக்கள் போராடி வருகிறார்கள் என்று விளக்குகிறார்.
பின்னர் ஒரு இடத்தில் அகதிகள் முகாம் என்பதை குழந்தைகளுக்கு புரியும் வகையில் விளக்குறார். இப்படியான விளக்கங்கள் வழியாக குழந்தைகள் நிச்சயமாக அரசியல் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். எனவே பெற்றொர்கள் இந்த நூலை குழந்தைகளுக்கு நிச்சயம் வாங்கி கொடுங்கள்.
அது மட்டுமல்ல ஒரு குழந்தையை ஏற்ற தாழ்வு கொண்டும், கேளி கிண்டல் செய்து கொண்டும் இருக்கும் சமூகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள உதவுவது புத்தகங்களும், வாசிப்பும், எழுத்தும் தான் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ள பேருதவியாக இந்த நூல் இருக்கும். இது பெரியவர்களுக்கும் பொருந்த கூடியதே.
இந்த புத்தகத்தில ஒரு இந்திய கதைசொல்லிகளும் இல்லை என்பது ஏனென்று தெரியவில்லை. ஒரு வேளை நம்ம ஊர் வயதான பாட்டிகள் அனைவரும் கதைசொல்லிகளே என்பதாலேயே என்னவோ ஆசிரியர் இந்திய கதைசொல்லிகளை கணக்கிட முடியாது விட்டுவிட்டாரோ. அற்புதமான புத்தகத்தை எழுதியுள்ள நண்பர் இ.பா. சிந்தன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். இந்த புத்தகத்தை அழகான புத்தக வடிவில் கொண்டுவந்த புக் பார் சில்ரன் பதிபகத்தாருக்கும் நன்றி.
நூலின் விவரம்:
தலைப்பு: கதை சொல்லிகளின் கதைகள் (Kathaisolligalin Kathaigal), இப்படித்தான் எழுத்தாளார்கள் ஆனார்களா?
ஆசிரியர்: இ. பா. சிந்தன்
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள்: 64
விலை: ரூ. 58
நூல் அறிமுகம் எழுதியவர்:
மொ. பாண்டியராஜன்
மதுரை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.