மலையக கென்ய மக்களை அடக்கி ஆண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வலியோடு பேசும் நூல். நாம் எளிதில் புரியும் வண்ணம் மொழி பெயர்த்துக் கொடுத்த இரா.நடராசன் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.பாரதி புத்தகாலயம் வெளியிட்ட மிகச் சிறந்த நூல்களில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது.
இரண்டு மலைக் குன்று களும் எதிர் எதிரே அமைந்திருந்தது. அவைகள் தான் காமனோ மற்றும் மக்கு யு.இவற்றின் உயிர்நாடியாக இடையில் ஓடிக்கொண்டிருக்கும் நதி தான் ஹோனியா. இரண்டு மலைப் பகுதியையும் நேர்த்தியாக வர்ணனை செய்கிறார். இவ்வாறாக தொடங்கும் நாவல் பழைய கலாசரத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் ஏகாதிபத்தியம் ஆட்கொண்டதை விவரிக்கிறார். இந்த நாவலில் வரும் மூன்று முக்கிய கதாபாத்திங்கள் வாய்யாகி, கினுத்தியா மற்றும் கமாயு.ஓர் நாள் வாய்யாகியின் தந்தை செச் ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கு ஒரு மலையின் உச்சியை காட்டி இங்கு தான் முருகு என்ற தெய்வம் இருக்கிறது. அந்த தெய்வம் தான் கி குயுவையும்,மும்பி யையும் படைத்தார். இந்த மலையக நிலப்பரப்பு முழுவதும் உனக்காக நான் தருகிறேன் என்று சொன்னது. அன்றிலிருது அவர் களுக்கு பிறந்த ஒன்பது பெண் மக்களின் வாரிசுகள் தான் இந்த மலையகம் முழுவதும் வாழ்கிறார்கள். நம்முடைய ஞானகுருகி பரோ நீண்ட நாட்களுக்கு முன்பே எச்சரித்தார். இந்த பகுதியில் பட்டாம்பூச்சி மனிதர்கள் படையெடுப்பார்கள், நிலம் முழுவதும் பறிபோகும் அதனை மீட்க என் இரத்தத்தில் ஒருவன் வருவான் அவந்தான் இழந்ததை மீட் பான் என்று செச் தன் மகனுக்கு சொன்னார்.
அதற்கான காலமும் வந்துவிட்டது நம் இரத்தத்தில் வந்த ஜோசுவாவும் கபோனியும் மதமாற்றம் ஆகிவிட்டார்கள் இனி அவர்கள் நம் சடங்கு முறைக்கு எதிரானவர்கள் என்றும் கூறினார். பெரும்பாலான மலையக பகுதிகளை வெள்ளையர்கள் கைப்பற்றி இருந்தனர். அந்த பகுதிகளில் எல்லாம் ஜோசுவா மதங்களை பரப்பினார். செச் தன் மகனை அனுப்பி வெள்ளைக்காரனின் கல்வியை கற்றுக் கொள் ஆனால் ஒரு போதும் அவனுடைய கலாச்சாரத்துக்கு அடிபணியாதே என்று வழியனுப்பி வைத்தார். ஜோசுவாவின் மகள் இளையவள் முத்தோணி தன்னுடைய பழைய சடங்கு முறைகளை பின்பற்ற நினைக்கிறாள் அதற்கு அப்பா தடையாக நிற்கிறார். அதனையும் மீறி அறுப்பு சடங்கில் கலந்து கொண்டு இறந்து விடுகிறாள். வாய்யாகி எவ்வளவோ முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. மலையக மக்களின் ஆண்களும், பெண்களும் அறுப்புச் சடங்கு செய்து கொண்டால் சத்தியபிரமாணம் செய்தது போன்றது. மலையக ஆண்கள் யாரும் அறுப்பு சடங்கு செய்யாதபென்களை மணந்து கொள்ள கூடாது. அது சத்திய பிரமாணத்தை மீறிய செயல் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும்.

முந்தோணி இறந்த செய்தி கேட்டு அப்பா ஏதும் வருத்தம் அடையாமல் இருப்பது அக்கா நியும் ராவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மதம் மாறிய பெண்னை கொண்டு விட்டார்கள், சாத்தான்குடி கொண்டுவிட்டது என்று திருச்சபை அறிவித்து பள்ளியில் பயின்ற அனைவரையும் வெளியேற்றியது. படிக்க முடியாமல் தினறிய தனது மக்களை கண்டு வருத்தம் அடைந்து வாய்யாகி கினுத்தியா தாங்களே பள்ளிக்கூடம் நடத்துகிறார்கள். மேலும் ஏராளமான பள்ளிக்கூடங்களை மலையக பகுதியில் திறக்கின்றனர்.புதிய அறிவு வெளிச்சம் பரவுகிறது இழந்த நிலங்களை திருச்சபையிலிருந்து மீட்க தொடங்குகின்றனர்’ புதிய ஆசிரியர்களை தேடி வாய்யாகி சிரியான விற்கும், திருச்சபைக்கும் அடிக்கடி போய் வந்தான்.இவனுடைய புகழ் மலையகப் பகுதியில் கொடி கட்டிபறக்க அதனை பொருத்துக் கொள்ளாத சில பேர் இவனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி மக்களிடையே பரப்புகின்றனர். இவன் சத்தியத்தை மீறி வெள்ளைகாரர்களோடு தொடர்பு வைத்துள்ளான்.இவன் நம் இன துரோகி என்று முத்திரை குத்துகின்றனர். நியும் புராவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுகிறார்கள் என்று நீயும் புரா வீட்டிற்கு சென்று அவளை காப்பாற்ற எண்ணுகிறான்.
ஆனால் அவள் என் அப்பா ஜோசுவாவை விட்டு உன்னோடு வந்து விடுகிறேன் என்று கூட வே வருகிறாள். அவளை பாதுகாப்பாக வீட்டில் வைத்து விட்டு தன்னுடைய நண்பன் கி னுத்தியாவிடம் நதிக்கரையில் மக்களை கூட்டுமாறு சொல்கிறான். மறுநாள் மாலைப் பொழுதில் மக்கள் கூடுகிறார்கள் தான் செய்த நல்ல செயல்களை பட்டியலிடுகிறான். மக்கள் சரியென ஒப்புக் கொள்கின்ற நேரம் காமோனி என்ற பெரியவர் இவன் இனத் துரோகி என்கிறார். இவர் ஏற்கனவே மதம் மாறியவர் இருந்தாலும் மலையக மக்களுக்கு நன்மை செய்வது போல பாசாங்கு செய்தார். இவர் துரோகி என்பதற்கு என்ன ஆதாரம் என்று மக்கள் கேட்க, இவனை தலைவன் என்று மலையக மேகொண்டாடுகிற நேரத்தில் சத்தியத்தை மறந்து அறுப்பு செய்தா ஒரு பெண்னை திருமணம் செய்ய இருக்கிறான். அதோடு மட்டுமல்ல அவளோடு உறவும் கொண்டிருக்கிறான் இதனால் மலையக மே பாதிக்கப் படப் போகிறது என்று எச்சரித்தான் கமோனி. இதற்கு மறுப்பு கூறச் செய்யுங்கள் என்று நீயும் புராவை இழுத்து கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
நியும் புராவின் கண்களில் தோன்றிய காதலை கண்டதும் மறுப்பேதும் சொல்ல முடியாமல் நின்றான் வாய்யாகி.மக்கள் கூட்டம் கூட்டமாக மறைந்து சென்றனர். அந்த கொடுர தண்டனையை அவர்கள் பார்காமலிருக்க வேக வேகமாக சென்று வீட்டில் கதவை சாத்திக் கொண்டனர். அந்த இருவருக்கும் ஏற்பட்ட தண்டனையை அந்த நதி பார்த்துக் கொண்டே ஓடிக் கொண்டிருந்தது என்று நாவலை அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். அனைவரும் படிக்க வேண்டிய அற்புதமான நாவல்களில் இதுவும் ஒன்று.
நூல்: இடையில் ஓடும் நதி
ஆசிரியர்: கூகி வா தியாங்கோ
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.95
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/idaiyil-odum-nathi-4751/
கு.காந்தி
இராமநாதாரம்