வெண்மணி தீக்குளியல்வெண்மணி தீக்குளியல்

“இதயம் எழுதிய இரத்த வரிகளின்

கதைக் கொஞ்சம்…

கவனித்துக் கேளுங்கள் …”

என அழைக்கும் நவகவி

வெண்மணித் தீயின் வெப்பமும் வெஞ்சினமும் சற்றும் குறையாமல் வர்க்கப் போருக்கு ஊதுலையாக இந்த நெடுங்கவிதைத் தொகுப்பை உதிர மை தொட்டு எழுதியிருக்கிறார் .

“நந்தனை எரித்த தீ

நகர்ந்து வந்து அன்றொரு நாள்

வெண்மணியில் மையங்கொண்டு …”

“பீகாரில் பெல்ச்சியில் / விழுப்புரத்தின் வீதிகளில் /விழுதுவிட்டு நெய்க் குப்பை /குடிசைகளின் மீது /கொழுந்து விடும் காரணத்தால் …. ”ஆண்டு பல ஆனாலும் மீண்டும் இதைப் பாடியுள்ளார்.“தஞ்சை பூமியில் … உழைப்பவர் சிந்திய உதிரச் சமுத்திரம் உறைந்திருக்கிறது…” “ஆயினும் இந்த அடிமை ஜனங்கள்/பூமியைக் கேட்டு போர் தொடுக்காமல்/ கூலி கேட்டுத்தான் குரல் கொடுத்தார்கள்” என கவிஞர் வர்க்க நியாயத்தோடு வழக்காடுகிறார் .வெண்மணி எரிந்த செய்தி சொல்கையில் உஷ்ண வார்த்தைகளை உக்கிரமாய் சொல்லி அரற்றுகிறார் . ஆனால் வீழாமல் எழுகிறார். பாடுகிறார். “உக்கிரங் கொண்டெழுந் தோங்கி எரிந்தது /ஓ என வெண்மணியே ! – இந்த / அக்கிரமக் கொடுங்கோன்மையினால் சிவப் / பானதெம் கண்மணியே!” “தொட்டில் தினம் தொடங்கி / சுடுகாட்டு தினம் வரைக்கும்/பட்டினியையே புசித்துப்/ பசியடக்கும் என் ஜனமே / மருள் மயக்கம் தெளிவதற்கும் /மன விளக்கம் பெறுவதற்கும் / திருவிளக்கை வெண்மணியின்…” திருவிளக்கை இயற்றி இருக்கிறார் நவகவி.“இருதயத்தை விரல் ஆக்கி /ரேகை எடுத்து வந்து..” கவிதை உயிலில் கைநாட்டிஇருக்கிறார் நவகவி .ஒவ்வொரு வர்க்கப் போராளி கையிலும் /புத்தக அலமாரியிலும் தலைமுறை தலைமுறையாய் இருக்க வேண்டிய, வாசித்தறிய வேண்டிய கவிதைநெருப்பு இந்நூல்

வெண்மணி ‘தீக்குளியல்’நீள்கவிதை .

ஆசிரியர் : நவகவி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,

7 ,இளங்கோ தெரு , தேனாம் பேட்டை,

சென்னை – 600 018.

பக்: 38 விலை: ரூ .15 /-

தொ.பேசி: 044 -24332924

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *