இதழாளர் அய்கோ எழுதிய "கல்வி சில கேள்விகள்" புத்தகம் | Idhazhalar Ayko's Kalvi Sila Kelvikal Tamil Book Review | நளினி | www.bookday.in

இதழாளர் அய்கோ எழுதிய “கல்வி சில கேள்விகள்” – நூல் அறிமுகம்

“கல்வி சில கேள்விகள்” – நூல் அறிமுகம்

கல்வி என்பது வியாபாரமாக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை கூறும் நூல். தற்போதைய கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும், மாணவர்களின் கல்வியில் உள்ள பிரச்சனைகளையும் பேசுகிறது.

மதிப்பெண்களை மட்டுமே தேவை என்று ஓடிக்கொண்டிருக்கும் கல்வி எப்படி சரியானதாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்புகிறது இப்புத்தகம். ஆங்கிலேயர்களுக்கு தேவையான கணக்கர்களை உருவாக்க மெக்காலே கொண்டு வந்த கல்வி முறையே இன்னும் நாம் பின்பற்றி கொண்டு இருக்கிறோம். அந்த அடிமை முறையிலிருந்து எப்போது நாம் விடுபட போகிறோம்.

ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை அடைந்தாலும் அவர்கள் விட்டுச்சென்ற அடிமைமுறை கல்வியை நாம் இன்னும் பின்பற்றிக் கொண்டிருப்பது பற்றி மிக ஆழமாக பேசுகிறது இப்புத்தகம்.

2008 – 09 காலக்கட்டங்களில் தனியார்பள்ளிகளின் வளர்ச்சியும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் அதே சமயம் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக அலசி இருக்கிறார் ஆசிரியர்.

ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போதே அக்குழந்தையின் கல்விக்காக பெற்றோர்கள் மெனக்கிடுகிறார்கள். மழலைப்பருவம் மாறும் முன்பே அவர்களை prekg வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். தாய் மொழி பேசி கற்கும் வயதில் அந்நிய மொழிகளை கற்பிக்கின்றனர் குழந்தைகளுக்கு. குழந்தைகள் தங்கள் தாய் மொழியையும் முழுதாக கற்காமல் அந்நிய மொழியையும் கற்க முடியாமல் இடையில் நின்று சிக்கி தவிக்கின்றனர்.

ஒரு குழந்தை தன் மொழியில் கற்கும் போது மட்டுமே அதை புரிந்து படிக்கும். மனனம் செய்து படித்து மதிப்பெண் பெறுவதால் அவர்களுக்கு என்ன சிந்தனை வளரும், என்ன புரிதல் உண்டாகும். கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து தனியார் பள்ளி இல்லாத நாடாக உள்ளது. அங்கு குழந்தைகள் 7 வயதில் தான் பள்ளி செல்கின்றனர்.

அங்கு பள்ளிகள் இயங்கும் நேரமும் குறைவு. படிப்பிற்கு தரும் அதே முக்கியத்துவத்தை விளையாட்டு, ஓவியம், இசை என எல்லாவற்றிற்கும் அளிக்கின்றனர். மாணவர்களுக்கு படிக்க பிடிக்கவில்லை என்றாலோ சோர்வாக உள்ளது என்றாலோ அவர்கள் ஓய்வு எடுக்க ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. வீட்டு பாடம் கிடையாது, முதல் ரேங்க், இரண்டாம் ரேங்க் என்று தரம் பிரிப்பது கிடையாது. மாணவர்களிடையே போட்டி கிடையாது. ஆனாலும் உலகளாவிய தேர்வுகளில் முதல் இடங்களை பிடிப்பது பின்லாந்து தான் என்று ஐ நா சொல்கிறது.

மேலும் GATT திட்டத்தின் உருவாக்கத்தை பற்றி இதில் குறிப்பிட்டு உள்ளார் ஆசிரியர்.இத்திட்டத்தால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எப்படி நம்மண்ணில் காலூன்றியது அதனால் நாம் என்ன மாதிரியான சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கிறோம் என்பதை கூறியுள்ளார் ஆசிரியர்.

கல்விக்கடன் பெற்று படித்து அதனால் மாணவர்கள் படும் அவஸ்தை அதனால் மாணவர்களால் எடுக்கும் விபரீத முடிவுகளையும் அலசி ஆராய்ந்து உள்ளது இப்புத்தகம்.

சுயநிதி கல்லூரிகள் செய்யும் அட்டூழியங்கள் அதனால் மாணவர்கள் படும் அல்லல்கள்,எத்தனையோ மாணவர்கள் திறமை இருந்தும் பணமில்லாத காரணத்தால் தங்களின் படிப்பை இடைநிற்றல் செய்கின்றனர்.எல்லா பள்ளிகளும் கல்லூரிகளும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் ஆசிரியர்.

குழந்தைகளுக்கு கல்வி மட்டுமே போதாது விளையாட்டும் தேவை ஆனால் பல கல்விக்கூடங்களின் வேலை நேரமானது காலை 6 மணி முதல் மாலை 6 அல்லது 8 மணி வரை கூட உள்ளது.பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை சோர்வடைய செய்கிறது இந்த கல்வி முறை.

பள்ளி சென்று மாலை வீடு அடைவதற்குள் அவர்கள் சோர்வாகி போகிறார்கள்.பின்பு எங்கே அவர்கள் விளையாடுவது. விளையாட்டும் இல்லை,பெற்றோருடன் உரையாடலும் இல்லை,ஆசிரியர்களுடன் ஒரு சுமூகமான உறவும் இல்லை பின்பு குழந்தைகள் மனஉளைச்சலுக்கு ஆளாகாமல் எப்படி இருக்க முடியும்?

என்ற எண்ணற்ற கேள்விகளுக்கான பதில்களை அடங்கிய புத்தகம்.பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள், கல்வி சார்ந்து செயல்படுவார்கள் என அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.வாசிப்போம் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:கல்வி சில கேள்விகள்
தொகுப்பாசிரியர்:இதழாளர் அய்கோ
வெளியீடு:தனு பதிப்பகம்
விலை:₹.90
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 நளினி

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *