தனது வகுப்பறை நிகழ்வுகள் பலவற்றைப் பதிவுசெய்யும் அதே வேளையில் கற்றல் கற்பித்தலில் தேவைப்படும் புதுமைகள், வகுப்பறை மாணவர்களை மையமா கொண்டிருக்க வேண்டியதன் அவசியம், வாசிப்பின் முக்கியத்துவம் என அனைத்தையும் பேசுகிறார். உலகளாவிய அளவில் கல்வியில் மிகவும் முக்கியமான புத்தகங்கள் ”பகல் கனவு”, ”டோட்டோசான்- ஜன்னலில் ஒரு சிறுமி”. இந்த இரண்டிலும் வரும் ஆசிரியர்களான முறையே லக்ஷ்மிராமும், கோபயாட்சியும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியர்கள். இந்த “இது எங்கள் வகுப்பறை” புத்தகத்தைப் படித்துவிட்டு சிறிது யோசித்தால் ஆசிரியை வே.சசிகலா உதயகுமாரும் இவர்களுக்கு வெகு அருகில் இருப்பதாக உணர்கிறேன். அன்றாட வகுப்பறைச் சம்பவங்களின் தொகுப்பாக இந்நூல் இருந்தாலும் இந்த 183 பக்கங்களைப் படித்து முடிக்கும் வரை ஓரிடத்தில் கூட சலிப்பு ஏற்படவில்லை.

idhu engal vakupparai
Posted inBook Fair
