கல்வி என்பது முதலில் ஒரு மனிதனை மாண்புப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி இன்று கல்வி ஒரு வணிகமாக்கப்பட்டு விட்டது. கல்வி என்பது மதிப்பெண்களை நோக்கிய ஓட்டமாக இருக்கிறது. மதிப்பெண்கள் தான் வெற்றி தோல்வியை தற்போது நிர்ணயிக்கிறது. ஆனால் மதிப்பெண்கள் மட்டுமே உண்மையான கற்றல் கற்பித்தல் அல்ல என்று பல்வேறு கல்வியாளர்கள் தொடர்ந்து பேசி கல்வி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நூலில் ஆசிரியர் ஒரு வகுப்பறை கற்பித்தல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை மென்மையாகவும, அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார்.
உண்மையில் வகுப்பறை என்பது யாருடையது? பள்ளி வகுப்பறையில் பேச வேண்டிய தேவை யாருக்கு அதிகம்? மாணவர்கள் தான் அதிகம் பேச வேண்டும். ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பது தம் வகுப்பு தோழர்கள் உடன் கலந்தாய்வு செய்து அதன் வழியாக ஏற்படும் ஐயங்களை மீண்டும் ஆசிரியர்களிடமே கேட்பது எனும் உரிமை மாணவர்களுடையது. ஆனால் வகுப்பறையில் அதிகம் பேசும் உரிமை தற்போதைய கல்வி முறையில் ஆசிரியருக்கு தான் அதிகம் இருக்கிறது. இந்த நிலை மாறி ஆசிரியரும் மாணவர்களும் எந்த தயக்கமும், பயமும் இன்றி கலந்துரையாடும் இடமாக, மாணவனை செம்மைப்படுத்தும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்த நூலின் மையப்பொருள்.
தன்னுடைய பள்ளிப்பருவ நினைவுகள், தான் சந்தித்த பல்வேறு மாணவர்கள் தங்கள் ஆசிரியரைப் பற்றி கூறிய அனுபவங்கள், கல்வியாளர்களின் அனுபவங்கள் , பல்வேறு ஆளுமைகள் கல்வியைப் பற்றியும் குழந்தைகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளதை ஆங்காங்கே கையாண்டு வகுப்பறை என்பது குழந்தைகளுக்கானது என்பதை வலியுறுத்துகிறார்.
வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் அனைவரும் ஒரே மனோ நிலையோடு ஒரே பின்னணியோடு இருப்பதில்லை. ஒவ்வொரு மாணவர்களும் பல்வேறு சூழலில் இருந்து வந்திருப்பார்கள். ஆசிரியர் என்பவர் தான் கற்றவற்றை வகுப்பில் சொல்லிக் கொடுப்பதோடு, மாணவர்களின் பின்புலம் அறிந்து அதன்படி மாணவர்களுக்கான வாய்ப்பை உருவாக்கித் தரும் கல்வியை கற்பிப்பவர் ஆக இருந்தால், வகுப்பறை என்பது எப்போதும் குழந்தைகளுக்கானது.
நூலின் தகவல்கள்:
நூல் : இது நம் குழந்தைகளின் வகுப்பறை
ஆசிரியர் : சூ. ம. ஜெயசீலன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 158
விலை : ₹.140.00
நூலறிமுகம் எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.