நிலாவில் இதுவரை சூரிய ஒளி ஊடுருவாத பகுதிகள் இப்பொழுது ஆராய்ச்சியாளர்களின் மையமாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பகுதிகள் மனிதர்கள் வசிப்பதற்காகவும், விண்வெளி ஆய்வு நிலையங்களாகவும் மாற்றிட முடியும் என்பதுதான் இன்றைய விஞ்ஞான உலகத்தின் நிலைப்பாடு… நிலவின் தென் துருவத்தில் இருந்து ISRO-இன் சந்திரயான்-3 நமக்கு அளித்த தரவுகள் இதற்கு மேலும் நம்பிக்கையூட்டுகிறது. நிலவின் பள்ளங்களைப் பற்றியும், கோடி வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் விளைவாக உருவான குகை அடுக்குகளை பற்றியும் இன்றைய விஞ்ஞான உலகம் மிக உன்னிப்பாக கவனித்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்கிடையில் பூமியில் இருக்கின்ற பல் உயிர்களை அழியாமல் அப்படியே வைத்திருப்பதற்கு நிலவின் பள்ளங்களை பயன்படுத்த முடியுமா என்ற ஒரு பக்கம் ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகிறார்கள். பூமியின் உயிர்களை அப்படியே மாறாமல் நிலவில் கொண்டு வருவது தான் இவர்களின் இலக்காகவும் இருக்கிறது.. ஸ்மித்சோனியன் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம் (Smithsonian National Museum of Natural History) சேர்ந்த விஞ்ஞானிகள் தான் இத்திட்டத்தை முன் மொழிந்துள்ளார்கள். உயிரியல் தொடர்பான பிற ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்த முயற்சியுடன் கைகோர்க்க இருக்கிறார்கள். நமது பூமியின் வட துருவத்தில் இருக்கின்ற நார்வே குளோபல் விதை பெட்டகம் வைக்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த உத்வேகம் தான் இவர்களை இந்த யோசனை நோக்கி உந்தி தள்ளியதற்க்கான காரணம். இந்த நார்வே குளோபல் விதை பெட்டகத்தில் மட்டுமே சுமார் மில்லியனுக்கும் அதிகமான விதைகள் பாதுகாத்துபட்டு வருகின்றது.
விலங்கு மற்றும் தாவரங்களினுடைய உயிரணுக்களை, அதாவது அவையின் டிஎன்ஏ-க்கள் அழிந்து போகாத வண்ணம் நிலவின் பள்ளங்களில் உருவாக்க இருக்கும் பெட்டகங்களில் பத்திரப்படுத்த இருக்கிறார்கள். இந்த வகையில் பூமியில் வாழுகின்ற அனைத்து உயிர்களின் உயிரணுக்களும் அவையில் உள்ள டிஎன்ஏ-வும் வருங்கால ஆராய்ச்சிகளுக்காக பத்திரப்படுத்தி வைக்கின்ற ஒரு மிகப்பெரிய திட்டத்தை தான் இவர்கள் செயல்படுத்தி இருக்கிறார்கள். உயிர் அணுக்களில் இருக்கின்ற டிஎன்ஏ-வை மறு உபயோகத்திற்காக பாதுகாக்க வேண்டும் என்றால் இவைகளை மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் குளிரில் பாதுகாக்க வேண்டி இருக்கிறது. ஆனால் சந்திரனில் இருக்கின்ற துருவ பள்ளங்களில் இயற்கையாகவே மிகவும் குளிராக இருப்பதால் உயிரணுக்களை உறைய வைத்து பாதுகாப்பது என்பது மிகவும் எளிதாக இருக்கும்.
முன்னுரிமை:
பூமியில் தற்போது உயிர் வாழும் உயிரினங்களானது, பூமியின் பரிணாமத்தின் பல கட்டங்களில் இயற்கை பேரழிவு மூலம் அழிந்து போய் இருக்கிறது. இதுபோன்று இதுவரையில் உருவான ஐந்து இயற்கை பேரழிவுகள் பல காலகட்டங்களாக நமது பூமியில் நடந்திருக்கிறது. இத்தகைய இயற்கை பேரழிவுகளில் இருந்து தப்பி பிழைத்த உயிரினங்கள் தான் இன்று நாம் காண்பவை. அதனால் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்ற உயிரினங்களின் உயிர் அணுக்களை சேகரித்து வைக்க சந்திரனில் உருவாக்குகின்ற குளிர் பெட்டகங்களில் முன்னுரிமை தரப்படுகிறது.
முதலில் ஒரு மீன்:
இந்த உயிர் அணுக்கள் சேகரிப்பில் முதலில் வரப்போவது ஒரு மீனாக இருக்கும். பவளப்பாறை புத்துகளில் பாசிகளை உண்டு வாழுகின்ற ஸ்டாரி கோபி வகை மீன்களின் ஆஸ்டரோ ரிக் செமி பங்கு தரவுகள் என்பதுதான். சுமார் ஆறு சென்டிமீட்டர் மட்டுமே நீளமுடைய இந்த சிறு ஸ்டாரி கோபி என்ற பெயரில் அக்குவேரியங்களில் வளர்க்கப்படுகின்றது. பாரசீக வளைகுடா (Persian Gulf) மற்றும் செங்கடல் முதல் ஹவாய், ஜப்பானை சுற்றியுள்ள கடல்கள் வரை இவைகள் காணப்படுகின்றது. பவளப்பாறை புத்துகளுக்கிடையில் இவை வாழ்கிறது. உலகம் முழுவதும் இருக்கும் பவளப்பாறைகள் தற்போது அழிவின் விளிம்பிற்கு நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால், இந்த சிறு மீன்களின் உயிர் வாழ்தலுக்கான வாழ்விடங்களும் தற்போது அபாயகரமான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் வளர்ப்பு மீன்களாக ஆக்குவேரியம் மூலம் மக்கள் வளர்த்து வருவதால் இவைகளின் அழிவு என்பது சற்று குறைந்துள்ளது. இம்மீனின் தோல் பகுதியில் இருக்கின்ற பைப்ரோ பிளாஸ்ட் (Fibroblast) என்ற செல்கள்தான் நிலவின் உயிர் உயிரணு சேகரிப்பு பகுதிகளுக்கு செல்லப் இருக்கிறது. இந்த செல்கள் என்பது பிற உயிரினங்களை விட அதிக பாதிப்புகளை தாங்குவதற்கான திறன் கூடுதலாக காணப்படுகிறது. அணுக்கதிர்வீச்சுகளையும் தாங்கும் அளவிற்கு சக்தி இந்த செல்களில் உள்ளது என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது நடக்குமா என்பதை தெரிந்து கொள்ள தான் ஆராய்ச்சிகள் இப்பொழுது நடந்து வருகிறது.
பாதுகாப்பு:
இதை குறைந்த செலவில் சாத்தியமாக்குதல் என்பது மட்டுமல்ல, உயிர் அணுக்களை பத்திரப்படுத்தும் பெட்டகங்களாய் நிலாவின் பள்ளங்களை தேர்ந்தெடுக்க காரணம். இதுபோன்ற ஒரு சேகரிப்பு தளத்தை உருவாக்குவது என்பது அதிக செலவு தரக்கூடிய ஒன்றாகும். அது மட்டுமல்ல இதுபோன்ற ஒரு தளம் பூமியிலும் இருந்து வருகின்றது. ஆர்டிக் பகுதியில் இருக்கின்ற பூமியிலிருந்து சுமார் 400 அடி தாழ்வாக உயிரணுக்கள் சேகரிக்கப்படும் குளோபல் விதை பெட்டகம் ஏற்கனவே அமைந்திருக்கிறது. குளோபல் சீட் வால்ட் என்ற பெயர் உள்ள இந்த நார்வேயில் ஸ்வால் போர்டு என்ற இடத்தில் தான் இதை உருவாக்கயிருக்கிறார்கள்.
இன்று வரை மட்டுமே பத்து லட்சத்துக்கு அதிகமான விதைகளை இங்கு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதிலும் மிக முக்கியமாக உணவுப் பயிர்களின் விதைகளை தான் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் 2017ல் உலக வெப்பநிலை அதிகரிப்பின் அங்குள்ள பனிக்கட்டி உருகுவதன் மூலம் உருவான வெள்ளத்தில் இங்கிருந்த விதைகள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டது. அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தான் இங்குள்ள விதைகளை முழுவதுமாய் அழிவதிலிருந்து காப்பாத்த முடிந்தது. அதனால் இதிலிருந்து வித்தியாசமான முறையிலும் எந்த வித பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் சேமிப்பு பெட்டகத்தை நிலவில் உருவாக்கி அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் அணுக்களை பத்திரமாக பாதுகாத்து வைக்க வேண்டும் என்பதுதான் இன்றைய விஞ்ஞான உலகத்தின் குறிக்கோளாக உள்ளது.
கட்டுரையாளர் :
எஸ்.என்.அருண்குமார்
தமிழில் : டயானா சுரேஷ்
நன்றி : கிளிவாதில் – தேசாபிமானி நாளிதழ்
ചാന്ദ്രഗർത്തങ്ങൾ ജീവശേഖരമായാൽ https://epaper.deshabhimani.com/c/75804180
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.