எந்த மருத்துவம் சிறந்தது என்று கேட்டால்… – பா.ஹேமாவதி

எந்த மருத்துவம் சிறந்தது என்று கேட்டால்… – பா.ஹேமாவதி

 

நோய்களிலிருந்து விடுபடவும், நோய்களைத் தடுக்கவுமான பயணத்தை மனிதகுலம் எப்போது தொடங்கியதோ அப்போதிருந்தே அதற்குப் பல வழிகள் புறப்பட்டுவிட்டன எனலாம். பச்சிலைகளைப் பறித்து உண்பது ஒரு வழி, எதுவுமே உண்ணாமல் கிடப்பது ஒரு வழி, வெயிலில் நிற்பது ஒரு வழி, தண்ணீரைத் தேடுவது ஒரு வழி என்ற ஆதி முறைகளின் வரலாற்று வளர்ச்சியில் பல்வேறு மருத்துவ முறைகள் உருவாகியிருக்கின்றன. நாட்டுக்கு நாடு பாரம்பரியமான மருத்துவ முறைகள் நிலைபெற்றுள்ளன. இங்கே நாம் காண்கிற நாட்டுமருந்து, சித்தமருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளும், அலோபதி, ஹோமியோபதி, யுனானி, அக்குபஞ்சர் உள்ளிட்ட நவீன முறைகளும் இப்படி வந்தவையே.

ஒவ்வொரு மருத்துவ முறையிலும் அது அதற்கே உரிய சிறப்புக் கூறுகள் இருக்கின்றன, போதாமைகளும் இருக்கின்றன. அந்தப் போதாமைகளை நிரப்புவதற்கு அக்கறையோடு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறபோது சிறப்புக்கூறுகள் மேலும் சிறப்படைகின்றன. அனுபவமும் ஆராய்சியும் சார்ந்து, இதர மருத்துவங்களிலிருந்து சரியானதை எடுத்துக்கொள்ள எந்த மருத்துவம் தயாராக இருக்கிறதோ அந்த மருத்துவம் மனிதர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது. இதர முறைகளில் என்ன நடக்கிறது என்று உற்றுக் கவனித்து, பொருத்தமானதை எடுத்துக்கொள்ள எந்த மருத்துவர் தயாராக இருக்கிறாரோ அந்த மருத்துவரே மக்களின் நண்பராகிறார்.

தற்போது உலகில் ஆகப்பெரும்பாலான நாடுகள் கொரோனா தடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற நிலையில், நவீன மருத்துவ முறைகளோடு தங்களின் பாரம்பரிய முறைகளையும் இணைக்கத் தயங்கவில்லை என்பதைச் செய்திகள் காட்டுகின்றன. அந்தக் கிருமியை ஒழிப்பதற்கும் தடுப்பதற்குமான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில், எந்தவொரு மருத்துவமுறையையும் தேவையற்றது என்று தள்ளிவிட முடியாது என்பது நிதர்சனம். பொதுவாகவே அலோபதி முறை மட்டுமே அறிவியல்பூர்வமானது, ஹோமியோபதி உள்ளிட்ட மற்ற முறைகள் மருத்துவமே அல்ல என்பது போல விவாதங்கள் அவ்வப்போது முன்னுக்கு வந்திருக்கின்றன.

Fact Check: There Is No Evidence That Homeopathy Drug Arsenic ...

“தற்போது இந்த கொரோனா தொற்றால் 8.5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சுமார் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டனர். உயிரிழந்த 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட  மக்களுக்கு எந்த மருத்துவ முறையை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு, அது பலனளிக்காமல் இறந்தார்கள்? அந்த மருத்துவ முறையைக் கேள்விக்குள்ளாக்காமல், இன்னும் விரிவான அளவுக்குப் பயன்படுத்தப்படாத சூழலில் மாற்று மருத்துவ மருத்துவ முறைகளை நிராகரிப்பதும், ஏளனம் செய்வதும் சரிதானா” என்று கேட்கிறார் ஒரு முன்னணி ஹோமியோபதி மருத்துவர். அப்படி நிராகரிப்பது, உலக மருந்துச் சந்தையைக் கைப்பற்றி வைத்துள்ள பெரும் கார்ப்பரேட் மருந்துக் கம்பெளிகளுக்குத்தானே சாதகமாக முடியும் என்றும் அவர் கேட்கிறார்.

மருந்து கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய்க்கு 2018-வரை உலகம் முழுவதும் 228 மில்லியன் மக்கள் பலியாகினர் என்று உலக சுகாதார அமைப்பின் கூறுகிறது.  மலேரியா  அறிகுறியும் கொரோனா  அறிகுறியும் ஒன்றல்ல. இருப்பினும் கொரோனா சிகிச்சையில் மலேரியாவுக்கான மருந்தான HCQ & CQ மாத்திரைகள் தரப்படுகின்றன. இது முறையான மருந்தல்ல என்பதையும் உலக சுகாதார அமைப்பே ஐரோப்பிய ஆய்வறிக்கைகளை மேற்கொள் காட்டிக் கூறியுள்ளது.  அதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்தபோதிலும் பல நாடுகள் இந்த மருந்தைப் பயன்படுத்தவே செய்கின்றன. இந்திய அரசின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த மருந்தைத் தொடர்ந்து வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஹோமியோபதி: உலக அனுபவம்.

அறிவியல் பார்வையில் ஹோமியோபதி ...

2012ல் ஆஸ்திரேலியாவின் தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஹோமியோபதியால் எந்த நோயையும் குணப்படுத்த முடியாது என்று கூறியிருந்தது. அதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஹோமியோபதி வல்லுநர்கள் பங்கு பெறவில்லை என்று 2015ல் மும்பையில் நடைபெற்ற உலக ஹோமியோபதி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.  ஆஸ்திரேலியாவின் அதே நிறுவனம் 2019ல் வெளியிட்ட அறிக்கையில் தனது முந்தைய அறிக்கையின் சில முடிவுகளை மாற்றிக்கொண்டு, ஹோமியோபதி முறையினால் சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கூறியுள்ளது.

உலகமெங்கும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கெல்லாம் உதவிக்கரம் நீட்டும் கியூபா அரசாங்கம் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை கடைப்பிடித்து வருகிறது.  1990 காலக்கட்டத்தில் அமெரிக்காவால் பொருளாதார தடை விதிக்கப்பட்டதால் அந்நாடு நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டது தெரிந்ததே. அதன் விளைவாக அலோபதி மருந்துகளுக்குக் கடும் பற்றக்குறை ஏற்பட்டது. இந்த சூழலில் கியூபா தனது தேசிய மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட மாற்று முறைகளைச் சேர்த்தது. அதில் ஹோமியோபதியும் அடங்கும். Influenza, common cold, leptospirosis, dengue போன்ற வைரஸ் தாக்குதல்களின்போதும் காலராவின்போதும் ஹோமியோபதி நன்கு பயன்பட்டது என்று கியூப நாட்டின் பொது சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோயியல் தேசிய இயக்குநர் மருத்துவர் பிராசிஸ்கோ டூரன் கூறியுள்ளார். மேலும் தற்போது கியூபாவில் கொரோனா தொற்றுக்கு 8 வகையான ஹோமியோ மருந்துகள் கையாளப்படுகின்றன. அவற்றில் ஆர்சனிக் ஆல்பம் என்ற மருந்தும் ஒன்று. இது தொற்று பரவாமல் இருக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது (ஆதாரம்: மியாமி ஹெரால்டு, 7.4.2020).

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிரிட்டன் அரசர் பிரின்ஸ் சார்லஸ் ஹோமியோபதி மருத்துவ சமூக அமைப்பின் கவுரவத் தலைவர். அரச குடும்பம் பல்லாண்டுகாலமாக ஹோமியோபதியைப் பயன்படுத்தி வருவது அந்நாட்டு மக்கள் அறிந்ததே. பிரிட்டன் அரசி தனது கைப் பையில் எப்போதும் ஆர்சனிக் ஆல்பம் (உணவு நச்சுத்தன்மை முறிப்புக்காக), கொக்குலஸ் (பயணச் சோர்வு களைவதற்கு), நக்ஸ் வோமிகா (அஜீரணம்) ஆர்னிகா (சிராய்ப்பு) ஆகியவைகளை வைத்திருப்பதால்தான் 94 வயது கடந்தும் ஆரோக்கியமாக இருக்கிறார் என The Daily Mail பத்திரிகையின் ஆசிரியர் ரிச்சட் கே 25 மார்ச் 2020 வெளியிட்ட கட்டுரையில் கூறியிருக்கிறார்.

இந்திய அனுபவம்…

HEALTH: The case for homeopathy | Daily Mail Online

இந்தியாவில் Cholara, Spanish influenza, Yellow fever, Scarlet Fever, Diphtheria, Typhoid போன்ற தொற்று நோய்களுக்குத் தடுப்பாக ஹோமியோபதி பயன் படுத்தப்படுகிறது என்று ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.  ஹோமியோபதி மருத்துவத்தை அதிகாரப்பூர்வமாக கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என்று இந்தியா அரசாங்கம் கூறியதோடு ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை கொரோனா தடுப்புக்குப் பயன்படுத்தலாம் என்று கடந்த 21.04.2020 அன்று அரசாணையும் வெளியிட்டது. அதைத்தொடர்ந்து பல மாநிலங்களில் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 பயன்படுத்தி வருகின்றனர்.

போபால்,  அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மே மாத இறுதியில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 46 கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மருந்தை வழங்கியதால் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்தார். இருப்பினும் வேறு சில காரணங்களால் இந்திய அரசாங்கம் இதனை ஒப்புக்கொள்ளவில்லை. பல மாநில அரசுகள் இதை அனுமதிப்பதே இல்லை. ஆதனால்தான் கொரோனாவுக்கான ஹோமியோபதி சிகிச்சை இன்றளவும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது” என்று ஹோமியோபதி மருத்துவர்கள் கூறிகின்றனர்.

சென்னையை பொறுத்தவரை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டிருந்த கொரோனாவால்  மக்கள் உயிருக்கு பயந்து அச்சத்தோடு வாழ்ந்து வருகின்றனர். சிறு காய்ச்சல் வந்தாலும் கொரோனா தொற்று நோய் நம்மை தாக்கிவிடும் என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வதும் அச்சத்தில் மாரடைப்பில் இறப்பதாகவும். சிலர் வேலை இழப்பு காரணமாக இனி housing loan, car loan போன்ற கடன்களை எப்படி கட்டி மீள்வது என்று தெரியாமல் சிந்தித்து ரத்தகொதிப்பு அதிகமாகி மூளை நரம்பு வெடித்து இழந்து வருவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. பலர் நமக்கு காய்ச்சல் என்று வெளியில் தெரிந்தால் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வீட்டை மூடிவிடுவார்கள்.

சிறப்புக் கட்டுரை : ஹோமியோபதி ...

மேலும், இறந்துப்போனால் உடலை குடும்பத்தாருக்கு தரமாட்டார்கள் என்று அஞ்சி உண்மையை மறைத்து கடைசியில் நோய் முற்றி வீட்டிலேயே இறக்கின்றனர். அவ்வாறு இறந்தவர்களின் இறுதி சடங்கிற்கு சென்ற வந்தவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கிறது. கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் வந்து நோயாளியை புகைப்படம் எடுக்கிறேன் என்ற பெயரில் இம்சைப்படுத்தியதில் நோயாளி பதட்டமாகி மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனையில் கொரோனா இருக்கிறது என்ற உண்மையை மறைத்து மாரடைப்பால் இறந்தார் என்று கூறி சடலத்தை பெற்ற நிகழ்வும் அயன்புரம் நம்மாழ்வார் பேட்டை பகுதியில் அரங்கேறியது.

கொரோனா நோய் தொற்றுக்கு அலோபதியில் மருந்தில்லை என்ற காரணத்தால் பயந்து இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பயத்தைப் போக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி பிரச்சனையிலிருந்து வெளிவர உதவி செய்வதே நல்லது.

சில நாட்களுக்கு முன் கொளத்தூர் பகுதியில் இடதுசாரிகளோடு இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டு வந்தவர்  சசிகலா. அவருடைய மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநகராட்சி தற்காலிக பணியாளராகவும் இருந்த அவர், காய்ச்சல் பரிசோதனைப் பணிகளைச் செய்ததால்தான்  தன் மகனுக்கு கொரோனா வந்துவிட்டது என்று மன உளைச்சலுக்கு உள்ளானார். அதில் முச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார் என்று உறவினர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில் தொடர் இரும்மல் வாந்தியுடன் சசிகலா மகன் மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்டார். ஏற்கனவே சசிகலாவை இழந்துவிட்டோம் தற்போது பேரனையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடுகள் செய்துவந்தார் சசிகலாவின் தாய்.. அவரை அணுகிய ஹோமியோபதி ஆர்வலர்கள் அது பற்றி எடுத்துக்கூறியுள்ளனர். அவருடைய ஒப்புதலோடு ஹோமியோபதி சிகிச்சை அளிக்கப்பட்ட இளைஞர் குணமடைந்தார். இவ்வாறு ஹோமியோபதி மருத்துவத்தால் பலனடைந்தவர்கள் பலருக்கு அதனைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது .

புகழ்பெற்ற ஹோமியோபதி மருத்துவர்.கோப்பிகர் பெயரால் இயங்கும் அறக்கட்டளையோடு இணைந்து, வடசென்னை பகுதியில் நடத்தப்பட்டுவரும் ஹோமியோபதி மருத்துவ முகாம்களால் நல்ல பலன் கிடைத்துள்ளது.

நமது இந்திய அரசு சொல்லும் கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் தகுந்த ஆயுதம் இன்றி ஆங்கில மருத்துவம் தவித்து வரும் நிலையில், கொரோனாவை எதிர்க்கும் சரியான ஆயுதமும், அதற்கான பயிற்சியும் கொண்டு தயாராக காத்திருக்கும் ஹோமியோபதி மருத்துவர்களை பயன்படுத்தி நாள்தோறும் இந்த நோயின் தாக்கத்தால் பிரிந்து செல்லும் உயிர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்.

வரும் முன் காப்பது அறிவுடமை, வந்த ...

ஹோமியோபதி மருந்துகள் கொரோனாவை குணபடுத்தாது என்று கூறுபவர்கள் ஆகிராவின் நேமினாத் ஹோமியோபதி மருத்துவமனை மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளை குணமாக்கி உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். உலகின் தலைசிறந்த மருத்துவர்களை தன்னகத்தே கொண்டுள்ள கியூபா அரசு ஆர்சனிக்கம் ஆல்பம் உள்ளிட்ட மருந்துகளை வெற்றிகரமாக பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ஆங்கில மருத்துவம் கொரோனாவிர்க்கு எதிராக பயன்படுத்தி வரும் 130க்கும் மேற்பட்ட மருந்துகளும் மற்ற மருத்துவமுறை மருந்துகளும்  கொரோனாவை முற்றிலும் குணப்படுத்தும் என்ற எந்த ஆதாரமும் இல்லை, அவை அனைத்தும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது. ஆனால் இந்த கேள்வி ஹோமியோபதி மருத்துவத்தின் மீது மட்டும் வைக்கபடுவதில் அரசியலே உள்ளது அறிவியல் அல்ல.

ஹோமியோபதி மருத்துவத்தின் போராட்டம் கொரோனா நோயாளிகளை நலமாக்குவதே தவிர கொரோனா நோயுடன் அல்ல.

100க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மருத்துவம் நவீன மருத்துவம் மற்றும் அறிவியல்லோடு இணைந்து தினமும் தன்னைத்தானே தகவமைத்து கொண்டுவருகிறது. பலலட்சம் கோடி செலவில் தடுப்பு மருந்து தயாரிக்க உலக நாடுகள் முயற்சித்து வரும் நிலையில், பெரும் பொருட் செலவு இன்றி, பொருளாதார வீழ்ச்சி இன்றி குறைந்த செலவில் விரைவான தீர்வை விளிம்பு நிலை மக்களுக்கும் சென்றடையும் வகையில் கொடுக்க பக்கவிளைவுகள் இல்லாத, எந்த பத்தியமும் இல்லாத, மற்ற மருத்துவ முறைகளோடு சேர்ந்தே உட்கொள்ளக்கூடிய எளிமையான ஹோமியோபதி மருத்துவத்தால் முடியும் என்று ஹோமியோபதி மருத்துவர் பாலமுருகன் கூறுகிறார்.

ஹோமியோபதியும் அறிவியலும்…

ஊரான்: ஹோமியோபதி: கரோனாவைக் ...

“ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்” மற்றும் மருந்தை வீரியப்படுத்தி மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க வீரியம் அதிகரிக்கும் என்பது ஹோமியோபதியின் அடிப்படை கோட்பாடு. மும்பை ஐஐடி ரசாயன பொறியியல் துறை சார்ந்த ஆராய்ச்சிக் குழு கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் நானோ துகள்கள் மூலம் மருந்து செலுத்தப்படும்போது ஹோமியோபதி மருந்துகள் சிறப்பாக வேலை செய்கிறது என்று கண்டறிந்துள்ளனர். இதற்காக இந்தக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெயேஸ் பில்லாரி 2018 உலக ஹோமியோபதி தினத்தன்று  இந்திய அரசாங்கத்தால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தையான மருத்துவர் சாமுவேல் ஹேன்மேன் 1800 களில் ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஹோமியோபதி தன்னை அறிவியல் நிரூபண முறைகள் என்று சொல்லப்படும் நடைமுறைகளுக்கு உட்படுத்திக்கொள்ளவில்லை இருப்பினும் அறிவியல் அணுகுமுறைகளுடன் ஒத்துப்போகிறது. 1800 காலக்கட்டங்களில் ஹோமியோபதியால் விளக்க முடியாத பல கேள்விகளுக்கு 20ஆம் நூற்றாண்டில் தடுப்பூசி மற்றும் நானோ துகள்கள் கோட்பாடுகளால் விளக்கமளிக்க முடியும்,

ஹோமியோபதி முறையை உருவாக்கிய ஹானிமன் ஒரு அலோபதி மருத்துவர்தான். ஆயினும் அலோபதி உலகம் அதனை ஏற்க மறுத்தே வந்துள்ளது. மருத்துவம் என்பது மக்களுக்கான சேவை என்பதற்கு மாறாக, அது முற்றிலும் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. அலோபதி மருந்துகளைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் ஏற்பட்ட நிலைமை இது. இன்று ஹோமியோபதியிலும் பெரும் நிறுவனங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன.

இன்றைய அச்சம் சூழ் நிலைமைகளில் மட்டுமல்லாமல், எப்போதுமே எந்த மருத்துவம் சிறந்தது என்ற விவாதத்தை வளர்த்துக்கொண்டு போவதை விட மக்களின் உயிர் காக்க அனைத்துவிதமான மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்துப் பயன்படுத்த முன்வருவதே மனிதநேய அணுகுமுறையாக இருக்க முடியும். மருத்துவத்தில் மட்டுமல்லாமல், எல்லாவிதமான சேவைகளிலும் இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறைதானே தேவைப்படுகிறது?

பா.ஹேமாவதி

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *