கேள்விகளைக் கேட்க அனுமதிக்காவிட்டால் நீங்கள் குழந்தைகளை கொன்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்- ரிச்சர்ட் டாக்கின்ஸ்
ரிச்சர்ட் டாக்கின்ஸ் உலகத்தின் தலை சிறந்த அறிஞர்களில் ஒருவர், பரிணாம உயிரியலாளர் சோசலிசத்தின் நாத்திகத்தின் குரலாக செயல்படுபவர் அவர் பல்வேறு நூல்களின் ஆசிரியர் குழந்தைகளுக்காக அவர் எழுதிய தி மேஜிக் ஆஃப் ரியாலிட்டி புத்தகம் வெளிவந்தபோது அவரிடம் நிகழ்த்தப்பட்ட ஒரு நேர்காணல். லைட் ஸ்பீட் அறிவியல் இதற்காக இந்த உரையாடலை நிகழ்த்தியது தமிழில் ஆயிஷா இரா நடராசன்.
கேள்வி – உங்களின் புதிய புத்தகம் தி மேஜிக் ஆஃப் ரியாலிட்டி குழந்தைகளை இலக்காகக் கொண்ட ஒரு அறிவியல் நூல் இந்த புத்தகத்திற்கு கான யோசனை எங்கிருந்து வந்தது?
பதில் – அறிவியல் ஒரு அற்புதம்.. அறிவியல் மிகமிக முக்கியம் இருபத்தோராம் நூற்றாண்டில் அறிவியலை விட ஒரு பெரிய கவர்ச்சியோ அறிவியலை விட ஒரு மாய யதார்த்தமும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. குழந்தைகளும் இளைஞர்களும் கூட அதிசயம்தான்.. குழந்தைகளுக்கு அறிவியல் புத்தகம் எழுதுவதை விட வேற எது சிறப்பானதாக இருக்க முடியும்? ஆனால் இது உண்மையில் பாடப் புத்தகம் போல் வந்து விடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன் இது எல்லா வயதினருக்குமான புத்தகமாகவும் இருக்க வேண்டும்.. என்று திட்டமிட்டுச் செயல்பட்டேன்.. குழந்தைகளுக்காக நான் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது என்னுடைய இணையரின் விருப்பம்..
கேள்வி – இந்த எல்லா தலைப்புகளுமே ஒரு கேள்வி போல இருக்கிறது அறிவியலை அதிகம் பேசாமல் புராணங்களைப் பற்றி அதிகம் பேசுகிறது என்று சொல்கிறார்களே?
பதில் – ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கேள்வியால் தான் தொடங்கும் வானவில் என்றால் என்ன? நிலநடுக்கம் என்றால் என்ன? சூரியன் என்றால் என்ன? இப்படி கேள்விகளால் தான் குழந்தைகளை நாம் கவர முடியும் அவர்களிடம் லட்சக்கணக்கான கேள்விகள் உள்ளன இந்த கேள்விகளையெல்லாம் அடக்குவதற்காகவே அவர்களை மதவாதிகளாக சிறு வயதிலேயே பெற்றோர்களும் சமூகமும் மாற்றி விடுகிறது. எல்லாவற்றையும் நீ கேள்வி கேட்க கூடாது கடவுள் இந்த பிரபஞ்சத்தை இயக்கி கொண்டிருக்கிறார் இந்த இயக்கும் சக்தியை எதிர்த்து கேள்வி கேட்பவனாக இருந்தால் நீ ஒரு சாத்தான் என்று குழந்தையை சபிக்கிறார்கள்.. ஆனால் அதையும் மீறி குழந்தைகள் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கின்றன.. நான் போகும் இடத்திலெல்லாம் குழந்தைகள் என்னிடம் கேட்கும் கேள்விகளைத் தொகுத்து அதை ஒரு மாய யதார்த்தவாத புராணம் வாத அம்சங்களுக்கு உட்படுத்தி இந்த புத்தகத்தை அவர்களுக்காக நான் படைத்து இருக்கிறேன் … கேள்விக்கான பதில் சொல்லும் பாணியில் நான் புராணத்தை இணைத்து இருக்கிறேன் ஒவ்வொரு கேள்விக்குப் பின்னும் இருக்கின்ற புராண இதிகாச கட்டுக் கதைகளை கையாண்ட பிறகு உண்மையில் அது என்ன என்பதை நான் விளக்கியிருக்கிறேன் சூரியன் பற்றி கட்டுக்கதைகள் பூகம்பம் பற்றிய கட்டுக்கதைகள் இதையெல்லாம் நிச்சயமாக அறிவியல் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வைப்பதற்காக எளிய முறையில் என்னால் ஆன முயற்சியை நான் செய்து இருக்கிறேன்

கேள்வி – நீங்கள் சேர்த்த சில கட்டுக்கதைகளின் உதாரணங்களை சொல்ல முடியுமா..
பதில் – உதாரணமாக சூரியனைப் பொறுத்தவரையில் ஆஷ் டேக் கட்டுக்கதைகள் உள்ளன இவை மிகவும் வேடிக்கையானவை இவற்றின் மூலம் அந்த அத்தியாயத்தை நான் தொடங்குவேன் அவை மேலும் துரதிஷ்டவசமான சூரிய கடவுளுக்கு மனித இதயங்களை தியாகம் செய்கின்ற கொடூரமான மரண சடங்குகளுடன் .. வேடிக்கை இல்லாத அம்சங்களை நோக்கி நான் பயணித்து சூரியனைப் பற்றிய..-புராணங்களை முதலில் விவரிப்பேன் சூரியனைப் பற்றிய பண்டைய கிரேக்கப் புராணங்கள் சூரியனைப் பற்றிய பண்டைய எகிப்திய புராணங்கள்.. சூரியனுக்குக் கடவுளின் அந்தஸ்தை கொடுக்கும் பண்டைய இந்தியப் புராணங்கள் இவற்றையெல்லாம் விவரித்துக்கொண்டே வந்து இறுதியாகச் சூரியனைப் பற்றிய அறிவியல் உண்மைகளை.. சுவைபட குழந்தைகளுக்கு விளக்குகின்ற வகையில் அத்தியாயத்தை அமைத்திருந்தேன்.. இன்னொரு உதாரணம் சொல்லலாம் அது வானவில் பற்றியது சுமேரியாவின் கில்காமேஷ்யின் காவியத்தில் இருந்து உத்தர் நாபிஷ்டின் புராணத்தை நான் எடுத்துக் கொண்டேன் ..ஒரு பெரிய வெள்ளம் வருவதால் எல்லா விளக்குகளையும் பிடிக்க ஒரு பெரிய படகை கட்டும்படி கடவுள்களில் ஒரு வரால் கூறப்படுகிறது அவர் அதை செய்கிறார் பின்னர் வெள்ளம் வழிந்தபோது வானத்தில் இருந்து கடவுள் மீண்டும் வெள்ளத்தை உண்டாக்க போவதில்லை என்பதற்கான சமிக்கையாக ஒரு வானவில்லை வைக்கிறார்.. இது சுமேரிய புராணக் கதை இந்த கதையை நோவாவின் கதை என்று பைபிள் திருடிக் கொண்டது என்கிற செய்தியையும் என் புத்தகத்தில் நான் குழந்தைகளுக்குச் சொல்லிவிட்டு, அதன் பிறகு வானவில்லின் அழகையும் அறிவியலையும் விவரிக்கிறேன்.. ஒரு அறிவியல் விழிப்புணர்வு நூலை இப்படி தான் கொண்டு செல்ல முடியும் அறிவியல் பாடப் புத்தங்களிடமிருந்து இந்த புத்தகம் முற்றிலும் வேறுபட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்
கேள்வி – இந்த புராண புத்தகங்கள் அனைத்துமே மக்களால் நன்கு அறியப்பட்ட கடவுள்கள் பற்றி பேசுவதாகவும் மக்களுக்கு தெரியாத எதையுமே புத்தகத்தில் சேர்க்கவில்லை என்று முன்னுரையில் குறிப்பிடுகிறீர்கள் இந்த மாதிரியான நம்பிக்கை வாதங்களால் ஏற்படும் மன நோய்களைப் பற்றியும் விரிவாக குழந்தைகள் பயப்படும் வகையில் நான் எதையும் குறிப்பிடவில்லை என்பதையும் சொல்கிறீர்கள்.. உயிர்கள் இந்த பிரபஞ்சம் விரிவடையாது மேலும் பரிணாமவியல் என்றலாம் இந்த புத்தகத்தில் நீங்கள் எதையுமே விவரிக்கவில்லை ஆனாலும் அறிவியல் பேசி இருக்கிறீர்கள்.. இது திட்டமிட்டு நடந்ததா?
பதில் – சரி தான்… நான் இப்படி ஆழமாக உழைத்து இருக்கிறேன் என்பதையே மறந்துவிட்டேன் இது ஒரு நல்ல விஷயம்தானே இதை நினைவூட்டியதுக்கு நன்றி இது முற்றிலும் உண்மை. வெளியீட்டாளர்களும் இலக்கிய முகவர்களும் முதலில் இந்த புத்தகத்தை வழக்கம் போல பகிஷ்கரித்தார்கள் ஆழமாக குழந்தைகளுக்கு பரிணாமவியலை சொல்லி குடுக்க நான் ஒரு புத்தகம் எழுதி விட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.. ஆனால் புத்தகம் நகைச்சுவை மிக்கதாக இருக்க வேண்டும் என்பதில் நான் மிக கவனமாக இருந்தேன் அவர்கள் அதை வாசித்த பிறகு அவர்களால் அதை வெளியிடாமல் இருக்க முடியவில்லை-ஆனால் இந்த விஷயத்தில் நான் ஓவியர் டேவ்க்கும் நன்றி சொல்ல வேண்டும்..
கேள்வி – இந்த புத்தகத்தை குழந்தைகள் வாசித்துவிடக் கூடாது என்று இங்கிலாந்தின் உடைய திருச்சபை பொதுமக்களுக்கு ஒரு விண்ணப்பம் போல கொடுத்திருக்கிறது.. அது குறித்து உங்கள் பதில் என்ன?
பதில் – உண்மையை சொல்ல போனால் நான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்றெல்லாம் மிக மோசமாக அவர்கள் கதை கட்டிவிட்டார்கள் .. நான் அப்படிப்பட்டவன் அல்ல ஆனால் நான் அவர்களுக்கு ஓரினச்சேர்க்கை என்பதும் ஒரு மரபணு பிழை…என்று திரும்பவும் கடிதம் எழுதினேன்… உண்மையில் பரிணாமம் தொடர்கிறதா என்பது பற்றி ஒரு விஞ்ஞான சர்ச்சை இருப்பதாக பொதுமக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்… பரிணாம உயிரியலாளர்கள் இடையே சில உண்மையான அறிவியல் சர்ச்சைகளும் உள்ளன.. ஆனால் மிக சுவாரசியமான சர்ச்சைகளும் உள்ளன சீரற்ற மரபணு மாற்றத்தை விட இயற்கையான தேர்வின் முக்கியத்துவம் மிக மிக அவசியமானது இயற்கை தெரிவை தான் டார்வின் தன்னுடைய கொள்கையில் மிக முக்கிய அடிப்படையாக வெளியிட்டார் சீரற்ற மரபணு தழுவலை உருவாக்கும் திறன் கொண்டது என்று யாருமே கூற மாட்டார்கள் அது ஒரு வடிவமைப்பின் மாயை சீரற்ற மரபணு மற்றத்தால் ஒரு பறக்கும் திறன் கொண்ட சிறகுகளையும் பார்ப்பதற்கு நல்ல கண்களையும் ஓடுவதற்கு திறமையான கால்களையும் உருவாக்க முடியாது… இயற்கை தெரிவு என்பது ஒரு விலங்கு அல்லது ஒரு உயிரி வாழ்கின்ற சூழலியலை பொறுத்து அதனுடைய உடலில் மாற்றங்களை கொண்டு வருகிறது..-இயற்கை தெரிவை புறக்கணிக்கும் போலி விஞ்ஞானிகளைக் கொண்டு இந்த புத்தகத்திற்கு தேவாலயம் அச்சுறுத்தல் மிக்க எதிர்வினையை எழுதி வெளியிட்டது.. இப்படி நடக்க நடக்க இந்த புத்தகத்தை குழந்தைகள் மேலும் விரும்பி வாங்கி இதில் ஏதோ இருக்கிறது என்று வாசிக்க தொடங்குகிறார்கள்…. ஏறக்குறைய தடைசெய்யப்பட்ட எல்லா புத்தகங்களுக்கும் நடப்பது போலவே இந்த நூலைப் பொறுத்த வரையில் பெரிய வரவேற்பாக தேவாலயங்களில் உடைய தடையரண்கள் மாறிப்போயின..
கேள்வி – ஆனால் குழந்தைகளை ஒரே இடத்தில் மொத்தமாக உட்கார வைத்து கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடத்துவதை நீங்கள் தவிர்ப்பது ஏன் ?
பதில்- நீங்கள் சொல்வதில் பாதி தான் உண்மை.. நான் குழந்தைகளை தொடர்ந்து சந்தித்து வருகிறேன் இணையத்தின் வழியாக லட்சக்கணக்கான குழந்தைகள் என்னோடு தொடர்பில் இருக்கிறார்கள் குழந்தைகளை ஓரிடத்தில் ஒன்றாக கூட்டும் பொழுது அங்கே ஆசிரியர்களும் பெரியவர்களும் அவர்களை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் அவர்கள் எதை பேச வேண்டும் அவர்கள் எதைக் கேட்க கூடாது அவர்கள் எப்படி உட்கார வேண்டும் எந்த மாதிரி அவர்கள் அன்றைக்கு நடந்து கொள்ள வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் முடிவு செய்கிறார்கள்.. விஷமத்தனமான கேள்விகளை எழுதிக்கொடுத்து குழந்தைகளின் அரங்கங்களை ஆபாச மிக்கதாக அவர்கள் மாற்றுகிறார்கள் …வேண்டும் என்று அறிவியலற்ற விஷயங்கள் குறித்து விவாதம் விரிவாக செல்வதற்கு அங்கு குழந்தைகளோடு வருகின்ற ஆசிரியர்களும் பெரியவர்களும் திட்டமிட்டு சதி செய்கிறார்கள். நீங்கள் குழந்தைகள் எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்று நினைக்கிறீர்கள் குழந்தைகள் நேரடியாக அதிகாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள் குழந்தைகள் எந்த கேள்வியும் கேட்காமல் உங்கள் மதத்தை சேர்ந்தவராக உங்களைப் போலவே பொம்மைகளாக உருவாக்கப்பட்டு விட வேண்டும் என்பதில் துடிப்பாய் இருக்கிறீர்கள்.. இப்படித்தான் கேள்வி கேட்காத குழந்தைகள் உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் குழந்தைகளை ஏற்கனவே கொன்று விட்டீர்கள்.. உங்களுக்கு அவர்கள் நீங்கள் போடுகின்ற வேலிகளைக் கடந்து விடவும் கூடாது.. அதே சமயத்தில் அவர்கள் நோபல் பரிசும் வாங்கி விடவேண்டும்.. இதை விட பெரிய அயோக்கியத்தனம் வேறு என்ன இருக்கிறது. அறிவியல் என்பது பணம் சம்பாதிக்கும் ஒரு துறை அல்ல.. மனிதனை மனித நேயத்தோடு வாழ வைக்கின்ற ஒரு கருவி.. வெறும் தொழில்நுட்பத்தை கையாளும் மனிதர்களை உருவாக்கிவிட்டு அவர்களை விஞ்ஞானிகள் என்று போலியாக நீங்கள் அழைக்கிறீர்கள்..
கேள்வி- 1976 ஆம் ஆண்டு இந்த செல்ஃபிஷ் ஜீன் வெளிவந்தது.. இந்த நூலில் பரிணாம வளர்ச்சியின் மரபணு சார்ந்த பார்வையை நீங்க முன்வைத்திருந்தீர்கள் மீம் என்கிற சொல்லை உருவாக்கி டார்வின் பரிணாமவியலுக்கு புதிய அர்த்தத்தைக் கொடுத்தீர்கள்.. சீரியஸ் ஆன எழுத்தாளர் நீங்கள்.. இயற்கை விஞ்ஞானிகள் அனைவருக்குமே.. உரிய இயல்பான ஆழ்ந்த ஆய்வு கட்டுரைகள் உங்களுடையவை..ஆனால் குழந்தைகளுக்கான இந்த புத்தகத்தில் நகைச்சுவை நிரம்பி வழிகிறது.. குறிப்பாக அறிவியல் புனைகதை எழுத்தாளர் டக்ளஸ் ஆடம்ஸின் கோணத்தில் விஷயங்களை அணுகி இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே..
பதில்- நான் டக்ளஸ் ஆடம்ஸ் நூல்களை விரும்பி வாசித்தேன் குறிப்பாக அவர் முன்வைத்த டர்ன் ஜெட்லியின் ஹோலிஸ்டிக் டிடக்டீவ் ஏஜென்சியை நான் மிகவும் விரும்பினேன் நான் படித்த போது நான் படித்த ஒரே புத்தகம் என்கிற பெருமையை அந்த நூல் பல ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொண்டது நான் அதை முழுமையாக வாசிக்க முடியவில்லை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மீண்டும் ஒரு பக்கத்துக்கு திரும்பிச் சென்று முதலிலிருந்து தொடங்கவே எல்லா வழிகளிலும் அதை படிப்பேன் நான் அவருக்கு ஒரு வாசகர் கடிதம் கூட எழுதி இருக்கிறேன் நான் எழுதிய ஒரே வாசகர் கடிதம் அதுதான் என்று நினைக்கிறேன்.. அந்நாட்களில் அவர் எனக்கு ஒரு வாசகர் கடிதம் எழுதினார் நாங்கள் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்தோம் வடக்கு லண்டனில் உள்ள அவரது வீட்டில் மணியடித்ததும் அந்த பிரம்மாண்ட மனிதன் வாசலுக்கு வந்து என்னை வரவேற்றதும் நினைவிருக்கிறது அவர் பருமனாக இல்லை உயரமாக இருந்தார் ஆனால் அவர் பேசும் விஷயம் அனைத்துமே சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது அவரை சுற்றி இருந்தவர்கள் அனைவருமே நகைச்சுவை உணர்வு உடையவர்கள் இது என்னை ஆச்சரியப்படுத்தியது கேட்ஜெட்டுகளை விரும்பினோம் ஒவ்வொரு முறையும் மேக்கிங் டாக் கேட்ஜெட்கள் வெளிவரும் போதெல்லாம் எங்களுக்குள் குறிப்புகளை பரிமாறிக் கொள்வோம் இது மெல்ல மெல்ல நட்பாக மாறியது அவருடைய பாணியில் ஒரு புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கான புத்தகத்தை நான் தேர்வு செய்தேன்

கேள்வி- உங்கள் மனைவி Lalla ward அம்மையாரை உங்களுக்கு டக்ளஸ் அறிமுகப்படுத்தினார் அல்லவா..
பதில் – அது உண்மைதான் நான் என் இணையரை வேறு வழியில் அறிந்திருக்க முடியாது அவர் தொலைக்காட்சியில் வழங்கிக் கொண்டிருந்த ஒரு நகைச்சுவை அறிவியல் தொடரில் டாக்டர் ஹூவின் ஸ்க்ரிப்ட் எழுத்தாளராக அப்போது என்னுடைய துணைவியார் அவருக்கு உதவிகரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.. மருத்துவர்கள் இடையே நிலவுகின்ற நகைச்சுவை குறித்த ஒரு அற்புதம் அது டக்ளஸ் ஆடம்ஸ் இன் முத்திரை நீங்கள் அந்த நிகழ்ச்சி நடைபெறும் 1 மணி நேரத்திற்கு சிரிப்பதை நிறுத்தவே முடியாது அதன் பின்புறத்தில் என் துணைவியார் இருந்தார் அவருடைய உதவியாளராக ஆனால் டக்ளஸ் ஆடம்ஸ்க்கு அவரை தெரியுமே தவிர எனக்கு அவரை தெரியாது அவருடைய வீட்டிற்கு ஒரு விருந்துக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன் டக்ளஸ் எங்கள் இருவரையும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்தார் விஞ்ஞானி ஸ்டீபன் ஃப்ரையுடன் இணைந்து நாங்கள் சற்று நேரம் கலந்துரையாடினோம் இதுதான் என்னுடைய இணையரை நான் சந்தித்த முதல்நாள்.. இரவு உணவு உண்ட பிறகு நாங்களிருவரும் எங்களுக்குள் பொதுவான அறிவியல் அம்சங்களை உரையாடத் தொடங்கினோம்.. இப்படித்தான் எங்களுக்குள்ளான ஈர்ப்பு தொடங்கியது..
கேள்வி- ஆனால் யூடியூபின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பொழுது ஹிட்சிகர்ஸ் கைடீன் ( டக்ளஸ் ஆடம்ஸ் எழுதிய புத்தகம்) ஒரு பகுதியை சத்தமாக வாசித்துகாட்ட கூட்டத்திலிருந்து ஒருவரை நீங்கள் அழைக்கிறீர்கள் மேடைக்கு வந்தவரை பார்த்து நீங்கள் அசந்து போனீர்கள்.. அது வேறு யாருமல்ல டக்ளஸ் ஆடம்ஸ்.. இந்த நிகழ்ச்சி குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் விரும்பிய அத்தியாயத்தை அவர் வாசித்தார் அல்லவா?
பதில்- மறக்க முடியாத அனுபவம் அது. நான் விரும்பிய அத்தியாயம் சாப்பிட விரும்பும் விலங்குகள் என்கிற அத்தியாயம்.. இது மிகவும் சிறிய அத்தியாயம் ஏனென்றால் நீங்கள் யாரையாவது அழைக்கும் பொழுது அது குழந்தைகளாக இருக்கவேண்டும்.. சிறிய அத்தியாயத்தை குழந்தைகள் மிகவும் எளிமையாக வாசித்து விடுவார்கள் என் கையில் அந்த புத்தகத்தை வைத்திருந்தேன் யாராவது எனக்கு வந்து வாசித்து உதவ முடியுமா என்று மெல்லிய குரலில் குழந்தைகள் வருவார்கள் என்று நினைத்து நான் அழைத்தேன் ஆனால் அந்த கூட்டத்தில் பல கைகள் மேலே சென்றன அந்த கைகளின் பெரும் காடு அது சிறிய கைகள் இப்படி அந்த சிறிய கைகளின் நடுவே ஒன்றுமட்டும் பெரிய கையாக இருந்தது… அதுதான் டக்ளஸ்.. அந்த புத்தகத்தை எழுதியவர்!!.. அதனால் நான் அவரை அழைத்து அந்த மகத்தான மனிதர் முன்னாள் நான் நின்று கொண்டிருந்த பொழுது எனக்காக அந்த அழகான அத்தியாயத்தை அவர் வாசித்தார்.. சாப்பிட விரும்பும் விலங்குகள் இதுதான் அத்தியாயத்தின் தலைப்பு இந்த பிரபஞ்சத்தில் உள்ள விலங்குகளை உன்னவும்..அனுபவிக்கவும் அதை சாப்பிட விரும்பும் ஆட்களுக்காகவும் மட்டுமே பிரபஞ்சம் வளர்க்கப்பட்டு இருக்கிறது என்று ஒரு இடம் வரும்.. டக்ளஸ் ஆடம்ஸ் அந்த அத்தியாயத்தை இப்படி முடித்திருப்பார் ..அந்த விலங்குகளின் எண்ணிக்கையில் மனிதனும் அடங்கும் என்று சொல்லிக்கொண்டு அயல் உயிரிகள் பெரிய விருந்துக்கு மனிதர்களை சமைத்துக் கொடுப்பார்கள்..
கேள்வி – மனிதர்களையும் சிம்பன்ஸி களையும் இனக்கலப்பு ஆக்குவது பற்றி சமீபத்தில் மிகக் கடுமையான எதிர்ப்பை நீங்கள் தெரிவித்திருந்தீர்கள்.. இது குறித்து சொல்லுங்கள்..
பதில்- பரிணாமவியலை கேலி செய்வதற்காக இப்படிப் பல புனைவுகளை கற்பனையாக எடுத்துவிடுகிறார்கள் ஒரு புனை கதையில் நீங்கள் அவற்றில் ஏதேனும் ஒன்றை செய்யலாம் என்று நான் சொல்கிறேன் இது ஒரு சிறந்த கற்பனை மரபணு பொறியியல் பாதை இதற்கு எதிரானது நீங்கள் உண்மையில் அவர்களை இணைத்து சாதாரண முறையில் இனப்பெருக்கம் செய்யும் அளவிற்கு அவர்கள் நெருக்கமாக இல்லை ஒருவேளை ஒரு ஆய்வகத்தில் அவர்களுடைய மரபணுக்களை இணைத்து சோதனைக் குழாய் குழந்தையாக முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் அது ஜுராசிக் பூங்கா நாவலை போல தான் போய் முடியும். செத்த கொசுக்களிலிருந்து ரத்தத்தை வெளியேற்றும் யோசனையை அந்த படத்தின் மூலம் அந்த நாவலின் மூலம் நான் விரும்பி வாசித்தேன் அது புத்திசாலித்தனமானது ஆனால் மனிதனையும் சிம்பன்ஸியையும் இனச்சேர்க்கை செய்து பார்ப்பது என்பது உங்கள் வக்கிர புத்தியைத்தான் காட்டுகிறது.
கேள்வி- சரி அந்த ஜுராசிக் பார்க் விஷயத்தில் கொசுவிடம் இருந்து டி என் ஏ வை எடுப்பது என்பது உண்மையில் நம்ப முடியாததா..
பதில்- இதைத்தான் சொல்கிறேன் அறிவியலின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் நம்மால் ஒரு அறிவியல் புனைகதையை நம்பி படைப்பாக்கமாக ஏற்க முடியும்.. ஆனால் அறிவியல் சாத்தியமில்ல.. அந்த டி என் எ அவ்வளவு வருடங்கள் வாழாது… 65 மில்லியன் ஆண்டுகள் கடந்துவிட்டன.. அப்படியே ஒரு டிஎன்ஏ கிடைத்தாலும் டைனோசரை வளர்ப்பது மிகவும் கடினமான பிரச்சினையாக இருக்கும் ஆனால் அது ஒரு நியாயமான அறிவியல் புனைகதை இது அறிவியல் புனைகதை என்று நான் கருதிக் கொண்டு வாசிக்கும் பொழுது மிகவும் ரசிக்கிறேன் ஆனால் அப்படி கருதாத கற்பனை ….அறிவியல் ஆகாது என் முன்வைக்கப்படும் பொழுது நான் கண்டிப்பாக அதை கடுமையாக எதிர்த்தே ஆக வேண்டும் அதுகுறித்து பிரச்சாரம் செய்வதும் அறிவியலுக்கு ஆதரவான அம்சம் தான்.

கேள்வி- உங்கள் இணையதளத்தில் மாற்று மூளை என்கிற ஒரு பகுதி உள்ளது அங்கு உங்கள் புத்தகங்களை வாசித்த பிறகு மதவெறியை விட்டு வெளியேறிய வாசகர்களின் கடிதங்கள் உள்ளன இந்த கடிதங்களில் பிரத்தியேகமாக ஏதாவது நினைவில் உள்ளதா?
பதில் – அவை அனைத்துமே வாசிக்கத்தகுந்தவை ஏராளமாக உள்ளன அவற்றில் பல சுவாரசியமானவை கடவுள் நம்பிக்கை மதம் சடங்குகள் போன்ற மாயை உடைத்தெறிந்து வெளியேறுபவர்கள் உண்மையான விடுதலை மனிதர்கள் ஆனால் அதே சமயம் மதத்திற்கு மக்களுக்கு எதிராக ஒரு தீவிர வெறியர்களாக அவர்கள் மாறவில்லை ஒரு நம்பிக்கை வாதத்திலிருந்து விடுபட்டு அறிவியல் வாதத்துக்கு வரும் ஒருவர் மன அடிப்படையில் மனித நேயம் மிக்கவராகவும் அனைவரையும் பார்த்து பொதுவான தளத்தில் .. அனைவருக்குமாக இயங்குபவராக மாறுகிறார்.. இத்தகைய மனிதர்கள் தான் இருபத்தோராம் நூற்றாண்டுக்கு தேவை. என்று நான் நம்புகிறேன் இத்தகைய சமூகத்தை உருவாக்குவதற்காக குழந்தைகளிடம் நான் பேச விரும்பினேன் அதன் வெளிப்பாடுதான் என்னுடைய தி மேஜிக் ஆஃப் ரியாலிட்டி புத்தகம்..
தமிழாக்கம்:

ஆயிஷா இரா நடராசன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நல்ல ஒரு அருமையான கேள்வி பதிலை தமிழாக்கம் செய்துள்ளீர்கள்.
உள்நாடு, வெளிநாடு, படித்த மக்கள், வளர்ந்த நாடு, பணக்காரர்கள் வாழும் நாடு என்று எப்படி பார்த்தாலும் மூடநம்பிக்கை கொண்டுள்ள மனிதர்கள் எல்லா இடத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். நிலவிலே சென்று குடியமர்ந்தாலும், செவ்வாய்க்கு சென்று குடில் அமைத்தாலும் அங்கேயும் இதைப் பற்றி பேசுவதற்கு மக்கள் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அருமையாக பதில்கள் கூறியுள்ளார். கலிலியோ காலத்தில் தான் திருச்சபையின் ஆதிக்கம் இருந்தது என்று நான் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் இன்றும் இந்த நிலை தொடர்கிறதா என்பதை அறிந்த பொழுது அதிர்ச்சியும் ஆதங்கமும் அடைந்தேன். இது போன்ற கேள்வி பதில்களை சாதாரணமாக படிப்பது அரிது உங்கள் மொழியாக்கம் இதுபோன்ற கருத்துக்களை படிப்பதற்கு உதவி செய்கிறது நன்றிகள் பல.