இளையோருக்கு மார்க்ஸ் கதை – ஆதி வள்ளியப்பன் | நூல் அறிமுகம் P.சின்னராசு

 

தற்போது சில நிறுவனங்கள் நடத்திய ஆய்வின்படி 1000 வருடத்தில் சிறந்த மனிதன் யார் என்ற கேள்விக்கு மார்க்ஸ் தான் அதில் இடம் பெற்றார். இந்நூலை படித்த பிறகு நான் கூறுகிறேன் இவ்வுலகில் கடைகோடி மனிதன் அதாவது கடைசி மனிதன் இருக்கும் வரை மார்க்சின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. மார்க்சை போலவே ஒருவன் வரப்போவதும் இல்லை. கம்யூனிஸ தத்துவத்தை விட சிறந்த தத்துவம் இனி உருவாக்க போவதுமில்லை. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கு மார்க்ஸ் தான் இந்நாட்டின் உலகம் என தோன்ற வைக்கின்றது அது உண்மையும் கூட.

மார்க்ஸை பற்றிய சில:Karl Marx -The Book of Life
காரல் மார்க்சின் தாய் நாடாக ரஷ்யா இருந்தது. அன்றைக்கு அது ஜெர்மனி ஆக இருந்தது இந்தியாவின் ரைன் லாந்தின் மகாணத்தில் டிரையர் என்ற ஊரில் 1818 ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி இல் பிறந்தவர். மார்க்சின் பெயர் “சார்லஸ்” ஜெர்மன் மொழியில்  காரல் மார்க்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அவரது குடும்பத்தில் மாக்ஸ் மட்டுமே இளம் வயதுடையவர் மார்க்சின் தந்தை வழக்கறிஞராக பணியாற்றியவர். சிறுவயதிலேயே மார்க்ஸ் குறும்புத்தனமும் சுறுசுறுப்பு தினமும் அதிகமாகவே இருக்கும். ஆனால் மிகவும் திறமைசாலி புத்திசாலி அப்பாவுக்கு மிகவும் பிடித்த அவன் பையன்.

ஜென்னிமார்க்சும், காரலும்

The triumphs of Karl and Jenny Marx | SocialistWorker.org

ஜென்னி மார்க்ஸ் 1814 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதியில் ஜெர்மனியில் பிறந்தவர். ஜென்னி, மார்க்ஸை விட நான்கு வயது மூத்தவள் .சிறுவயதிலிருந்தே மார்க்சும் ஜென்னியும் நண்பர்கள் இளம் வயதில் அது காதலாக மலர்ந்தது. மார்க்ஸ் கல்லூரி படிப்பை முடித்தவுடன் ஜென்னியை திருமணம் செய்து கொண்டார். காரல் மார்க்ஸ் தத்துவச் சிந்தனை கொண்டவர். ஜென்னியும் தத்துவ சிந்தனை கொண்டவள் தான். இவர்கள் இருவருமே ஒரே தத்துவ பாதையில் பயணித்தார்கள். மார்க்ஸ் தொடர்ச்சியாக ஜெர்மன் அரசுக்கு எதிராக எழுதிய கட்டுரைகளின் விளைவாக ஜெர்மன் அரசு அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்தது, மார்க்சும் ஜென்னியும் பெல்ஜியத்தில் இடம் பெயர்ந்தார்கள். அங்கும் இதே நிலைதான் மாக்ஸ் எங்கும் ஒரே இடத்தில் வாழ்ந்ததில்லை கடைசிவரை ஒரு அகதியாக வாழ்ந்து வந்தார்.

மார்க்சும் ,ஏங்கல்சும்

மார்க்சியம் கற்பதற்கு கட்சி ...

காரல் மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலில் பாரீஸில்தான் சந்தித்தார்கள் இருவருமே ஒரு தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்கள் மார்க்ஸ் எழுதிய மிகப்பெரிய மூலதனத்தை வெளியே கொண்டு வந்ததற்கான காரணம் காரல் மார்க்சின் நண்பன் ஏங்கல்ஸ்தான். ஏங்கெல்ஸ் என்பவன் ஒருவன் இல்லை என்றால் மூலதனம் என்ற ஒரு சகாப்தம் வெளியே வந்திருக்காது. ஜென்னி என்பவள் ஒருவள் இல்லை என்றால் என்ற மார்க்ஸ் ஒரு மனிதன் உயிருடன் இருந்திருக்க மாட்டான். எனவே இவ்வுலகத்திற்கு இம்மூன்று பேரும் அவசியம்.

மார்க்சின் வறுமையும் துயரமும்

Marx 2000 - Robert Kurz - Critique de la valeur-dissociation ...

மார்க்சின் வறுமை எந்த மனிதருக்கும் இல்லாத வறுமை எந்த மனிதர்களுக்கும் வராத வறுமை மார்க்ஸ், தன் பொருளாதாரத்தை தேடிகொள்வதில் எந்தவிதமான ஏற்பாடுகள் செய்யவில்லை அவர்களுக்கு குடும்பம் நடத்துவதே சிரமமாக இருந்தது. மார்க்சுக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் மார்க்ஸ் குடும்பத்திற்கு பொருளாதார நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருந்தது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்க கூட முடியாத நிலை மார்க்சின் நான்கு குழந்தைகளுக்கு காசநோய் இருந்தது. மார்புசளி அதிகமாக இருந்தது மாத்திரை வாங்கி கொடுப்பதற்கு பணம் இல்லை கொடுமையிலும் கொடுமையாக மார்க்ஸ் இருந்தார்.

கடைசி குழந்தை காச நோயால் இறந்துவிடுவான் அவனை சவப்பெட்டியில் வைப்பதற்குக் கூட காசு இல்லை மார்க்சுக்கு பிறந்த குழந்தைகளை பிறந்தவுடன் போடுவதற்கு தொட்டியிலும் இல்லை இறந்தவுடன் வைப்பதற்கு சவபெட்டியுமில்லை எவ்வளவு பெரிய கொடுமையான துயரம் இது ஒவ்வொரு நாளும் பசியாலும் பட்டினியாலும் துடிதுடித்து மார்க்சின் குடும்பம்  அப்போது தான் உடம்பில் போட்டிருந்த மேல்கோட்டை அடகு வைத்து ரொட்டித்துண்டு உணவுகளையும் மார்க்ஸ் வாங்கினார் வீட்டில் உள்ள எல்லாப் பொருள்களும் அடகு கடைகள் இருந்தன வரறுமை ஒவ்வொரு நாளும் சாகடித்த காரல் மார்க்ஸ் அடிக்கடி தன் நண்பரிடம் பண உதவி கேட்பார் மார்க்சும், மார்க்ஸ் குடும்பமும் வாழ்ந்ததற்கு முக்கிய காரணம் ஏங்கெல்ஸ் தான்.

வறுமையிலும் எழுதிய மூலதனம்

மூலதனம் கற்போம் – மார்க்சின் ...

இவ்வளவு கொடுமையிலும் மார்க்ஸ் இவ்வுலகை ஆராய்வதை பற்றி நிறுத்தவில்லை. தொழிலாளர்கள் பற்றியும் அவர்கள் அடையும் துயரத்தை பற்றியும் மார்ச் ஆராய்ந்தால் பல தொழிலாளி இயக்கங்களைக் சந்தித்தார். தொழிலாளர்களே உங்களால் மட்டுமே புரட்சியை நடத்த முடியும் எனும் தொழிலாளர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.

தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து புரட்சியை நடத்த வேண்டும் என கூறினார். உழைப்புதான் மக்களின் ஆயுதம் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே உள்ள போராட்டத்தை மக்களிடம் உணர்த்தி தானும் எழுதினார். மூலதனம் எனும் ஆயுதத்தை கிட்டத்தட்ட ஆயிரத்து 1500 புத்தகங்களை படித்த பின்புதான் மூலதனம் எனும் புத்தகத்தை காரல் மார்க்ஸ் எழுதினார்.

கம்யூனிச தத்துவம் ஆட்சியும்

Free download Marx Lenin Engels by systemdestroyer [1024x768] for ...

கம்யூனிசம் எனும் தத்துவத்தை தொழிலாளர்களுக்கு தீட்டப்பட வேண்டும் என்று விரும்பினார். எல்லோரும் சமம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடமைக் கொள்கை தான் கம்யூனிசம் உலகில் எந்த மனிதரும் ஒடுக்கப்படக் கூடாது என்று சொல்வது தான் கம்யூனிசம். கம்யூனிசத்தின் ஒரே நோக்கம் தனிச் சொத்துடைமையை அழிப்பது ஒழிப்பதும். மேலும் தொழிலாளர் வர்க்கத்தை நிலைநாட்டுவது. மூலதனம் ரஷ்யாவில் அதிக வாசகர்களைக் கொண்டு போய் சேர்த்தது. அதுவே அதன் தாக்கமே 1917 ஆம் ஆண்டு லெனின் தலைமையில் கம்யூனிஸ ஆட்சி ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் ஆட்சியை அமைக்க ஏதுவாக இருந்தது. மூலதனம் மார்க்ஸ் இறந்து 34 ஆண்டுகளுக்கு பிறகு தான் இவை நடந்தது. ரஷ்ய புரட்சியைப் தான் மார்க்ஸக்கு உலகத்தில் மேடை போட்டு கொடுத்தது பின்பு கம்யூனிசம் உலகமெல்லாம் பேசப்பட்டது.

குறிப்பு

கம்யூனிசம் நீண்ட காலத்திற்கு இருந்ததற்கும் இப்போது கம்யூனிஸம் இருப்பதற்கும் எப்போதும் கம்யூனிசம் இருக்கும் என்பதற்கும் முக்கிய காரணம். காரல் மார்க்ஸ் தான் உலகில் கடைசி தொழிலாளி இருக்கும் வரை உலகின் கடைசி மனிதன் ஒடுக்கப்படும் வரை மார்க்ஸ் முன்வைத்த கருத்து அவருடைய பெயர் இந்த உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும். மார்க்சஸை பற்றி தெளிவான எளிமையான வரலாறை கொடுத்த  இந்நூலை இளையோருக்கு கொண்டு போய் சேர்ப்பது நமது கடமை.

புத்தகத்தின் பெயர் : இளையோருக்கு மார்க்ஸ்

ஆசிரியர் : ஆதி. வள்ளியப்பன்

பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

பக்கங்கள் : 90

            தோழமையுடன்
      
            P.சின்னராசு
      இந்திய மாணவர் சங்கம்
          உளுந்தூர்பேட்டை