இளம்பிறையின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும் Ilampirai's Tamil Poem and Srivatsa's English Translation. Book day Website is Branch of Bharathi Puthakalayam

இளம்பிறையின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும்



Everything has its own value depending upon its utility. The mind has a tendency to compare not just one thing against another but even the same thing experienced at different times.
No two things, leave alone experiences, can be identical completely. They are unique in their own way and have different roles to play can inferred from this short poem in Tamil penned by Ilampirai and reproduced here with her prior permission alongside an English translation by moi:

எழுதுவதைக் காட்டிலும்
மகிழ்வாக இருக்கிறது
செடிகளுக்கு நீரூற்றுவது
வாசிப்பதைவிடவும்
இன்பமாக இருக்கிறது
கபடமற்றவர்களோடு
பேசிக் கொண்டிருப்பது
கம்பீரமாக நடிப்பதைவிட
எளிதாக இருக்கிறது
அழுதுவிட்டு
மீண்டெழுவது
சந்திப்பதைவிட
நெருக்கமாக இருக்கிறது
நினைவுக்குள் இருப்பது
என்றாலும்
என்னதான் நிதம்தோறும்
நீரூற்றிக் கொண்டே இருந்தாலும்
ஒரு மழை வருவது போலாகுமா
தோட்டத்திற்கு.

இளம்பிறை



It feels
more pleasurable
to water plants
than writing.
It feels
happier
talking to
unconceited people
than reading.
It feels
easier
to cry and recover
than act majestic.
Though it feels closer
to remain in memories,
than meeting
and even though
watering is done
every day,
would it be
like a downpour
for the garden?

~ Srivatsa



Memories may make or break us. Memories motivate us to survive and thrive. Memories may also bring our lives to a standstill or even make us kill. It’s not just the words and actions that trigger these memories but even silences do. And then, with time, when these memories become sublime, we realise that what used to trouble us by their presence are essential for our very existence as poet Ilampirai writes in this Tamil poem which has been reproduced here alongside an English translation by moi with her prior permission:
அலைமோதும் கலமாக
உன் ஞாபக நங்கூரத்தால்
பாதியில் கிடக்கிறதென் காலம்
கனவுசூழ புற்றுவளர்வதறியா
கடுந்தவத்தில்
உன் நினைவகலா
உயிர்வேட்கை உன்மத்தம்
யதார்த்த இயல்பறியா
நேசமனதை
சூடான தேநீர் பருகியபடி
கொலைபுரிகிறேன் நள்ளிரவில்
உன் மௌனக் கொலைவாளால்
விதையாக வேராக
மலராக கனியாக
உறைந்து கிடக்கும்
குருதியில் உயிர்த்து
நிழல் தழைத்து
உயிர் காற்றாகிவிடுகிறாய்
ஒவ்வொரு விடியலிலும்
மீண்டும்.


Like a vessel
struck by waves
anchored by
your memories,
my time lay
halfway.
In a hard penance
surrounded by dreams
unaware of an anthill
growing around,
the thirst for life
with your memories
unwavering,
is ecstasy.
With your murderous
sword of silence,
while sipping hot tea,
I slay the affectionate mind
that does not know
the characteristics of reality.
At every dawn,
you become
the seed, the root,
the flower and the fruit,
surviving in
the coagulated blood,
shadows thriving
and turn again into
the breath of life.



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *