ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்
ilayavan siva kavithaikal இளையவன் சிவா கவிதைகள்

இளையவன் சிவா கவிதைகள்

கருணையைப் பிடிங்கிக் கொண்ட வேக யுகத்தில்
நிதானத்தை உடைத்துவிட்ட
குரூர நகர்வில்
பரிதவிப்பைப் புறந்தள்ளிய
அவசர ஓட்டத்தில்
நீளும் கரத்தை ரணமாக்க
தட்டிவிடும் விசாரணையில்
அன்பின் அழுகையை நிராகரிக்கும் பணி இலக்குகளில்
உனக்கென்ன வந்ததெனும்
குடும்ப நச்சரிப்பில்
வேறென்ன செய்வது
வேடிக்கை பார்த்து
விலகிப் போவதைத் தவிர
விபத்தின் தருணங்களில்.

ஓடிக் களைத்துப்போன நதியின் 

வாழ்வில் ஒன்றுமே இல்லாது
வெறிக்கும் வெம்மையை
வாடி நிற்கும் வேரடியை
உயர்ச்சூடு கூட்டும் மணற்பரப்பை
அங்கும் இங்குமென ஒளி வீசும்
ஒழுங்கற்ற கற்களை
எதற்கும் உதவாதென உதாசீனத்தில்
ஊர் விட்டெறிந்த குப்பைகளை அடிவயிற்றைச் சுரண்டி
ரத்தக்கீறலென மேனியெங்கும் விளாசி
சரக்குந்துகள் வகுத்த தடங்களை எண்ணிக்கொண்டபடி
செத்துக் கொண்டிருக்கிறது
நகரத்தின் சாட்டைக் கம்பிலிருந்து என்னைக் காப்பாற்றிய
மலையின் கண்ணீர்த் தடம்.
பாதைகளின் துயர்நிறை வலிகளுக்குள்
நிழலின் பசுந்தடயங்களை
வெட்டி அறுத்து
வெம்மையில் நீளும்
கொடுங்கரங்களுக்குள்
சுழலெனச் சிக்கி
பால்மணம் துறக்கா
பிள்ளையின் குரல்வளைக்குள்
வியர்வைக் கத்தி சொருகி
வரளும் நாவுகளுக்குள்
வன்முறையென வார்த்தைகளை விதைத்து
நீண்டு கிடக்கின்றன
உழவனின் வாழ்வைக் கிழித்து ஊடுறவும்
வங்கிக் கடன் வட்டியும்வசூலும்…
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *