கற்பனை உரையாடல்: மோடியிடம் மாட்டிக் கொண்ட பத்திரிகையாளர்கள்..! – ராஜகுருபிரதமர் மோடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார் என்று நான் சொன்னதும் “சும்மா, அளந்து விடாதீங்கஜீ. மோடியாவது பத்திரிகையாளர்களைச் சந்திப்பதாவது?” னு நீங்க கேட்பீங்க.. உண்மைதான். சந்திப்பதாகக் கற்பனை செய்திருக்கிறேன்.. அவ்வளவுதான்! மேலே படியுங்க!

மோடி : வாங்க, வாங்க..! உங்களைச் சந்திச்சு கித்னா சால் ஆயிட்டுது.. ஏதாவது வெளிநாடு போயிருந்தீங்களா?

பத்திரிகையாளர்கள் : இந்தக் கேள்வியை நீங்க கேக்கறீங்களா? நல்ல ஜோக்குதான். கொரோனா கே பாத் நீங்களே வெளிநாடு போகமுடியலை… அப்பறம் நாங்க எங்க போறது?

மோடி : நான் பிரதமரா வந்தப்பறம் நாட்டில்உள்ள 130 கோடிக்கு மேலான மக்களும் நிம்மதியா, சந்தோஷமா இருக்காங்க.. மக்களுக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாத்தானே அதைப் பத்திக் கேக்க நீங்க வருவீங்க..?

பத்திரிகையாளர்கள் -1: என்ன ஜீ இப்படிச் சொல்றீங்க? தில்லியிலே லட்சக்கணக்கான விவசாயிங்க போராடிக்கிட்டு…

மோடி (இடைமறித்து) : சும்மா லட்சம் கோடின்னு அளந்து விடாதீங்க..என்னோட பார்வையிலே 1000, 2000 பேர் இருப்பாங்க.. நீங்க கண்ணைத் திறந்து பாக்கறீங்க. தியானம் பண்ணும்போது கண்ணை மூடிக்கற மாதிரி கண்ணை மூடிக்கிட்டுப் பாக்கணும்.. புரியுதா?

பத்திரிகையாளர்-2 : சரி, அதை விடுங்க..இந்த வேளாண் சட்டங்களை எந்த மாநிலத்தோடும் கலந்தாலோசிக்காம.. நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் சொன்னதை…

மோடி (இடைமறித்து) : மாநிலங்களை எதுக்குக் கேக்கணும்? எதிர்க்கட்சிகள் சொல்வதை ஏன் கேக்கணும்? லட்சக்கணக்கான மக்களோட நான் கலந்து ஆலோசிச்ச பிறகுதான் சட்டமாவே கொண்டு வந்தேன். யாரோடல்லாம்னு கேக்காதீங்க. அதெல்லாம் பரம ரகசியம்!

பத்திரிகையாளர்-3 : சரி அதை விடுங்க… நீங்கசொல்றபடியே இருக்கட்டும். அவங்க போராட்டம் நடத்திக்கிட்டிருக்காங்க என்பதையாவது ஒத்துக்குவீங்கன்னு நினைக்கிறோம். அவங்ககூட ஒரு தடவை நீங்க உட்கார்ந்து பேசினாத்தான் என்ன?மோடி : வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடியாதுங்கறதை நான் பல இடங்கள்லே பேசிக்கிட்டுத்தான் இருக்கேன். விவசாயிகளிடம் தோமரும் அதைத்தான் சொல்லப் போறார். நான் நினைக்கறதைத்தானே அவர் சொல்லப் போறார்? சொல்ல முடியும்?

பத்திரிகையாளர்-4 : சரி அதை விடுங்க.. அந்த சட்டங்களை வாபஸ் வாங்கினாத்தான் என்ன? விவசாயிகள் ரெண்டு மாசமா குளிர்ல நடுங்கிட்டுக் கொட்டற பனியிலே…

மோடி (இடைமறித்து) : அவங்களை குளிர்ல வந்து உக்காருங்கன்னு நானா சொன்னேன்? அவங்களா இங்கே வந்து உட்காந்துக்கிட்டா நான் என்ன செய்ய முடியும்? நானும் என்னாலே முடிஞ்ச வரைக்கும் அவங்களை விரட்டிவிட முயற்சி பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். இடத்தைக் காலி பண்ண மாட்டேங்கறாங்களே..?

பத்திரிகையாளர்-5 : நீங்க ஒரு தடவை அவங்ககிட்ட நேரடியாப் பேசி இதைக் கேட்டுரவேண்டியதுதானே?

மோடி : இதையே சொல்லிக்கிட்டு இருங்க..எனக்குக் கேக்கவே போர் அடிக்குது. அவங்க கூடல்லாம் பேச எனக்கு டயம் கிடையாது. தலைக்கு மேலே வேலை கிடக்கு.. முகேஷ் அம்பானி வீட்டுல பசு மாடு கன்னு போட்டிருக்காம். மாடுக்கும் கன்னுக்குட்டிக்கும் நெத்தியிலே பொட்டு வைக்க என்னைக் கூப்பிட்டிருக்காங்க. நான் அதுக்குப் போவேனா.. வெட்டியா கண்டவங்க கூட உட்கார்ந்து பேசிக்கிட்டிருப்பனா?

பத்திரிகையாளர்-3 : அதிமுக, திமுக ரெண்டுமே ஊழல் கட்சிகள்னு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லிக்கிட்டிருக்காரு…

மோடி : அதைச் சொல்றதோடு மட்டுமில்லாம ரெய்டுகள் நடத்தி அதிமுகவைத்தான் மிரட்டி வச்சிருக்கமே? அதனாலேதான் தொகுதிப் பங்கீட்டிலே அவ்வளவு கான்ஃபிடன்ட்டா இருக்கோம்..

பத்திரிகையாளர்-5 : அர்னாப் கோஸ்வாமி, கேத்தன் தேசாய், பிஎம் கேர்ஸ்…

மோடி (இடைமறித்து) : பேட்டி முடிஞ்சுது.. நீங்க போகலாம்!

பத்திரிகையாளர்கள் : கொரோனா தடுப்பூசி, தீப் சித்து, ஜிஎஸ்டி, காஷ்மீர் பிரச்சனை,…னு பல பிரச்சனைகளைப் பத்திக் கேட்க நெனச்சோம். பரவாயில்லை..கப்ஸா நிறைய விட்டாலும் அப்பப்ப மனசிலே உள்ளதை வெளிப்படையா பேசினதுக்கு நன்றி. நாங்க வரோம்ஜி..

– கற்பனை : ராஜகுரு

நன்றி: தீக்கதிர்