கற்பனா சோசலிசம்: எப்படி அறிவியல் அடிப்படை பெற்றது – வே .மீனாட்சிசுந்தரம்       எங்கெல்ஸ் எழுதிய கற்பனா வாத சோசலிசமும்- விஞ்ஞான சோசலிசமும் என்ற பிரசுரம் 1880ம் ஆண்டில் மார்க்சின் முன்னுரையோடு வெளிவந்தது.அந்த முன்னுரையில் விஞ்ஞான சோசலிச கோட்பாட்டிற்கு எங்கெல்சின் பங்களிப்பை மார்க்ஸ் வியந்து பாராட்டுகிறார். எங்கெல்ஸ் எப்பொழுதும் தன்னை மார்க்சிற்கு ஃபிடில் வாசிக்கும் பக்கவாத்தியமென்பார். இந்த முன்னுரையைப் படித்தால் அந்த இரு நண்பர்களும் ஒருவருக்கொருவர் பக்க வாத்தியக்காரர்களாகவும் இருந்தனர் என்பது புரியும்..  பின்னர் 1882ம் ஆண்டு பதிப்பிற்கு மார்க்ஸ் நோய்வாய்ப்பட்டதால் இருவர் சார்பிலும்  எங்கல்சே முன்னுரை எழுதினார். அந்த முன்னுரையின்  நிறைவான வாசகம் வருமாறு..

        ஜெர்மன் சோசலிசவாதிகளாகிய நாங்கள் செயின் சைமன், ஃபோரியர்.மற்றும் ஓவன்.ஆகியோரின் வழிவந்தவர்கள் மட்டுமல்லt ஜெர்மாணிய தத்துவ மேதைகள் காண்ட், பிக்ஸ்ட்டே, ஹெகல் வழிவந்தவர்கள் என்பதில்  கர்வம் கொள்கிறோம்.

“( We German Socialists are proud of the fact that we are descended not only from Saint-Simon, Fourie and Owen, but also from Kant, Fichte and Hegel. ) 

                       அன்றைய ஐரோப்பாவில் கற்பனா சோசலிஸ்டுகள் என்று பட்டியலிட்டால் 25  மேதைகள் தேறுவர்    17-18-நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலி நாட்டு தாமஸ் காம்ப்பனெல்லா முதல் பிரிட்டன் நாட்டு  ஜெரான்ட் வின்ஸ்டான்லிவரை (லெவல்லர்ஸ் அன்ட் டிக்கர்ஸ் இயக்கம்)  சோசலிச சமூக கட்டமைப்பைப் பற்றி எழுதியும் செயல்பட்டும் வந்தனர் . .

          இவர்களைப் பற்றி கூறாமல் மார்க்சும் எங்கெல்சும் செயின் சைமன்,ஃபோரியர்.மற்றும் ஓவன்.ஆகியோரை மட்டும் குறிப்பிட்டு நாங்கள்  அவர்கள் வழியில் வந்தவர்கள் என்று பெருமைப்படுவதேன்? என்ற கேள்வி எழும். அது போல் பரலோக விவகாரங்களை மட்டுமே விவாதித்துக் கிடந்த தத்துவத்தை இகலோக விவகாரங்களைப் பேசவைத்த தத்துவ மேதைகளான டெஸ்கார“ட்டஸ் முதல் டேவிட் ஹயூம் மற்றும் ஹெகல் வரை 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தும் கான்ட் ஃபிக்ஸ்ட்டே ஹெகல் என்ற மூவரை மட்டும் குறிப்பிட்டு நாங்கள் அவர்கள் வழிவந்தவர்கள் என்பதில் கர்வம் கொள்வதாகக் குறிப்பிடுவதேன்?

          செயின் சைமன்,ஃபோரியர் ஓவன் ஆகிய மூவரின் பார்வைகளும் உழைப்பை மையமாகக்  கொண்டதாக இருந்தது.  அதனடிப்படையில் ஒரு சமூக அமைப்பைக் கட்டி அமைக்க முயன்றனர்.

           அனைவரும் உழைக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியவர் செயின்சைமன் ஆவார். அது மட்டுமல்ல செயின்சைமன் எழுதிய ஒரு உருவக சிறு கதையே  பாமர மக்களின் பார்வையை உழைப்பினை மதிக்கும் பண்பிற்கு வலு கூட்டியது.  அரசன்,  பாதிரி. பிரபு இம்மூவரும் இல்லாமல்  மானுடம் வாழமுடியும் ஆனால் உழைப்பாளிகள் இல்லாமல் மானுடம் வாழமுடியாது என்ற கருத்தை வலியுறுத்திய அந்த உருவக கதை.( இடம் கருதி இங்கே பதியவில்லை ) ஐரோப்பியர்களின் உழைப்பை மதிக்கும் பண்பாட்டிற்கு வித்திட்டது  ஃபோரியர் முதன் முதலாக மானுட சமூகத்தை 4கட்ட வளர்ச்சியாக விளக்கினார் விலங்கியல் கட்டம், காட்டு மிராண்டிகட்டம். குடி முதல்வர் ஆட்சி கட்டம், நாகரீக கட்டமென சமூக படிமாற்றங்களை சுட்டிக்காட்டினார்.   அனைவரும் உழைக்கவேண்டும் அவர்களது உழைப்பிற்கேற்ப கற்பனை மாளிகையில் அமர்த்தப்படுவர் என்று சித்திரத்தை  எழுதினார் ராபர்ட் ஓவன் பிரிட்டனில் அவர் உருவாக்கிய குடியிருப்புடன் கொண்ட தொழிலகம்  அமைத்து வறுமையில்லாமல் உழைப்பாளிகள் வாழமுடியுமெனக் காட்டினார் ஆனால் சிறிது நாளில் முதலாளித்துவ சந்தை நெருக்கடி சுழலில் தொழில் தவிக்கவே அமெரிக்காவிற்குச் சென்று புதிய சொர்க்கம் என்ற குடியிருப்புடன் கொண்ட தொழிலகத்தைக் கட்டினார். அதுவும் முதலாளித்துவ கட்ட சந்தை விதியால் நீடிக்கவில்லை.   இம் மூவரும் உழைப்பை மையமாக கொண்ட ஒரு சமூக  உறவை உருவாக்க முயன்றவர்கள்..  மற்ற கற்பனா சோசலிஸ்ட்டுகள் நமது வள்ளுவரும். கம்பரும் வர்ணித்த சமூகம் போல்  மானுட தர்ம சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட சமூகத்தைக் கற்பனை செய்தனர். அதாவது.. எல்லோரும் இன்புற்று வாழ .வேண்டுமென்ற நல்லெண்ணமே அடிப்படையாக இருந்தது இப்படி இரண்டுவித கற்பனா சோசலிஸ்டுகளிடையே ஒற்றுமை என்னவெனில் வர்க்க பிரிவினை கொண்ட சமூகம் என்பதைக் கணக்கில் எடுக்காமல் தீர்வுகளை வழங்கினர் என்பதாகும்.         மதங்களின் சேடியாக இருந்த தத்துவத்தை மானுட மனதை விசாலப்படுத்தும் தத்துவமாக்க முயன்றவர்கள் பலர் இருந்தனர் அவர்களில் எங்கெல்ஸ் குறிப்பிடுகிற மூவரும் ஐரோப்பியத் தத்துவ உலகில் ஆதி கிரேக்கத் தத்துவ இயலின் கூறுகளாக இருந்த  இயக்க இயலை  மீட்டவர்களில் முதன்மையாக  இருந்தனர்.  ஆனால் அவர்களது போதனைகளை பின்னாளில் பாடமாக்கிய  வாத்தியார்களால் ஆன்மீக சதுப்புநிலத்தில் தள்ளப்பட்டு திண்ணை வேதாந்திகளாக அறிமுகமானவர்கள்..

            மேலே குறிப்பிட்ட கற்பனா சோசலிஸ்டுகளும் ஆன்மீக சதுப்புநிலத்தில் தள்ளப்பட்ட ஜெர்மாணிய தத்துவ மேதைகளும் விட்டுச் சென்றதில் உழைப்பைச் சுற்றி மக்களின் வாழ்வை இயங்கவைக்கவும்   இயக்க இயல் கூறுகளையும் அறிவியலையும்  மார்க்சும் எங்கெல்சும்  இனைத்தே, விஞ்ஞான சோசலிசத்தின் கூறுகளைத் தேடினர்.

             சோசலிசம் முதலாளித்துவ கட்டத்தில் நடக்கும். வர்க்க போராட்டத்தின் விளைவாக உருவாகுமே தவிர அதனைக் கற்பனை செய்த அதனடிப்படையில் சோசலிச சமூகத்தைக் கட்ட முடியாது  என்ற முடிவிற்கு இருவரும் வருகிறார்கள். எங்கெல்ஸ் எழுதிய .ட்டூரிங்கிற்கு மறுப்பு என்ற பெரிய புத்தகத்தைப் படிப்பவர்கள் இதனை உணர முடியும். அந்த புத்தகத்தின் ஒரு பகுதியாக இருந்த இப்பகுதி தொழிலாளர்களுக்காகச் சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.. எழுத்தறிவு குறைவாக இருந்த  அக்காலத்தில் பல ஆயிரக்கணக்கில் விற்பனையான பிரசுரம் என்பது மட்டுமல்ல தொழிலாளர்களை சர்வ தேச பார்வையுடன் வாழ்வை அணுக வைக்க உதவியது. வர்க்க போராட்டத்தின் விளைவாக சோசலிச கூறுகள் உருவாகும்  செம்மைபடும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இதர சோசலிஸ்ட்டுகளுக்கும் உள்ள அடிப்படையான வேறுபாட்டை  இந்த பிரசுரத்தின் நிறைவப் பகுதியான வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற பகுதி காட்டுகிறது.  அன்றைய புரட்சிக்காரர்களில் மார்க்சும் எங்கெல்சும் மாறுபட்டவர்களாக இருக்கக் காரணங்களைத் தேடினால்  மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவரும் பெற்ற நூலக ஞானத்தைவிட அவர்கள் காலத்து வர்க்க போராட்ட களத்திலே பெற்ற ஞானமே கற்பனா சோசலிசலிசத்தை  அறிவியல் அடிப்படை கொண்டதாக ஆக்கிட உதவியது. என்பதை அந்த இருவரின் முன்னுரைகள் காட்டுகின்றன…

Socialism: Force or Fantasy? - Foundation for Economic Education

           அன்றைய தேதிகளில் விஞ்ஞான கண்டுபடிப்புகள் இயற்கையின் இயக்க இயலை உணரவைத்தது. அதுபோல் வர்க்க போராட்டம் சமூக இயக்க இயலைக் கண்டுபிடிக்க இந்த மேதைகளுக்குதவியது.

          அந்த வர்க்க போராட்டமே  அடக்குமுறை கருவியான அரசு உதிரவைக்கும், அதோடு வர்க்க பிரிவினையற்ற சமூக உறவைக் கட்டி அமைக்கும், அதோடு முதலாளித்துவம் கெடுத்த இயற்கை சூழலை மீட்கிற வேலை அடுத்த பல ஆண்டுகள் நீடிக்கும். அதன் பிறகே மக்களின் ஒத்துழைப்பால் ஈடேறும். கற்பனா சோசலிஸ்டுகள் கண்ட சொர்க்கம் நனவாகும். கடந்த கால வர்க்க போராட்டத்திற்கும் முதலாளித்துவ கட்ட வர்க்க போராட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை களப்போராளிகளான  மார்க்ஸ்சும் எங்கெல்சும் வரலாற்று ரீதியாகத் தேடினர்..

கம்யூனிஸ்ட் லீக்.(1847- 1853) மற்றும் முதல் சர்வதேச தொழிலாளர் சங்கம் ( 1864- 1873) இரண்டு பாட்டாளி வர்க்க அமைப்பு இல்லையானால் மார்க்சும் எங்கெல்சும் கற்பனா சோசலிசவாதிகளாக வரலாற்றில் இடம் பெற்றிருப்பர் ,என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு அமைப்புக்களிலும் அவர்கள் அளித்த பங்குகளும் இந்த அமைப்புகள்  சந்தித்த பிரச்சினைகளும், தடைகளும், அடக்குமுறைகளும் இவர்களைப் புரட்சிக்கு வழிகாட்டும் ஆசான்களாக மாற்றின.           1848ம் ஆண்டு துவக்கத்தில் லூயிமன்னனை தூக்கி எறிந்துவிட்டு இரண்டாவது மக்களாட்சியை மூன்றாம் நெப்போலியன், இரண்டாம் குடியரசு என்று கூறியதோடு தன்னை ராஜாவாக அறிவித்துக்கொண்டான். கம்யூனிஸ்ட் அறிக்கையின் கேள்வி ஞானத்தால் விழிப்புணர்வு பெற்ற பாரிஸ் தொழிலாளர்கள் மக்களாட்சியை உருவாக்கக் கிளர்ந்தெழுந்தனர். நெப்போலியன் அரசின் ராணுவத்தோடு சாலைத் தடைகள் போட்டுத் தெருக்களில் இறங்கிப் போராடினர். சொத்துடமையை மறுக்கும் கம்யூனிஸ்ட் புரட்சி என்று விவசாயிகளை அரசாள்வோர் குழப்பியதால் அந்த  எழுச்சி தோணரல்வியை சந்தித்தது. அந்த ஜூன் 1848 எழுச்சியை இதனை வரலாற்றாசிரியர்கள் முதல் பாட்டாளி வர்க்க புரட்சி எனக் கூறுகின்றனர் .அதனால் வர்க்கப் போராட்டம் ஒன்றும் மட்டுப்படவில்லை கம்யூனிஸ்ட் அறிக்கையின் போதனைகள் புதியமுறையில்  தொழிலாளர்களைத் திரள வைத்தது. 1864ல் சர்வதேச தொழிலாளர் சங்கம் தோன்றியதோடு கம்யூனிஸ்ட் பிரகடனத்தை லட்சியமாகக் கொண்டு  பாட்டாளி வர்க்க சர்வ தேச உணர்வு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பரவியது.  1971ல் மீண்டும் சர்வ தேச தொழிலாளர் சங்கத்தின் பிரான்சு நாட்டுத் தொழிலாளர்கள் பாரிஸ் கம்யூனை நிறுவினார்கள் நாடற்ற அகதியாக லண்டனில் அகதியாக இருந்த மார்க்சிற்கு குடி உரிமை கொடுத்தது. உலக தொழிலாளர்களை பாட்டாளி வர்க்க ஆட்சி அமைக்க வேண்டுகோள் விட்டது

            இதுவும் விவசாயிகளின் ஆதரவின்மையால் பூர்சுவா ஆட்சியாளர்களால் அகற்றப்பட்டது. கம்யூனிஸ்ட் லீக், மற்றும் முதல் சர்வதேச தொழிலாளர் சங்கம் இவ்விரண்டின் வரலாற்றைப் படிப்பவர்கள் அந்த இரு மேதைகளும் சித்தாந்த போர்மூலம் தங்களை மேன்மை படுத்திக் கொண்டதை அறிவர்.

            இன்றும் வர்க்கப்போர்தான் சமூக மாற்றத்தின் நெம்புகோல் என்பதைக் காணமுடியும். எனவே

“ உலகத் தொழிலாளர்களே சுரண்டல் முறைக்கு எதிராக மக்களைத் திரட்டுங்கள் நீங்கள் இழப்பதற்கு பூர்சுவாக்கள் தரும் பண  பிரமைகளையும் அடிமை புத்தியையும் தவிர வேறு எதுவுமில்லை.