இந்தியாவில் மீன்வளம் என்பது உணவு மற்றும் ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒன்பது மில்லியனுக்கும் அதிகமான மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக நேரடியாக மீன்வளத்தை நம்பியுள்ளனர். இதில் 80 சதவீதம் நடுத்தர வர்க்கம், மற்றும் ஏழை எளிய மக்கள். இதில் 14 மில்லியனுக்கும் அதிகமான மீனவமக்கள் பங்கு வகுக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இயற்கை சீற்றம், பெரும் மழை, புயல் போன்ற எதிர்பாரா இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. இரண்டாம் உலகப்போருக்கு அடுத்தப்படியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது கொரோனா வைரஸின் தாக்கம் மட்டுமே இருக்க முடியும். அனைத்து நாடுகளும், அனைத்து மக்களும் பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக கடல்சார் மீனவர்களுக்கு மிக அதிகப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் கடல்சார் மீனவர்களின் உற்பத்தி, வேலைவாய்ப்பு, வருமானம், உள்நாட்டு சந்தைகள் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை இக்கட்டுரையில் காணலாம்.
மீனவர்கள் படும் துயரங்கள்:
இந்தியாவில் பல்வேறு சமூகக்குழுக்கல் இருந்தாலும், மீனவர்களின் அன்றாட வாழ்க்கை சவாலாகவே விளங்குகிறது. இவர்களின் பொருளாதாரத்தின் நிலை மற்ற சமூகங்களோடு ஒப்பிடுகையில் பின்தங்கியே இருக்கின்றனர். மீனவ ஏழை எளிய மக்களுக்கு, மீன்களின் விலை நிர்ணயம், சந்தைப்படுத்தல் மற்றும் அமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் பிரச்சினைகள் உள்ளன. இவற்றில் பல நீண்ட கால தேவைகளும் மற்றும் உடனடி தேவைகளும் போதுமான அளவு அவர்களுக்கு கிடைக்கப் பெறவில்லை.
மீன் உற்பத்தி இன்மை:
கொரோனா வைரஸ் நோய் தடுப்பு காலங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் போதுமான மீன்உற்பத்தி இல்லை. இதனால் மீன்களின் உற்பத்தியின் அளவு மிக குறைந்தது. ஏனெனில் கொரோனா பயத்தின் காரணமாக நுகர்வோர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும் மீன் உற்பத்தியின் அளவு குறைந்தது.
மீன் தரையிறங்கு தளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள்:
பலர் வேலைவாய்ப்புக்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடி தரையிறங்கு தளங்களை சார்ந்துள்ளனர். துறைமுகங்கள் மற்றும் கப்பல் தரையிறங்கும் மையங்கள் முழமையாக அடைக்கப்பட்டு இருந்ததால் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மீனவர்களின் அன்றாட வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. நோய் தடுப்பு காலங்களில் துறைமுகங்கள் முழமையாக அடைக்கப்பட்டு இருந்ததால் இதனை சார்ந்துள்ள மக்களின் வேலைகள் மிக பெரிதும் பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் நோய் தடுப்பினால் ஏற்றுமதி (ம) இறக்குமதிகளில் மிக பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.
மீன் விலை வீழ்ச்சி:
நம் நாட்டில் கடற்கரை மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் வாழும் மீனவர்கள் சிறிய அளவில் மீன்;பிடிக்க செல்லும் நிலையில் உள்ளனர். அப்போது பிடித்த மீன்களை சந்தைப்படுத்த போராடி வருகின்றனர். இந்நிலையில் அரசின் விதிமுறைகள் கடுமையாக இருந்ததால் சமூக இடைவெளியினை பின்பற்றல் போன்ற காரணத்தினால் ஒரு சில குறிப்பிட்ட மீனவப் பெண்கள் (குiளாநச றுழஅநn) மட்டுமே தரையிறங்கு மையத்திலிருந்து மீன்களை வாங்க முடிந்தது. அதில் மீன்களை விற்க ஒதுக்கப்பட்ட நேரம் மிகக் குறைவாக இருந்தன. அதனால் அவர்கள் தங்கள் பிடித்த மீன்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த சமயத்தில் நன்னீர் மற்றும் கடல் மீன்களின் விலை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது. இதன்காரணமாக மீன் விற்பனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளனார்கள். மறுபுறம் மீன்களை வாங்குவதற்கு ஆட்கள் வரவில்லை. ஏனெனில் கொரோனா அச்சம், போக்குவரத்து வசதியின்மை போன்றவற்றால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.
மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள்:
மீன்பிடி நடவடிக்கைகள் இல்லாததால் பெண்; மீன் விற்பனையாளர்கள் கணிசமாக பாதிக்கப்பட்டனர். சில இடங்களில் வரையறுக்கப்பட்ட படகுகள் மட்டுமே மீன்பிடிக்க சென்றிருந்ததால் தரையிறங்கும் மையத்திற்கு கொண்டு வரப்படும் மீன்பிடிப்பின் அளவு குறைவாக இருந்தன. ஆனால் அதன்தேவை அதிகமாக இருந்தது. மற்றொன்று மக்கள் மீன்களை வாங்க முன்வரவில்லை. வாடிக்கையாளர்களும் குறைந்து, மீனவர்களின் வருமானமும் முற்றிலும் குறைந்து விட்டது. மேலும், மீனவ பெண்கள் குடும்ப தேவையை பூர்த்தி செய்யமுடியாமல், அவதிப்பட்டுள்ளனர்.
மீன்பிடித்தடை காலம்:
தமிழகத்தில் மீன்பிடித்தடை காலம் ஏப்ரல் 15ம் தேதி முதல்; ஜீன் 15ம் தேதி வரை 61 நாட்களாகக் கடைபிடிக்கப்படுகிறது. வழக்கமாக மீன்பிடித் தொழிலாளர்கள் படகு உரிமையாளர்களிடமிருந்து மீன்பிடி தடைகாலத்தில்; அவர்களுக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே பெற்றுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது படகு உரிமையாளர்களும் முழு அடைப்பினால் நிதி சிக்கல்களை எதிர்கொண்டனர். எனவே மீன்பிடித் தொழிலாளர்கள் சில இன்னல்களுக்கு ஆளானார்கள். மீன்பிடி நடவடிக்கைகளுக்காக தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள் முழு அடைப்பினால் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர்;. இதனால் பல மீனவர்கள் தங்கள் குடும்பத்தில் ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு மட்டுமே சாப்பிட்டதாக கூறுகின்றனர்.
பிடித்த மீன்களை இருப்பு வைப்பதில் ஏற்பட்ட பாதிப்பு:
சில டிராலர்களில் சேமிப்பு வசதியுடன் கூடிய மீனவர்கள் தங்கள் பிடிப்பைப் பாதுகாக்க முடிகிறது. மேலும் அவர்கள் அறுவடை செய்யப்பட்ட மீன்களை பின்னர் விற்பனை செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஆனால், மீனவர்களில் மற்றொரு பிரிவு உள்ளது, அவர்கள் பிடிப்பதை விற்பனை செய்வதில் சேமிப்பு வசதிகள் இல்லாததால் கடுமையான பாதிப்பி;னை அடைகிறார்கள். இதனால் அவர்களுக்கு பெறும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தைப்படுத்துவதில் ஏற்பட்ட சிரமங்கள்:
பிடித்து வரும் மீன்களை சந்தைப்படுத்துவதில் அதிக சிரமங்கள் ஏற்பட்டன. மக்கள்; கொரோனா காரணமாக சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பதனை கருத்தில் கொண்டு எப்பொழுதும் சந்தைப்படுத்துமிடத்தில் விற்காமல், இடமாற்றம் செய்யப்பட்டு விற்பதால் அவர்களுக்கு பெறும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் நுகர்வோர்கள் இடமாற்றம் காரணமாக மீன்களை வாங்க முடியாமல் போயின. நுகர்வோர்கள் மீன்களை வாங்க அரைமணி நேரத்திற்கு மேல் அனுமதியில்லை என்பதால் இதனால் மீனவர்களின் வியாபரம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டன.
முடிவுரை:
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மீன் வளத்தின் பங்கு முக்கியத்துவம் பெருகிறது. அதில் கடல் மீன் வளம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இயல்பான சூழ்நிலையிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையில் கொரோனா போன்ற நோய் தொற்று காலங்களில் ஏற்பட்ட மாற்றம் மீனவர்களின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாரா நோய் தொற்று, பேரிடர்க்காலங்களில் மீனவப் பெண்களுக்கு உரிய வேலைவாய்ப்பு அதாவது மீன் உலர்த்துவது, மதிப்பூட்டப்பட்ட மீன் பொருள்கள் தயாரித்தல் வலை பின்னல் போன்ற வேலைகள் எந்த வகையிலும் பாதிக்காத சூழ்நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (Nகுனுடீ) மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மீன்வளத் துறைகள் இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்களின் வருவாய் ஆதாரங்களுக்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். கொரோனா நோய்தடுப்பு காலங்களில் ஏற்படுத்தப்பட்ட தாக்கம் இன்னும் முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்களுக்கு தரப்படும் நிவாரணம் அனைவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை பேரளிவு, நோய் தொற்று, காலநிலை மாற்றம் போன்ற ஏதிர்பாரா மாற்றங்கள் தவிர்கக முடியாத ஒன்றாக இருந்தாலும் இதற்கான உடனடி தீர்வுகளும், அதற்கான நீண்டகால திட்டங்களும் வகுப்பது காலத்தின் கட்டாயமாகும்.
சி. விஜய்
நான்காம் ஆண்டு இளநிலை மீன்வள அறிவியல் மாணவர்.
முனைவர் இல. சுருளிவேல்,
உதவிப் பேராசிரியர்
மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
டாக்டர் எம். ஜி. ஆர். மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பொன்னேரி.
Leave a Reply