Subscribe

Thamizhbooks ad

கேரளாவில் நேர்மையற்ற அரசியல் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில் ச. வீரமணி)

கேரளாவில் நடைபெற்றுள்ள தங்கக் கடத்தல் வழக்கைக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் வளர்ந்திருக்கும் செல்வாக்கைச் சிதைப்பதற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மூலம்  முதலமைச்சர் பினராயி விஜயனால் தலைமை தாங்கப்படும் அரசாங்கத்தைப் பலவீனப்படுத்திடக் கூட்டு முயற்சிகளில் இறங்கி இருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனநாயக முன்னணியும் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரியிருக்கின்றன. இதனை எய்துவதற்காகப் “போராட்டங்களையும்” அறிவித்திருக்கின்றன. மேலும் இதே கோரிக்கைகளுடன் பாஜகவும் கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறது,. சட்டமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப் போவதாகவும் காங்கிரஸ் தலைமையிலான ஐஜமு.அறிவித்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே கேரளாவுக்குள் வளைகுடா நாடுகளிலிருந்து தொடர்ந்து தங்கம் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின், மாநிலத்திற்குள் சிறப்பு விமானங்கள் (chartered flights) இயக்கப்படுவதைத் தொடர்ந்து இவ்வாறு தங்கம் கடத்தப்படுவதில் திடீரென்று ஒரு பாய்ச்சல் வேகம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் கேரளாவின் மூன்று விமான நிலையங்களிலும் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தைச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றி இருக்கின்றனர். ஆனாலும், ஜூன் 30 அன்று திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாகத் தங்கம் கடத்தப்பட்ட விதம் மற்றும் அதன் அளவு ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அதாவது, இந்தத் தடவை தங்கம் கடத்தப்பட்டது என்பது தூதரகத்தின் சாமான்களுடன் சுமார் 30 கிலோ கிராம் எடை அளவிற்கு இருந்துள்ளது.

இதில் மாநிலக் காவல்துறைக்குப் புலனாய்வு அதிகாரம் எதுவும் கிடையாது. மேலும் இதுபோன்ற விஷயங்களில் வழக்குகள் பதிவு செய்வதற்கும் அதிகாரம் கிடையாது. இது, மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சுங்கத் துறையின் அதிகார வரம்பெல்லைக்குள்தான் வரும். மாநிலக் காவல்துறைக்கு இதில் அவர்களுக்கு உதவி செய்திடும் பங்களிப்பே உண்டு. அதனால்தான் இந்த வழக்கின் விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடனேயே, முதலமைச்சர் மத்திய புலனாய்வு முகமைகளில் ஏதேனும் ஒன்றின் மூலமாக ஒரு வலுவான புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டிருந்தார். அப்போதுதான் தங்கக் கடத்தல் துவங்கிய புள்ளியிலிருந்து அதனைப் பெறும் பயனாளிகள் வரையிலும் உள்ள ஒட்டுமொத்த சங்கிலித் தொடரையும் கண்டுபிடித்து, குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியும் என்றும் கூறியிருந்தார்.

மத்திய அரசும், தேசியப் புலனாய்வு முகமையை இந்த வழக்கை எடுத்துக் கொள்ளப் பணித்திருக்கிறது. அதே சமயத்தில், சுங்கத்துறையும் ஒரு வழக்கைப் பதிவு செய்திருக்கிறது. இதில் நான்கு பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் ஸ்வப்னா சுரேஷ் என்கிற பெண்மணி, அரசாங்கத்தின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான தகவல் தொழில் நுட்பத்துறையின் ஒரு திட்டத்தின்கீழ் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து கொண்டிருப்பவர். இந்தப் பெண்மணி இதற்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்திலும் (UAE Consulate) மற்றும் ஏர் இந்தியா சாட்ஸ் (Air India SATS) நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கிறார். (ஏர் இந்தியா சாட்ஸ் நிறுவனம் என்பது ஏர் இந்தியா விமானப் போக்குவரத்தின்போது பயணிகள், சரக்குகள் ஏற்றுதல், இறக்குதல் மற்றும் விமானத்தின் துப்புரவுப் பணிகளில் உதவிடும் தனியார் நிறுவனமாகும்.)

இவர் குறித்த விஷயங்கள் வெளிவந்தவுடனேயே இவருக்குத் தெரிந்தவர் என்று கூறப்பட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளராகவும், முதல்வர் அலுவலகத்தில் முதன்மை செயலாளராகவும் இருந்த சிவசங்கர் என்பவர் இரு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டார். தகவல் தொழில்நுட்பத் துறையில் அந்தப் பெண்மணி எப்படி வேலைக்குச் சேர்ந்தார் என்பதை விசாரிப்பதற்காகத் தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார்.

எனினும், காங்கிரஸ் கட்சிக்கும், ஐஜமு- தலைமைக்கும் முதன்மைச் செயலாளரின் பங்களிப்பே, முதல்வரை ராஜினாமா செய்யக் கோருவதற்குப் போதுமானதாக இருந்தது. எதிர்க்கட்சித் தலைவரான, ரமேஷ் சென்னிதாலாவுக்கும், மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கமானது கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றைக் கையாண்ட விதம் மக்களால் நன்கு பாராட்டப்பட்டு வருவதை எதிர்கொள்ளச் சக்தியின்றி விரக்தியடைந்திருப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளைக் குறைகூறிட அபத்தமான முறையில் பல நடவடிக்கைகள் எடுத்தனர். எனினும் இதனால் எதையும் அவர்களால் சாதிக்க முடியவில்லை.

இவ்வாறாக, தங்கக் கடத்தல் வழக்கை வைத்தாவது, முதலமைச்சரையும், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தையும் குறிவைத்துத் தாக்குவதற்குப் பயன்படுத்திட முயற்சித்தனர்.  இவ்வாறு செய்யும்போது, காங்கிரஸ் தலைமை, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களில் சந்தீப் நாயர் என்னும் பேர்வழி பாஜக-வுடன் தொடர்புடைய நபர் என்கிற உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறது.  இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு மோடி அரசாங்கத்தையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும். தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்திடத் தேசியப் புலனாய்வு முகமை (NIA), பணிக்கப்பட்டிருக்கிறது என்பதில் அவர்கள் திருப்தி கொள்ளாமல், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) மற்றும் ஆர்ஏடபிள்யு (RAW) ஆகியவையும் இந்த வழக்கிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று அது கோரிக் கொண்டிருக்கிறது. மத்தியப் புலனாய்வு முகமைகளை பாஜக அரசாங்கம் தன் அரசியல் ஆதாயங்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறது என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவே தெரியும். தெரிந்தும் இந்த வழக்கிலும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக ஏதாவது செய்வார்கள் என அது நம்புகிறது.

அதேசமயத்தில், குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரில் மூன்று பேர், கைது செய்யப்பட்டு, என்ஐஏ-இன் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருக்கின்றனர். நான்காவது நபர், ஃபைசால் ஃபரீத், இந்தத் தங்கக் கடத்தலுக்குப்பின்னால் உள்ள நபர், இந்தத் தங்கத்தை ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து அனுப்பிய நபர், இன்னமும் வெளிநாட்டில்தான் இருக்கிறார். இந்த வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் மேலும் மூன்று பேரைக் கைது செய்திருக்கிறது. அவர்களில் ரமீஷ் என்னும் வர்த்தகப்பெரும்புள்ளி, இதற்கு முந்தைய தங்கக்கடத்தல் வழக்கிலும் பிணைக்கப்பட்டிருப்பவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் முக்கிய தலைவர்களில் ஒருவருக்கு உறவினர்.

கடந்த நான்கு வாரங்கள் மாநிலத்தில் கோவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று திடீரென்று அதிகரித்திருப்பதைப் பார்த்தன. வெளிநாடுகளிலிருந்தும், இந்தியாவின் இதர மாநிலங்களிலிருந்தும் திரும்பி வந்தோர் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து இது ஏற்பட்டது.  இவ்வாறு வெளிநாடுகளிலிருந்தும் இதர மாநிலங்களிலிருந்தும் வந்தவர்களின் காரணமாக மாநிலத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் தொற்று பரவுவது அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் வீதிகளில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றன. பல இடங்களில் போராடுபவர்கள் கோவிட்-19 கொரோனா  வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுப்பதற்குத் தேவையான தனிநபர் இடைவெளியை (physical distancing)ப் பின்பற்றவில்லை.  அரசாங்கத்தாலும் காவல்துறையினராலும் ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்துள்ளனர், காவல்துறையினருடன் மோதி உள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவிடுமோ என்ற பயம் காரணமாக பொது மக்கள் மத்தியில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தங்கக் கடத்தலுக்குப் பின்னால் உள்ள உண்மையான கயவர்களிடமிருந்தும், சக்திகளிடமிருந்தும் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறான நாடகத்தைக் காங்கிரசும், பாஜகவும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியானது இத்தகைய சீர்குலைவு நிலைப்பாட்டை மேற்கொண்டிருப்பதன் மூலம் அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் திவாலாகிப்போன நிலைமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இடதுசாரிகளைத் தாக்குவதற்காக, எவ்விதமான மன உறுத்தலுமின்றி அது, பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது.  மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சமீபத்திய நிகழ்வுகளால் ஒட்டுமொத்தமாகவே இக்கட்சியின் நிலை சோகமானதாகவே இருக்கிறது. பாஜக, தன்னுடைய பண பலத்தாலும் இதர நேர்மையற்ற வழிமுறைகளாலும் காங்கிரஸ் தலைமையில் உள்ள மாநில அரசாங்கங்களைப் பலவீனப்படுத்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும், கோஷ்டிகளும், அதிகாரப்பசி கொண்ட தலைவர்களும் நிரம்பியுள்ள காங்கிரஸ் கட்சியானது பாஜக-வின் கொடிய நயவஞ்சக சூழ்ச்சிகளுக்கு வசதி செய்து கொடுக்கிறது.

இத்தகைய அரசியல் சித்து விளையாட்டுகளைக் கேரள மக்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று முறியடிப்பார்கள்.

(ஜூலை 15, 2020)

Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here