பாரதி புத்தகாலயம் மே 27 முதல் ஜூன் 2 வரை திருச்செந்தூர் மேல மாட வீதி சொர்ணம் மஹாலில் நடத்தும் மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி துவக்க விழா 27 5 2024 காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர் ஆ. சந்திரசேகர் தலைமையில் புத்தகக் கண்காட்சியை திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு சுகுமாரன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு பெற்ற காவல் ஆய்வாளர் திரு சுந்தரமூர்த்தி மூத்த வழக்கறிஞர் S.k சந்திரசேகரன் தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்க தலைவர் கோ சந்திரசேகர் வழக்கறிஞர்கள் ஜேசுராஜன் முத்துக்குமார் ஆசிரியர்கள் பாரதிராஜா சுப்பிரமணியன் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கண்ணபிரான் ஸ்டார் மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் ஜெயதாஸ் நாகராஜன் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
பேராசிரியர் கணேசன் அவர்கள் நன்றி உரையாற்றினார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

