Indhiya Ilakkiyathirku Ku Chinnappa Bharathiyin Pangalippu Book Review. Book Day is Branch of Bharathi Puthakalayam.

*இந்திய இலக்கியத்திற்கு கு. சின்னப்ப பாரதியின் பங்களிப்பு* நூல் அறிமுகம்



இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு (கட்டுரைத் தொகுப்பு)
– பக்.224;
ரூ.150;
பாரதி புத்தகாலயம்,
சென்னை -18-0044 – 24332424.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

தமிழ் இலக்கிய உலகுக்கு இடதுசாரி இயக்கம் வழங்கிய மிகப் பெரிய கொடை கு. சின்னப்ப பாரதி. கவிஞராகவும், புனைவுப் படைப்பாளியாகவும் இவர் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்துமே சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் அல்லாமல் கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ கு. சின்னப்ப பாரதி பிறந்திருந்தால், அவருக்குத் தரப்பட்டிருக்கும் அங்கீகாரமும், கௌரவமும் பன்மடங்கு அதிகம். கொண்டாடப்படும் எழுத்தாளராக இருந்திருப்பார்.

‘கு.சி.பா.’ என்று பரவலாக அறியப்படும் கு. சின்னப்ப பாரதி அளவிற்கு, வேற்று மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இன்றைய தமிழ் எழுத்தாளர் இன்னொருவர் இருக்க வழியில்லை. இந்திய மொழிகளில் மட்டுமல்லாமல், ரஷியன், ஜெர்மன் என்று அவரது படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் முனைப்புக் காட்டுவதில் இருந்து அவரது எழுத்தின் வீச்சும், அதன் ஆளுமையும் வீரியமும் விளங்கும். – “கு. சின்னப்ப பாரதிக்கு நிகராகத் தமிழில் எந்த எழுத்தாளரையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியாது.

ரஷிய மொழியின் மிகச் சிறந்த எழுத்தாளரும், நோபல் விருது பெற்றவருமான மைக்கேல் ஷோலக்கோவ் போன்ற சர்வதேச முக்கியத்துவம் மிக்க படைப்பாளிக்கு நிகரானவர் நமது கு.சி.பா.’ என்று ‘காலந்தோறும்…’ என்கிற தனது கட்டுரையில் பதிவு செய்கிறார் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி.

கு. சின்னப்ப பாரதி - தமிழ் விக்கிப்பீடியா

எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி குறித்து 46 முக்கியமான இலக்கிய ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகள் இந்திய இலக்கியத்திற்கு கு. சின்னப்பபாரதியின் பங்களிப்பு என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. ‘மக்கள் மீது அக்கறை கொண்ட எழுத்துச் சிற்பி’ என்று பிரபல ஹிந்தி எழுத்தாளர் சித்ரா முத்கலும், ‘கு. சின்னப்ப பாரதியின் நாவல்களும் எதார்த்தப் போக்கும்’ என்று ஹிந்தி கவிஞர் சஞ்சய் சௌஹானும் பாராட்டுகிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அவரது எழுத்துகள் தமிழக எல்லை கடந்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை உணரலாம்.

தொ.மு.சி. ரகுநாதனை முற்போக்கு இலக்கியத்தின் மூலவர் என்றும், கு. சின்னப்ப பார தியை உற்சவர் என்றும் போற்றும் எழுத்தாளர் சு. சமுத்திரம், அவரைத் தனது ‘படைப் பிலக்கிய முன்னோடி’ என்று வர்ணிக்கிறார். கு.சி.பா.வின் ‘தாகம்’ நாவலையும், பெர்ல். எஸ். பக் எழுதிய ‘நல்ல பூமி’ நாவலையும் ஒப்பாய்வு செய்கிறார் மார்க்சிய ஆய்வாளர் பேராசிரியர் எஸ். தோத்தாத்ரி. – இந்தப் புத்தகத்தை ‘சாகித்திய அகாதெமி தேர்வுக் குழுவினருக்கு அனுப்பிக் கொடுத்து படித்துப் பார்க்கச் சொல்ல வேண்டும். – போதுதான் கு. சின்னப்பபாரதிக்கு இன் விருது வழங்கப்படவில்லை என அவர்களுக்கு நினைவுக்கு வரும்.

நன்றி: தினமணி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *