சீத்தாராம் யெச்சூரி (Sitaram Yechury) எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram endral enna?) - நூல் அறிமுகம் - https://bookday.in/

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram endral enna?)  – நூல் அறிமுகம்

இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram endral enna?)  – நூல் அறிமுகம்

 

பாசிஸ்ட் சவாலை முறியடிக்க யெச்சூரி படைத்தளித்த கருத்தாயுதம் – எஸ்.பாலா

நமது நிருபர் நவம்பர் 24, 2024

எல்லா அரசியல் கட்சிகளுக்கு கீழும் பல்வேறு அமைப்புகள் செயல்படும். ஆனால், ஆர் எஸ் எஸ் கீழ் மட்டும்தான். பாஜக எனும் அரசியல் கட்சி செயல்பட்டு வருகிறது. எனவே தான் இதனை பிறிதொரு அரசியல் கட்சியாக மட்டும் கருத முடி யாது.பாசிச சிந்தனை படைத்த ஆர்எஸ்எஸ் அமைப்பால் வழி நடத்தக்கூடிய நச்சுத்தன்மை கொண்ட அரசியல் இயக்கமாக இருந்து வருகிறது. இதனால் தான் ஆர் எஸ் எஸ் ஐ பற்றியும் , அதன் தத்துவார்த்த அடித்தளங்களை பற்றிய மிக விரிவான பகுப் பாய்வும் தேவைப்படுகிறது. அதன் கொள்கைகள், செயல்பாடு, அதன் கீழ் உள்ள பல்வேறு அமைப்புகள் என ஒவ்வொரு அம்சத்தையும் மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இந்நூல் அத்தகைய திட்டவட்டமான நிலைமை பற்றிய, திட்டவட்டமான பகுப்பாய்வு மூலம் 1993 ஆம் வருடம் சீத்தாராம் யெச்சூரியால் எழுதப்பட்ட இந்து ராஷ்ட்ரம் எனும் நூல் இந்திய தத்துவ போராட்டத்திற்கு வழங்கிய மகத்தான கருத்தியல் ஆயுதமாகும்.

ஒவ்வொரு சொல்லுக்கும் வார்த்தைக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் முத்திரை குத்தப்பட்டிருக்கும் என்றார் மாவோ. இந்து ராஷ்டிரம் என்ற சொல்லின் வேர் எங்கு உள்ளது ? என்பதை ஆராய்ந்து பிரண்ட்லைன் இதழில் வந்த கட்டுரைகள் பின்னர் நாட்டு மக்களிடையே அம்பலப்படுத்திய நூலாக வெளிவந்தது. ராஷ்ட்ரிய சுயம் சேவக் அமைப்பின் சித்தாந்த மூளையாக செயல்பட்ட அதன் சுப்ரீம் தலைவர் குருஜி கோல்வால்கர் ஆவார். 1938 ஆம் ஆண்டில் 77 பக்கங்கள் கொண்ட நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம் எனும் தலைப்பில் புத்தகம் எழுதினார். 1939 ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளிவந்தது .இந்நூலில் சாவர்க்கர் அடிக்கோடிட்ட இந்துத்துவா என்ற சித்தாந்தத்தை கோல்வாக்கர் விளக்கியுள்ளார். இந்த நூலின் முதல் பதிப்பை ஆதாரமாக கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாசிச செயல்திட்டம் பட்டவர்த்தன மாக வெளிப்படுத்துவதை தெள்ளத் தெளிவாக சீத்தாராம் யெச்சூரி விளக்கியுள்ள இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram endral enna?) நூலாகும்.

பொய்களின் பவனி…

இப் புத்தகம் வெளிவந்தவுடன் சீத்தாராம் யெச்சூரிக்கு எதிராகவும், புத்தகத்தை மறுத்தும் சங்பரிவாரம் முன்வைத்த பொய்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை என்.ராம் அறிமுக குறிப்பில் பட்டியலிடுகிறார். 1.கேஜிபி பாணி தவறான தகவல் என்றும் 2.குருஜிக்கு கூறியதாக கூறப்படும் கருத்துக்கள் அனைத்தும் இட்டுக் கட்டப்பட்டவை என்றும் 3.குருஜியால் எழுதப்பட்ட புத்தகமல்ல 4..ஜி.டி சாவர்க்கர் எழுதிய புத்தகத்தின் மொழிபெயர்ப்பு என்றும் பொய்களை அவிழ்த்துவிட்டனர். தோழர் ஜி. ராமகிருஷ்ணன் எழுதியுள்ள முன்னுரையில் இந்து ராஷ்ட்ரத்தின் ஆழ்கடல் போன்ற ஆழத்தையும்,ஹிட்லர் துவங்கி சமகால குற்றவியல் சட்டங்கள் வரை அம்பலப் படுத்துகிறார். பாசிஸ்ட் பாணியிலான செயல் திட்டம்… இந்து ராஷ்ட்ரம் அமைக்க விரும்பும் தங்களுடைய உண்மையான பணித்திட்டத்தின் அனைத்து பாசிஸ்ட் பாணி யிலான அம்சங்களையும் தோலுரித்து காட்டக்கூடிய புத்தகமாகும்.

தத்துவார்த்த அடிப்படை…

பூகோள நிலை, இனம்,மதம், கலாச்சாரம் மற்றும் மொழி என தேசம் என்று வரையறுப்பதற்கு கோல்வால்கர் ஐந்து குணாம்சங்களை அல்லது ஒற்றுமைகளை குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள இந்துக்கள் மட்டுமே மேற்குறிப்பிட்ட ஐந்து தகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள் என்றும், எப்போதும் ஓர் இந்து தேசமாகவே இருந்து வந்திருக்கிறது என்பதை நிறுவுவதே கோல்வால்கர் செயல்பாட்டின் நோக்கமாகும். இனம் என்று முக்கியமான மூலக்கூறாகும். இந்து என்கிற சொல்லையும் ,ஆரியர் என்கிற சொல்லையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்.

சீத்தாராம் யெச்சூரி (Sitaram Yechury) எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? (Indhu Rashtram endral enna?) - நூல் அறிமுகம் - https://bookday.in/

ஆனால், வரலாற்றுச் சான்று வேறானதாக இருக்கிறது. மனு ஸ்மிருதி முன்வைக்கும் சாதிய கட்டமைப்பும் பெண் அடிமைத்தனமும் பிராமணிய மேலாதிக்கத்தையும் இந்துஸ்தானின் சமூக ஒழுங்கு என்கிறார். ஹிட்லரும் கோல்வால்கரும்.. ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் பாதுகாப்பதற்கு யூத இனத்தை அழித்தது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு சரியான படிப்பினை என்கிறார். கோல்வால்கரின் புத்தகம் வெளிவந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜமாத் இ இஸ்லாமி உருவாக்கப்படுகிறது; மெளடுடி தலைமையில் அமைப்பு மாநாடு நடைபெற்றது. கோல்வால்கர் எப்படியோ ,அதே போன்று ஜமாத் இயக் கத்திற்கு மெளடுடி. எப்படி நாங்கள் அல்லாவால் வடித்தெடுக்கப்பட்ட சட்டங்க ளின் அடிப்படையில் பாகிஸ்தானை அமைக்க இருக்கிறோமோ அதே போன்று இந்தியர்கள் அரசையும் சமூகத்தையும் இந்து சுவடிகள் மற்றும் சட்டங்களின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். இதிலிருந்தே இந்து வகுப்புவாதமும், முஸ்லிம் அடிப்படை வாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன.

இரண்டுமே நடைமுறையில் வகுப்புவாத நஞ்சை ஆழமாக பரப்பி நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பாசிசம் முதலாளிகளின் மிகவும் பிற்போக்கான சக்திக ளின் நலன்களுக்காக தான் செயல்படுகிறது. எனினும் அது முதலாளித்துவக் கட்சிகளின் செயல்களி னால் அவற்றை கைகழுவிவிட்டு வெளியேறும் விரக்தி அடைந்த மக்களை வழி மறித்துத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள முயல்கிறது. இதற்காக, அது முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியில் இருந்த முதலாளித்துவக் கட்சிகளின் சமாதானமற்ற அணுகுமுறையை கடுமையாகத் தாக்குவதின் மூலமாக மக்களின் நம்பிக்கையை பெறுகிறது. எனவே தான், தோழர் சீத்தாராம் யெச்சூரி திடீரென நம்மை விட்டு பிரிந்தாலும், அவர் நடத்திய போராட்டத்தை முன்னெ டுக்கவும், இத்தகைய பாசிஸ்ட் சவாலை எதிர்கொண்டு முறிய டிப்பதற்கான கருத்தியல் ஆயுதத்தை நமது கரங்களுக்கு அளித்து வலு சேர்த்துள்ளார். வரலாற்றின் பக்கங்களில் முன் எப்போதும் இல்லாத சவாலை சந்திக்க,அதனை முறியடிக்க மார்க்சிய அறிஞர் சீத்தாராம் யெச்சூரி அளித்த கருத்தியல் ஆயுதம் இந்திய மக்களின் பேராயுதமாக விளங்கும்.

நூலின் தகவல்கள் : 

நூல் : இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன?
ஆசிரியர் : சீத்தாராம் யெச்சூரி
தமிழில் :  ச.வீரமணி
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 56 பக்கங்கள்
விலை : ரூ.50
தொடர்பு எண்  : +91 94449 60935

நன்றி :

தீக்கதிர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *