அருணன் (Arunan) எழுதிய இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru) | History of Communist Party - https://bookday.in/

இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru) – நூல் அறிமுகம்

இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru) – நூல் அறிமுகம்

கொள்கையும் தியாகமும் கொண்ட மகத்தான வரலாறு

இந்தியாவின் கம்யூனிச இயக்கத்தைப் பற்றி தமிழில் மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள நூல் இதுவாகும்.இந்நூலில் அருணன் 1920 முதல் 1964 கல்கத்தா மாநாட்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற மகத்தான போராட்ட வரலாற்றை இந்திய கம்யூனிச இயக்க வரலாற்று நூலாக எழுதியுள்ளார்.

உதயமாகும் தொழிலாளி வர்க்கம்…

வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்விதமான அரசியல் நிலைப்பாடுகளை மேற்கொண்ட சூழலையும் , அதனை விளக்கி ஆழமான தத்துவார்த்த முறையில் எழுதப்பட்டுள்ளது.

இந்திய தொழிலாளி வர்க்கம் பிறந்த வரலாறு குறிப்பிடத்தக்கது. 1853 இல் காரல் மார்க்ஸின் கேள்வி பதில் இந்நூல் துவங்குகிறது.பிரிட்டிஷாரின் தொழில்களுக்கு பருத்தி மற்றும் இதர பொருட்களை குறைந்த விலையில் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு இருப்பு பாதை அமைக்க விரும்புகிறார்கள். இதிலிருந்து இந்தியாவில் புனரமைப்பு பணி, அதாவது முதலாளித்துவ உற்பத்தி முறை துவங்கி விட்டது என்று மார்க்ஸ் கணித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 15…

1871 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பேரவை கூட்டம் காரல் மார்க்ஸ் தலைமையில் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பிரெட்ரிக் ஏங்கெல்சும் கலந்து கொண்டிருந்தார். இந்தியாவில் அகிலத்தின் ஒரு கிளையை ஆரம்பிக்க அதிகாரம் அளிக்க கோரி கல்கத்தாவில் இருந்து ஒருவர் எழுதிய கடிதத்தை செயலாளர் வாசித்தார். அதற்கு பதில் அளிக்கும்படி செயலாளருக்கு பணிக்கப்பட்டது. அக்கடிதத்தின் ஒரு பகுதியை கம்யூனிஸ்ட் தலைவராகிய ஹிரேன் முகர்ஜி தன் நூலில் கையாண்டுள்ளார்.

அப்பகுதி இந்திய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது ஆங்கிலேய அரசாங்கத்தை அனைவரும் வெறுக்கின்றனர் வரி கொடுமை தாள முடியாது இருக்கின்றது.

வரியும் ஆடம்பர நிர்வாக அமைப்பிற்கு தீனி போடவே சரியாக இருக்கிறது. இதர இடங்களில் உள்ளது போல இங்கும் எந்த தொழிலாளர்கள் செல்வத்தினை உருவாக்குகிறார்களோ ,அந்த தொழிலாளர்கள் வறுமையில் வாட ஆளும் வர்க்கங்களோ, அந்த செல்வத்தை க் கொண்டு ஆடம்பர வாழ்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.

அகிலத்தின் கிளையொன்று இங்கே தொடங்கப்படுமேயானால் அகிலத்தின் கொள்கைகள் தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டும்.
வரலாற்று பூர்வமான நாளில் கம்யூனிஸ்ட் இயக்கம் குறித்து அகிலத்தில் விவாதிக்கப்பட்ட நாளில் இந்திய விடுதலை எதேச்சையாக அமைந்திருந்தாலும் அதற்கு கம்யூனிஸ்டுகள் அளித்துள்ள விலை அளவிடற்கறியது.

கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கியது பற்றி கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு மத்தியில் பல்வேறு விதமான வேறுபட்ட கருத்தாக்கங்கள் உள்ளன.
ஆனால், இந்திய தொழிலாளி வர்க்கம் உருவான பிறகு அதன் மீதான சுரண்டல் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்குவதற்கான சூழலையும் தேவையும் நாட்டில் உருவாக்கி இருக்கிறது அதனுடைய வெளிப்பாடுதான் கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு எழுதப்பட்ட கடிதம் ஆகும்.

கருத்தியல் நிர்ணயிப்புகளும், களச் செயல்பாடுகளும்

பூரண விடுதலை,காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போர் குறித்து என விடுதலைப் போராட்ட காலத்தில் அதனுடைய நிர்ணயிப்புகள் மிக பொருத்தமானதாக அமைந்திருந்தது. விடுதலைக்கு பின்னர் தெலுங்கானா போராட்டம் ,காங்கிரஸ் அரசு குறித்த நிலைபாடு, ஏகாதிபத்தியம் பற்றிய நிர்ணயிப்பு, என ஆழமான விவாதங்களை நடத்தி சரியான முடிவுக்கு வந்துள்ளது.

அரசின் வர்க்கத் தன்மை, புரட்சிகர திட்டம், லட்சியம் அதை அடைவதற்கான வழிமுறைகள் என கம்யூனிஸ்ட் கட்சிக்குள் நடைப்பெற்ற உட்கட்சி போராட்டத்தின் விளைவாக சிபிஐஎம் உருவானது.

இதனை ஆழமாகவும் கருத்தியல் ரீதியாகவும் தெள்ளத் தெளிவாக என்னுள் நமக்கு எடுத்து இயம்புகிறது.
பாட்டாளி வர்க்க புரட்சியை நடத்துவதற்கு ரஷ்ய பாதையா? சீன பாதையா? என தொடர்ந்து நடத்திய கருத்தியல் மோதல்களுக்கு பின்பாக இந்தியாவிற்கான பாதை என்ற சரியானதொரு வழி பிறந்தது.

கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் நிலைமைகளை மதிப்பீடு செய்வதிலும் போராட்டப் பாதையை உருவாக்குவதிலும் சில சமயம் பலவீனங்கள் நேர்ந்தன.
இது குறித்தும் ஆழமான பகுப்பாய்வுகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.

இவையெல்லாம் மகத்தான போராட்டங்களுக்கு மத்தியில், அடக்குமுறைகளை சந்தித்த சூழலில் இம்மண்ணில் கம்யூனிஸ்டுகளின் சாதனைகளாகும்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமும் பின்னர் காங்கிரஸ் அரசும் நர வேட்டையை நடத்திய சூழலில் எல்லாவிதமான நெருக்கடிகளையும் சந்தித்து களத்திலும் கருத்தியலிலும் ஆழமான முத்திரையை பதித்தனர்.

ஆவணங்களும், ஆதாரங்களும்…

கம்யூனிஸ்டு இயக்கங்களின் வரலாற்று ஆதாரங்கள், தலைவரின் வாழ்க்கை வரலாறுகள், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆவணங்கள் என
நூற்றுக்கணக்கான நூல்கள் உண்டு. இந்து நூற்றுக்கணக்கான ஆதாரமாகக் கொண்டு மூன்று பாகங்களாக 93 அத்தியாயங்களாக விரிவாகவும் ஆழமான முறையில் வாசிக்கும் போது எளிதாக உள்வாங்கிக் கொள்ளக்கூடிய வகையிலும் எழுதப்பட்டுள்ளது.இந் நூலின் ஆசிரியர் அருணனின் எழுத்தாளுமை வியக்கத்தக்கது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை அளித்துள்ள அருணனை பாராட்டுவதற்கு வார்த்தைகள் போதாது.இதனுடைய நான்காவது பாகமாக 1964 முதல் 2024 வரை ஆன வரலாற்று நூலை தமிழ் சமூகத்திற்கு படைத்தளிக்க வேண்டும் என விழைகிறேன்.

அரசியல், சமூக, பொருளாதார வரலாற்றை எழுதும்போது அதற்கான ஆதாரங்கள் மிகவும் அடித்தளம் ஆனது.
வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு அதனை முறையாக தொகுத்து, கம்யூனிஸ்டு இயக்கத்தின் வரலாற்றை பற்றி முழுமையான புரிதலை ஏற்படுத்துவதற்கு தகுந்த முறையில் எழுதப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் நடைபெற்றுள்ள போராட்டங்களையும் எழுச்சிகளையும் கருத்தியல் விவாதங்களையும் ஒரு சேர வாசிக்கும் போது வரலாற்றின் பாத்திரத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வகித்த பங்கு அளப்பரியது.

வரலாற்றை படைக்க விரும்புபவர்கள் வரலாற்றை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது முன் நிபந்தனையாகும். அந்த வகையில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்களும் வாசிக்க வேண்டிய முதல் நூலாக அமைகிறது.

நூலின் தகவல்கள் : 

நூல் : இந்திய கம்யூனிச‌ இயக்க வரலாறு (India Communisa Iyakka Varalaru)
ஆசிரியர் : அருணன்
பக்கங்கள் : 616
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 540
தொடர்பு எண் : 91 94449 60935
நூலைப் பெற :

நூல் அறிமுகம் எழுதியவர் : 

எஸ்.பாலா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *