இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி 1)
ஆரம்ப கால ஆண்டுகள் (1920-1933)
அடக்குமுறைகளால் உருவான மாபெரும் இயக்கம்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு ஒரு நீண்ட மற்றும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள் ளது. இந்த வரலாற்றின் அதிகாரப்பூர்வ மான நூலாக “இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு: ஆரம்பகால ஆண்டுகள் 1920 முதல் 1933 வரை” எனும் தொகுதி ஒன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் கட்சியின் 17வது அகில இந்திய மாநாட்டில் அமைக்கப்பட்ட வரலாற்று கமி ஷனின் பணியின் விளைவாக உருவா னது. இந்த வரலாற்றுக் குழுவில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதிபாசு, இ.கே.நாயனார், பி.இராமச்சந்திரன், கொரட்டா சத்ய நாராயணா, அனில் பிஸ்வாஸ் ஆகிய தலை வர்கள் இருந்தனர். இந்த நூலை தமிழில் கி.இலக்குவன் மொழிபெயர்த்துள்ளார்.
வரலாறு ஆவணம் உருவான விதம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சி யைப் பதிவு செய்துள்ள ஆவணங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்:
1. அறிவார்ந்த ஆய்வுகள்
2.அனுபவமிக்க மூத்த கம்யூனிஸ்டு களின் நினைவுக் குறிப்புகள்
3. வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்புப் படைப்புகள்
4. கம்யூனிசம் மற்றும் இடதுசாரி இயக்கத்தின் தேர்வு செய்யப்பட்ட ஆவணங்களின் தொகுப்புகள்
இந்த ஆவணங்கள் கம்யூனிஸ்ட் இயக்க த்தின் வரலாற்றை வெளியிடுவதற்கு முக்கி யமானவை. இந்தியாவின் வரலாற்றை திரித்து சிதைப்பதற்கான முயற்சிகளை வகுப்புவாத வலதுசாரி சக்திகள் மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலையில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு மேலும் முக்கியமானதாகிறது.
நூலின் அமைப்பு
இந்த நூல் 1925 முதல் 1933 வரையி லான காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் எவ்வாறு விதையாகத் துவங்கி வேர் விட்டு வளரத் தொடங்கியது என்பதை ஆழமான இயக்கவியல் சூழல் அடிப்படையில் பதிவு செய்கிறது. இந்த நூலில் 10 தலைப்புகள்
உள்ளன:
1. அறிமுகம்;
2. கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுதல்;
3. கம்யூனிஸ்ட் செயல்பாடுகள் விரிவடைதல்;
4. கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு;
5. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி;
6. கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஆறாவது மாநாடு;
7. புதிய எழுச்சி; 8. மீரட் சதி வழக்கு விசாரணை;
9. ஓர் அகில இந்திய மையத்தை நோக்கி;
10. தொகுப்புரை30 கம்யூனிஸ்ட் தோழர்களின் வாழ்க்கைவரலாற்றுக் குறிப்புகளும் பின் இணைப்பாக உள்ளன. இந்த குறிப்புகள் அவர்களின் தியாகத்தை எடுத்தியம்புகின்றன.
கருத்தியல் போராட்டம்
கம்யூனிஸ்டுகள் முதன்முதலில் பூரண சுதந்திரம் என்ற லட்சியத்தை முன் வைத்தனர். அவர்கள் அரசியல் விடுதலை மட்டுமல்லாது, சமூகப் பொருளாதார விடுதலை என்ற மகத்தான லட்சியத்திற்காக சுதந்திர போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்தனர். சோவியத் ரஷ்ய புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் காலனித்துவ நாடுகளின் சுதந்திரப் போராட்டத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் காங்கிரஸின் அணுகுமுறை குறித்த நிர்ணயிப்புகள், மதிப்பீடுகள், நிலைபாடுகள் பற்றி இந்த நூல் ஆழமான கருத்தியல் தெளிவை ஏற்படுத்துகிறது.
ஸ்தாபன வடிவத்தை எட்டுதல்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு ஸ்தாபன வடிவத்தை எட்டியது. பெஷாவர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு போன்றவை கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்குவதற்காக எடுக்கப்பட்ட அடக்குமுறை நடவடிக்கை களாகும். ஆனால் இந்த சதி வழக்குகள் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழிக்காமல், அதை ஒரு திருப்புமுனையாக மாற்றியது. மீரட் சதி வழக்கு கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு புதிய போர் தந்திரம் மற்றும் புரிதலை ஏற்படுத்தியது.
நூலின் முக்கியத்துவம்
இந்திய வரலாற்றில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு மகத்தானது. சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் சிந்திய ரத்தம், சிறை அடக்குமுறைகள், சதி வழக்குகள், கொடூரமான தண்டனைகள் போன்றவை இந்திய வரலாற்றின் பக்கங்களில் அழிக்க முடியாதவை. இந்த நூல் அத்தகைய மகத்தான வரலாற்றை வாசிப்பதற்கு மிக முக்கியமானதாகும்.
நூலின் விவரம்:
இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு (தொகுதி 1)
ஆரம்ப கால ஆண்டுகள் (1920-1933)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 296
விலை: ரூ. 180
நூல் அறிமுகம் எழுதியவர்:
எஸ். பாலா
மாநிலக்குழு உறுப்பினர் – சிபிஐ(எம்)
நன்றி: தீக்கதிர்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.