சீனா பற்றிய உத்தியில் மோடியின் தொலைநோக்கற்ற பார்வைக்கு இந்தியா விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது – பீம் புர்டல் (தமிழில்: கி.ரா.சு.)

சீனா பற்றிய உத்தியில் மோடியின் தொலைநோக்கற்ற பார்வைக்கு இந்தியா விலை கொடுத்துக் கொண்டிருக்கிறது – பீம் புர்டல் (தமிழில்: கி.ரா.சு.)

 

1962 இந்திய – சீனப் போரிலிருந்து பெற்ற பாடங்களை பொருட்படுத்தாதன் மூலம் மோடி இந்த நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறார்.

பீம் புர்டல்

2020 ஜூன் 17

“கடந்த காலத்தை நினைவு கொள்ளாதவர்கள் அதையே மீண்டும் செய்வதற்குத் தள்ளப்படுகிறார்கள்”.   ஸ்பானிய தத்துவவாதி சந்தயானாவின் இந்தப் புகழ் பெற்ற மேற்கொள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சீனக் கொள்கையில் எதிரொலிக்கிறது.  1962 இந்திய சீனப் போரில் இந்தியா செய்த மாபெரும் பிழையை மோடி நினைத்துப் பார்க்கத் தயங்குவது போல் தோன்றுகிறது.

அப்போதைய பிரதமரான ஜவஹர்லால் நேரு ரஷ்யாவுக்குச் சாதகமான அவரது ஆலோசகர் வி.கே.கிருஷ்ணமேனனை அதிகமாக நம்பியதால் அவர் செய்த பிழைகளை மீண்டும் மோடியும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மோடி தனது வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை நம்புகிறார்.  அவரோ அமெரிக்காவுடனான கூட்டணி இந்தியாவின் கேந்திரமான நலன்களை நிறைவேற்றச் சிறந்தது என்று நம்புபவர்.

2019 பொதுத்தேர்தலில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும், உத்திக்கும் இருக்கும் பல பாரம்பரியங்களையும், விதிமுறைகளையும் வளைத்து விட்டார்.  இரண்டாவது முறையாகத் தான் பிரதமர் பதவியைப் பிடிப்பதற்காக வாக்காளர்களை ஈர்ப்பதற்கு அவர் வெளியுறவு விவகாரங்களைக் கருவிகளாகப் பயன்படுத்தினார்.  அவர் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலையும், அதன் பின்னர் பாலகோட்டில் நடந்த துல்லியத் தாக்குதலையும் ஒரு தேர்தல் நிகழ்ச்சிநிரலாக, நிலப்பரப்பு தேசியவாதமாகத் திரித்தார்.  தேர்தலின் போது பாகிஸ்தான் நிர்வாகத்திலுள்ள காஷ்மீரைத் திரும்பப் பிடிப்பதாக அவர் உறுதி கூறினார்.

உள்நாட்டு விவகாரங்களில் ஒவ்வொரு முனையிலும் அவர் தோற்றுப் போனாலும், அவரது வெளியுறவுக் கொள்கையின் புகழை வெற்றிகரமாக ஊதிப் பெரிதாக்கினார்.  மிகப்பெரும் சக்திமிக்க தலைவர்களான அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ரஷ்யத் தலைவர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் அவரது தொடர்பை வைத்து வாக்காளர்களைக் கவர்ந்து உள்நாட்டுக் கொள்கையில் அவரது தொல்வியை மிகத்திறமையாக மறைத்து விட்டார்.

சந்தையில் கிடைக்கும் எந்தச் சரக்குக்கும், சேவைக்கும் அவற்றை நுகர்வோர் விலை கொடுக்க வேண்டுமென்று பொருளாதாரக் கோட்பாடு கூறுகிறது.  அதாவது யாரும் எதையும் இலவசமாகப் பெற முடியாது.  அதை ஒரு புகழ்பெற்ற சட்டக் கருத்தான “இலவச சாப்பாடு என்று ஒன்றும் கிடையாது” என்பது இதைச் சிறப்பாகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.  இந்தப் பழமொழி சர்வதேச உறவுகளுக்கும் உத்திக்கும் சமமாகவே பொருந்தும்.

மிகப்பெரும் சக்தியின் தலைவருடன் ஒவ்வொரு கைகுலுக்குக்கும், ஒவ்வொரு அணைப்புக்கும் ஒரு சிறப்பான விலையும் கூடவே இருக்கும்.  இந்த விலைகள் சிலசமயம் நிதி பற்றிய வார்த்தைகளில் வெளியிடப்படும்.  மோடி புடினுடன் கைகுலுக்கி, அணைத்துக் கொண்டதற்கு,  எஸ் 400 ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்துக்கு அமெரிக்க டாலர் 43 பில்லியன் விலையாகக் கொடுத்தார்.   பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனைப் பொருத்த வரை ரஃபேல் ஒப்பந்தத்துக்கு 30 பில்லியன் டாலர் கொடுத்தார்.  இவை வெறும் பண விலைகள் மட்டுமே, புடினையும், மக்ரோனையும் அணைத்துக் கொண்டதுடன் தொடர்புடைய உத்திக்கான விலையல்ல.  எனினும், டிரம்பையும், ஜியையும் பொருத்தவரை மோடி மிகப்பெரும் உத்தி விலையைக் கொடுக்க வேண்டி வந்தது.

Kashmiri Pandit diaspora endorses axing Article 370, meets Modi ...

உதாரணமாக, மோடி டெக்சாஸ், ஹூஸ்டனில் 2019, செப்டம்பர் 22 அன்று பெரும் விழாக்கோலத்துடன் “ஹௌடி மோடி” நிகழ்ச்சியை நடத்தினார்.  அமெரிக்கா முழுவதிலுமிருந்து இந்திய வம்சாவழியினர் சுமார் 50,000 பேர் இதில் பங்கேற்றனர்.  இதில் மையமான ஈர்ப்பு டிரம்ப் இதில் பங்கேற்றதாகும்.  அவர் மோடியுடன் ஒரு மணி நேரம் செலவிட்டார்.

அதேபோல் டிரம்ப் குஜராத்தில் இந்த வருடம் பிப்ரவரி 22 அன்று உலகின் மிகப்பெரும் கிரிக்கெட் அரங்கில் 1,25,000 பேரின் பங்கேற்புடன் நடத்திய நிகழ்வில் டிரம்ப் கலந்து கொண்டார்.  மோடி டிரம்புடன் நிரம்பி வழியும் நெருக்கத்தைக் காட்டினார்.  அமெரிக்க அதிபரோ இந்தியப் பிரதமரை “விதிவிலக்கான தலைவர்……..எனது உண்மையான நண்பர் என்று அவரை அழைக்க நான் பெருமைப்படுகிறேன்” என்று புகழ்ந்து ஒரு உரையை நிகழ்த்தினார்.

ஆனால் டிரம்ப் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றதும், மோடியின் நிர்வாகத்தைப் புகழ்ந்ததும் இலவசமாக அல்ல.  மோடி அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பங்காளியாகவும், நண்பராகவும் இருக்கும் பங்கை வகிக்க வேண்டும் என்ற விலையை மோடி கொடுக்க வேண்டும்.

டிரம்ப் ஒரு நம்பிக்கைக்குரிய கூட்டாளியா?

அமெரிக்கா மிகச்சமீபத்தில் தேசியப்பாதுகாப்பு உத்தியை வெளியிட்டது.  அது இன்னமும் “ஒரே சீனா கொள்கையை”க் கொண்டிருப்பதாகவும், அமெரிக்கா சீனாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது.  எனினும், மோடி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தைவான் அதிபரின் ஆட்சியேற்பு நேரடி விழாவில் பங்கேற்க அனுப்பினார்.

அமெரிக்க அதிபர் நேராகவோ அல்லது குவாத் நாடுகள் உள்ளிட்ட எந்த இந்தியாவின் நட்பு, கூட்டாளி நாடுகளோ லடாக்கில் சீன-இந்திய மோதலில் இந்தியாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிடவில்லை.  ஜூன் 4 மிகப்பெரும் விளம்பரம் கொடுக்கப்பட்ட மோடிக்கும், ஆஸ்திரேலியப் பிரதமருக்கும் இடையிலான நேரடிப் பேச்சு வார்த்தையில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் லடாக் பற்றிய பேச்சே இல்லை.

Howdy Modi Live: 'எல்லாரும் சௌக்கியம் ...

சீனாவுடன் முழு அளவிலான போர் வெடித்தால் இந்தியா தனக்கு ஆதரவாக யாரும் இல்லாததைக் காணும்.  தொற்று நோய்க்கு முன்பே அமெரிக்கா நெருக்கடியில் சிக்கியிருந்தது.  ஜி.டி.பி.யில் அதன் பொதுக் கடன் 125% ஆக இருந்தது.  வால்ஸ் ஸ்ட்ரீட் அறிக்கையானது அது ஜி.டி.பி.யில் 2000% அடையக் கூடுமென்று கூறுகிறது.

ஆசியாவில் இருக்கும் உலக அளவிலான நிபுணர்களில் ஒருவரான ஸ்டீபன் ரோச் மாறுகின்ற உலக வலிமை சமன்பாட்டுடன் அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை இணைந்து விரைவில் டாலர் மதிப்பு சரிவதற்கு இட்டுச் செல்லலாம் என்று கணிக்கிறார்.

அமெரிக்காவே சீனாவுடன் ஒரு மேம்பட்ட வர்த்தக உடன்பாட்டை விரும்புகிறது.  நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.  தொற்று நோய் காரணமாகச் சீனாவின் இழப்புக்களிலிருந்தும், உலக சக்திகளின் கூட்டணி மாற்றங்களிலிருந்தும் இந்திய இலாபம் பெறுகிறது என்ற மோடியின் கணிப்பு அபத்தமாகத் தோன்றுகிறது.

நோய்த் தொற்றுக்குப் பிறகு இந்தியா தனது பொருளாதார வலுவை மிகவேகமாகவும், இரக்கமின்றியும் வளர்த்தெடுக்க முடியும் என்று மோடியிடம் ஒரு தவறான எதிர்பார்ப்பு உள்ளது.  அவர் நோய்த்தொற்றுக்குப் பிறகு உலகம் உலக சப்ளை சங்கிலியில் ஒரு மறுகட்டமைப்பைச் சந்திக்கும் என்று அவர் நம்புகிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் சீனாவுடன் தமது பொருளாதாரங்களைத் துண்டித்துக் கொள்ளுமென்று மோடி நம்புகிறார்.  அவை இந்தியாவை ஒரு கூட்டாளியாகவும், நட்பு நாடாவும் ஏற்க விரும்பும்: அவற்றின் தொழிற்சாலைகள் ஒரு புதிய இடத்துக்கு, இந்தியாவுக்கு மாறும்.

எனினும், இந்தியா கோவிட் 19 நெருக்கடிக்குள் இப்போதுதான் நுழைந்துள்ளது.  இந்தியப் பொதுச் சுகாதார நிபுணர்கள் இந்த ஆண்டு இறுதியில் சுமார் 670 மில்லியன் தொற்றுக்களும், ஐந்து லட்சம் மரணங்களும் ஏற்படுமென்று கணிக்கின்றனர்.

மேலும், பொருளாதாரமும் சரியுமென்று கணிக்கப்படுகிறது.  இந்திய ஏற்றுமதிகளை நுகர்வோர் முன்னேறிய பொருளாதாரங்களில் கீழ்நிலை, நடுத்தரக் குடும்பங்களாகும்.  அவர்கள் கோவிட் 19 நோய்த்தொற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அடுத்த வருடம்  ஏற்படப்போகும் கிராக்கி  சரிவால் அவர்கள் மேலும் துன்பமடைவர்.

நோய்த்தொற்றுக்கு முன்னால், இந்திய வெளிநாட்டு வர்த்தகம் ஐரோப்பிய யூனியனுக்கு சாதகமாக இருந்தது, அமெரிக்காவுடனும் சாதகமாக இருந்தது.  சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் இடம் மாறிய பிறகு அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் முக்கியமான வர்த்தகக் கூட்டாளிகளாக இருப்பர் என்பது மோடியின் இலக்கு.

நமஸ்தே ட்ரம்ப்' சட்டவிரோதமாகக் ...

அமெரிக்க நிறுவனங்கள் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயரும் என்பதற்கு எந்த உறுதியும் கிடையாது.  ஏனென்றால் மார்ச் 18இல் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கு இடையில் வர்த்தகப் போர் மூண்ட பிறகு 5%க்கும் கீழான நிறுவனங்கள்தான் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தன.  அவை அப்படியே இடம் பெயர்ந்தால் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அவை உறுதிப்படுத்தாது.  ஏனென்றால் சில ஆண்டுகளுக்குச் சர்வதேசச் சந்தையில் இந்தியப் பொருட்களுக்குப் பெரிய கிராக்கி இருக்காது.

மைக்கேல் ஓ லேரி, கார்லோஸ் ரோட்ரிக்ஸ் போன்ற பொருளாதார நிபுணர்கள் முன்னேறிய பொருளாதாரங்களுக்குக் கீழிறங்கி மேலேறும் V போன்ற மீட்சி இருக்கும் என்று நம்பவில்லை.  2008 பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு மந்தமான மீட்சியானது தொற்றுநோய்க்குப் பிறகான பொருளாதாரங்கள்  L வடிவில் இருக்கும் என்று காட்டுகின்றன.

சீனாவின் சந்தேகம்

நோய்த்தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்சிக்கு உந்துதல் அளிக்க 260 பில்லியன் டாலருக்கு மேல் மீட்சித் திட்டத்துடன் மே 12 அன்று மோடி ஆத்மநிர்பார் (சுயசார்பு இந்தியா) கோட்பாட்டை அறிவித்தார்.  

சீனாவிலிருந்து வரும் அன்னிய முதலீட்டை இறுக்குவதே மோடியின் நோக்கம் என்று பீஜிங் புரிந்து கொண்டது.   சீனாவிலிருந்து இடம் பெயரும் அமெரிக்க நிறுவனங்களை  இந்தியா வரவேற்பது சீனாவின் முதலீட்டுக்கு எதிரான தேர்ந்தெடுத்த இலக்கு.

அக்னிப் பிழம்புகள்: 2014

சீனா இந்தியாவை அமெரிக்காவிடமிருந்து பிரிக்க நினைக்கிறது.  சீனாவும் இந்தியாவும் 3400 கி.மீ. எல்லையைப் பகிர்ந்து கொள்வதால் இந்தியாவின் நகர்வு மீது அது தீவிரமான கவலை கொண்டுள்ளது.  இமாலயத்திலும், இந்தியப் பெருங்கடலிலும் சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியா ஒரு பதிலியாக இருக்கிறது என்று சீன உத்தி நிபுணர்கள் நினைக்கிறார்கள்.

சீனாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் குறிப்பிட்ட எந்த ஒப்பந்தத்தையும் குறிப்பிடாமல் கடந்த மாதம் கூறியதையே மீண்டும் கூறிக் கொண்டிருக்கிறார்; ‘இந்தியத் தரப்பு எங்களுடன் சேர்ந்து பணிபுரிய வேண்டுமென்றும், கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டுமென்றும் நிலைமையைச் சிக்கலாக்கும் ஒருதலை பட்சமான செயல்பாடுகளிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்’.  அவர் மோடிக்கும் ஜிக்கும் வூஹானிலும், மாமல்லபுரத்திலும் நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்களில் போடப்பட்ட ஒப்பந்தங்களையும், ஒருமித்த கருத்துக்களையும் அவர் மறைமுகமாகக் கூறினார்.

’ஒரு ஆசிய நூற்றாண்டை’ உருவாக்குவதில் சீனாவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டும் மோடி அமெரிக்காவை எதிர்நோக்குகிறார் என்று சீனா கருதுகிறது.  ‘மோடி இருவரின் உணர்வுகள், கவலைகள், எதிர்பார்ப்புகளைப் பார்க்கத் தயங்குகிறார்” என்று முதல் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியச் சீன எல்லைப் பிரச்சனைக்கு மோடியும் ஜீயும் ஒரு நியாயமான ஏற்றுக் கொள்ளக் கூடிய, இருவரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு உடன்பாட்டுக்கு வர ஒப்புக் கொண்டனர்.  எனினும், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370ஐ ஒழித்த பிறகு இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை உள்ளடக்கிய ஒரு புதிய இந்திய வரைபடத்தை வெளியிட்டது.

லோக்சபாவி மோடியின் கையாள் உற்சாகத்துடன் பேசும்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா சீனாவின் நிர்வாகத்திலுள்ள லடாக் பகுதியான அக்சாய் சின்னை எடுத்துக் கொள்வேன் என்று பேசினார்.  பிறகு சீனாவுக்குப் பறந்த ஜெய்சங்கர் பீஜிங்கிடம் தனது நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ளும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று மறுபடியும் உறுதியளித்தார்.

சீனா முதலில் இந்த சம்பவத்தை இந்தியாவின் ஒரு உள்நாட்டு அரசியல் பிரச்சனையாகப் புரிந்து கொண்டது.  எனினும் பின் தொடர்ந்த பிற விஷயங்கள் – தைவான் குறித்த கொள்கை மாற்றங்கள், இந்தியாவில் சீனாவின் முதலீடுகளை இறுக்குதல், உலக சுகாதார நிறுவனத்தை மறுகட்டமைப்பு செய்தல், கோவிட் 19 ஆய்வு, குவாத், ஆஸ்திரேலியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் – ஆகியவை பீஜிங்கின் சந்தேகங்களை விரைவுபடுத்தின.

India paying price for Modi's myopic China strategy - Asia Times

”ஒரு வெளிப்படையான, பல்முனை கொண்ட, பன்மைத்துவமான, அனைவரும் பங்கேற்கக் கூடிய உலகப் பொருளாதார முறைமையைக் கட்டமைத்தல்” என்ற தனது ஒப்பந்தம் குறித்து மோடி தனது மனதை மாற்றிக் கொண்டு விட்டார் என்று சீன உத்தியாளர்கள் நினைக்கின்றனர்.  மேலும் அவர் பீஜிங்குடன் கூட்டணியை விட்டுவிட்டாரென்றும், அமெரிக்காவின் தூண்டுதலால் அதன் சொந்தப் புழக்கடையிலும் இந்திய-பசிபிக் வளைவிலும் அதன் அதிகமான இருப்பையும் தடுக்க விரும்புகிறது என்றும் புரிந்து கொண்டுள்ளனர்.

சீனா மோடிக்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறது.  இரண்டு அதிகாரப் பூர்வமற்ற சந்திப்புகளில் ஏற்பட்ட ஒத்த கருத்துக்களையும், ஒப்பந்தங்களையும் மோடி ஏற்று நடக்க வேண்டும் அல்லது லடாக்கில் 1962இல் ஏற்பட்ட இராணுவ மோதலை விட மிக மோசமான விளைவைச் சந்திக்கத் தயாராக வேண்டுமென்ற செய்தியை அது அனுப்ப விரும்புகிறது.

இந்த இரண்டு சந்திப்புகளில் ஏற்பட்ட ஒத்த கருத்துக்களையும், ஒப்பந்தங்களையும் நிறைவேற்றுவதில் மோடி தவறி போக்கை மாற்ற விரும்பினால், 1962ஐ விட சீனா இந்தியாவைக் கடுமையாகத் தண்டிக்கும்.  மோடியின் விதி 19ஆம் நூற்றாண்டு ரஷ்ய வரலாற்றாளர் வாசிலி க்ளிசேவ்ஸ்கி கூறியது போல் இருக்கப் போகிறது. “வரலாறு நமக்கு எதையும் கற்பிப்பதில்லை. ஆனால் அதன் பாடங்களைப் படிக்காததற்காகத் தண்டிக்க மட்டுமே செய்கிறது.”

கட்டுரையாளர்; பிம் புர்டெல்

காத்மாண்டு திரிபுவன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள், ராஜதந்திரம் குறித்த ஒரு பட்ட மேற்படிப்புப் பாடத்திற்கு அவர் கௌரவ ஆசிரியர், நேபால் திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரத்தில் பட்ட மேற்படிப்புக்கான ஆசிரியர்.  

bhim.bhurtel@gmail.com

தமிழில்: கி.ரா.சு.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *