நூலாசிரியர் : ஆயிஷா நடராஜன், சாகித்ய அகாதமி ( சிறுவர் இலக்கியத்திற்காக )விருதுபெற்றவர், தமிழின் முன்னணி கல்வியாளர், அறிவியல் வரலாற்றாளர்.
இயற்பியல், கல்வி மேலாண்மை மற்றும் உளவியல் ஆகியவற்றில் முதுகலைப்பட்டமும் கல்வியியல் முனைவர் பட்டமும் பெற்றவர். இவரது நூல்களில் உள்ள எளிமையும் அங்கதம் கலந்த நகைப்புணர்வும் இவரை சுஜாதாவுக்கு அடுத்து முக்கிய அறிவியல் எழுத்தாளராக அறிவித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர் இந்த நூலில் .

ச.சீ .ராஜகோபாலன் அவர்களது பாராட்டு.

அன்னியர் ஆட்சியில் நம் நாட்டு மக்களுக்கு கல்வி பணியாற்றிய பழைய தலைமுறை செம்மல்கள் பலரை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் ஆயிஷா நடராஜன். கல்வி வரலாற்றில் ஓரளவு அறிவுள்ள என்போன்றோரே அறிந்திடாத ஆளுமைகளை இந்தப் புத்தகம் மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றோம் என்றால் ஆயிஷா நடராஜன் எத்தனை முயற்சி எடுத்து அவர்களை பற்றி அறிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து கட்டுரைகளை வடித்திருப்பார் என்பது வியப்பை அளிக்கிறது , என்று மூத்த கல்விப் போராளியான ச.சீ . ராஜகோபாலன் அவர்கள் இந்த புத்தகம் குறித்து பாராட்டுகிறார் .

நூலைப்பற்றி …

கல்வியாளர்களே அறிந்திடாத ஆளுமைகள் என்ற தலைப்பில் சசி ராஜகோபாலன் அணிந்துரை வழங்கியுள்ளார் . புத்தகத்தின் உள்ளே 23 கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொக்கிஷம் என்று கூறலாம். ஏனெனில், இன்று கல்வி குறித்து பேசக்கூடிய பலரையும் நமக்கு தெரிகின்றது. கல்வியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்தும் பொதுக்கல்வி வரவில்லை , தாய்மொழிவழிக் கல்வி இல்லை ,
ஆசிரியர் பயிற்சி சரி இல்லை , பெண்கல்வி இல்லை என்று எத்தனையோ பிரச்சினைகள் குறித்து நாம் பேசி வருகிறோம்.

Tribes of India "d0e2780"

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கல்வி முறை

ஆனால் கல்வியே இல்லாத காலம் எப்படி ஒன்று இருந்திருக்கிறது . கிழக்கிந்தியக் கம்பெனி வந்தபோதும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலும் எப்படியெல்லாம் கல்வி பாமர மக்களுக்கு வழங்கப்படாமல் இருந்தது, எப்படி கல்வியைச் சமூகத்திற்குள் கொண்டுவந்து மக்களுக்காக ஒவ்வொருவரும் தங்களது வாழ்வையே அர்ப்பணித்து உள்ளார்கள் என்று ஒவ்வொரு கட்டுரையிலும் விவரித்துள்ளார் ஆசிரியர் . இவர்களைக் குறித்து நாம் மேலும் நிறைய தகவல்களை தேடிப் படிக்க வேண்டும் என்ற உணர்வே வருகிறது.
நம்முடைய வரலாறு பாடப் புத்தகங்களில் இடம் பெறாத பல தகவல்களை இப்புத்தகம் உள்ளடக்கியுள்ளது.

ராஜா ராம் மோகன் ராய் குறித்துதான் முதல் கட்டுரை, நமக்கெல்லாம் தெரிந்தது ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கினார் என்று தான் .
ஆனால் பொதுக்கல்வி முறையை போராடி பெற்றவர் இவர் தான் .பலமுறை உயிரைப் பணயம் வைத்து சமூகப் போராளியாக,இறுதிவரை உழைத்திருக்கிறார் ராஜாராம் மோகன்ராய். பயணங்களே உண்மையான பாடங்கள் என்று அவரது வாசகமே காந்தியையும் ரயில் பயணியாக ஆக்கியது என்று வரலாறு கூறுகிறது .

நித்யா בטוויטר: "ராஜாராம் மோகன்ராய் ...

இராஜாராம் மோகன்ராய்

இந்தியாவின் சமூக விடுதலைக்கான ஒரே வழி அனைவருக்கும் கல்வி அளிப்பது என்பதனை பயணம் பாடமாக அவருக்கு போதித்தது.
கல்வி சமூக மாற்றத்திற்கான சாவி என்று இராஜாராம் மோகன்ராய் எழுதியிருக்கிறார். பள்ளிக்கூட அமைப்பே இல்லாத அந்த 1800 களின் தொடக்க ஆண்டுகளில் அனைத்து மக்களுக்குமான பொதுக்கல்வி பற்றி சிந்தித்து இருக்கிறார் என்றால் , அவரின் பொதுக் கல்வி குறித்த சிந்தனையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . ராஜாராமின் பொதுக்கல்வி முறையை 1834 இல் இந்தியா வந்த மெக்காலேவின் குமாஸ்தா கல்வியாக சுருக்கியது வேறுகதை. ஆனால் ராஜாராம் மோகன்ராய் ஆங்கிலக்கல்வியை ஆதரித்தார் என்று குற்றச் சாட்டும் உண்டு, ஆனால் அவர் மெக்காலே கல்வியை ஆதரித்தவர் அல்ல.
பொதுப்பள்ளி அரசின் கடமை என்பதை இங்கிலாந்து வரை சென்று வாதிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்தியக் கல்வி சீர்திருத்தங்களாக அவர் கூறியதை அமல்படுத்தியது ஆங்கிலேயர் ஆட்சி.

இந்தியர்களின் கல்விக்கு கிழக்கிந்திய கம்பெனி பொறுப்பு ஏற்க வில்லை எனில் பிரிட்டானிய அரசு அந்த பொறுப்பை ஏற்கும் என்று நேரடியாக பெண்டிங் பிரபுவை பொறுப்பாளராக நியமிக்கிறார் விக்டோரியா மகாராணி . தனது அயராத உழைப்பினால் இந்தியாவின் அனைத்து வகை மக்களுக்கும் சமூக நீதிக்கான பாதையை கட்டமைத்த சீர்திருத்த மாமனிதர் இதே இதோ இங்கு உறங்குகிறார் -என இங்கிலாந்தில் பிரிஸ்டனிலுள்ள ராஜாராம் மோகன்ராயின் கல்லறையில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய பொதுப் பள்ளிகளின் தேடல் ராஜாராம் மோகன்ராய் அவர்களிடமிருந்து ஆரம்பித்திருக்கிறது என்பது இந்தக் கட்டுரையை படித்தால் நாம் அறிந்து கொள்ளலாம்.

Our Parsi Rich Have Fallen on Evil Days: A Sharp Account of the ...

பெக்ராம்ஜி மலபாரி

பெக்ராம்ஜி மலபாரி என்ற மறக்கப்பட்டு விட்ட இந்தியக் கல்வியாளர் குறித்து அடுத்த கட்டுரை நமக்கு பல தகவல்களைத் தருகிறது. இளவயதில் குழந்தைகளுக்கு மண முடிப்பதைத் தடுத்து அவர்களை மாணவர்களாக மாற்றிய கதையைப் பற்றியே இவரது போராட்டங்கள் அமைந்திருக்கின்றன. மணமக்களை மாணவர்கள் ஆக்கியவர்கள் என்ற தலைப்பிட்ட இந்த கட்டுரையை நாம் கண்டிப்பாக படிக்க வேண்டும் 1813 & 1833 இலும் ஆங்கிலேயர்கள் தங்களது பொதுக் கல்வியை அறிமுகம் செய்தபோது பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் பொதுவானதாக திறந்துவிட்ட உடனேயே எல்லோரும் பிள்ளைகளை கல்வி கற்க போங்கள் என்று அனுப்பி விடவில்லை. மக்களிடம் இருந்து ஏராளமான வரியை சுங்கச்சாவடி முதல் விவசாயம் வரை வசூலித்து 10 சதவீதம் மட்டுமே செலவு செய்து 90 சதவீத இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்து அந்த காலகட்டத்தில் , எங்களது வரிப்பணத்தை எங்களுக்காகவே செலவு செய்யவேண்டும் என்று அதன் நுணுக்கம் அறிந்தவர்கள் குரலெழுப்பினர் . இங்கிலாந்திலும் எதிரொலித்தன கல்விக்காக என்று ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்கிறது அரசு, இன்றைய நாட்களை நமக்கு அப்படியே எதிரொலியாக இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன .இன்றும் நமக்கு கல்வி வரி பிடிக்கப்படுகிறது கல்வி வரை அனைத்தும் கல்விக்காகச் செலவிடப்படுகிறதா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .அதற்கான குரலாக அப்போதே இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் பெக்ராம்ஜி மலபாரி.

இப்படியாக ஒவ்வொரு தலைப்பைப் படிக்கும் போதும் ஒவ்வொரு ஆச்சரியங்கள் நம்மை வந்து ஆட்கொள்கின்றன. மதமாற்றுக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் என்று கிருஷ்ணா மாலிக் போராளியை குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர் .அவர் ஒரு இந்திய கல்விச் சீர்திருத்தவாதியாக இருந்திருக்கிறார். உலகின் பேரதிசயங்களில் ஒன்றான இந்திய மண்ணின் மதச்சார்பின்மை எனும் உயிர்மூச்சு கிருஷ்ணா மாலிக் தந்த கல்வி போராட்டத்தில் விளைந்தது தான் என்பதில் சந்தேகமில்லை என்று இந்த கட்டுரை சொல்கிறது.

Kerala PSC - Gouri Parvathi Bayi (1815-1829) - Kerala PSC GK ...

ராணி கௌரி பார்வதி பாய்

ராணி கௌரி பார்வதி பாய் – அடிப்படை கல்வியை அரசின் கடமை ஆக்கியவர். இன்று நாம் கல்வி உரிமைச் சட்டம் குறித்து பேசுகிறோம் ஆனால் 1800 களிலேயே கல்வியை சட்டமாக்கிய பெருமை இந்த கௌரி பார்வதி .ஆரம்பக் கல்வி கட்டாயம் அனைத்து மக்களுக்கும் தரப்பட வேண்டுமென்று போராடி பெற்றுத் தந்த பெண் போராளி கௌரி பார்வதி .

கல்விக்கு நான்கு புதிய சட்ட வடிவங்களை ஒரே வருடத்தில் வெளியிட்டிருக்கிறார் இவர்.
அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை கண்டிப்பாக தரவேண்டும் என்றும் எல்லா பள்ளிகளிலும் பிராந்திய மொழி கற்பிக்க ஆசிரியர்கள் நியமித்து , உயர் குலத்தவரும் பெண் குழந்தைகளும் மோசமான கீழ்ஜாதி பிள்ளைகளும் சேர்ந்து ஒன்றாக கல்வி கற்க சட்டத்தை கொண்டு வந்தவர் இவர் .அதேபோல தனது அரசவையில் ஆண்களே ராஜாங்க முடிவுகளை எடுப்பதை தடை செய்து பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தார் அதற்காகவே ஆரம்பப் பள்ளிகளை நிறுவினார் அதேபோல கல்விச் செலவு முழுவதும் சமஸ்தானத்திற்கு உரிய பத்மநாபசாமி கோவிலுக்கு உட்பட்ட குத்தகை வருமானம் இருக்கிறது என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் .அதாவது கல்வி இலவசமாக வேண்டும் என்று அந்த காலத்திலேயே கொண்டு வந்தவர் இவர்.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

ஆசிரியர் பயிற்சியை அறிமுகம் செய்தவராக ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என்ற கல்வி அறிஞரை குறிப்பிட்டுள்ளார் நூலாசிரியர்.
எல்லா இடத்திலும் ஆசிரியர்களாக ஆங்கிலேயர்களே இருக்க இந்தியர்களை ஆசிரியர்களாக நியமித்து அவர்களுக்காக பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்து என்று பல மாறுதல்களை செய்து வித்யாசாகர் முதல் ஆசிரியர் சங்கத்தையும் ஏற்படுத்தி முதல் பத்திரிகையையும் ஆரம்பித்துள்ளார் 1891இல் அவர் காலமானபோது, தாகூர் எழுதியது …. எவ்வளவு அற்புதம் கடவுள் லட்சக்கணக்கான வங்காளிகள் படைத்து கூடவே ஒரு மனிதரையும் படைத்தார் இந்திய ஆசிரியர்கள் பயிற்சி பெறும் வகையில் 1891 இல் 27 ஆசிரியர் பயிற்சி நிலையங்களை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியது 17 ஆயிரம் இந்தியர்கள் ஆசிரியர்களாக நியமனம் பெற்றனர் என்ற குறிப்பு இந்த புத்தகத்தில் உள்ளது. இன்று ஆசிரியராக இருக்கும் ஒவ்வொருவரும் நாம் இவரை நினைத்துக் கொள்ளவேண்டும் ஆங்கிலேயர்கள் மட்டுமே ஆசிரியர்களாக இருந்த காலகட்டத்தை மாற்றி இந்தியர்களையும் ஆசிரியர்களாக மாற்றிய போராளி இவர் . வித்யாசாகரின் மாணவர் பரமஹம்சரின் ஒரே சீடர் சுவாமி விவேகானந்தர் என்ற குறிப்பும் இந்த புத்தகத்தில் உள்ளது.

இந்தியாவின் முதல் பெண்ணியவாதி ...

சாவித்திரிபாய் பூலே

அடுத்ததாக நாம் அனைவரும் அறிந்த இந்தியாவின் முதல் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே .அவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் நமக்கு ஓரளவு தெரியும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒன்பது வயதில் திருமணமாகி கணவர் அறிவு புகட்டி , பல கட்டுப்பாடுகளை மீறி வெளியே வந்து சமூகப் போராளியாக மாறி இந்தியாவின் முதல் ஆசிரியராக மாறி மக்களுக்காகவே கடைசிவரை இருந்து அவர்கள் பிளேக் நோய் தாக்கிய பொழுது அவர்களுடனேயே இருந்து பணி செய்து அதனாலேயே இறந்தார் என்ற வரலாறு நமக்கு நன்கு அறிமுகமானதே .

கடைக்கோடி மனிதனும் கல்வி கற்க வேண்டும் என்று போராடியவர் சாயாஜிராவ் கெய்க்வாட் தீண்டாமைக்காக முதலில் சட்டமியற்றி குற்றம் செய்தவரை தண்டனை பெற வைத்த இவர் மன்னர் ஆன கதை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. கல்வி என்று ஒரு பதில் அளித்து அதனாலேயே அரசராய் இருக்கிறார். பெண் கல்வி பற்றி பேசும் போது தனது மனைவிக்கு முதலில் முழுமையாக கல்வியைக் கொடுத்து வீட்டிலிருந்தே பெண்கல்வியை தொடங்குகிறார். அடிப்படைக் கல்வியை கட்டாயமாக்க சட்டம் கொண்டு வந்திருக்கிறார் நிறைய பேருக்கு கல்வி உதவித்தொகை அளித்து அவர்களது வாழ்க்கையை முன்னேற்றம் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக , அவரது கல்வி உதவியில் பயன்பெற்றவர்கள் தாதாபாய் நவரோஜி .டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அவரையும் தனது கல்வி உதவித்தொகை மூலம் உருவாக்கி இருக்கக்கூடிய பெருமை இவரைச் சாரும் .ஆனால் நம் பாடப்புத்தகங்கள் இவை எவற்றையுமே நமக்கு கற்றுத் தரவில்லை என்பது மிகப் பெரும் வேதனை.

63 Pandit Ramabai Mukti Mission Short Biography - Tamil by Am Joel

பண்டித ரமாபாய் சரஸ்வதி

பெண்கல்வியின் ஓயாத போர் முழக்கமாக இருந்தவர் பற்றி குறிப்பிட்டுள்ளது இப்புத்தகம் , அவர் பண்டித ரமாபாய் சரஸ்வதி. இரவு நேர பள்ளிகளின் இதயத் துடிப்பாக கலக வாதி கேஷப் சந்திர சென், மத நல்லிணக்க கல்விக்கு உயிர் கொடுத்தவராக பிகாஜி காமா என்பவரை பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். கல்வியின் ஒரு அங்கமாக பள்ளிகளில் காலை நேர சர்வமத வழிபாட்டுக் கூட்டங்கள் நடைமுறையில்
உள்ளதென்றால் அது இவரது போராட்டத்தின் வெற்றி என்று குறிப்பிட்டுள்ளனர் .ஆசிரியர் பயிற்சியில் பெண்களை இணைத்தவர் மகாராஷ்டிரா சேர்ந்த மகரிஷி கார்வே என்று போற்றப்படும் கேசரி , கட்டாய இலவசக் கல்வியின் முதல் போராளியாக கோபால கிருஷ்ண கோகலே, சமத்துவக் கல்வியின் முதல் போராளியாக வீரேசலிங்கம் பந்துலு ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக ...

சையது அகமது கான்

அறிவியல் கல்வியின் பிதாமகர் என்று சையது அகமது கான் என்ன செய்தார் மத அடிப்படைவாதமும் மூட பழக்க வழக்கங்களும் கடும் சாதியை சட்டங்களும் நினைக்கவே முடியாத சமூக அவலங்களும் நிரம்பிக் கிடந்த நமது மண்ணில் கல்வியே எட்டாக்கனியாக இருந்த நாட்களில் அறிவியல் சிந்தனை என்பது எப்படி சாத்தியமாயிற்று அதற்காக இவர் இயந்திர போராட்டங்களை கையில் எடுத்தார் என்று விளக்குகிறது இந்த கட்டுரை.

பெண்கல்வியின் ஜான்சிராணி என்று ரமாபாய் ரானடே , சமய சார்பற்ற கல்வியின் கோலியாத் என்று அழைக்கப்படும் கல்வியாளர் கோபால் கணேஷ் அகர்கர் , தனது வாழ்நாளில் பாதி நாட்களை சிறையில் கழித்த கல்வி போராளி, இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் தனது ஆயிரத்து 1950 முதல் கல்வி மாணிய நிதி அறிக்கையைப் பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தபோது இந்த கோபால் கணேஷ் அவர்களுக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்பது வரலாறு.

Ashutosh Mukherjee - YouTube

அசுதோஷ் முகர்ஜி

தொழிற்கல்வி தொடங்கிவைத்த வங்கப்புலி என்ற அசுதோஷ் முகர்ஜி, இந்திய மருத்துவக் கல்வியின் இதயத்துடிப்பு இன்று நீட் என்னும் நுழைவுத்தேர்வு நாம் மருத்துவக் கல்வியின் மற்றொரு பிரம்மாண்ட போராட்டத்தை விதைத்து சர்ச்சைகள் தொடர்ந்தாலும் மருத்துவரை மருத்துவராக கல்விகற்க கடுமையான போராட்டங்களில் வெற்றி கண்டவர் ஜாம்ஷெட்ஜி ஜிஜி பாய் என்னும் மராட்டிய கல்வியாளர், ஆயிரம் பள்ளிகள் கண்ட பெண்ணியப் போராளி வங்கதேசத்தின் அபலா போஸ் , ராட்டினம் கற்பிப்பதை விட பெண் குழந்தைகளின் கல்வியில் தற்காப்பு கலையை சேர்ப்பது முக்கியம் என அவர் சொன்னபோது காந்தியே கூட அதை மறுக்க முடியவில்லை என்று வரலாறு கூறுகிறது 1937இல் வார்தாவில் காங்கிரஸின் கல்வி மாநாடு ஒன்றை நடத்திய காந்தியடிகள் இவரோடு தான் தனது கல்விக் கனவுகளை பகிர்ந்து கொண்டார் என்கிறது வரலாறு.

தலித் மக்களின் கல்வி நாயகராக கேரளாவைச் சேர்ந்த அய்யன்காளி, இஸ்லாமியப் பெண்களின் இரண்டு கண்களாக திகழ்ந்தவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த சேக் அப்துல்லா பேகம் வாகித் ஜஹான் தம்பதி காஷ்மீரத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தின் ஆதரவற்றவர்களுக்கு ஆதரவாகக் கல்வி தந்த தமிழ் வேங்கை என்று பாராட்டப்படும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இந்த 22 கட்டுரைகளும் கல்வி போராளிகளை அறிமுகப்படுத்தி 23 ஆவது கட்டுரையில் காந்தியையும் மெக்காலே வாதிகளும் என்று கல்வி குறித்து இது குறித்து பேசி இருக்கிறார் நூல் ஆசிரியர்.

கல்வி | #HeloGuru #கல்வி #கல்வி மற்றும் ...

ஒரே பிரமிப்பாக உள்ளது இந்தப் புத்தகத்தை படித்து முடித்தபோது , துணை நின்ற நூல்கள் பெயர்களைப் பார்த்தால் 24 நூல் பட்டியல்களை கொடுத்துள்ளார் .அதேபோல ஆவணங்கள் என்று பார்த்தால் ஒரு பதினாறு வகை ஆவணங்களை கொடுத்துள்ளார் .இது சாதாரண புத்தகமல்ல 128 பக்கங்கள் என்றாலும் 1200 பக்கங்கள் கொண்ட நூலாக இதை எழுத முடியும் அந்த அளவிற்கு பொருள் பொதிந்துள்ள மிகச் சிறந்த நூலாக இதனை பார்க்கிறேன். அதனுடைய தொடர்ச்சியாக இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் நாம் தேடிப் படிக்க வேண்டியுள்ளது இவையெல்லாம் தான் நமது கல்வியின் இன்றைய கல்வி அரசியலுக்கான ஒரு அடித்தளத்தை நமக்கு தரக்கூடிய முக்கியமான நூலாக இருப்பதைப் பார்க்கிறேன் அனைவரும் கட்டாயமாக இதை படிக்க வேண்டும் என்றும் எழுத்தாளர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்கிறேன்.

– உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *