என்னுரை

இந்திய தேசியமும் நாட்டுப்பற்றும் வளர்ந்தோங்கி வருவதுடன் அதை உடைக்கின்ற பிரிவினை சிந்தனைகளும் எல்லோரையும் அரவணைக்காத சிந்தனைகளும் நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் நல்லதல்ல. அந்த வகையில், நம் இளைஞர்களுக்கு இவை பற்றி ஒரு நேர்மையான கண்ணோட்டத்தை  உருவாக்குவதே இச்சிறு நூலின் நோக்கம். இத்தகைய நூல்கள் கிடைக்காமையால் பல சமூகவிரோதிகளின்,அரைகுறைகளின் பிதற்றல்களுக்கும்,பித்தலாட்டங்களுக்கும் இளைஞர்கள் ஆளாகின்றனர்.இவ்வாறு ஏமாறுகிறவர்களில் மெத்தப்படித்தவர்களும் உள்ளனர். இது அவர்களுக்குமான படைப்பு

 இந்த நூலை மலையாள மொழியில் திருவனந்தபுரத்தில் உள்ள சிந்தா வெளியீட்டகம், முற்போக்கு கலைஇலக்கிய சங்கத்திற்காக செப்டம்பர் 2000-ல் வெளியிட்டது

முனைவர். ரமணி.

பொருளடக்கம்

  1. என்னுரை
  2. பகுதி-1  இந்திய மரபின் இயல்புகள்
  3. பகுதி-2  தவறான புரிதல்கள்
  4. பகுதி-3  இந்து மதம்
  5. பகுதி-4 மதச் சார்பின்மை
  6. தொகுப்பு

பகுதி-1 

இந்திய மரபின் இயல்புகள்

ஒரு முழு நேர அரசியல் தலைவர். அப்பணிகளில் பல்வேறு அறிவியல் பிரிவுகளுக்குத் தன் பங்களிப்பை அளித்திட்ட மகான்       . எம். எஸ். இந்திய மரபு தொடர்பான அவரது கண்ணோட்டத்தைப் பதிவு செய்த பின் நமது ஆய்வைத் தொடங்கலாம்: 

இந்தியாவின் பழங்குடிகளே ஆரியர். அவர்கள் உருவாக்கிய கலாச்சாரமே இந்திய கலாச்சாரம். இப்படியாக உள்ள இந்து மத வெறியர்களின் கூற்றுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை”. (. எம். எஸ்ஸின் நாட்குறிப்பேடு, சிந்தா வெளியீடு, திருவனந்தபுரம், பக்.56). இது அவரின் கச்சிதமான கருத்து

உண்மை என்னவென வரலாற்றுப்பார்வையில் விளக்குகிறார்: 

இந்தியாவுக்குள் நுழைந்த பின்பு,இங்கிருந்த பழங்குடியினருடன் ஆரியர்கள் கூடிப்பழகியதால் உருவானதே  ‘இந்திய மரபுஎன தம்பட்டம் அடிக்கிறதுஇந்துகலாச்சாரம்.அதனைத் தொடர்ந்து முஸ்லீம்கிறித்தவம் எனப் பல்வேறு கலாச்சாரங்கள் இந்தியாவுக்குள் நுழைந்தன.அது மட்டுமல்லாது,இந்தியக் கலாச்சாரம் என அழைக்கப்படும் பண்பாட்டிலேயே  பல மாற்றங்களும் ஏற்பட்டன.இவை அனைத்தும் கலந்து உருவானதே இன்றைய இந்திய சமூகமும் கலாச்சாரமும்.அதை இந்து சமூகம் எனக் குறுக்கிக் கொள்வது பெரும் குறையாகும்:”. (நாட்குறிப்பேடு- பக். 57).

இந்தியாவில் அறிவியலும், சமூகமும் ...
இ.எம்.எஸ். இந்திய மரபு

ஆர். எஸ். எஸ்அமைப்பின் தலைவரும் பாரதீய விச்சார கேந்திரா இயக்குனருமான பி. பரமேஸ்வரன் என்பாருடன் நடைபெற்ற விவாதத்தில் இந்தியத் தத்துவத்தின் பரப்பு குறித்த கருத்து வேறுபாட்டை .எம்.எஸ் விளக்குகிறார்: 

இந்தியத் தத்துவம்என்பதை இந்தியாவில் உருவான தத்துவம் எனப் பொருள் புரிந்துகொண்டார்,பரமேஸ்வரன்.ஆக, வரலாற்றின் பல காலங்களில் இந்தியாவில் உறுதியாக வேர் பிடித்த முஸ்லீம்கிறித்தவம்மார்க்சீயம் ஆகிய மூன்று கருத்தியல்களையும் இந்தியாவினுடையதாக அவர் ஏற்க மறுக்கிறார். பவுத்தசமணசார்வாக கருத்தியல்கள் இந்த மண்ணிலேயே தோன்றியவை.எனினும் இவற்றையும் முழுமையாகஇந்தியாவினுடையதாகஏற்க அவர் மறுக்கிறார். ஏன் எனில் வேதங்கள்உப நிஷத்துகள்இவற்றின் அடிப்படையில் உருவாகியதும் பிராமண ஆதிக்கத்தில் தழைத்தோங்கியதுமானவேதாந்த கருத்தியல்என்பதையே இவர்பாரத (இந்தியாவின்) எனும் சொல்லால் புரிந்து கொள்கிறார். இந்த வேதாந்த கருத்தியலின் உத்தம பிரதிநிதியான ஆதி சங்கரர் இந்தியக் கருத்தியலுக்கு அளித்த பங்களிப்பு என்பதே அவர் பவுத்தசமணசார்வாக கருத்தியல்களை வன்மையாக எதிர்த்துத் தோற்கடித்தார் என்பதே. அப்படிப் பார்த்தால், பிராமண ஆதிக்கத்தின் கருத்தியலே பரமேஸ்வரனின்  ‘பாரத (இந்திய) கருத்தியல்’.

இந்திய மண்ணில் பிறந்ததும் பிற நாடுகளில் இருந்து இங்கு வந்து வேர்பிடித்ததுமான அனைத்து கருத்தியல்களையும்பாரதீயம்’(இந்தியாவினுடையது) என நானும் என்னை போன்ற மார்க்சீயவாதிகளும் கருதுகின்றோம். இந்தியாவினுடையது என பரமேஸ்வரன் ஏற்காமல் அருவருப்பாகக் காணும் சமணபவுத்தசார்வாக கருத்தியல்களையும்; எக்காரணத்தாலும் அவர் ஏற்க முடியாது எனச் சொல்லும் முஸ்லீம்கிறித்தவமார்க்சீயக் கருத்தியல்களையும் இந்தியக் கருத்தியலின் பகுதிகளாகவே நாம் பார்க்கிறோம்.” (நாட்குறிப்பேடு. பக். 67).

இங்கு கருத்தியல் குறித்தே சொல்லப்பட்டிருந்தாலும் அதுகலாச்சாரத்திற்கும்பொருந்தும். இதைப் புரிந்து கொள்ள இப்போது மேற்கோள் காட்டப்பட்ட நூலின் கடைசிப் பகுதியைப் பார்ப்போம்:  

நான் என் சிறார் பருவம் முழுதுமே, பரமேஸ்வரன் தூக்கிப் பிடிக்கும் வேதஉப நிஷத் போன்ற ஞானக்குடங்களை உள்வாங்கிக் கொண்டே வாழ்ந்து வந்தேன். இதில், பரமேஸ்வரனின் அனுபவத்தை விட எவ்விதத்திலும் குறையாத அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால்,வேதஉப நிஷத் போன்ற கருத்தியல்களின் பெயரால் கேரளாவில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போரிட்டு நான் சமூகப் புரட்சியாளனாக மாறினேன். அதே கால அளவில், மகாத்மா காந்தியடிகளின்  தலைமையிலான  தேசிய இயக்கத்தில் முழுமையான பங்காளியாக, மெதுவாக ஜவகர்லால் நேருவின் தொண்டனாக மாறினேன்இந்த பட்டறிவுகளேஎன்னை மார்க்சீயலெனினியக் கண்ணோட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இட்டுச் சென்றன. இப்படிப் பார்த்தால்,இந்திய கலாச்சாரத்தின்,இந்தியக் கருத்தியலின் கருவை என்னால் உள்வாங்க முடிந்துள்ளது. நான் வாதிடுகின்றமார்க்சீயலெனினியமே உண்மையானஇந்தியக் கருத்தியல்என என்னால் உரிமை கொண்டாட முடியும். (நாட்குறிப்பேடு. பக். 71,72).

இந்தியாவில் உருவெடுத்தோங்கிய,சமயக் கலாச்சாரங்கள், இந்தியாவுக்கு வெளியே உருவெடுத்து பல்வேறு  காலங்களில் இந்தியாவுக்குள் நுழைந்து நமது வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்திய பல்வேறு சமய கலாச்சாரங்கள்; பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் நுழைந்த முதலாளித்துவம், 1920- ஒட்டி இந்தியாவில் தோன்றிய தொழிலாளர் வர்க்கம் ஆகியவற்றின் சமய சார்பற்ற கலாச்சாரம்இவை அனைத்தின் கலவையே இந்திய கலாச்சாரம். அதன் தற்போதைய வடிவமே மார்க்சீய கலாச்சாரம். ஆகையால், இதுவே இந்திய கலாச்சாரம்இது தான் . எம். எஸ் எடுத்து வைக்கும் வாதம்

இந்நாள் வரை, நம் கலாச்சார மரபில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத அனைத்தையும் கழித்து, உயிர்த்துடிப்பான அனைத்தையும் இணைத்து வளர்ந்தோங்குகின்றது மார்க்சீயக் கலாச்சாரம். அதுவே இந்தியக் கலாச்சாரம் என்பதற்கு மறுபெயர். இது பொருத்தமானது என்கிறார் . எம். எஸ்.

கொல்கத்தா ப்ளீனம் (சிறப்பு மாநாடு ...

இந்தக் கண்ணோட்டத்தை இந்திய மக்களின் பெரும்பான்மைக் கண்ணோட்டமாக மாற்ற  வேண்டுமெனில் இந்து மத வெறியர்களின்குறுகலான பாரதிய கலாச்சாரம்எனும் கருத்தை உடைத்துத் தூள் தூளாக்க வேண்டும். இதற்கு, பல்வேறு மதத்தவரையும் சமய சார்பற்றவர்களையும்விரிந்த இந்திய கலாச்சாரம்எனும் கண்ணோட்டத்தை உள்வாங்கிடத் தூண்ட வேண்டும்

மறுபுறம், இந்து மத வெறியர்களின் குறுகலானபாரதீயகண்ணோட்டத்தின் குறைபாடுகளையும் தேச விரோத இயல்பையும் அம்பலப்படுத்திட வேண்டும். விரிந்த இந்த இந்தியக் கலாச்சாரமே இந்திய மார்க்சீயம் என மக்களிடம் தெள்ளத் தெளிவாக உணர்த்திவிட்டால் .எம் எஸ். முன் வைத்த கருத்து நிறைவேறும். இதற்கு, முதன்மையாகச் செய்ய வேண்டியது என்ன?

இந்து மத வெறியர்களின் கருத்துகளை எதிர்த்துத் தோற்கடித்திட வேண்டும். இக்கருத்துப் போராட்டத்தை .எம்.எஸ் வலுவாக தலைமை ஏற்று நடத்தினார். இக்கருத்துப் போருக்கு .எம்.எஸ் அளித்த முக்கிய பங்களிப்புகளை பார்ப்போம்: 

  1. வேத காலத்திற்கு முன்னரே, அதைவிட மேம்பட்ட சிந்து ஆற்றங்கரை கலாச்சாரம் இந்தியாவில் இருந்தது. இந்தியாவின் மிகப்பழமையான கலாச்சாரமே வேத கலாச்சாரம் என்பது உண்மைக்கு புறம்பானதுவேத கலாச்சாரத்தின் உடன்பிறப்பான பிராமண கலாச்சாரமோ இந்திய கலாச்சாரத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதுஎனினும், அதற்கு, எதிராக உருவான பவுத்தசமண கலாச்சாரங்களையும் சார்வாகம் போன்ற கருத்தியல்களையும் அதனால் வெற்றிகொள்ள முடிந்தது. இங்கிலாந்து (பிரிட்டன்) உட்பட்ட ஐரோப்பா நாடுகளின் படையெடுப்பும் நுழைதலுமே சர்வாதிகாரம் பெற்றிருந்த  இந்த வேத கலாச்சாரத்தை உடைத்து எறிந்தது. அவர்களின் அழிவு நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்த தேசிய எதிர்வினையே விடுதலை போராட்ட இயக்கமும் அதனுள் எழுந்த மார்க்சீயம் போன்ற இடது சாரி கருத்துகளும்.  
  1. வேத காலத்தை போன்றே இன்றளவும் சார்வாக கருத்தியல் (சார்வாக முனிவரின் நாத்திகம்) இந்தியப் பண்பாட்டின் பிரிக்க் முடியாத பகுதியாகவே உள்ளது. இதைபண்டையபாரத பண்பாட்டு வாதிகளுக்கு பிடிக்காது. இவர்களின் பார்வையில்இந்திய கருத்தியல்என்பது வெறுமனே  ஆன்மீகமும் கருத்து முதல் வாதமும்தானே. ஆனால் இதற்கு சவால் விடுகிற சார்வாக கருத்தியலும் சாங்கிய கருத்தியலும் பிறவனும் வேத கலாச்சாரத்தின் பகுதியாகவே இருந்தன. இவற்றின் தலைவர்களும் தொண்டர்களும் மகரிஷிகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இவ்வுண்மைகளாவன, ‘பண்டைய பாரதம்எனப்படுவது ஆன்மீகத்தையும் கருத்து முதல் வாதத்தையும் அடிப்படையாகக் கொண்டது  எனும் பொய்க்கூற்றை நொறுக்குகிறது.
  1. ஆன்மீகமும் கருத்து முதல் வாதமும் ஒரு பக்கத்தில். கடவுள் மறுப்புக் கருத்துகளும் பொருள் முதல் வாதமும் மறுபக்கத்தில். இவை இரண்டுக்கும் நடந்த  போராட்டமே வேத கலாச்சாரத்தின் சாரம்.
  1. வேத கலாச்சாரம் அதன் கருத்து முதல் வாதம், கடவுள் ஆராதனை, வழிபாட்டு முறைகள் என கோலோச்சியது ஒரு காலம். அப்போதே, இவற்றுக்கு மறுப்பாகவும் எதிர்ப்பாகவும் லோகாயத கருத்தியல், சாங்கிய கருத்தியல், பவுத்தசமண மதத்தவரின் பிராமணீய எதிர்ப்பு மக்கள் இயக்கங்கள் உருவாகின. ஆனால், இவற்றை இந்துத்துவாவாதிகள் ஏற்க மறுக்கின்றனர். அப்படியே, இந்தியப் பண்பாட்டு மரபையும் புறக்கணிக்கின்றனர்.                      (நாட்குறிப்பேடுபக்.157)
  1. சார்வாகர்கபிலர் முனிவர்களின் பொருள் முதல் வாத கருத்தியல்களும் வேதங்களின் அடிப்படைக்கே சவால் விட்ட சார்வாககபிலசமணம் போன்ற  மக்கள் இயக்கங்களும் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டன. னால், பின்னர் இந்தியாவில் நுழைந்த இஸ்லாமியகிறித்தவம் போன்ற  கருத்தியல்களும் சமய சமூகங்களும்இந்திய கலாச்சாரத்தைவளப்படுத்துவதில் பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

(நாட்குறிப்பேடுபக்.157,158).

  1. இந்திய சமூகத்தின், கலாச்சாரத்தின் பன்மைகளை மறுக்கின்ற ஒருமையும், ஒருமையினை மறுக்கின்ற பன்மையும்  இந்திய தேசியத்தின் தனிச்சிறப்பை வெளிப்படையாகவே மறுப்பதாகும். (நாட்குறிப்பேடுபக்.158).
  1. இந்திய தேசியத்தின் ஒருமை இயல்பை மறுக்கின்ற பிரிவினை இயக்கங்கள், பன்மையினை மறுக்கின்ற  மையப்படுத்தபட்டஇந்தியாவின்செய்தித் தொடர்பாளர்கள் போன்ற இரண்டும் இணைந்து வேற்றுமையுள்ள ஆனால் ஒருமையான இந்தியாவை அழிக்கின்றனர். இந்த தீமைகளுள் மிக ஆபத்தானது இந்து மத வெறியாகும். இந்தியா இந்துக்களுக்கு; இந்துக்கள் அல்லாதோருக்கு இங்கு இடமில்லை என எக்காளமிடுகின்றனர். அவரின் கைகளில் இருக்கும் கருத்தியலான ஆயுதங்களில் மிக கூரானதுவேத கலாச்சாரத்தின் மேன்மைகுறித்த பிரச்சாரமே. ‘ இந்தியா ஓர் ஆன்மிக நாடு ; ஹ்ருக்கு (இர்க்கு) வேதம் முதலான வேத கால நூல்கள் இந்திய கலாச்சாரத்தின் மேலான  நெறிகளை தூக்கிப்பிடிக்கின்றன’. இவை இவர்களின் வாதம். முழுமையாக உண்மைக்கு புறம்பான கருத்தாகும். ஏற்கெனவே சுட்டிக்காட்டியது போல், வேத கால கலாச்சாரத்தின் பிரிக்க முடியாத பகுதியாக பொருள் முதல் வாத கருத்துகளும் இருந்து வந்தனஇதற்கு மிகச்சிறந்த சான்றாக இருப்பவர்கள், சார்வாகர், கபிலர், புத்தர், மகாவீரர் போன்றோர். இவர்கள் உருவாக்கிய மரபை தூக்கிப்பிடித்து முன்னேறி செல்லுகின்ற கருத்தியலும் இயக்கவியலுமே மார்க்சீயம்லெனினீயம். ( நாட்குறிப்பேடு . பக்-159)  

இப்படியாக, இந்தியக் கலாச்சாரம் குறித்து ஆதாரபூர்வமானவிரிவான கண்ணோட்டத்தை முன்வைத்து இந்தியாவின் ஜனநாயக மத சார்பற்ற அமைப்பை வலுப்படுத்த முயற்சித்தவர், . எம். எஸ்.. இதன் ஒரு பகுதியாக இந்து ராஷ்டிர வாதிகளின் இந்தியக் கலாச்சாரம் குறித்த குறுகிய பிரிவினையான, வேற்றுமதக் காழ்ப்பை உமிழ்கிற கண்ணோட்டத்தை எதிர்த்துத் தோற்கடிக்க அவர் தொடர்ந்து பணியாற்றினார். இந்த இரண்டு பணிகளையும் மேற்கொண்டு முன்னேற வேண்டியது ஒவ்வொரு தேசப் பற்றாளனின் கடமையாகும். இதன் ஒரு பகுதியாக இந்திய மரபு குறித்து இப்போது உள்ள பொது எண்ணங்களில்  ஒரு மறு கருத்தாக்கம்  அவசியமாகும்.

 

பகுதி-2

தவறான புரிதல்கள்    

இந்திய மரபு குறித்து இன்றும் நிலவும் எண்ணங்களில் பலவும் இந்தியாவில் சமய சார்பின்மையை அதன் உண்மையான பொருளில் நடைமுறைப்படுத்திட அடிப்படையிலேயே முட்டுக்கட்டைகளாக உள்ளன. அந்த புரிதல்கள் எவை?

இந்து மரபே இந்திய மரபு என்பது இவற்றுள் தலையானதுஇந்து என்றால் பல கடவுள் நம்பிக்கையாளர், அந்த அந்த கடவுள்களின் சிலைகளை நிறுவிய கோயில்களுக்கு சென்று தம் நம்பிக்கையினைகடவுளின் பெயர் உச்சரித்தல் ( நாம ஜெபம்நாமம்= பெயர். ஜெபம்= உச்சரித்தல்), வணங்குதல் ( நமஸ்காரம்), கோயிலை வலம் வருதல் (ப்ரதக்ஷணம்) போன்றவற்றின் வாயிலாக தம் நம்பிக்கையினை வெளிப்படுத்துபவர். இவையெல்லாம் இந்த எண்ணத்தை ஒட்டி வருவன

: Latest News, Videos and Photos of ...
Ramayana and Mahabharata

வேதங்கள், உப நிஷத்துகள், ராமாயணம், மஹாபாரதம் முதலிய இதிஹாசங்கள் (இதி= இப்படி: ஹாசா= சொல்லப்பட்டது), பாகவதம் போன்ற புராணங்கள் (புராணம்= பழைய) முதலியன இந்துக்களின் சமய நூல்கள் எனவும் இதிஹாச நாயகர்களான ஸ்ரீராமர், ஸ்ரீ கிருஷ்ணர் முதலியோர் அவர்களின் பூசைக்குரிய கடவுள்களான தேவர்கள். அப்படி, சமயப்படி பார்த்தால், கோயிலை மையப்படுத்தியதே இந்திய மரபின் சாரம் எனத்தெரிகிறது.

கருத்தியலாக பார்த்தால், சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சை , உத்தர மீம்மாசை (வேதாந்தம்) என்பனஎட்டு (ஷட்) கருத்தியல்கள். (கருத்தியல்= தத்துவம், சித்தாந்தம், தர்சனம். தர்சனம் = கண்ணோட்டம், பார்வை). இவையே இந்திய கருத்தியல்கள். கடவுள் நம்பிக்கை, ஆன்மீகம் இவையே இக்கருத்தியல்களின் முக அடையாளங்கள். ஸ்ரீ சங்கராச்சாரியாரின் பிறப்புக்கு பின் இவை யாவும்   கலந்து ஒருமையானது. அதனால், அத்வைத வேதாந்தமே இந்திய மரபின் கருத்தியலான சாரம்.  (அத்வைதம்= இரண்டல்ல. த்வைதம்= இரண்டு. வேதம் = அறிவு; அந்தம்= முடிவு: வேதாந்தம்= வேதத்தின் கடைசி/முடிவு)..

இதனை கலாச்சாரப்படியாகவோ கலைப்படியாகவோ பார்த்தால்? ஒரு வகையில் அல்லது இன்னொரு வகையில், கோயிலுடன், பக்தியுடன் தொடர்புகொண்டுதான் படம், சிற்பம், சிற்பங்களை உருவாக்குதல், நாடக நடிப்பு, இலக்கியம், இசை, வாத்தியம் போன்ற இந்திய கலைகளும் உருவாகவும் வளரவும் செய்தது

அப்படியாக, நடைமுறையில் இருக்கும் பொது எண்ணப்படி கடவுள் நம்பிக்கையிலும் ஆன்மீகத்திலும் அடிப்படையானது இந்து மரபு, அதுவே இந்திய மரபு.

இந்தப் புரிதலில் இருந்து இயல்பாகவே உருவெடுக்கும் பிற புரிதல்கள் எவை எனப் பார்ப்போம்.

  1. இந்திய மரபு இந்துக்களுடையது மட்டுமே என்பதால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்களும் கிறித்தவர்களும் எல்லாரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. இவர்கள் வெளி நாட்டில் இருந்து வந்து இங்கு தாக்குதல் நடத்தி அடிமைப்படுத்தி மகத்தான இந்திய கலாச்சாரத்தை ஒன்றுமில்லாமலாக்கி அழிக்க முயன்றனர். அதன் ஒரு பகுதியாக இந்து கோயில்களை உடைத்தனர், இந்துக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்த ஆட்சியாளர்களின் வழிதோன்றல்களே இவர்கள்கையால், ஒன்று இவர்கள் தத்தமது மத நாடுகளுக்கு திரும்பி செல்லவேண்டும். அல்லது தாமாக இந்தியத்துவப்படுத்தி (இந்திய கலாச்சாரத்துடன் இரண்டற கலப்பது), அதாவது தமது சமய முறைகளையும் நம்பிக்கைகளையும் விடுத்து இந்த மகத்தான இந்து மரபின் தேசிய நீரோடையில் கரைந்திட வேண்டும். இது மட்டுமே, இவர்கள் இனி செய்ய வேண்டியதாக உள்ளது
  1. கடவுள் மறுப்பு வாதம், பகுத்தறிவு வாதம், பொருள் முதல் வாதம், வரலாற்று இயக்கவியல் பொருள் முதல் வாதம் போன்ற வெளி நாட்டில் இருந்து வந்த கருத்தியல்களை நம்புவோர்களுக்கு இந்திய மரபின் மீது உரிமை கொண்டாட எவ்வித தகுதியும் இல்லை. இவர்களது கருத்தியல்கள் ஆன்மீக நாடான இந்தியாவில் வேர்பிடிக்காது.  
  1. மத (சமய) சார்பின்மை இக்கூட்டத்தை சார்ந்த ஒரு வெளி நாட்டு சிந்தனையாகும். இந்தியாவின் தேசியம் என்பது இந்துத்துவம் ஆகையால் இங்கே மத சார்பின்மையினை நடைமுறைப்படுத்த இயலாது.

மேற்கூறிய நான்கு புரிதல்களில் முதலாவது வெகு ஆழத்தில் வேரூன்றியுள்ளதுஇந்து மத வாதிகள் மட்டுமல்ல, முஸ்லீம்கிறித்துவ சிறுபான்மை மத வாதிகளும் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் உட்பட ஊர் மக்களும் இக்கருத்தையே ஏறத்தாழ உள்வாங்கியுள்ளனர். இந்து மத வாதிகள் பெரிய மனிதர்கள் எனும் நினைப்பில் இந்த எண்ணத்தை உள்வாங்கி பெரும் அளவில் பிரச்சாரம் செய்கின்றனர். சிறுபான்மை மத வாதிகள் ஒரு வித குற்ற உணர்ச்சியுடன் இதனை ஏற்றுக்கொண்டு மனதளவில் இந்த இந்திய மரபில் இருந்து விலகி செயல்முறையில் இங்கு தங்களுக்கு பாதுகாப்பு போதாது என புகார் கூறவும் அதை பெறுவதற்கான போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். முற்போக்கு எண்ணம் கொண்டோர் உட்பட உள்ள மத சார்பின்மை வாதிகளில் மிகப்பெரும்பாலானோர் இந்த எண்ணத்தை ஏறத்தாழ ஏற்றுக்கொண்டுள்ளனர்இந்திய மரபை ஒட்டுமொத்தமாக மறுதலிக்க வேண்டியது இந்தியாவின் புத்தாக்கத்திற்கு இன்றியமையாதது என இவர்கள் எண்ணுகின்றனர்.

விளைவு? முதலாவது, இந்த எண்ணத்தில் இருந்து உருவாகும் பிற மூன்று எண்ணங்களும் ஆபத்தான முறையில் வளர்ந்து வருகின்றன.. இந்து மத வாதிகள் மட்டுமே அந்த எண்ணங்களை அழுத்தமாக ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்ப பணிகளில் கூட்டாக மூழ்கியுள்ளனர். ஆனால், மற்றவர்கள், அந்த பணிகளை எப்படி எதிர்கொள்வது எனத்தெரியாமல் திகைத்து தமக்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். மத வாதத்தை பிரச்சாரம் செய்து இதனை எதிர்கொள்ள சிறுபான்மை மத வாதிகள் முயலுகின்றனர். ஆனால், பிறர், மனித நேயத்தின், அறிவியல் பூர்வமான சோசலிஸ்ட் கருத்தியலின் அடிப்படையில் இதனை எதிர்கொள்ள முடியுமா என ஆராய்கின்றனர்

How the British convinced Hindus that Muslims were despots and religious invaders

ஆங்கிலேய ஆதிக்கத்தில் இந்தியா இருந்த காலத்தில், தமது ஆதிக்கத்திற்கு நியாயம் கற்பிக்க நடத்திய முயற்சிகளில் ஒன்று, இந்திய வரலாற்றை அசிங்கமாக சித்தரித்தனர். அவர்கள் நடைமுறைப்படுத்திய கல்வியின் பாடப்பகுதியில் இணைத்தனர். பண்டைக் காலத்தினை இந்து காலம் எனவும் மத்திய காலத்தினை முஸ்லீம் காலம் எனவும் புதிய காலத்தினை புதுக்காலம் (கிறித்துவ காலம் என அழைக்கவில்லை என்பதை கவனிக்கவும்) எனவும்  பகுத்தனர். இது மிக இயல்பானது எனவும் நம்பச்செய்தனர்இளம் உள்ளங்களில்  மத ரீதியான பிரிவினையும், வெளி நாட்டினரான முஸ்லீம்கள்இந்து இந்தியாவை ஆக்கிரமிப்பு செய்து முஸ்லீம்மயமாக்கினர் எனும் கருத்தையும் விதைத்தனர். இதன் வாயிலாக ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மத காழ்ப்புணர்ச்சியை மிக எளிதில் ஊட்டி வலுப்படுத்திட இயன்றதுபல கடவுள் வழிபாடு, சிலை வழிபாடு, தீண்டாமை போன்ற மூட நம்பிக்கைகளிலும் மூட பழக்க வழக்கங்களிலும் மூழ்கியிருந்த    இந்தியர்களிடம் அறிவியலின், புது தொழில்நுட்பத்தின் துணையுடன், பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டு வந்தனர். இதைத்  தாங்களே  செய்ததாகவும் அதற்கான தகுதியும் தங்களுக்கே உண்டு எனவும்  மக்களை நம்பச்செய்தனர். இந்த பிரச்சாரமானது பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் மீது பற்றுடைய மாக்ஸ் முல்லர் போன்ற வெளி நாட்டு ஆய்வாளர்கள் இந்திய மரபை ஆராய்ந்து எட்டிய முடிவுகளும் இக்கருத்துகளில் இருந்து வேறுபடவில்லை. காழ்ப்புக்கு மாறாக ஒரு வித பக்தி இவர்களுக்கு இந்திய மரபின் மீது இருந்தது. இவர்களின் ஆய்வுத்தடங்களை தழுவிய ராதாகிருஷ்ணன், மஜூம்தார் போன்ற இந்திய அறிஞர்களும் இதே முடிவுக்கு வந்தனர். நாகரீகமில்லாத மடையர்களாக காட்டுத்தனமாக மேற்கத்தியர் (ஐரோப்பாவினர்) வாழ்ந்த காலத்திலேயே இந்தியாவில் முனிவர்கள் ஆன்மீக சமூகத்தைக் கட்டி எழுப்பினர் எனவும் நவீன காலத்தில் மேற்கத்தியர்கள் பொருளாதார சுகங்களில் மூழ்கித் திளைக்கின்ற போதும் இந்த தொன்மையான இந்திய மரபு தங்களுக்கு உந்துதலாக இருப்பதாக இவர்கள் தத்தமது நூல்களில் பறைசாற்றுகின்றனர். நாட்டுப் பற்று மிக்க இச்செயல்களைப் போற்றும்போதே, ஒரு முரண்பாட்டைப் பார்க்கிறோம். மேற்கத்திய அறிஞர்களில் ஒரு சாரார் இங்கு முழுதும் இருட்டு என்ற போது இந்திய அறிஞர்கள் இங்கு முழுதும் ஒளி என்றனர். இவை இரண்டும் ஆதாரபூர்மான ஆய்வுகளின்படியானவை அல்ல என்பதே உண்மை

Great People Archives - Page 4 of 4 - HindGrapha
Madan Mohan Malaviya

இந்திய தேசிய விடுதலை இயக்கத் தலைவர்களான மதன் மோகன் மாளவியா, பால கங்காதர திலகர் போன்றோரும் இதே அணுகுமுறை கொண்டிருந்தனர். அடிப்படையில் மகாத்மா காந்தியடிகளின் கண்ணோட்டமும் வேறுபட்டதல்ல. ஆனால், இவர் முன்னர் கூறிய இரண்டாவது புரிதலுக்கெதிராக இந்துமுஸ்லீம் ஒருமைப்பாட்டுக்காக போராடினார். ஜவகர்லால் நேரு முன்னர் கூறிய முதல் மூன்று புரிதல்களையும்  எதிர்க்கவும் மத சார்பின்மையின் ஒரு பகுதியை ஏற்கவும் செய்தார்

இவர்களின் தொண்டர்களே விடுதலைக்குப் பின் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தனர். அதிகாரபூர்வமான தலைமை நேருவுடையது  என்பதால் நடைமுறையில் இருந்த புரிதல்களை உடைத்தெறிய முடியவில்லை. பாடத்திட்டங்களிலும் அரசு ஊடகங்களிலும் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படவில்லை.

புது அறிவியல் முறைப்படி வரலாற்று ஆய்வை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் ஆய்வின் முன்னணியில் இருந்தாலும் இதே போன்று சமூககருத்தியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என சொல்வதற்கில்லை; முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். இந்திய மரபு குறித்த பொதுப்புரிதலில் ஒரு குறிப்பிடும்படியான மாற்றத்தை ஏற்படுத்திட இவர்களால் இயலவில்லை

இதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் உள்ளதுஎல்லா வகையான மதவாதிகளும் மத வெறியர்களும் (இதில் பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடில்லை), மேல்தட்டு மக்களின் நேரடியான, மறைமுகமான துணையுடன் ஒன்றுபட்ட தாக்குதலை நடத்துகிறார்கள். இதை நாம் கவனிக்காமல் விட்டுவிட முடியாது

இந்திய மரபு குறித்த ஆதாரபூர்வமான ஆய்வுகளின்படி மேற்கூறிய புரிதல்களை உடைத்து உண்மையான புரிதல்களை உருவாக்குவது அவசியமாகும். இதனால் மட்டுமே, இந்தியாவில் அதன் உண்மையான பொருளில் மதச்சார்பின்மையினை நடைமுறைப்படுத்த முடியும்

இந்த ஆய்வுகளில் நமது புரிதல்களில் உள்ள பொய்மைகளும் முரண்பாடுகளும் அரைகுறை உண்மைகளும் நம்மை திகைப்பில் ஆழ்த்தி மேலெழுந்து வருவதைக் காணலாம்

இந்து மரபே இந்திய மரபு எனும் புரிதலை ஆராய்வோம்

நூற்றாண்டுகளாக இந்தியாவின் மேல்தட்டு மக்களாக இருந்த பிராமணர்கள் பிற மேல் சாதிக்காரர்களுடன் இணைந்து பரப்பிக் கொண்டிருந்த, வளர்த்த மரபைத்தான் இந்து மரபு, இந்திய மரபு எனும் பெயரில் திணிக்கிறார்கள்

இந்து மதம் என்பதால் நாம் புரிந்து கொள்வது என்ன? முஸ்லீம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் முதலான சிறுபான்மையினரைத்  தவிர்த்து அனைவரும் இந்துக்களே. இந்த இந்த இயல்புகளைக் கொண்டவர்கள் இந்துக்கள் என சொல்லமுடியாது. ஏன் எனில், பிற மதங்களைப் போல் கண்டிப்பான விதிகளும் முறைகளும் இந்து மதத்தில் இல்லை. ஆனால், இதெல்லாம் இந்து மதத்தில் உள்ள பல்வேறு சாதியினருக்கும் அவற்றின் உட்பிரிவுகளுக்கும் உள்ளன. கையால், இந்து மதத்தில் இருந்து யாரையும் வெளியேற்ற முடியாது. சாதியில் இருந்து வெளியேற்றுவார்கள்

இந்து மதத்தின் அடிப்படை. இந்து மதம் ...

காஃபிர், ஜெண்ரைட்டல் (கடவுள் நம்பிக்கை அற்றோர்) போன்ற,மத நம்பிக்கையில் இருந்து விலகியோரைச் சுட்டிக்காட்டும் வார்த்தைகளை இந்து சமயத்தில் காண முடியாது

என் சாதியின் மானம் போய்விட்டதே. இன்னும் நான் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?’ எனத்தான் புலம்புவாரே தவிர, ‘என் மதத்தின் மானம் போய் விட்டதேஎன கொதிக்க மாட்டார். ஆகையால், இந்தியாவின் மரபானது இந்து மரபு அல்ல.

இந்திரன், அக்னி (தீ), வருணன் (மேகம்), வாயுமருத்து (காற்று), உஷஸ் (அதிகாலை), எமன், பூஷாவ், சவிதாவ் போன்ற கடவுள்கள் இந்துக்கடவுள்களாக வழிபடப்படுவதில்லை.வேள்விகளில் மட்டுமே இவர்கள் போற்றப்படுகிறார்கள். இந்துக்கடவுள்களான ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், அம்மன், ஐயப்பன் முதலான பெயர்களை வேதங்களிலும் காண முடியாது. கோயில், சிலை வழிபாடு போன்றவையும் வேதங்களிலும் உப நிஷத்துகளிலும் இல்லை. வேத கால ஆரியர்களின் முக்கிய வழக்கமான வேள்வி என்பதை இந்து மதத்தின் ஒரு பகுதியாகக் காணவும் முடியாது. இவ்வாறு வேத கால மதம் (வைதீக சமயம்) என்பது இந்து மதத்தின் ஒரு பகுதியே, ஆனாலும் இந்து மதத்தில் இருந்து பெரிதும் வேறுபட்டது. அப்படி என்றால், இந்துக்களின் மத நூல்களாக கருதப்படும் வேதங்களையும் உபநிஷத்துகளையும் எப்படி எடுத்துக்கொள்வது?.

இதிகாச கதாபாத்திரங்களான ஸ்ரீ ராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் கடவுள்களாக கோயில்களில் வணங்கப்படுவது மிகவும் காலந்தாழ்த்தியே. ( இன்னும் நமது பெரும்பாலான பழைய கோயில்களில் இவர்களின் சிலைகளை பார்க்க முடியாது). விஷ்ணுவை வணங்கும் வைணவர்களும் சிவனை வணங்கும் சைவர்களும் இந்துக்களே. இருந்தாலும், இவர்கள் நெடுங்காலம் எதிரிகளாக இருந்தனர். பண்டைய காலங்களில் வைணவசைவ சண்டைகள் வாடிக்கையாக இருந்தன. பத்துப் பிறவி (தசாவதாரம்) வாயிலாக விஷ்ணுவை மேன்மைப்படுத்திட உயர்சாதியினரான வைணவர்கள் முயன்றபோது; சிவனின் மனைவி, குழந்தைகள் அவர்களின் தொண்டர்களான பூதங்கள் போன்றோர்களையும் கடவுள்களாக்கி கீழ்ச்சாதியினரான சைவர்கள் திருப்பி அடித்தனர். இது இவர்களின் விரோதத்தின் ஆழத்தை காட்டுகிறது. கோயில் வழிபாட்டில் நாட்டம் இல்லாதவர்களாகவோ, அதை எதிர்ப்பவர்களாகவோ ஆக அத்வைத அறிவுபெற்ற பக்தர்கள் (த்வைதிகள்) உள்ளனர்.

எட்டு கருத்தியல்களும் (ஷட் தர்சனா) முழுமையாக கடவுள் நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டவையல்ல. சாங்கியம், பூர்வ மீமாசை போன்றவை கடவுள் இல்லை என மறுப்பவை. நியாயம், வைசேஷிகம் போன்றவை முதலில் நாத்திகம் பேசினாலும் பின்னர் அந்த கருத்தியல்களின் அடிப்படைக்கே நேர்மறையாக கடவுளை ஏற்றுக்கொண்டவை.. வேதாந்தத்தின் ஒரு பகுதியாக உள்ள அத்வைதமோ தன் கருப்பொருளில் இந்த உலகையும் கடவுளையும் மறுக்கிறது. ஆன்மிகம் எனில் அதை முழுமையாக ஏற்பது வேதாந்தம் மட்டுமே.

இவை அன்றி முற்றிலும் இந்தியாவில் உருவான சார்வாகம், லோகாயதம் போன்ற நாத்திகபொருள் முதல் வாத கருத்தியல்களும்; கடவுளை மறுக்கும் பவுத்தசமண கருத்தியல்களும்  இந்திய கருத்தியல்களே.

பழைமையான இந்திய கலாச்சாரப்படியே தருமம் (பிறப்பால் எழும் குலப்பணி செய்தல்), அர்த்தம் (பொருள் ஈட்டுதல்), காமம்(ஆசை, இன்பம் தேடுதல்), மோக்ஷம் (வாழ்வில் இருந்து விடுதலை பெறுதல்; சாவு) நான்கு வாழ்வியல் உண்மைகளை (சதுர் வித புருஷார்த்தம்) அடிப்படையாகக் கொண்டதே இந்திய வாழ்வியல். இதில் முதல் மூன்றும் இந்த உலகை (இஹம்= இகம்) குறிப்பது. கடைசியாக வரும் மோக்ஷம் (விடுதலை) மட்டுமே அடுத்த உலகை (பரம், பரலோகம்) குறிப்பதாகும். பிறப்பு முதல் இறப்பு வரை இந்த உலகில் யார் யார் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை கவுதமர், ஆபத்ஸ்தம்பர், மனு, யாஞ்யவல்க்கியர் போன்றோர் தங்களது அறநெறி நினைவு நூல்கள் விதிகளாக வகுத்துள்ளனர்சாணக்கியரின் (கவுடில்யர்) ‘அர்த்த சாஸ்திரம்’; காமந்தகரின்நீதி சாரமம்’  போன்ற பொருளாதாரம் குறித்த நூல்கள் செல்வத்தை ஈட்டும் வழிகளையும் அரசியல் சூழ்ச்சிகளையும்  விளக்குகின்றனவாத்ஸ்யாயனர், கொக்கோகர் போன்றோரின்உடலியல் இன்ப நூல்கள்’ (காம சாஸ்த்திரா) முற்றாக இன்பம் பெறும் வழிகளை மிக விரிவாக எடுத்துரைப்பவையாகும். இந்த மூன்று வகைப்படும் நூல்கள் இந்த உலக வாழ்க்கையின் அடிப்படையே ஒரு பெரும் அளவிற்கு பொருள்சார்ந்ததே. நான்காவதும் கடைசியுமான, மோக்ஷம் குறித்த வேதாந்த கருத்தியலை மட்டுமே ஆன்மீகமானது எனக்கூறலாம். இதன் அடிப்படையில், இந்திய மரபில் முக்கால் வாசி பொருள்சார்ந்தது எனவும் கால்வாசி மட்டுமே ஆன்மீகம்சார்ந்தது எனவும் கூறினால் மறுக்க முடியாது; அதுவே உண்மை

அப்படி எனில்இந்தியாவின் மரபில் ஆன்மீகம் சார்ந்ததைப் போல் பொருள் சார்ந்த; கடவுள் நம்பிக்கை போல் கடவுள் மறுப்பும் கொண்ட பகுதிளும் உள்ளன என நிரூபணம் ஆகிறது. இந்த முரண்பட்ட கருத்தியல்களின் மோதல்கள் (வாதபிரதி வாதம்) வாயிலாகவே வளர்ந்தோங்கியது இந்திய மரபு என்பதே உண்மை

கோயில்களை மட்டும் சார்ந்து அல்ல; முஸ்லீம் பள்ளி வாசல்கள், கிறித்தவ கோயில்கள், பவுத்தசமணர்களின் விஹார்கள் (கோயில்கள்), சீக்கியர்களின் குருத்வாரக்கள் போன்ற வழிபாட்டு இடங்களிலும் படம், சிற்பக் கலைகள் வளர்ந்துள்ளன.   இவை அன்றி, கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட கீழ்ச்சாதியினர், முஸ்லீம்கள்  பிறர் என இருக்கும் தமது வேலைகளை ஒட்டி மக்கள் கலைகளையும் இலக்கியங்களையும் கொண்டாட்டங்களையும் வளர்த்து இருக்கிறார்கள். இவை எல்லாம் இந்திய மரபின் பகுதிகளே. ராமஜென்ம பூமி போலவே பாப்ரி மஸ்ஜிதும் இந்திய மரபின் ஒரு பகுதியே. பழனி தண்டாயுத பாணி கோயில் போலவே நாகூர் தர்காவும் வேளாங்கண்ணி மாதா கோயிலும் இந்திய மரபின் பகுதிகளே என புரிந்துகொள்ளலாம். இன்று இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களும் கிறித்தவர்களும் வெளி நாட்டு மரபை சார்ந்தவர்கள் எனக்கூறினால் இன்று இங்கு இருக்கும் இந்துக்களும், குறிப்பாக பிராமணர்களை போன்ற மேல் சாதியினரும் வெளி நாட்டில் இருந்து வந்த வேதகால ஆரியர்களின்  வழிவந்தவர்களே என்பதையும் கூறியாக வேண்டும்

அதாவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்த ஆதி குடிகள் முதல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்  சிந்து சமவெளி நாகரீகத்தை கட்டி எழுப்பிய திராவிடர்கள், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியாவில் இருந்து இங்கு குடிபெயர்ந்து வந்த வேத கால ஆரியர்கள், பிற்காலத்தில் பல காலங்களாக  இந்தியாவுக்கு வந்த சகர், ஹூணர் முதலியோர், பவுத்தசமண சமயங்களை சார்ந்தோர், மத்திய காலத்தில் இங்கு வந்து தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தை நடத்திய முஸ்லீம்கள், மிக அண்மையில் இங்கு வந்த மேற்கத்தியர்இவர்கள் அனைவரும் இந்தியாவின் மரபின் வளர்ச்சி பரிணாமங்களில் பல வகையில் பங்களிப்பை அளித்துள்ளனர். அதனாலேயே, ஒரு கலப்பு கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட மரபே இது. இதனை ஒரு விசாலமான அடிப்படையில் பார்க்கும்போது மட்டுமே, பன்மையில் ஒருமை (வேற்றுமையில் ஒற்றுமை) என்பதன் பொருள் விளங்கும்

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத ...
சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல

மத நம்பிக்கையினையும் கடவுள் நம்பிக்கையினையும் தனி நபர் மட்டத்தில் ஒதுக்கிவைப்பது; இவற்றை பொது காரியங்களில், அரசியல்கல்வி போன்ற விவகாரங்களில் தலையிடாமல் காத்துக் கொள்வதுஇந்தப்  பொருளில்மத சார்பின்மையினை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதன் வாயிலாகவே, வெவ்வேறு மதங்களில் நம்பிக்கையுடையோரும் எந்த மதத்தையும் நம்பாதோரும் இருக்கின்ற இந்தியா போன்ற ஒரு நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்திட இயலும். இவ்வழியாக மட்டுமே வறுமை, கல்லாமை, வேலையின்மை முதலான பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியில் அனைத்து பகுதி மக்களையும் பங்கேற்கச் செய்து  அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் இயலும்

இதற்கு தடையாக, மதவெறி சக்திகள் ஃபாசிஸ முறையில் திணிக்கிற இந்திய மரபு குறித்த புரிதல்களில் இருந்து மக்களை விடுவிக்க வேண்டும். இன்றைய இந்து மதத்தில் இருந்து  சங்க பரிவார் அமைப்புகள் மிகுந்த பிரச்சாரத்துடன் வெளியிடும்  ‘இந்துத்துவாவை பிரித்துப் புரிந்து கொள்ளுவது என்பது இதற்கு மிகவும்  துணை புரியும்

பகுதி-3

இந்து மதம்

இன்று உலகில் உள்ள மதங்களில் மிகவும் தொன்மை வாய்ந்ததுஇந்து மதம். இந்தியாவில் பெரும்பகுதி மக்கள் பிறந்து வளர்ந்த மதம். ஆனால், நடைமுறையில் உள்ள பிற  மதங்களில் இருந்து பெரிதும் வேறுபட்டது.  

முதலாவது, இந்த மதத்திற்கு இருப்பதாக நாம் நினைக்கும் தொன்மை இதன் பெயருக்கு இல்லை. இந்துகள் தமது மரபின் பகுதி என உரிமை கொண்டாடுகிற ஹிருக் வேதம் முதலான வேதங்களில், ராமாயணம்மகாபாரதம் போன்ற இதிகாசங்களில், பாகவதம் போன்ற புராணங்களில், மனு ஸ்மிர்தி போன்ற நீதி நெறி நூல்களில், பிற சம்ஸ்கிருத நூல்களில்இவற்றில் எதிலுமே இந்து (ஹிந்து) எனும் ஒரு சொல் கூட கிடையாது

சுவாமி விவேகானந்தர் இது பற்றிக் கூறுவதைக் கவனிப்போம்.

வேதத்தில் சிந்து ஆறுக்கு சிந்து எனவும் இந்து எனவும் இருபெயர்கள் காணப்படுகின்றன. பாரசீகத்தாரின் நாக்கில் அது ஹிந்து என ஆனது. கிரேக்கர்களுக்கு அது இந்தியஸ். அன்று முதல் இந்தியா, இந்தியன் எனவெல்லாம் ஆனது. இஸ்லாம் மதம் தோன்றிய போது இந்து எனும் சொல்லுக்கு கறுப்பன் (வெறுக்கத்தக்கவன்) என பொருள்பட்டது. இன்றைக்கு (ஆங்கிலேய ஆட்சியில்) ப்படி இந்து சுதேசியானது அது போல் ( விவேகானந்த சாகித்ய சர்வஸ்வம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம், புற நாட்டுகரா, திருச்சூர், தொகுதி -7, பக்.371).

பண்டைக்காலத்தில் இந்து எனும் சொல் ஒரு நாட்டை, அதில் குடியிருக்கும் மக்களைக் குறிப்பதாக இருந்தது. பின்பு 10-ஆம் நூற்றாண்டை ஒட்டி அது மதத்தைக் குறிப்பதானது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இச்சொல் ஒரு மதத்தை மட்டும் குறிக்கும் என  பரவலாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

இஸ்லாம் மதம் போன்றதோ கிறித்தவ மதம் போன்றதோ அல்ல இந்து மதம். அதற்கு ஒரு ஒருமித்த இயல்பு இருந்ததில்லை. அந்த மதத்தை சார்ந்த அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நிறுவனரோ, தூதுவரோ, அவர்கள் எல்லோரும் அடிப்படையாக்கும் ஒரு மத நூலோ, அவர்கள் அனைவரும்ஒன்று போல் பின்பற்றும்  வழக்கங்களோ (ஆச்சாரங்கள்) செயல்முறைகளோ (அனுஷ்டானங்கள்)   இல்லை

முகம்மது நபி, குர் ஆன், தொழுகை போன்றவை இஸ்லாம் மதத்திற்கும் கிறிஸ்து, பைபிள், குர்பானா (தொழுகை) போன்றவை கிறித்தவ மதத்திற்கும் இருப்பதைப் போன்று வேதகால முனிவர்கள், சங்கராச்சாரியர்கள், விவேகானந்தர் போன்றவர்கள் இந்துக்களில் சிலருக்கு ஆசான்களாக உள்ளனர்; எல்லோருக்கும் இல்லை.

Do Christians And Muslims Worship The Same God? : NPR

ஆதி குடிகளின் கலாச்சாரத்தின் பல கூறுகளும் இந்து சமயத்தில் இன்றளவும் உள்ளன என்பதால் அதன் நிறுவனை ஆதி குடிகளிலும் தேடலாம். வேத கால பிராமண மதமும் பழைமையான இந்து மதமும் புதுக்காலத்தைய விவேகானந்தர், நாராயண குரு, அய்யா வைகுண்டர் ஆகியோரது மதமும் இந்து சமயத்தின் கூறுகளே.

இவற்றில் நம்பிக்கை, சடங்கு (ஆச்சாரம்), சம்பிரதாயம் முதலியவற்றில் ஏராளமான முரன்பாடுகள் உள்ளன. ஆதி குடிகளின் கலாச்சாரத்தில் மர வழிபாடு (விருக்ஷ ஆராதனை), பாம்பு வழிபாடு (ஸர்ப்ப ஆராதனை) முதலியவற்றைக் காணலாம்

வேத கால மதத்தின் சிறப்பியல்புகள் என்பனநால் வகை நிற நிலை குலத்தொழிலும்’ (சதுர் வர்ணாசிரம தர்மம் = சாதுர் வர்ண்யம்) வேள்வி கலாச்சாரமும்இதன் ஒரு பகுதியாக இருக்ககூடிய உபனிஷத்துகளுள் முக்கியமானப்ரஹ்ம்ம தரிசனம்’ (உலக கண்ணோட்டம்) என்பது எல்லோரையும் ஒரே  நிறையாக (ஸர்வ சமத்வம்) பார்க்கக்கூடும் கருத்தியலாகும். சிலை வழிபாடோ, கோயில் கட்டி வணங்கும் முறையோ வேத கால மதத்தில் இல்லை

ஆனால், பழைமையான அல்லது மத்திய கால இந்து சமயத்தில் சாதி முறை, நிலச்சுவாந்தார் முறை, ஜமீன்அரச ஆதிக்கம், கோயிலை மையப்படுத்திய கலாச்சாரம் போன்றவற்றைக் காணலாம்

அந்தக் காலத்தில் வளர்ந்து வந்த கருத்தியல்களில்  பொருள் முதல் வாதம், முரண்பாட்டு (இயக்கவியல்) வாதம், முழுமை வாதம் முதலியன விளக்கப்பட்டுள்ளன

சைவம், வைணவம், சாக்தேயம் என கடவுள் நம்பிக்கை கூற்றுகளில் மூவகை உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று முரண்பட்டவை என்பது யாவரும் அறிந்ததே

மேல் சாதி கோயில் கலாச்சாரத்திற்கு இணையாக   கீழ் சாதி என சொல்லப்படுவோரின் சிறு, சிறு வழிபாட்டு இடங்கள் இருந்தன. இவை ஒரு பொதுமக்கள் கலாச்சாரத்தை உருவாக்கின. கோட்டம், காவு, பள்ளி அறை முதலிய பெயர்களில் இவை அறியப்படுகின்றன

வைகுண்ட சாமி, நாராயண குரு, விவேகானந்தர் ஆகியோரின் இந்து மதம் தொடர்பான கருத்துகள் மதங்களின் சமத்துவத்தை ஏற்கின்றன

வேதாந்தமும் இந்து சமயமும் ஒன்றே தான்  என பல பொழுதிலும் கூறுவார் விவேகானந்தர். அவரின் வேதாந்தம் குறித்த கருத்தை பார்ப்போம்.

வேதாந்தம் என்பது ஒரு விசாலமான பெருங்கடல். அதில் பெரிய போர்க்கப்பலும் ஒரு சிறு கட்டுமரமும் அருகருகே  நிற்கலாம். அதனால், ஒரு பெரும் யோகிக்கு சிலை வழிபாடு செய்வோரிடமும் கடவுள் மறுப்போரிடமும் வாழ்ந்திடலாம். அது மட்டுமல்ல, வேதாந்தத்தில் ஓர் இந்துவும் முகம்மதியரும் பாரசீகரும் அனைவரும் ஒன்றே. அனைவரும் அனைத்து வல்லமையும் கொண்ட கடவுளின் அருமைக் குழந்தைகள்” (விவேகானந்த சாகித்ய சர்வஸ்வம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம், புற நாட்டுகரா, திருச்சூர், தொகுதி -4, பக்.540).

கடவுள் தொடர்பாக மூன்று கருத்தோடைகள் இந்து சமயத்தில் உள்ளன. ஒரு கடவுள் நம்பிக்கை, பல கடவுள் நம்பிக்கை, கடவுள் மறுப்பு. இதில் ஒரு கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு கடவுள் எங்கும் இருப்பர்அனைத்தும் அறிந்தவர்எல்லாம் வல்லவர். இவர்களுக்கு கோயில்கள் மீது எதிர்ப்பும் கோயில்களை கண்டுகொள்ளாத போக்கும் உள்ளது

சிலைகளை  வணங்குபவர்களான கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு கோயில் வேண்டும். நாளும் கோயிலுக்கு போக வேண்டும் என்பது கட்டாயமில்லை. பண்டிகை நாட்களில் மட்டும் கோயிலுக்கு செல்வோரே  மிகப்பெரும்பான்மையோர்.  

கபில முனிவர், கணாத முனிவர், பிர்ஹஸ்பதி முனிவர் ஆகியோர் சாங்கியம், வைசேஷிகம், லோகாயதம் முதலிய கருத்தியல்கள் வாயிலாக பொருள் முதல் வாதத்தை பிரச்சாரம் செய்த கடவுள் மறுப்பாளர்களேஇன்றளவும் இந்து மதத்தில் இந்த பன்மை தொடர்கிறது. இந்த முழுமையான பன்மையே இந்து சமயத்தின் சாரம் என் அறிவிக்கிறார், விவேகானந்தர்.

அறிவியலின் கண்டுபிடிப்புகள் எதன் எதிரொலியாக தோன்றுகிறதோ, வேதாந்த கருத்தியலின் அந்த ஆன்மீக உன்னதம் முதல் சிலை வழிபாடு வாயிலாக, அதன் பல வகையான பழங்கதைகள் உட்பட மிக ஈனமான கருத்துகள்பவுத்தர்களின் ………………………….. கருத்தியல், சமணர்களின் கடவுள் மறுப்பு கருத்தியல் வரை ஒவ்வொன்றுக்கும் எல்லாவற்றிக்கும் இந்துவின் தர்மத்தில் இடமுள்ளது.” 

(விவேகானந்த சாகித்ய சர்வஸ்வம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம், புற நாட்டுகரா, திருச்சூர், தொகுதி -4, பக்.123)

பவுத்தசமண சமயங்கள் படிப்படியாக செயலற்றுப்போய் இந்து சமயத்தின் ஒரு பகுதியாகின என்பது விவேகானந்தரின் கருத்து

ஒரு மதம் எனும் தம் கருத்தை விளக்கும்போது ஸ்ரீ நாரயண குரு, பல மதங்களின் தொகுப்பே இந்து மதம் எனக்கூறியது கவனிக்கத்தக்கதுவேத கால மதம், பழைய மதம், சாங்கிய மதம், வைசேஷிக மதம், மீமாம்ஸ மதம், துவைத மதம், அத்வைத மதம், விசிஷ்ட அத்வைத மதம், சைவ மதம், சாக்தேய மதம், வைணவ மதம் போல் நேரடியாக வெவ்வேறாக உள்ள மதங்கள் அனைத்திற்குமாக  இந்து மதம் என பொதுப்பெயரிட்டு அழைப்பது அறிவீனம் அல்ல எனில்……” (எம். கே. சானு, நாராயண குரு சாமிநேஷனல் புக் ஸ்டால், கோட்டயம், பக். 473)

பிரஹ்மானந்த சாமி சிவயோகியும் வாக்படானந்த குரு தேவரும்  சிலை வழிபாடு என்பது இந்து சமயத்தின் மூட பழக்கம் என பிரச்சாரம் செய்தனர் விவேகானந்தரும் நாராயண குருவும் சிவ யோகியும் வாக்படானந்தரும் சாதி முறையை எதிர்த்தனர். சிலை வழிப்பாட்டையும் சாதி முறையினையும் ஆதரிக்கும் இந்து சமயத்தில் இருக்கிறார்கள். இப்படியாக, வழக்கத்தில், சிந்தனையில், நம்பிக்கையில் வேற்றுமை நடைமுறையில் உள்ளது

வேற்றுமையில் ஒற்றுமை எனும் விளக்கத்திற்கு உரிய, மத சார்பற்றது என போற்றக்கூடிய ஒரு  நிகழ்வு தான் இந்து மதம். இந்தியாவில் மிகப்பெரும்பான்மையான மக்கள் இந்த விசாலமான இந்து சமயத்தில் பிறந்து வளர்ந்தவர்களே. முஸ்லீம்கிறித்துவம் போன்ற சமயங்களுடன் இணைந்திருப்பதில் இந்த மதம் எப்போதும் முனைப்புடனே உள்ளது.

இந்துத்துவம் மேற்கொள்ளும் ...

ஆனால், இந்துத்துவம் என்பது மேற்கூறியவற்றில் இருந்து மாறுபட்டது இந்து மதத்தின் வேற்றுமைகளையும் விசித்திரங்களையும் பிற சமயத்தாருடன் கலந்து வாழும் போக்கினையும் ஏற்றுக்கொள்ளாத, சாராம்சத்தில் இந்து மத விரோதமானது இந்த இந்துத்துவம். இது மத அடிப்படையிலான நாடு எனும் கருத்தை தூக்கிப் பிடிக்கிறது. சவர்க்கரின்இந்துத்துவாஎனும் நூல் இக்கருத்தை விளக்குகிறது. இந்தியா ஒரு இந்து நாடாக இருந்தது, இருக்கவேண்டும் என்பதில் அவர்கள் கண்டிப்புடன் உள்ளனர். ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் (ஆர். எஸ். எஸ்) அமைப்பின் தத்துவ ஆசான் மாதவ சதாசிவ கோல்வால்கரின்சிந்தனை ஓடை’ (bunch of thoughts) எனும்  நூலின் பதினாறாவது பகுதியின் தலைப்புஉள் நாட்டு அச்சுறுத்தல்கள். இதில் இந்து நாடு எனும் கருத்தை மிக அழகாக விவரிக்கிறார். முஸ்லீம்கள், கிறித்தவர்கள், கம்யூனிஸ்ட்டுகள் முதலியானோர் தான் இவரது கண்ணோட்டத்தில் இந்தியா எதிர்கொள்ளும்உள் நாட்டு அச்சுறுத்தல்கள்’. அவரது வார்த்தைக்ளை பார்ப்போம்.

இந்த சிறுபான்மைப் பிரச்சனை என்பது முஸ்லீம்களிடம் மட்டுமல்ல, இந்துக்களிடமும் உள்ளது. எடுத்துக்காட்டாக, சமணர்கள் உள்ளனர். டாக்டர் அம்பேத்கரின் தொண்டர்களாக புத்த மதம் ஏற்றுக்கொண்டு இன்றைக்கு தாங்கள் வேறு என்று வாதிடும் பட்டியலினத்தவர்கள் உள்ளனர். சிறுபான்மையினருக்கு இன்றைக்கு நமது நாட்டில் சில குறிப்பிட்ட சிறப்புச்சலுகைகள் உள்ளன. இன்று எல்லோரும் தாங்கள்சிறு பான்மையினர்என்பதை நிரூபணம் செய்ய முயற்சி செய்வதும் சலுகைகள் பெற உரிமை கொண்டாடவும் செய்கின்றனர். இது நாட்டை சிறு சிறு துண்டாக்குகிறது. அது நம் அழிவிற்கான வழி கோலும்.” ( சிந்தனை ஓடை).

இதன் பொருள், இந்துத்துவா முன்மொழியும் இந்து நாடு என்பது செல்வந்தர்களான மேல் சாதி ஆதிக்க நலன்களை காப்பதற்கே. .இது செல்வந்தர்களான முஸ்லீம்களின், கிறித்தவர்களின் நலன்களுக்கு எதிரானதாக  இருக்காது. அதாவது செல்வந்தர்களின் நலனைக் காப்பதே இந்துத்துவா கூட்டத்தின் நோக்கம். இதற்கு, இந்து சமயத்தைச் சார்ந்த கடவுள் நம்பிக்கையாளர்களையும் பயன்படுத்துகின்றனர். பிற சமய வெறுப்பின், கீழ் சாதி வெறுப்பின் அடிப்படையிலானது இந்த இந்துத்துவா.

கோயிலைக் கட்டுவதை விட (பள்ளி வாசலைஇடித்து கோயில் கட்டுவதில் தான் அவர்களுக்கு விருப்பம். இதற்கு இவர்கள் வரலாற்றை திரிப்பார்கள். கோயில்கள் தாக்கப்பட்டது தொடர்பான அரைகுறை உண்மைகளை, பொய்களை கதைகளாக பிரச்சாரம் செய்வார்கள். கோயில்கள் மீதான தாக்குதல்கள், கட்டாய மத மாற்றம், மாட்டு கசாப்பு (கோ வதை) தொடர்பான அரைகுறை உண்மைகளை, பொய்களை கதைகளாக பிரச்சாரம் செய்வார்கள்

முஸ்லீம் அரசர்கள் மட்டுமல்ல இந்து அரசர்களும் கோயில்களை தாக்கியதுண்டு, கொள்ளை அடித்ததுண்டு. (மராட்டிய மன்னன் சிவாஜியும் இதை செய்துள்ளார்.) பொருளாதாரஅரசியல் காரணங்களாலேயே இவை தாக்குதல்களுக்கு :ள்ளாகின. மத காரணங்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள்  மிக துச்சமே.

பசு கசாப்பை தடைசெய்யவேண்டும் எனக் கோருவதே முஸ்லீம்கிறித்தவர்கள் மீது வெறுப்பைப் பரவிடச் செய்யவே. உண்மையில், வேதகால பிராமணர்கள் உள்ளிட்டவர்கள் மாட்டிறைச்சியும் சாப்பிட்டனர். இன்றைக்கு அஸ்ஸாம், காஷ்மீர் பிராமணர்களும் இதை உண்ணுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில்  செலவு குறைவான உணவு என்னும் வகையில் மாட்டிறைச்சியை பெரும்பாலானோர் உண்ணுகின்றனர்

இந்து மதத்தில் டை முறையில் இருந்த மிகக்கொடூரமான மேல் சாதிக்காரர்களின் தாக்குதல்களே மத மாற்றத்திற்கு தலையான காரணமாகும். கட்டாயப்படுத்தி என்பதை விட அது தானாக  நடந்தது என்று தான் கூற வேண்டும். இதை விவேகானந்தரே தெளிவுபடுத்தி உள்ளார்:

இந்தியாவில் ஏழைகளில் இவ்வளவு கூடுதலாக முகம்மதியர்கள் இருப்பது எதனால்? கத்தியை வைத்து மதம் மாற்றப்பட்டனர் என்பது பொய். ….ஜமீந்தார்களிடம்  பூசாரிகளிடம்  விடுதலை பெற்றிடவே (மதம் மாறினர்)… இதன் விளைவாக வங்கத்தில் விவசாயிகளில் இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிகம் இருப்பதைக் காணலாம்.காரணம், அங்கே அந்த அளவுக்கு ஜமீந்தாரர்கள் இருந்தனர். அடிமைப்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஆன பல கோடி மக்களை முன்னேற்றுவது பற்றி யார் கவலைப்பட்டனர். (விவேகானந்த சாகித்ய சர்வஸ்வம், ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம், புற நாட்டுகரா, திருச்சூர், தொகுதி -5, பக்.211)

பிற மத வெறுப்பை பெருக்கி இந்து சமயத்தை சார்ந்த ஒரு சிறு பகுதி மக்களின் ஆதரவுடன் என்றாலும் கூட இந்துத்துவா சக்திகள் ஆட்சியில் அமர்ந்தவுடன், அணு சோதனை நடத்தி, நாட்டு வெறுப்பை வளர்த்தனர். இதன் வாயிலாககுறுகலான நாட்டு பற்றைகிளறிவிட்டு தமது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்திட முயல்கின்றனர். இந்தியாவின் மத சார்பின்மையில் இந்துத்துவாவுக்கு நம்பிக்கை இல்லை.  

The Hedgewar-Golwalkar impact

இந்து தேசியமே நமது தேசிய பங்களாவின் அடித்தளம் உள்ளது” (சிந்தனைக் கொத்து. பக்.181) என்கிறார், கோல்வால்கர். இந்து மத கலாச்சாரம், அதாவது மேல் சாதி இந்து கலாச்சாரம், மட்டுமே இந்திய கலாச்சாரம் என்பது இந்துத்துவாவின் கருத்து. கலாச்சார தேசியம் எனும் பெயரால் இக்கருத்தில் இருக்கும் சிறுபான்மை வெறுப்பை மறைக்கவும் இந்துத்துவா முயற்சி செய்கிறது.

சுருக்கமாக, விரிந்த பன்மையான விசித்திரமான முரண்பாடுகளால் சிக்கலான இந்து சமயத்திற்கும் இந்துத்துவாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்துத்துவா என்பது ஓர் அரசியல் கருத்தியல். மதம், கடவுள் நம்பிக்கைஇவற்றை பயன்படுத்தி உருவாக்கிய மதவெறி அரசியல் கருத்தியல். பிற மத வெறுப்பு, கீழ் சாதி வெறுப்பு, இவற்றை அடிப்படையாக்கிய  செல்வந்தர்களின் நலன காத்திட உருவான கருத்தியல். சாதி மத உணர்வுகளுக்கு ஆழமான வேரோட்டமிருக்கும் இந்தியாவில் அதை நன்கு அறுவடை செய்து, ஏகாதிபத்தியத்தின் (மேலாதிக்கம்) துணையுடன் இங்கு ஆட்சி அதிகாரம் பிடிக்கும் அரசியல் கருத்தியல்; உண்மையான ஜனநாயகத்திற்கும்  மதச்சார்பின்மைக்கும் ஆப்பு வைப்பதன் வாயிலாக மட்டுமே தம் திட்டத்தை இந்துத்துவா கூட்டத்திற்கு செயல்படுத்திட இயலும். அதனாலேயே, இது ஜனநாயகமத சார்பின்மை சக்திகளுக்கு எதிராக ரகசியமாக காய் நகர்த்தும் ஒரு மத வெறி ஃபாசிஸ கருத்தியல்.

பிற மத வெறிகளைக் குறித்தும் இந்த விளக்கம் உண்மையே. அதாவது, இஸ்லாம் மதத்திற்கு எதிரானது அதை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்ற இஸ்லாம் மத அடிப்படை வாதமும் தீவிர வாதமும் பயங்கர வாதமும். கிறிஸ்து மதத்திற்கு எதிரானது அதை அரசியல்படுத்தி உருவாகும் கிறித்துவ மத அடிப்படை வாதமும் தீவிர வாதமும் பயங்கர வாதமும். இதே போன்றது பிறவும். இந்த மத விரோத இயக்கங்களின் செல்வந்தர் சார்ந்த அரசியலை அம்பலப்படுத்தினால் மட்டுமே அந்த அந்த மதங்களை சார்ந்த  பெரும்பான்மையான மக்களை இந்த இயக்கங்களின் உடும்பு பிடியில் இருந்து விடுவிக்க முடியும்.அதற்கு, பரந்த ஒரு மதச் சார்பற்ற  ஜன நாயக முன்னணி அகில இந்திய அளவில் வளர வேண்டியுள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தின் மதச் சார்பின்மை இயல்பை வெளிப்படுத்தும் விவாதங்கள் மிகவும் அவசியமாகும்.

பகுதி-4 

மதச் சார்பின்மை

ஒரு ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரு மதத்தை நம்புவோரும் எந்த ஒரு மதத்தையும் நம்பாதோரும் கடவுளை நம்புவோருக்கும் கடவுளை மறுப்போருக்கும்  ஒரு குடிமகன் எனும் வகையில் ஒரே சமமான உரிமைகள் உள்ளன. இந்துக்கள் ( பல சாதியினர்), முஸ்லீம்கள், கிறித்தவர்கள், யூதர், பாரசீகத்தினர், சமணர், பவுத்தர், சீக்கியர் மற்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் நம்பாமல் பல மத நம்பிக்கைகளையும் கடைபிடிப்போர்  முதலானோர் இங்குள்ளனர். இக்கூட்டங்களில், ஒரு மதத்தினருக்கு மட்டும் எந்த ஒரு சிறப்பு  அதிகாரமும் உரிமையும் இல்லை. மத சிறுபான்மையினருக்கு அந்த நிலையில் நம்பிக்கைவழிபாட்டு உரிமைக்கு பாதுகாப்பு அளிப்பதே ஜன நாயகம் முழுமை அடையவதற்கே.

இந்தியாவின் மரபையும் கலாச்சாரத்தையும்  இந்த ஒரு பின்புலத்தில் ஆராய வேண்டும். நம் கலாச்சாரம் ஏதாவதொரு மதத்தின் உடையது மட்டும் அல்ல. பல்வேறு மத கலாச்சாரங்களின், மதம் இல்லாதமத சார்பற்ற கலாச்சாரங்களின் கலவைஇணைப்பு கலாச்சாரமே இந்திய கலாச்சாரம் என்பதை பார்க்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இந்த உண்மையினை கண்டுகொள்ளாமல் பிரிவினை கருத்துகளை இந்தியாவின் பெரும்பான்மையான மக்களிடம் திணிக்க சிலர் முயற்சி செய்கின்றனர்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் மனிதர் குடியிருக்க தொடங்கியது முதல்  இங்கு வாழ்ந்த பழங்குடிகளே நம் மரபின், கலாச்சாரத்தின் முதல் தாய்தந்தையர். அதற்கு பின், ஏறத்தாழ ஐயாயிரம் ஆண்டுகளுக்கு பின், மோகன்ஜெதாரொ, ஹரப்பா நாகரீகங்கள் உருவானதும் அதற்கு இணையான உலக நாகரீகங்களுடன் இந்திய கலாச்சாரமும் உலக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக வளர்கிறது எனும் உண்மையை நாம் கவனிக்கவேண்டும்.

ஏறத்தாழ மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய ஆசியாவில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் பல சூழ் நிலைகளில் சிறு சிறு குழுக்களாக இந்தியாவில் குடியேறி (ஆரியர்கள் என தங்களை அழைத்துக்கொண்டவர்கள்), சமஸ்கிருத மொழி (ஆரிய மொழி) பேசியவர்களே   வேத கால ஆரிய கலாச்சாரத்தை உருவாக்கியவர்கள்

 சாத்தியமாகுமா ...
மதச் சார்பின்மை

ஆரிய வேதகால பிராமண மதம் என்பது கலையில், கருத்தியலில், இந்திய கலாச்சரத்திற்கு வலுவான பங்களிப்புச் செய்து இருக்கிறது என்பதில் கருத்து வேறுபாடில்லைநால் வருண முறை போன்ற சமூகத்தின் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த சிலதும்  அந்தக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதைக் கவனிக்காமல் விட்டுவிட முடியாது

உப நிஷத்துகளில் ( பொது ஆண்டுக்கு முன்  9 முதல் 7 நூற்றாண்டு வரை) ஆன்மீக கருத்தியலின் முக்கிய கருத்தோடையாக இருந்ததுப்ரும்ம தரிசனம்’ (உலக கருத்தியல்). இதில் எல்லோரையும் அரவணைக்கும்சமத்துவ கருத்தைவெளியிட்ட வேத கால முனிவர்களை எவர் பாராட்டாமல் இருப்பர். எல்லோரும் பாராட்டுவர். முற்றும் அறிந்த, எங்கும் நிறைந்த, எல்லா வல்லமையும் கொண்ட கடவுள் (பிரம்மம்) ஆனவர் அனைத்து நகரும்நகரா பொருட்களையும் உருவாக்குகிறார், காப்பாற்றுகிறார், அழிக்கிறார். அந்த கடவுள் ஒளி எல்லா நகரும்நகரா பொருட்களிலும் (உயிர்களிலும்) குடியிருக்கிறது என நமக்குக் கற்பிக்கும் இந்தஅ பிரும்ம கருத்தியலானது நம் இந்திய மரபின் சாரம் என்று சொல்லக்கூடிய  சமத்துவத்தின் (எல்லோரும் ஓர் நிறை) எனும் செய்தியை வழங்குகிறது. துரதிர்திஷ்டவசமாக, இந்த சமத்துவம் செயலாக்கத்திற்கு வரவில்லை. வேத கால மதம் நடைமுறைக்கு கொண்டு வந்த   நால் நிறவாழ் நிலைகுலத்தொழில் முறை’ (சாதுர் வர்ண்யம்) உயர்வுதாழ்வை அடிப்படையாகக் கொண்டது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும்  வேதங்களை கற்கும் சிறப்பு உரிமைகள் மறுக்கப்பட்டன

சமத்துவம் தொடர்பான கருத்தியலை  நடைமுறையில் மறுத்தவர்களுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தலைமை தாங்கியவர்களே ஸ்ரீ புத்தரும் வர்த்தமான மஹாவீரரும் ப்ரஹஸ்பதி முனிவரும்இவர்  உருவாக்கிய பவுத்தசமணசார்வாக (லோகாயத) கருத்தியல்கள் வேத கால பிராமணர்களின் கருத்தியலுக்கும்  நால் நிற அமைப்பிற்கும் (சாதுர் வர்ண்யம்) வேள்வி கலாச்சாரத்திற்கும் எதிரான போராட்டத்தின் போர்க்கருவிகளாயின.

பவுத்தசமண சமயங்களும் லோகாயத  பொருள் வாதமும் வேத கால மதத்தின் அஸ்திவாரத்தை ஆட்டின. உயர்வுதாழ்வு அடிப்படையிலான சாதுர் வர்ணியத்திற்கு எதிராக இவர்கள் போராடினர். இவ்வாறு, இவர்கள் இந்திய மரபின் சாரமான சமத்துவத்தை செயல்படுத்துவதற்கான போராட்டத்தில் ஒரளவிற்கு வெற்றியும் கண்டனர். காலப்போக்கில், வேத கால மதங்களுக்குள் மாற்றங்கள் ஏற்பட்டன. அரசர்களின் அதிகாரபூர்வமான மதம் ஆனதும் பவுத்த சமயம் போன்றவற்றின் சமத்துவத்திற்கான ஆர்வம் குன்றிப் போனது.

Buddhism and Jainism | ExamsDaily Tamil

பழைய பிராமண வேத கால மதம் அரசாட்சியின் வலுவான துணையுடன் சாதிநிலச்சுவாந்தார் –  நாட்டாமை ஆதிக்கத்தின் ஒரு புது சமூக அமைப்பை கட்டி எழுப்பியது. பொது ஆண்டின் முதல் நூற்றாண்டில் தொடங்கி குப்த அரசர்களின் காலம் வரை இந்த அமைப்பு ஆழமாக வேர் பிடித்திருந்தது.

கோயிலை மையமாகக்கொண்ட  ஒரு கலாச்சாரம் அந்த அமைப்பின் தவிர்க்க முடியாத  ஒரு கூறாக மாறியிருந்தது. நான்கு நிறங்களுக்கு மாறாக நான்காயிரம் சாதிகள் நடைமுறைக்கு வந்தன. இந்த சாதி அமைப்பு என்பது உயர்வுதாழ்வினை அடிப்படையாகக் கொண்டது என சொல்லத் தேவையில்லையே. இவ்வாறாக செயல்வடிவில் சமத்துவம் உடைக்கப்பட்டது

கடவுள் நம்பிக்கை உடைய கீழ் சாதிக்காரர்களாக இருந்த பெரும்பகுதி மக்களுக்கும் கோயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மக்களின் கடவுள் வழிபாட்டுக்கு மக்கள் கோட்டங்களையும் பள்ளி அறைகளையும் காவுகளையும் போன்ற வழிபாட்டு இடங்களை நிறுவினர். மேல் சாதி ஆதிக்கத்தின் கலாச்சார மையங்களான கோயில்களுக்கு இணையாக மக்கள் கலாச்சாரத்தை பரந்த அளவில் மக்கள் வளர்த்தெடுத்தனர்சமத்துவத்திற்கான மக்களின் போராட்டக்களமாக  இந்த இணை கலாச்சார மையங்கள் மாறின. இதன் வரலாற்று மிச்ச சொச்சங்களை இப்போதும் நம்மால் காண முடியும்

மத்திய காலத்தை ஒட்டி இஸ்லாம் சமயம் இந்தியாவில் பரவலாக முன்னேறியது. சுல்தான்களின், மொகலாயர்களின் ஆட்சிக்காலங்களில் இஸ்லாம் நாடு முழுவதும் இந்தியர்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் செல்வாக்கை செலுத்தியது. இதற்கு முன்னரே, கேரளாவில் இஸ்லாம்கிறித்துவயூத சமயங்கள் நுழைந்திருந்தன

சூஃபிகள் எனும் இஸ்லாமிய அறிஞர்கள் மத ஆன்மீக உரைகளின், சமூக சேவைகளின் வாயிலாக குறிப்பிடும்படியான அளவில் மத மாற்றத்திற்கு வழிகோலினர். தொன்மையான இந்திய உப நிஷத் கருத்தியலின் அத்வைதத்தின் (இரண்டும் வெவேறானதல்ல; ஒன்றே. பரமான்மாவும் ஜீவான்மாவும் ஒன்றே எனும் கருத்து) மீட்சிக்கும் அதன் சமத்துவக் கருத்தின் பரவலான பிரச்சாரத்திற்கும்  உயர்வுதாழ்வு அடிப்படையிலான சாதி அமைப்புக்கும் எதிரான போராட்டத்தை மக்கள் போராட்டமாக்கிய பக்தி இயக்கத்திற்கு உந்துதலாக அமைந்தது  இந்த சூபி கருத்தியல்.

பல சாதிமதங்களை சார்ந்தவர்கள் இந்த பக்தி இயக்கத்தை வழி நடத்தினர். மாநில மொழிகள் இதற்கு பயன்பட்டன. இது இதன் மக்கள் ஏற்பை சுட்டுகிறது. மேல் சாதி  இந்து கலாச்சாரத்திற்கு கடுமையான பதிலடி அளிக்கவும் இந்திய கலாச்சாரத்தின் சாரமான சமத்துவத்தை சமூக மட்டத்திலாவது ஒரு பெரிய அளவில் கொண்டுவந்திட இந்த சூபி கருத்தியலும் பக்தி இயக்கமும் உதவின

பதினெட்டாம் நூற்றாண்டை ஒட்டி மேற்கத்திய முதலாளித்துவ கலாச்சாரம் இந்தியாவில் பரவலாக செல்வாக்கு செலுத்த தொடங்கியது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தியாவை ஆண்ட வெளி நாட்டு ஆட்சி. ஆனால், ஜனநாயகம், தேசிய உணர்வு, தனி நபர் சுதந்திரம், மதச்சார்பின்மை போன்ற பல முற்போக்கு கருத்துகளையும்  அந்தக் கலாச்சாரம் இங்கு பரப்பி, அவற்றை இந்திய கலாச்சாரத்தின் கூறுகளாக்கியது

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ராஜா ராம் மோகன் ராய், சுவாமி விவேகானந்தர், மகாதேவ கோவிந்த ரானடே, தயானந்த சரஸ்வதி, மகாத்மா ஜோதிபா ஃபூலே, அய்யா வைகுண்டர், நாராயண குரு, அருட்பெரும்ஞ்சோதி ஸ்ரீ ராமலிங்க அடிகளார், வாக் படானந்த குரு தேவர், பிரஹ்மானந்த சாமி சிவ யோகி, மகாகவி இக்பால், அப்துல் கலாம் ஆசாதி, சர் சயிது அகம்மது கான், வக்கம் மவுலவி, பொய்கையில் யோகண்ணான், வி டி பட்டதிரிப்பாட், சகோதரன் ஐயப்பன், பெரியார் என ஏராளம் தலைவர்களின் தலைமையில் உருவெடுத்தது இந்திய புத்தெழுச்சி இயக்கம். இது நமது சமூககலாச்சாரஅரசியல் அரங்கங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் முன்னேற்றத்திற்கு வழி கோலியது

தேசிய விடுதலை போராட்டத்திற்கு மத நட்பின், மத சார்பின்மையின் அடிப்படையினை அளித்ததே இந்த புத்தெழுச்சி இயக்கம் தான். இந்து சமயத்தின் சதி எனும் உடன் கட்டை ஏறுதல், சாதி அமைப்பு முதலானவற்றுக்கும்  முஸ்லீம்களிடம் இருக்கும் கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களுக்கும் மூட நம்பிக்கைக்கும்  இவற்றுக்கெல்லாம் காரணமான கல்வி நிலையில் இருக்கும் பின்னடைவுக்கும் எதிரான பல்வேறு வடிவங்களில் இந்த புத்தெழுச்சி இயக்கம் போராட்டங்களை நடத்தியது

இந்த முதலாளித்துவ கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் சாதிக்கு எதிர்ப்பான, மத சார்பின்மையை அடிப்படையாக்கிய ஒரு தொழிலாளர் வர்க்க கலாச்சாரம் தனது சமத்துவ கருத்துடன் எழுந்து வந்தது. இது இந்திய கலாச்சாரத்தின் ஒரு கூறாக கலந்து விட்டது.

மத சார்பற்ற, தனி நபர் உரிமையை ...
இந்திய அரசியல்மத சார்பற்ற, தனி நபர் உரிமையை மதிக்கும் நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றன- ஆய்வில் முடிவு

இவ்வாறாக, பல்வேறு மத கலாச்சாரங்களின், மதம் இல்லாதமத சார்பற்ற  கலாச்சாரங்களின் கலவையான இந்திய கலாச்சாரத்தின் சாரம் சமத்துவமே. அதை ஆதரிக்கின்ற, எதிர்க்கின்ற சக்திகளுக்கு இடையே காலாகாலமாக நடந்துவரும் போராட்டங்களின் வரலாறே இந்திய கலாச்சார மரபின் வரலாறு என நாம் புரிந்து கொள்ளலாம்

சமூகபொருளாதாரகலாச்சார அடிப்படையில் உள்ள சமத்துவத்தை நிறுவப்பெறுவதற்கான போராட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளான பல்வேறு சமய கலாச்சாரங்களின், சமய சார்பற்ற கலாச்சாரங்களின் சமத்துவ நெறிகளை தூக்கிப்பிடித்து மிகப்பரந்த அளவிலான ஒரு மக்கள் புத்தெழுச்சி இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது இக்காலத்தின் ஒரு முக்கிய தேவையாகும்

இந்திய கலாச்சாரத்தின் சாரமான சமத்துவத்தை செயலாக்குவதற்கான முயற்சிகளை இது விரைவு படுத்தும். இந்தியாவின் சமய சார்பற்ற ஜன நாயக அமைப்பை வலுப்படுத்தினால் மட்டுமே நாம்  அதைச் செய்ய முடியும். இந்திய மரபு குறித்த ஆதாரபூர்வமான ஆய்வுகள் இதற்கு மிகவும் துணை புரியும்.

தொகுப்பு

  1. நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் எனும் மூன்று வார்த்தைகள் இதில் விரவி உள்ளன.
  2. பண்பாடு என்பதும் கலாச்சாரமும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. கலாச்சாரம்/பண்பாடு என்பது சமூக உறவுகளை, எண்ணங்களை, வார்த்தைகளை/மொழியினை குறிப்பதாகும்.
  3. நாகரீகம் என்பது பயன்படுத்தப்படும் பொருட்கள், கருவிகள்/இயந்திரங்கள், உடுக்கும் உடைகள், குடியிருக்கும் வீடுகள், புழங்கும் இடங்கள் இவற்றை குறிப்பதாகும்.
  4. ஒவ்வொரு கூட்டத்தின்/சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பொறுத்து அவர்களது கலாச்சாரமும் நாகரீகமும் அமையும்
  5. வெளிப்பகுதிகளில்/ வெளி நாடுகளில் இருந்து குடியேறும் மக்கள் தாங்கள் ஏற்கெனவே குடியிருந்த பகுதிகளின்/ஊரின்/நாட்டின் கலாச்சாரநாகரீகத்துடன் வருவார்கள். அது நெடுங்காலம் நிலை நிற்கும். இதனாலேயே, மணல்காடுகளில்/பாலை வனங்களில் கண், காது, மூக்கு, வாய் என முழு முகத்தையும் காப்பதற்கான பர்தா எனும் ஏற்பாடு வட இந்தியாவிலும் அரபு நாடுகளில்  பல வடிவங்களில் கடைபிடிக்கப்படுகிறது. இவர்கள் இது தேவையில்லாத கால நிலைக்கு/ புவி இயல் சூழலுக்கு சென்றாலும் பல காலம் இதை பின்பற்றுவார்கள். இது மதம் சார்ந்தது அல்ல. வட நாட்டு இந்துக்களும் முஸ்லீம்களும் சமணர்களும் பிறரும் கடைப்பிடிக்கிறார்கள். ஆக, இது பொதுவாக மத கலாச்சாரம் என எடுத்துக்கொண்டாலும் அது அல்ல. ஒரு மதம், கருத்து எந்த சூழலில் உருவாகிறதோ அது அதன் கலாச்சாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மதம் மாறுகிறவர்கள் இந்த கலாச்சார மாற்றத்தையும் ஏற்கின்றனர்
  6. மதத்தை கலாச்சாரத்துடன் இணைப்பதால், மதம் தோன்றியஇடம்/ நாடு  ஒரு புனித தலமாகிறது, அந்த மொழி தேவ மொழியாகிறது, அந்த மொழியில் உள்ள பெயரே ஏற்கப்படுகிறது, எடுத்துக்காட்டாக, முகம்மது என்ற பெயர் கேட்டால் முஸ்லீம் என்போம். அப்படி இருக்க வேண்டிய் அவசியம் இல்லை. அவர் பார்சி சமயத்தை தழுவும் பாரசீகராகவும் இருக்கலாம்
  7. கலாச்சாரம் குறித்த இந்த சரியான புரிதல் ஏற்படும் போது மதம் மாறினால் பெயர் மாற்ற மாட்டார்கள், வணங்கும் கடவுளும் பண்டிகைகளும் மட்டும் தானே மாறும். இதெல்லாம் ஒரு நபரின் தனிப்பட்ட விஷயமாயிற்றே. சில முஸ்லீம்கிறித்துவ வழிபாட்டு ஆலயங்கள் அந்த அந்த ஊரில் இருக்கும் வீடுகளை/கோயில்களை போல் உருவாக்கப்படுவதை பார்த்திருக்கிறோம். இதெல்லாம் புதிய புரிதலின் விளைவுகளே.
  8. கலாச்சாரமும் நாகரீகமும் எப்போதும் மாறக்கூடியது. நமது புது வாழ் நிலைகளும் நமது உறவுகளும் தொடர்புகளும் இதை தொடர்ந்து மாற்றி அமைத்துக்கொண்டே இருக்கும். ஆகையால், இந்திய கலாச்சாரம் பல கலாச்சாரங்களின் கலவை என்கிறோம். இதை தொடர்ந்து சமத்துவ அடிப்படையில் வலுப்படுத்துவோம். இதற்கு எதிரிகளாக இருக்கும் வெறிகளை, கண்மூடி நம்பிக்கைகளை, அவ நம்பிக்கைகளைக் குறித்து புரிந்து கொள்வோம், புரியவைப்போம். இதற்கு இச்சிறு நூல் கட்டாயம் உதவி செய்யும்

குறிப்பு:

இது பிழை/கருத்து திருத்தத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன் முன்னுரையும் தொகுப்பும் பக்கத்தின் அடிப்பகுதி குறிப்புகளும் மொழியாக்கியவரின் கருத்தாகும்

__ மொழி பெயர்ப்பாளர்

*************************************************************************************************************

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *