இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் | “மால்கம் ஆதிசேசய்யா” – நூல் அறிமுகம்

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் | “மால்கம் ஆதிசேசய்யா” – நூல் அறிமுகம்

ஒரு சமூகத்தில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது அது கல்வி நிறுவனங்களானாலும் சரி மருத்துவமனை, தொழிற்சாலை போன்ற இதர சமூக சேவை மற்றும் உற்பத்தி நிறுவனங்களானாலும் சரி சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாவதற்கு தரமான நிறுவணங்கள் இன்றியமையாதவை.

அப்படிப்பட்ட ஒன்று தான் அடையாரில் (காந்தி நகர்) இருக்கும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS. இன்றைக்கு தமிழ்நாட்டில் பெரிதும் பேசப்பட்டு ஆளுமைகளைச் செதுக்கியதில் இந்நிறுவனம் முக்கியப்பங்கு வகிக்கிறது. ‘திராவிட மாடல் என்று இந்தியா முழுவதும் பேசுபொருளாவதற்கான வித்து இங்கிருந்த ஆய்வறிஞர்கள் வெளியிட்ட ‘The Dravidian Model” புத்தகத்தின் விளைவாக ஏற்பட்ட ஒன்றே.

இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் “மால்கம் ஆதிசேசய்யா” 1971-இல் தனது சொந்த முயற்சியில் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் ஏற்படுத்து கிறார். பின்னாளில் ICSSR. ஒன்றிய அரசு மற்றும் மாதில அரசுகளின் நிதியின் மூலம் இயங்கி வருகிறது.

UNESCOவின் துணை இயக்குநர் நாயகமாகவும் இவர் பதவி வகித்தார். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாநில திட்டக் குழுவின் (1971-73) உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் (1973-1978) மாநிலங்களவை உறுப்பினராகவும் (1978-1986) ஆதிசேசய்யா பணியாற்றினார்.

YOJANA என்ற இதழ் ‘திட்டம்’ என்ற பெயரில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 1969 முதல் திட்டக்குழு வாயிலாக வெளிவர தொடங்கியது. இந்த இதழில் மால்கம் ஆதிசேசய்யா எழுதிய கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாக தொடங்கின. அப்படி வெளியான சமகால பொருத்தப்பாடு உடைய கட்டுரைகளின் தொகுப்புதான் ‘இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள்’ எனும் இந்நூல்.

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் | "மால்கம் ஆதிசேசய்யா" புத்தகம் | India Porulatharam Varalaru Kattum Vazhikal - Malcolm Adiseshiah Tamil Book Review | பாரதி புத்தகாலயம் | www.bookday.in

பொருளாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, தொண்டு நிறுவனங்கள், நிதி கொள்கை, மதச்சார்பின்மை என பன்மைத்துவக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. MIDS நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டில் இந்நூல் சிறப்பு வெளியீடாக வெளியாகியுள்ளது. ஆ.அறிவழகன், இதிலுள்ள கட்டுரைகளைத் தொகுத்துள்ளார்.

ஆழமான கருத்துகளும் தரவுகளும் நிரம்பிய கட்டுரைகள், இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இவை 80கள், 90களில் எழுதப்பட்ட கட்டுரைகள் சமகாலத்தில் இக்கட்டுரைகளின் பொருத்தப்பாடு என்பது நாம் எத்தகைய இலக்குகளை எட்ட முனைந்தோம். நாம் எவற்றை எல்லாம் அடைத்துள்ளோம் என்பதை மீளாய்வு செய்ய முக்கிய ஆவணமாகப் பயன்படும்.

எந்த ஒரு சார்பு நிலையும் எடுக்காமல் மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. காந்தியும் இன்றைய இத்திய பொருளாதாரமும் (1993), வெளிநாட்டு முதலீடும் தாராளமயமாக்கலும் (1994), தொண்டு நிறுவனங்கள் மதச்சார்பின்மையின் இடர்பாடுகள், வறுமை மற்றும் கல்வி பற்றிய கட்டுரைகள் எல்லாம் இன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

திட்டமிடலுக்கு அதிகார பரவல் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். மாநிலங்கள் – நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் என படிப்படியான அதிகார பரவலின் மூலமே திறமையாக திட்டமிடவும் செயல்படுத்தவும் முடியும் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார். அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் வாசிக்க வேண்டிய புத்தகம்.

…வாசிப்போம்.

நூலின் விவரங்கள்:

நூல் : இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் (India Porulatharam Varalaru Kattum Vazhikal) | “மால்கம் ஆதிசேசய்யா”
ஆசிரியர் : “மால்கம் ஆதிசேசய்யா” | 
விலை :  ரூ.250
பதிப்பகம் :  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS)
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

எழுதியவர் : 

✍🏻 கௌதம் ராஜ்

நன்றி: முரசொலி பாசறை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *