நூல் அறிமுகம்: இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் எழுதிய “இந்திய சுதந்திர போராட்ட வரலாறு” – குரு

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு.
➖➖➖➖➖➖➖➖
………………………………………
ஆசிரியர் : இ.எம்.எஸ்..
………..நம்பூதிரிபாட்……….
………………………………………
—————————————-
வாழ்க்கையில் ஒரு முறையேனும்…….,
—————————————-
வாழ்க்கையில் ஒருமுறை வீட்டை கட்டி பார்க்க வேண்டும்…!

ஒரு முறை, யாருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டும்.

வாழ்க்கையில் ஒரு முறை, நாட்டுக்காக தியாகம் செய்தவர்களின் நினைவிடம் சென்று வரவேண்டும்.

பொது நலனுக்காக, ஒருமுறையாவது சிறை சென்று மீள வேண்டும்.

வாழ்க்கையில் ஒருமுறை நல்ல நூலைப் படிக்க வேண்டும்.

அந்த நல்ல நூல் தான்.,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு… !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பல்வேறு முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்களால்.,

அவரவர் சிந்தனைப் போக்குக்கு ஏற்றவாறு, பின்னியும், முடைந்தும் எழுதப்பட்டுள்ளன..

ஆனால், தொழிலாளி வர்க்க கண்கொண்டு, இ எம் எஸ் அவர்களால் எழுதப் பெற்றுள்ள … முற்றிலும் மாறுபட்ட நூல் இது.

வாஸ்கோடகாமா வந்து இறங்கிய போது துவங்கியதுதான் சுதந்திரப் போராட்டம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்தியா என்னும் முழு நாட்டை உருவாக்கியது, வெள்ளையர்கள் அல்ல.
………………………………………
இந்தியா எனும் இந்த மாபெரும் தேசத்தை உருவாக்கியது…

chutti Vikatan - 31 August 2017 - சுதந்திரம் 71 ...

இந்திய விடுதலைப் போராட்டமே…!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

விடுதலைப் போராட்டத்தின் வீச்சைக் கண்டு, பயந்துதான், வெள்ளையர்கள், தங்கள் தலைநகரத்தை, கல்கத்தாவில் இருந்து, டெல்லிக்கு மாற்றினர்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மிகப்பெரிய நாட்டை, வெறும் துப்பாக்கிகளால்..,
ஆள முடியாது, என்னும் நிலையை உருவாக்கியது… விடுதலைப் போராட்டம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், வழிபாடுகள், இனங்கள், இவை எல்லாவற்றையும், ஒன்றிணைத்தது சுதந்திரப் போராட்டமே.
………………………………………
இந்தியர்கள், ஒவ்வொரு தாக்குதலுக்கும், , திருப்பிப் போராடி இருந்தால், வெள்ளையர்கள் தாங்கி இருக்க மாட்டார்கள்.
………………………………………
நீண்ட காலம் தங்கி இருக்கவும் மாட்டார்கள்.
………………………………………
ஆனால் பழிக்குப் பழி வாங்கக் கூடாது, என்னும் கொள்கையைக் கொண்ட, காந்தியடிகள் தலைமை ஏற்றதால், ஆங்கிலேயர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.
………………………………………

விடுதலைப் போராட்டத்தின் வீச்சு அதிகரிக்க அதிகரிக்க..,

விடுதலைப் போராட்டம் பரவாமல் தடுக்க…,

பர்மா இலங்கை ஆகியவற்றை தனி நாடுகளாக இந்தியாவில் இருந்து பிரித்து விட்டனர்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
இந்திய விடுதலைப் போராட்டம் என்பது, வெள்ளை முதலாளிகளுக்கும், இந்திய முதலாளிகளுக்கும் நடைபெற்ற போராட்டமே.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அதில், காந்தியடிகள், தெளிவாக, இந்திய முதலாளிகள் பக்கம் நின்று, விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்.

விடுதலைப் போராட்டத்தின் முழு பலனையும் இந்திய முதலாளிகள், அன்று தொடங்கி, இன்றுவரை, அனுபவித்து வருகின்றனர்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

விடுதலைப் போராட்டம், இடதுசாரி பாதையில், சென்று விடாதபடி, காந்தியடிகளால் நடத்தப்பட்டது.
………………………………………
தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதால், நம்பிக்கையுடன் இந்திய விடுதலைப் போராட்டத்தை கையில் எடுக்கிறார்.

அன்று இருந்த தீவிரவாதிகளை விட தீவிரமாக காந்தி பேசுகிறார்.

தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் ...

திலகரிடமிருந்து, காந்தியடிகளின் கைகளுக்கு தலைமை சென்றுவிடுகிறது.

எந்த ஒரு போராட்டமும் அறிவித்தவாறு நடைபெறுவதில்லை. எப்போது வேண்டுமானாலும், போராட்டம் முடிக்கப்பட்டது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
மோசமான சமாதானத்தை விட, நல்ல முறையில் சண்டையிட்டு பார்ப்பதே மேலானது என்கிற கருத்து எடுபடவில்லை.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
ஒவ்வொரு போராட்டமும், சரியாகவும், விரிவாகவும், முழுமையாகவும் நடந்திருந்தால், பிரிவினைவாதமே தலைதூக்கி இருக்காது.
_________
போராட்டத்தை அறிவிப்பது மாநாடு….

போராட்டம் திரும்பப் பெறுவது, காந்தியடிகள் என்ற ஒற்றை தலைவரால்…..
_________
====================
போராட்டங்கள், அறிவிக்கப்படும் போதே, பேச்சுவார்த்தை நடைபெறாதா, என்று ஏங்கும் போக்கு ஆங்காங்கு தென்படுகிறது.
====================
இருந்தபோதிலும், காந்தியடிகள், தெளிந்த, நிதான சிந்தனையோடு, ஆழ்ந்த பொருளமைதியோடு, தனது வார்த்தைகளை, எப்போதும் அளவிட்டு, உயிர் கொடுத்தும், பேசியதால், ஒரு ஈர்ப்பு சக்தியை பெறுகிறார்.

அவரது சிந்தனை ஒளி, எட்டெட்டு திசைகளிலும் சென்று, எல்லாவற்றையும் தொட்டு, சகல தத்துவங்களின் மீதும், ஒளிவீசி, சகல விஷயங்களையும், ஒரு தனி உருவமாக ஒன்று திரட்டி, ஒருமையை உருவாக்கியது.

உலக நாடுகள் அனைத்திலும், விடுதலைப் போராட்டங்களில் , அதிக அளவு மக்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

மக்கள் மட்டும் விழித்து எழுந்து விட்டால், அவர்கள் தங்களை, அடிமைப்படுத்தியவர்களுக்கு, கொடுக்கின்ற தண்டனை, மிகப் பெரிய தண்டனையாக இருக்கும்.

உலக நாடுகளில் எல்லாம், அப்படித்தான் நடந்தது.

அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தில், இங்கிலாந்து, அடித்து விரட்டப்படுகிறது.

சீனாவிலிருந்து ஜப்பான் அடித்து விரட்டப்படுகிறது.

சியாங்கே சேக் அடித்து விரட்டப் படுகிறார்.. .

கியூபா, வியட்நாம், கொரியா எல்லா நாடுகளிலும் இதுதான் நடைபெற்றது.
_________
இந்தியாவில் மட்டும்தான், அடிமைப் படுத்திய வெள்ளைக்காரர்கள், பாதுகாப்பாக, நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய முதலீடுகளும் பாதுகாக்கப்பட்டன.

கடைசி வைஸ்ராயாக இருந்த வெள்ளையரே,, விடுதலை இந்தியாவின் முதல் வைஸ்ராயாக ஏற்றுக் கொள்ளப் படுகிறார்.

Indian rules for Edwina-Nehru film: no kissing, no holding hands ...
________

இது இந்தியர்களின் பெரிய மனிதத் தன்மைதான். ஆனால், அதற்கு பாத்திரமான வர்களாக, வெள்ளையர் இல்லை என்பது முக்கியமானது.
—————————————-
ஒரு முறை எம்.ஆர்.அப்பன் கூறினார்.
” இந்தியா, முழு இந்தியாவாக இருந்திருந்தால், உலகின் மிகப்பெரிய வல்லரசாக இருந்திருக்கும்” .
—————————————-
ஆம். ஆங்கிலேயர்களின் சூழ்ச்சிகளுக்கு, மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

அவர் களுடைய வாரிசுகளுக்கு, சட்டமன்றங்களில் சிறப்பு உறுப்பினர் பதவியும், இன்றும் வழங்கப்படுகிறது.

எப்படியிருந்தாலும், அன்றைய 30 கோடி மக்களை முழுமையாக ஈர்க்கும் சக்தி, காந்தியடிகளிடம் இருந்தது.

அதிக நாள் சிறை சென்றவர், அவரும் அவருடைய மகனும்தான்.

விடுதலைக்குப்பின், ஆட்சி பதவிக்கு அவரும் அவருடைய குடும்பமும் ஆசைப்படாமல் இருந்தது, உலகின் மிகப்பெரிய அதிசயம்.

சமஸ்தான மன்னர்களிடமிருந்தும், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர், போர்ச்சுகீசியர்கள் ஆகியோரிடமிருந்தும், முழு இந்தியாவை மீட்டதுடன் முடிவடைந்தது, சுதந்திரப் போராட்டம்.

போர்ச்சுகீசியர்களிடமிருந்து துவக்கிய விடுதலைப்போராட்டம் போர்ச்சுகீசியர்களுடன் முடிந்தது.
அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய நூல்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரான, தோழர் கே லட்சுமணன் தமிழாக்கம் செய்திருக்கிறார்.

900 பக்கங்கள் நிறைந்தது. பாரதி புத்தக வெளியீடு. விலை ரூபாய் 500தான்.
_________
குரு.திருவாரூர்.