உலகம் அறிந்த இந்திய புற்றுநோய் எதிர்ப்பு மருந்தியல் நிபுணர் சீமா பட்நாகர் (Seema Bhatnagar)
தொடர் : 53 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இந்திய விஞ்ஞானி சீமா பட்நாகர் (Seema Bhatnagar) சிந்தடிக் கெமிஸ்ட்ரி (Synthetic Chemistry) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செயற்கை வேதியியல் அணுகுமுறைகளின் துறையில் உலகம் அறிந்த விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். மார்பக புற்றுநோய்க்கான இரண்டு முக்கிய மருந்துகளை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவர் எனும் பெருமையை பெற்றவர். அயல் நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் போதை பொருட்களின் அடிப்படைகளை சில நொடிகளில் கண்டுபிடிக்கப்படுகின்ற முக்கிய கண்டுபிடிப்பு சாதனங்களை இந்தியாவிற்கு வழங்கியவர் பெண் விஞ்ஞானி சீமா பட்நாகர்.
செயற்கை ரசாயன தொகுப்பு முறை என்னும் துறை ஒன்று அல்லது பல வேதிப் பொருட்களை பெறுவதற்காக வேதி எதிர்வினைகளை செயற்கையாக உருவாக்கும் துறையாகும் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எதிர்விளைவுகளை உள்ளடக்கிய வேதி கையாளுதல்களால் நிகழ்கிறது. நவீன ஆய்வக பயன்பாடுகள்ல் செய்முறைகளில் புதிய நவீன வேதிக் கலவைகளை உருவாக்க நானோ தொழில்நுட்பத்தின் உதவியை இது சார்ந்து இருக்கிறது.

ஒரு செயற்கை வேதித் தொகுப்பு என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேர்மங்களை உள்ளடக்கியதாகும். இவற்றை உறவுகள் அல்லது எதிர்வினைகள் என்று அழைக்கிறார்கள். இவை சில நிபந்தனைகளுக்கு உட்படுத்தப்படும்போது பலவகையான நமக்கு தேவையான மாற்றங்களை வேதிப்பொருட்கள்க்குள் உருவாக்கி விரும்பிய தயாரிப்பை அடைய முடியும்.
புதிய வேதி பொருட்களை உருவாக்குவதோடு, சுத்திகரிப்பு செயல்முறையிலும், இந்த செயற்கை வேதித் தொகுப்புமுறை பயன்படுத்தப்படுகிறது. இந்த துறையில் இரண்டு முக்கிய கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்தவர் விஞ்ஞானி சீமா பட்நாகர் (Seema Bhatnagar).

மல்டிஸ்டெப் தொகுப்பு என்று அழைக்கப்படும் புதிய வகையான செயற்கை வேதித் தொகுப்பு முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர் இவர். உதாரணமாக பாராசிட்டமால் என்று அழைக்கப்படும் ஆய்வக தொகுப்பு மூன்று தொடர்பாகங்களைக் கொண்டிருக்கும் அடுக்கு வினைகளுக்கு ஒரு வினைப்பொருள்லுக்குள் பல வேதி உருமாற்றங்களை ஏற்பட வைத்து பல கூறு வினைகளுக்கு 11 வெவ்வேறு வேதிப்பொருட்களை ஒரு எதிர்வினை தயாரிப்பை நோக்கி நாம் உருவாக்குகின்றோம். இதற்கு நானோ வேதியியல் முறைகள் பின்பற்றப்படுகின்றன.. தொலைநோக்கி தொகுப்பு என்று இந்த வகையான வேலை அழைக்கப்படுகிறது எந்த இடைநிலை எதிர்வினைகளையும் தனிமைப்படுத்தாமல் குவாண்டம் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டி உள்ளது.. அப்போதுதான் நமக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும்.
சீமா பட்நாகரின் சிறப்பு துறை மார்பக புற்றுநோய் மருந்தியல் துறை ஆகும். ஆண்டுக்கு லட்சக்கணக்கான பெண்களை இந்தியாவில் மார்பக புற்றுநோய் பலி இடுகிறது. மார்பக புற்றுநோய் என்பது பெண்களின் மார்பக திசுக்களில் இருந்து உருவாகும் புற்றுநோய் இந்த புற்றுநோயின் அறிகுறிகளில் மார்பகத்தில் கட்டி மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் தோலின் மங்கள் நேரம் மார்பு காம்பில் இருந்து வரும் ரத்த நிற திரவம் இப்படி பலவற்றை சொல்லலாம். இந்த நோய் பாதித்த பலருக்கும் வெகுநாட்களுக்கு இது போன்ற அறிகுறிகள் எதுவும் தோன்றாது எலும்பு வலி வீங்கிய நிணநீர் கணுக்கள் மூச்சுத்திணறல் அல்லது தோல் மஞ்சள் நிறமாக மாறுவது இப்படித்தான் ஆரம்பத்தில் தோன்றும். சீமா பட்நாகர் (Seema Bhatnagar) இந்த வகை புற்று நோயை கண்டறிவதற்கான மிக எளிய வேதி சோதனை ஒன்றை கண்டுபிடித்து இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறார்.. இந்த முறைக்கு அவர் அகில உலக அளவில் உரிமமும் பெற்றிருக்கிறார்.

LACTAM ACETALS என்றழைக்கப்படும் வேதி தொகுப்பியலில் தனக்கென்று ஒரு நிபுணத்துவத்தை பெற்றவர் அவர். மார்பக புற்றுநோய் விஷயத்தில் இரண்டு முக்கிய சிகிச்சை முறைகளை அவர் அறிமுகம் செய்திருக்கிறார். பெரும்பாலும் கதிர்வீச்சு சிகிச்சையை நம்பி இருக்காமல் ஹார்மோன் சிகிச்சை மற்றும் துல்லிய இலக்கு சிகிச்சை ஆகியவற்றையும் பின்பற்ற அவர் பரிந்துரைக்கிறார். அதை விட முக்கியம் பெண்களுக்கு உடல் பருமன் உடல் பயிற்சி இன்மை மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் மாற்று சிகிச்சை போன்றவற்றை தவிர்ப்பதற்கான வாழ்க்கை முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது அவருடைய அயராத போராட்டமாகும்.
மார்பக புற்றுநோய் பொதுவாக பால் குழாய்களில் புரணி மற்றும் இந்த குழாய்களுக்கு பால் வழங்குகின்ற லோபுல் செல்களில் இருந்து உருவாகிறது என்பது சீமா பட்நாகரின் கண்டுபிடிப்பு. இந்த வகைப் புற்றுநோய்கள் LOBULAR CARCINOMA என்று அழைக்கப்படுகின்றன. நானோ வேதியியல் முறையில், பொதுவாக அதிகம் பரவும் இந்த வகை புற்று நோய்க்கு மிக தேர்ந்த இரண்டு மருந்துகளை குறைந்த விலையில் தனது ஆய்வுகளின் மூலம் சீமா பட்நாகர் (Seema Bhatnagar) வழங்கியிருக்கிறார்.

சீமா பட்நாகர் லக்னோவில் பிறந்தார். லக்னோவிலுள்ள இசபெல்லா தோபர்ன் கல்லூரியில் 1992 ஆம் ஆண்டில் இளங்கலை பட்டத்தில் வேதியியல் படைப்பிரிவை எடுத்து படித்தவர், உயிரி வேதியலில் முதுகலை பட்டம் பெற்று அதன் பிறகு உயிரித் தொழில்நுட்பம் என்கிற துறையை தனக்காக எடுத்துக்கொண்டு லக்னோவிலுள்ள சென்ட்ரல் திருக் ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட் எனும் கல்வியகத்தில் வேதி-உயிரித் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
நோய்டாவிலுள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் தற்போது இணை இயக்குனராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
நோய் தடுப்பு அமைப்புகளின் பல்வேறு முக்கிய குழுக்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இம்யூனாலஜி (National Institute of Immunolog) அவரை கௌரவ உறுப்பினராக தேர்ந்தெடுத்து வேதி மருத்துவதுறைக்கு தலைமை தாங்குமாறு அழைத்தது. CSIR அமைப்பின் மருந்து தயாரிக்கின்ற ஆய்வகத்தில் ஒரு முதன்மை விஞ்ஞானியாக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.
மருந்தியல் துறையில் பல்வேறு இந்தியாவினுடைய நிறுவனங்களில் ஒரு பணியாற்றியுள்ளார் புது டெல்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Indian Institute of Technology) மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள ராஜிவ் காந்தி சென்டர் ஃபார் பயோ டெக்னாலஜி (Rajiv Gandhi Centre for Biotechnology) ஆகிய இடங்களில் பல ஆண்டுகள் புதிய மருந்து கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு சுமார் 75 மருந்துகளுக்கு உரிமங்கள் பெற்றவர் சீமா பட்நாகர் (Seema Bhatnagar) என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் போற்றும் இந்திய கரிம ஒளி வேதியலாளர் ஜருகு நரசிம்ம மூர்த்தி
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: தாவர மரபணுவியல் வித்தகர் சுனில் குமார் முகர்ஜி