உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar)

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar)

தொடர் : 29 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

உலகில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்க்கு இணையான விஞ்ஞானிகளின் பட்டியலில் எப்போதும் இடம் பெறுபவர் ஜெயந்த் நர்லிக்கர் (JAYANTH NARLIKAR) ஆவார். தற்போது பூனாவில் வசித்து வரும் நர்லிக்கர் உலக அளவில் அறியப்பட்ட வான் இயற்பியல் தொடர்பான நர்லிக்கர் கோட்பாட்டை வழங்கியவர்.  இவருடைய பிறந்த நாளில் தான் இந்தியாவின் அறிவியல் புனைகதை நாளாக கொண்டாடப்படுகிறது. நோபல் பரிசை தவிர ஏனைய அனைத்து பரிசுகளையும் வென்ற அறிஞர் எனும் பெருமையை கொண்டிருப்பவர் ஜெயந்த் நர்லிக்கர்.

ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் இந்திய வான் இயற்பியல் மற்றும் வானியல் இயற்பியலுக்கான பல்கலைக்கழகங்களுக்கான மையத்தில் உயர்நிலை பேராசிரியராக உள்ளார் இவர். சர் பிரெட் ஆயிலுடன் இணைந்து ஆயில் நர்லிகர் கோட்பாடு எனப்படும் இணக்கமான ஈர்ப்பு கோட்பாட்டை முன் மொழிந்தவர். இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு மற்றும் மார்க் கொள்கையை ஒருங்கிணைக்கிறது. துகள் இயல் சம்பந்தமான சமன்பாட்டிற்கு நர்லிக்கர் சமன்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு துகளின் செயலற்ற நிலை என்பது அனைத்து ஏனைய துகள்களின் செயல்பாடாக எப்படி மாறுகிறது என்பதை ஒருவகை மாறிலியால் நாம் சுட்டுகின்றோம். இது பிரபஞ்ச அடிப்படையிலும் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள. மாறிலி ஆகும் இதனை கண்டறிந்து அறிவித்த பெருமை ஜெயந்த் நர்லிக்கர் என்னும் அறிஞரை சாரும்.

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/

ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் 1938 ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று கோலாப்பூர் என்னும் ஊரில் மகாராஷ்டிராவில் பிறந்தார். இவருடைய தந்தையின் பெயர் விஷ்ணு வாசுதேவ் இவர் ஒரு கணிதவியலாளர். வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவருடைய தாயார் சுமதி நர்லிக்கர். மத்திய ஹிந்து ஆண்கள் பள்ளி எனும்  பள்ளியில் ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) தன் பள்ளிக் கல்வியை முடித்தார். 1957 ஆம் ஆண்டு இந்து பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு இளம் அறிவியல் பட்டத்தை இயற்பியலில் பெற்றார். அதன் பிறகு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை தொடர இங்கிலாந்து சென்றார். 1959 அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் Tripos என்ற மிக கடினமான தேர்வை எழுதி உன்னத நிலையில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்தார். அங்கேயே அவருக்கு வானியல் மீதான ஈர்ப்பு அதிகரித்து இருந்தது.

தனது முனைவர் பட்ட ஆய்வின் பொழுது வானியலின் மிக உயர்ந்த பரிசான டைசன் பதக்கத்தை அவர் வென்றிருந்தார். பிரெட் ஆயில் என்னும் அறிஞரின் வழிகாட்டுதலின் பெயரில் வானியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் முனைவர் பட்டம் வென்று அதே கல்லூரியில் ஒரு பேராசிரியர் அந்தஸ்தோடு பணியாற்றத் தொடங்கினார். வானியலில் பெரு வெடிப்புக் கோட்பாட்டுக்கு மாற்றாக கருதப்படும் நிலை மாதிரி கோட்பாட்டில் ஒரு பகுதி ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) அவர்களால வழங்கப்பட்டது. பெரிய அளவில் நிரூபிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. விரிவடையும் பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின் அடர்த்தி மாறாமலிருப்பது, இதனால் சரியான அண்டவியல் கொள்கையை தெளிவுபடுத்தும் விதமாக ஓரளவிற்கு இந்த பிரபஞ்சம் நிலையானதாகத்தான் இருக்கிறது என்பதை அந்த கோட்பாடு நிறுவுகிறது.

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/

Quasi-steady-state cosmology (QSSC) எனும் பிரபஞ்ச மாதிரியை 1993 ஆம் ஆண்டு உலகப் பிரசித்தி பெற்ற பிரெட் ஹோய்ல் (Fred Hoyle) மற்றும் ஜெஃப்ரி பர்பிட்ஜ் (Geoffrey Burbidge) ஆகிய அறிஞர்களோடு இணைந்து ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) வெளியிட்டார். இது நிலையான நிலை யோசனைகளின் ஒரு புதிய அவதாரமாக வானியலில் ஆரம்ப திட்டத்தின் கணக்கில் காட்டாத கூடுதல் அம்சங்களை விளக்குகிறது. இந்த பிரபஞ்ச மாதிரி பிரபஞ்சத்தில் காலப்போக்கில் நிகழும் படைப்பின் முக்கியமான அம்சங்களை பரிந்துரைக்கிறது. சில சமயங்களில் மினி பேங்க்ஸ் அல்லது மினி க்ரியேஷன் என்று அழைக்கப்படும் சிறு நிகழ்வுகளால் பிரபஞ்சம் ஆனது இந்த லிட்டில் பங்க்ஸ் என்கின்ற சிறு நிகழ்வுகள் அங்கங்கு நடைபெறுகின்ற மிக சிறிய புதிய தோற்றங்கள் புதிய நட்சத்திரங்கள் உருவாக இருந்த பொழுது முடுக்கி பிரபஞ்சத்தின் அவதானிப்புக்கு பிறகு நிலை மாதிரி கோட்பாட்டில் சில மாற்றங்களை கொண்டு வந்தது.

PLANK PARTICLE என்பது நர்லிக்கர் கோட்பாட்டில் ஒரு அனுமான கருந்துளை ஆகும். இது தோராயமாக அதன் காம்ப்டன் அலை நீளத்திற்கு சமமாக உள்ளது இத்தகைய ஒரு துகள் ஆவியாதல் விரிவடைந்து வரும் நிலையான நிலை பிரபஞ்சத்தின் மொழிக் கூறுகளின் மூலமாக தூண்டப்படுகிறது. இப்படி விரிவாக எடுத்துரைக்கப்படும் ஜெயந்த் நர்லிக்கரின் பிரபஞ்ச கோட்பாட்டு கணித வரையறைகள் உலகளவில் பேசப்படுகின்றன. அண்டவியலில் வல்லுனர்கள் ஆதரவாளர்களால் பெரிய அளவில் விளக்கப்பட்ட இந்த கோட்பாடு அதற்கு எதிராகவும் பல கருத்துக்களை வரவழைத்தது.

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/

ஆனால் ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) வழங்கிய மற்றொரு கோட்பாடான ஹாரிஸ் நர்லிக்கர் ஈர்ப்பு கோட்பாடு மிக பிரபலமான ஒன்றாகும். பிரபஞ்சத்தின் நிலையான நிலை மாதிரியுடன் பொருந்தி போகின்ற கோட்பாடு ஈர்ப்பு மாறிலி  ஜீ தன்னிச்சையானது மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள பொருளின் சராசரி அடர்த்தியால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்த கோட்பாடு முன்மொழிகிறது. இந்த கோட்பாடு மின் இயக்கவியலுக்கான வீலர் உரிஞ்சும் கோட்பாட்டால் மறுமுறை வர்ணிக்கப்பட்டது. ரிச்சர்ட் பிலிப்ஸ் ஃபெய்ன்மேன் ஒரு பட்டதாரி மாணவராக பிரிட்டனில் நடத்திய வாராந்திர இயற்பியல் கருத்தரங்கில் தொடங்கப்பட்ட ஒரு அம்சமாக இந்த கோட்பாடு இருந்தது. நர்லிக்கரின்  இருப்பு குறித்த இந்த கோட்பாடு மற்றும் இடம் குறித்த விநியோக மாறிலியின் மென்மையான திரவ மாதிரி வரம்பில் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தன்மையை தெளிவு படுத்துவதாக அறிஞர்கள் கருதினார்கள்.

பல அண்டவியல் சோதனைகளுடன் ஹௌஸ் நர்லிக்கர் இருப்புக் கோட்பாடு ஒத்துப்போகிறது என்பதை இன்று உலகம் ஏற்றுள்ளது. நிலையான அண்டவியல் மாதிரியைப் போல் இல்லாமல் அரை நிலையிலான நிறை கருதுகோள் பிரபஞ்சம் நிரந்தரமானது என்பதை குறிப்பிடுகிறது. நர்லிக்கரின் கூற்றுப்படி கோசர்களின் மையத்தில் பல மினி பங்க்குகள் ஏற்படும் பல்வேறு உருவாக்க அம்சங்கள் ஒன்றிணைந்து எதிர்மறை ஆற்றலின் உள் சரிவு காரணமாக வெற்றிடத்தில் இருந்தே பொருட்களை உருவாக்க முடியும் எனவே பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியில் நர்லிக்கரின் கோட்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/

1972 ஆம் ஆண்டு ஜெயந்த் நார்லிகர் (Jayant Narlikar) மும்பையிலுள்ள டாட்டா இன்ஸ்டியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் அமைப்பில் பேராசிரியராக இணைந்தார். இணைவதற்கு முன்பு அவர் ஸ்மித் பரிசு உட்பட பல்வேறு வானியல் பரிசுகளை வென்று இருந்தார். கேம்பிரிட்ஜில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் ஏற்கனவே விரிவுரையாளராக பணியாற்றி இருந்தார். 1966 ஆம் ஆண்டு கேம்ப்ரிட்ஜ்யிலேயே ப்ரெண்ட்ஸ் ஹாயிஸ் கோட்பாட்டு வானியல் நிறுவனத்தையும் அவர் நிறுவியிருந்தார், டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்யில் அவர் கோட்பாட்டு வான் இயற்பியல் குழுவின் பொறுப்பாளராகவும் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய பல்கலைக்கழக மானியக் குழு புனேவில் வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மையத்தை நிறுவிய பொழுது அதன் நிறுவனர் இயக்குநரானார் அவர்.

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/

40 ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெறப்பட்ட அடுக்கு மண்டல காற்று மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரிகளை பிரித்து எடுத்து வளர்க்கும் ஆய்வில் ஒரு பகுதியாக ஜெயந் நர்லிக்கர் இருக்கிறார். அவர் அறிவியல் மற்றும் கணிதத்தில் பாட புத்தகங்களுக்கான ஆலோசனை குழுவில் NCERT அமைப்பால் முன்பு நியமிக்கப்பட்டிருந்தார். இந்தியாவில் அவர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்ம பூஷன் விருது உட்பட பலவற்றைப் பெற்றிருக்கிறார். UNESCO-வின் கலிங்க பரிசு என்கிற உயர்ந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலக அளவில் மாபெரும் அறிஞராக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் JAYANTH NARLIKAR கார்ல் சாகனின் தொலைக்காட்சி நிகழ்ச்சியான காஸ்மோஸ் நிகழ்ச்சியில் ஐன்ஸ்டீன் என்னும் மாமனிதரின் தரத்தின் அளவிற்கு இன்று உலகில் இருக்கும் விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்று அந்த நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யப்பட்டார் என்பது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர் :

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் ஜெயந்த் நார்லிகர் | Indian astrophysicist - Jayant Narlikar - Ayesha Era Natarasan - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

மேலும்  படிக்க கிளிக் செய்யவும்: 1 மாறிலிகள் கையில் பிரபஞ்ச விரிவாக்கம்…. நர்லிக்கரின் ஆடு ஜீவிதம்! – ஆயிஷா. இரா.நடராசன்

2. ஆறாம் சர்வதேச அறிவியல் புனைக்கதையாளர் மாநாட்டில் ஜெயந்த் நர்லிகர், ஆயிஷா நடராசன்

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Sasikumar

    ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் பற்றிய உங்கள் கட்டுரை வானியலிலும் அறிவியல் ஆய்விலும் தங்களின் ஆழமான புரிதலையும் தெரிவிக்கின்றது. நர்லிக்கரின் தனிப்பட்ட மற்றும் கல்வி பயணத்தை அறிவியல் கோட்பாடுகளுடன் இணைத்து விளக்கியுள்ளது கட்டுரைக்கு மெருகேற்றுகிறது. இந்திய விஞ்ஞானிகளின் உலகளாவிய பங்களிப்புகளை வெளிச்சமிட்டுக் காட்டும் பணியில் இந்தக் கட்டுரையும் மிக முக்கியமானது. அறிவியல் துறையில் சிறந்த சாதனையாளர்களின் ஆராய்ச்சிகளை தமிழ் உலகுக்கு எடுத்துரைப்பதில் இந்தக் கட்டுரை மிக முக்கியத்துவம் அடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *