இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy - (Ayesha Era.Natarasan) - https://bookday.in/

இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி

தொடர்- 22 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 

இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி (Manjula Reddy)

பாக்டீரியாவின் செல் சுவர் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள முக்கிய ஹைட்ரோலைடிக் நொதிகளை கண்டுபிடித்து உலகமெங்கும் பேசப்பட்டவர் தான் இந்திய விஞ்ஞானி மஞ்சுளா ரெட்டி. 2019 ஆம் ஆண்டு அறிவியலுக்கான இன்ஃபோசிஸ் விருது பெற்றவர். பாக்டீரியாக்களை ஆய்வு செய்வது மனித மரபணுவை புரிந்து கொள்வதற்கான முக்கியமான ஒரு படிநிலையாக அமைகிறது. மரபணு பிரிவுகள் மற்றும் பிறழ்வு பல்வேறு உடல்நிலை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. பாக்டீரியா செல்களின் சுவர்களை ஆராய்வதன் மூலம் மனித மரபணுவினுடைய மாற்றங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். உலகில் இப்படிப்பட்ட ஆய்வில் ஈடுபடுகின்ற ஒரு சிலரில் மஞ்சுளா ரெட்டியும் ஒருவர்.

ESCHERICHIA COLI வகை பாக்டீரியாக்களில் MEPK எனப்படும் திறந்த சட்டம் குறிப்பிட்ட நுதியாக செயல்பட்டு அவற்றின் சுவர்களை விரிவடைய வைக்கிறது. இந்த நொதி PEPTIDOGLYCAN ஃபேனோ நீர்ம விரிவாக்கமாக தனித்த பாலி சாக்கரைடு ஆக செயல்படுகிறது. PEPTIDOGLYCAN ஒரு நுண் மூலக்கூறு ஆகும். இது சர்க்கரைகள் மற்றும் அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. இது பாக்டீரியா சைட்டோபிளாஸ்மிக் செல் சுவரை சுற்றியுள்ள கண்ணி போன்ற அடுக்கை உருவாக்கிக் கொள்கிறது. N-ACETYLMURAMIC அமிலம் என்பதோடு ஒரு சங்கிலித்தொடரை 3 – 5 அமினோ அமிலங்களை வைத்து உருவாக்குகிறது. பாக்டீரியா செல் சுவரில் இது போன்ற மாற்றங்கள் உருவாகும் அதே செயல்பாடுதான் மரபணு பிறழ்வு ஏற்படும் பொழுது நிகழ்கிறது.

இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy - (Ayesha Era.Natarasan) - https://bookday.in/
இது மிகவும் சிக்கலான ஆராய்ச்சி ஆகும். மைக்கோபாக்டீரியம் என்று அழைக்கப்படும் மில வேக பாக்டீரியா இனம் மட்டுமே ஆய்வுகளின் மூலம் சில முக்கிய தகவல்களை மரபணு மாற்ற இயலுக்கு வழங்க முடியும். அந்த பாக்டீரியாக்களை  ஆய்வகத்தில் வளர்ப்பதே பெரிய சவாலாகும். 3.0-5.0 மைக்ரான் நீளம் மட்டுமே கொண்ட பாசில்லஸ் வடிவத்தோடு இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் அதற்கென்றே தயாரிக்கப்பட்ட விசேஷமான நுண்நோக்கிகளால் மட்டுமே ஆய்வு செய்ய முடிந்தவை ஆகும். M.SMEGMATIS எனும் வகை பாக்டீரியா முன்பு அசையாத உயிரினமாக கருதப்பட்டது.

அதன் சுற்றுசூழலை சுற்றி செல்ல அனுமதிக்கும் ஒரு நிகழ் பொறி முறையை அது பயன்படுத்துகிறது என்பதை மஞ்சுளா ரெட்டி கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். பாக்டீரியாக்கள் தனக்கென்று ஒரு சமூக கலாச்சாரத்தைப் பேணுகின்றன இந்த வளரும் கலாச்சாரத்தில் விரிவடையும் சக்திகளால் உருவாக்கப்பட்ட ஒரு வகையான மேற்பரப்பு இடமாற்றம் செல்களின் சிறப்பு மேற்பரப்பு பண்புகள் உடன் இணைந்து செல் மற்றும் அடி மூலக்கூறு இடையே உராய்வை குறைத்து பாக்டீரியாக்களை தங்கள் சமூகத்திற்குள் இங்கும் அங்கும் நடமாட வைக்கிறது என்பது மஞ்சுளா ரெட்டியின் அற்புதமான கண்டுபிடிப்பு.

இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy - (Ayesha Era.Natarasan) - https://bookday.in/M.SMEGMATIS பெற்றுள்ள தனித்துவமான செல் சுவரின் மேல்பரப்பு பண்புகள் ஒரு குறிப்பிட்ட பண்பு பாத்திரத்தை வகிக்கின்றன. எடுத்துக்காட்டாக இந்த நெகிழ்திறன் செல்சுவர் வெளிப்புறத்தில் கிளாக்கோ பெட்டிட் டோலிபிட்டுகள்  என்று அழைக்கப்படும் ஒருவகையில் நொதிகளால் ஆனவை அவரை நம்முடைய வானொலி பெட்டி அல்லது டிவியினுடைய சத்தத்தை குறைக்கவோ அதிகப்படுத்தவோ நம்மால் முடிவது போல மேற்பரப்பு தொடர்புகளை குறைக்கவோ அதிகப்படுத்தவோ ஒரு ஜவ்வாக பயன்படுகின்றன.  இந்த வகை பாக்டீரியாக்கள் தங்களுக்கான ஆற்றலைப் பெறுவதற்காக ஆக்ஸிஜனேற்றத்தின் வழியே வினையூக்கம் பெற்று பசுமை மின்னாற்றலை உருவாக்கிக் கொள்கின்றன. எனவே எதிர்காலத்தில் நம்மால் இவ்வகை பாக்டீரியாக்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.
இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy - (Ayesha Era.Natarasan) - https://bookday.in/
இப்படிப்பட்ட பிறழ்வுகள் மற்றும் இந்த பிறழ்வுகளுக்கான எதிர்ப்புகள் குறித்த நேரடி அடையாளம் காணும் செயல்முறைக்கு காப்புரிமை பெற்ற விஞ்ஞானி மஞ்சுளா ரெட்டி ஆவார். 1999 ஆம் ஆண்டு இந்த காப்புரிமை வழங்கப்பட்டது. இந்த விஞ்ஞானிகள் குழுவில் இருந்த ஏனைய விஞ்ஞானிகள் ஜெயராமன் கௌரிசங்கர் மற்றும் சாந்தி வரதன் ஆகியோர் ஆவர். இது முழுக்க முழுக்க இந்திய நுண்ணுயிரி ஆய்வு குழுவின் வெற்றியாகும். இந்த ஆய்வுகள் தொடர்கின்றன விரைவில் பாக்டீரியாக்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மிக முக்கிய படிநிலையை இந்த ஆய்வுக் குழு மஞ்சுளா ரெட்டியின் தலைமையில் கண்டிப்பாக அடையும் என்பதில் சந்தேகமில்லை.

மஞ்சுளா ரெட்டி 1965 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் 1985 இரண்டு நுண்ணுயிரியியல்  முனைவர் பட்டம் பெற்றார். அதற்கு முன் உயிரியல் பாடத்தில் பட்டப்படிப்பும் முதுகலை பட்டமும் பெற்றவர். புது தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு பிறகான முக்கியமான பல ஆய்வுகளை முன்வைத்து வெற்றி கண்டார். தற்போது ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.
இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy - (Ayesha Era.Natarasan) - https://bookday.in/தன்னுடைய தந்தை மோகன் ரெட்டி மற்றும் தன்னுடைய தாயார் தான் விஞ்ஞானி ஆவதற்கு பெரிய துணை புரிந்ததாக சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டார். மஞ்சுளா ரெட்டி ஒரு இதயநோய் நிபுணரை திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களோடு தன் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே ஹைதராபாத்னுடைய நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக வெற்றிகரமாக தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வருகிறார்.

கட்டுரையாளர் :

இந்திய பாக்டீரியா மரபணுவியல் அறிஞர் மஞ்சுளா ரெட்டி - Indian bacterial geneticist Manjula Reddy - (Ayesha Era.Natarasan) - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய வேதியியலாளர் தேபப்ரதா கோஸ்வாமி

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *