உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Indian Biologist Chandrima Shaha) - திருமணம் ஆகும் சில பெண்கள் கருவுறாமை | மணல் ஈக்கள்

உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா!

உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Chandrima Shaha)
தொடர் 93: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

கல்கத்தாவிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் பயோலஜி நிறுவனத்தில் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் தான் சந்திரிமா சாஹா (Chandrima Shaha). இந்திய தேசிய அகாடமியின் தலைவராக இருந்தவர் மேற்கு வங்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அகாடமி மற்றும் சர்வதேச அறிவியல் அகாடமி ஆகிய அமைப்புகளில் கௌரவ் உறுப்பினராகவும் உள்ளார். திருமணம் ஆகும் சில பெண்கள் கருவுறாமை எனும் நிலையால் பிடிக்கப்படுவது ஏன் என்பது குறித்த இவருடைய ஆய்வு முடிவுகள் உலக பிரசித்தி பெற்றவை..

சந்திரிமா சாஹா (Chandrima Shaha) சார்ந்திருக்கும் துறை மருத்துவ உயிரியல் என்று அழைக்கப்படுகிறது. சாஹாவின் ஆராய்ச்சி திட்டம் பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வடிவமைப்பதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது. யூனி செல்லுலார் மற்றும் மல்டி செல்லுலர் உயிரினங்களில் உயிர் அணு இறப்பு பாதைகள் மற்றும் செல்லுலார் பாதுகாப்பு செயல்முறைகளை புரிந்துகொள்வதற்கு இவருடைய ஆய்வுகள் மிகவும் பயன்படுகின்றன.

உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Indian Biologist Chandrima Shaha) - திருமணம் ஆகும் சில பெண்கள் கருவுறாமை | மணல் ஈக்கள்

சந்திரமா ஆய்வு செய்த நோய்களில் மிக மிக முக்கியமானது கருப்பு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கலா அசார் (Kala Azar) நோயாகும். இந்த நோயின் மருத்துவ பெயர் உள்ளுறுப்பு லிஷ்மேனியாசிஸ், சரியான நோயறிதல் மற்றும் சிகிச்சையின்றி இந்திய துணைக் கண்டம் மற்றும் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போகிறார்கள். கருப்பு காய்ச்சல் நோய் என்பது லிஸ்மானியா என்கிற இனத்தைச் சேர்ந்த புரோட்டோசோவான் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோயாகும்.

இந்த வகை ஒட்டுண்ணி கல்லீரல் மண்ணீரல் மற்றும் எலும்பு மச்சை போன்ற உள்ளுறுப்புகளுக்கு இடம் பெயர்வதால் அதிக ஆபத்துகள் உருவாகின்றன. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் எப்போதும் மரணமே சம்பவிக்கிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல் எடை இழப்பு சோர்வு ரத்தசோகை மற்றும் ஸ்கேன் கருவி மூலம் அறியப்படுகின்ற கல்லீரல் மற்றும் மண்ணீரலின் கணிசமான வீக்கம், முதல்படி நிலையில் சாதாரண காய்ச்சலுக்கான மருந்துகள் மூலம் குணமாவது போன்ற ஒரு தோற்றத்தை இந்த நோய் கொடுப்பதால் கண்டறிந்து குணப்படுத்துவது அரிதான ஒன்றாய் இருக்கிறது.

உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Indian Biologist Chandrima Shaha) - திருமணம் ஆகும் சில பெண்கள் கருவுறாமை | மணல் ஈக்கள்

இந்த நோய் ஏற்படுவதற்கான இரண்டு முக்கிய காரணங்களை விஞ்ஞானி சாஹாவின் கண்டுபிடிப்புகள் வெளியிட்டுள்ளன. லூக்சோனியா என்னும் பூச்சிகள் இனத்தைச் சேர்ந்த மணல் ஈ எனும் சிறிய ஈக்கள் வகை இந்த நோய் பரப் பு வதை அவர் கண்டறிந்தார். SAND FLY என்பது உயிரியல் ரீதியில் PHLEBOTOMINAE என்று அழைக்கப்படும் இனமாகும். இந்த வகையில் லிஷிமோனியாஸ் என்னும் வகையின் இந்த ஈக்கள் மனித ரத்தத்தை உறிஞ்சி உயிர் வாழ்கின்றன.

இந்தியா மாதிரியான வெப்பநிலை அதிகமுள்ள பகுதிகளில் இவை வாழ்கின்றன இந்த ஈக்கள் மிகச் சிறியவை சுமார் மூன்று மில்லி மீட்டர் நீளம் கொண்ட உடல் அளவு. இந்த பூச்சி இனத்தினுடைய மோசமான விளைவு என்னவென்றால் இவற்றின் கடி ஒருபோதும் உணரப்படுவதில்லை. ஆனால் சிறிய வட்டமான சிவப்பு நிற அடையாளத்தை விட்டுச் செல்கின்றன. பல மணி நேரங்கள் அல்லது நாட்களுக்கு பிறகு அறிப்பு தொடங்குகிறது. மணல் ஈக்கள் இருக்கும் பகுதிகளில் முதலில் பூச்சிவிரட்டிகளை பயன்படுத்த அவர் அறிவுறுத்தினார்.

உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Indian Biologist Chandrima Shaha) - திருமணம் ஆகும் சில பெண்கள் கருவுறாமை | மணல் ஈக்கள்

மணல் ஈக்கள் பெரும்பாலும் இந்த வகை பூச்சிகளின் பெண் ஈக்கள் முதுகெலும்பில் இருந்து ரத்தத்தை உறிஞ்சியதால், இந்த அறிப்புகள் சில. மனிதர்களால் அடையாளம் காணப்படுவதே இல்லை. LEISHMANIA வகையைச் சேர்ந்த இந்த ஈக்களால் ஏற்படும் உடலியலின் பின்விளைவுகளை எப்படி மாற்றத்துக்கு சிகிச்சை முறை படி உட்படுத்துவது என்பதை ஆய்வு செய்து அவர் வெற்றி பெற்றார். நம் உடலுக்குள் நுழைகின்ற இந்த ஒட்டுண்ணியின் மரணம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

ஏனெனில் ஒட்டுண்ணியை வெற்றிகரமாக கொள்வது நோய் சுமையை குறைக்கும் இந்த ஒட்டுண்ணியின் மெட்டாசோவா போன்ற மரண ஃபேனோநைட்களை இயக்குகின்ற திறனை இவருடைய ஆராய்ச்சி நிரூபித்தது. ஆரம்ப கால கோரி ஓட்டுகளில் ஒன்றின் மரணம் போன்ற ஒரு அசம்பாவிதம் போதும் இந்த ஒட்டுண்ணிகள் ஒவ்வொன்றாக தங்களைத் தானே மாய்த்துக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்தார். இதற்கு முக்கியமான தடையமாக இவர் கண்டறிந்தது Bcl-2 எனும் புரதம் ஆகும்.

புற்றுநோய் செல்கள் மற்றும் பாலூட்டிகளில் வருகின்ற கிருமி சிக்கல்களால் கருவுறாமை என்கிற நிலை ஏற்படுவதையும் இவர் கண்டறிந்தார். மன அழுத்தத்தால் தூண்டப்படும் உயிரணு பிரிவுகளில் சிலவகை குறியீடுகள் கருவுறாமை காரணத்தை இவருக்கு துல்லியமாக விவரிப்பதாக அமைந்தன. மன அழுத்தம், நகரமயமாக்கம், பணி சுமை உட்பட பல காரணங்களால் மணமான பெண்களுக்கு அவர்களுடைய உடல்களில் மரபணுக்கள் தூண்டப்படுகின்றன. இவ்வகை தூண்டுதலை பெறுகின்ற மரபணுக்களை கண்டறிந்து அவற்றை சரி செய்வதன் மூலம் கருவுறாமை என்பது தவிர்க்கப்பட முடியும் என்பது இவரது இன்னொரு முக்கியமான ஆய்வு முடிவு ஆகும்.

உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Indian Biologist Chandrima Shaha) - திருமணம் ஆகும் சில பெண்கள் கருவுறாமை | மணல் ஈக்கள்
சந்திரிமா சாஹா (Chandrima Shaha)

சந்திரிமா சாஹா (Chandrima Shaha) கொல்கத்தாவில் 1952 ஆம் ஆண்டு பிறந்தார் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் Bsc உயிரியல் பாடத்தை எடுத்து படித்தார். அங்கேயே முதுகலை படிப்பை முடித்த பிறகு இந்திய வேதியியல் உயிரியல் நிறுவனத்தில் 1980 ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டத்திற்கு பிந்தைய பணிக்காக இவர் அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வகத்தில் தன்னுடைய ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்தார். நியூயார்க் நகரின் உடைய மக்கள் தொகை கவுன்சில் எனும் அமைப்பில் ஏனைய ஆராய்ச்சிகளுக்காக குறிப்பாக AIDS நோய் கட்டுப்பாட்டு ஆலோசகராக இணைக்கப்பட்டார்.

1983 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் அலகாபாத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் நிறுவனத்தில் ஆய்வுகளைத் தொடர்ந்தார். பெங்களூரின் இந்திய அறிவியல் அக்கடமியிலும் அவர் பல காலங்கள் பணிபுரிந்தார் செப்டெம்பர்2021 ஆண்டில் J.C. போஸ் பேராசிரியராக இவர் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் பயோலஜி.. கொல்கத்தாவில் நியமிக்கப்பட்டார்.

சந்திரிமா சாஹா (Chandrima Shaha) உலக சுகாதார நிறுவனம் ஜெனிவாவில் நடத்திய MALE FERTILITY குறித்த சர்வதேச கருத்தரங்கில் அதை முன்னின்று நடத்துகின்ற உயர்மட்ட குழுவில் இருந்தார். கோவிட் 19 காலத்தில் இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச் நிறுவனத்தின் அடிப்படை ஆலோசகர் எனும் அந்தஸ்தை பெற்றார். பல்வேறு விருதுகளின் சொந்தக்காரரான இவர். 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். நோய் தடுப்பு சிகிச்சை முறை மற்றும் பெண்களின் கருவுறாமை சிக்கல்களில் உலக அளவிலான நிபுணராக இவர் திகழ்வது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. HariKrishnan S

    நோய் தடுப்பு சிகிச்சை முறை மற்றும் பெண்களின் கருவுறாமை சிக்கல்களில் உலக அளவிலான நிபுணரான விஞ்ஞானி சந்திரிமா சாஹா அவர்கள் குறித்து அறிந்ததில் மகிழ்ச்சி ஐயா.

    நம் நாட்டு வாழும் அறிவுசார் பொக்கிஷங்களை தினமும் அறிமுகம் செய்து சிறப்பாக எழுதி வரும் தங்களுக்கு நெஞ்சு நிறை நல்வாழ்த்துக்களும் பாராட்டுகளும் ஐயா 🙏.

    • Era

      Thank you Harikrishnan sir.. I came to know yesterday that you are sharing my web series with 500 connections everyday.. Great job.. thanks a ton🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *