இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன் | Indian biophysicist Raghavan Varadarajan - Protein - Myoglobin - HIV1 - https://bookday.in/

 இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன்

தொடர்- 19 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

 இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன் (Raghavan Varadarajan)

மருத்துவத்துறை என்பது உயிரியலை மட்டுமே நம்பி இருப்பதில்லை அது வேதியியல், இயற்பியல், நானோ தொழில் நுட்பவியல் என்று அனைத்தையும் நம்பி இயங்கிக்கொண்டிருக்கிறது. மரபணுவியல் தனித்து இயங்க முடியாது. மரபணு பொறியியல் என்பது மிக முக்கியமான உயிரி இயற்பியல் துறையாகும். மனிதனின் புரதங்கள் அவற்றின் அமைப்பு மடிப்பு செயல்பாடு ஆகியவை குறித்த தன்னுடைய ஆய்வுகளுக்காக உலக அளவில் பிரபலமாக இருப்பவர்தான் இந்திய உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன்.

இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்டீபன் ஜீ பாக்ஸர் என்பவரின் மிக பிரபலமான நுண்ணுயிரி ஆய்வுக்கூடம் உள்ளது. இந்த ஆய்வகத்தில் ராகவன் வரதராஜன் ஆரம்ப கால ஆராய்ச்சிகள் பலவற்றை செய்தார். புரத மூலக்கூறுகளின் தொடர்பு மற்றும் அவற்றின் தொடர் பண்புகள்ல் கவனம் செலுத்தினார். அவர் மனித மயோகுளோபின் எனும் அமைப்பில்  ஒரு புரதத்தில் குழி விழுவதை இதனால் தொடர்புடைய கட்டமைப்பு மற்றும் வெப்ப இயக்கவியல் மாறுபாடுகளை தீவிரமாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தின் தன் ஆய்வுகளைத் தொடர்ந்த அவர் புற தங்களின் ஒழுங்கற்ற நிலைகளை வகைப் படுத்துவதற்காக ஒரு புதிய படிகல் மற்றும் காந்த அதிர்வு ஹைட்ரஜன் பரிமாற்ற நெறி முறையை கண்டுபிடித்தார். இந்த நெறிமுறைகளின் வழியே அவர் அடைந்தது தான் HIV 1 என்கிற சர்வதேச எய்ட்ஸ் தடுப்பூசி முறை. இதுகுறித்து மொத்தம் 14 ஆய்வுக் கட்டுரைகளை தொடர்ந்து அவர் வெளியிட்டார் அவருடைய ஆய்வுகளின் காரணமாக ஒரு காலத்தில் மிக தீவிரமாக ஆள் கொல்லி நோயாக இருந்த இந்த AIDS எனும் கொடிய அரக்கன் முற்றிலும் ஏறத்தாழ அழிக்கப்பட்டுவிட்டான்.

HIV 1: epidemiology, pathophysiology and transmission | Nursing Times

அவர் வேலை செய்த துறை ஹீமோபுரோட்டீன் துறை என்று அழைக்கப்படுகிறது. ஹீமோபுரோட்டீன்களை இயற்பியல் துறையினுடைய நுணுக்கமாக அணு துகள் இயலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்யும் பொழுது நானோ கருவிகளைக் கொண்டு நம்மால் பல நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மெட்ரோ புரோட்டீன்கள் என்கிற பெரிய ஒரு குழுவின் ஒரு அம்சமாக இந்த ஹீமோ புரோட்டீன்கள் விளங்குகின்றன இவற்றைப் படிக இயலுக்கு உட்படுத்தும் பொழுது செல்களில் இவர்களின் செயல்பாட்டை துல்லியமாக அறிய முடிகிறது. செல்லுக்குசெல் ஆக்சிஜனை எடுத்துச் செல்லுதல் தேவைப்பட்டால் ஆக்ஸிஜனைக் குறைத்தல் எலக்ட்ரான் பரிமாற்றம் மற்றும் பிற செயல்முறைகள் இத்தகைய புரோட்டீன்களின் வேலைகளில் அடங்கும்.

ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் எனும் ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து இருப்பதற்கு இந்த புரோட்டீன்கள் மிகவும் தேவை. இந்த HEMO PROTIENS இல்லாமல் போவதால் மனிதர்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாமல் தகர்ந்து போகிறது. இதை சரிசெய்வதற்கு-ஹிம் பயண்டிங் எனும் புதிய முறையில் செயற்கையாக இவைகளை உற்பத்தி செய்து மனித உடலுக்குள் செலுத்துகின்ற ஒரு கருவியை தான்  ராகவன் வரதராஜன் யேல் பல்கலைக்கழகத்தில் அறிஞர் ஃப்ரெடரிக் ரிச்சர்ட்ஸ் என்பவரோடு இணைந்து உருவாக்கி இந்தியாவின் தொழில்துறைக்கு வழங்கினார்.

மூலக்கூறு உயிரி இயற்பியல் என்னும் துறையில் தனக்கென்று பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி தடம் பதித்தவர் ராகவன் வரதராஜன். மனித உடலின் மயோகுளோபின் என்று ஒரு வகை புரதம் உள்ளது. இது இரும்பு மற்றும் ஆக்சிஜன் பிணைப்பு புரதம் ஆகும். பொதுவாக முதுகெலும்புகளின் இதயம் மற்றும் எலும்பு தசை செல்களில் கிட்டத்தட்ட அனைத்து பாலூட்டிகளிலும் இது காணப்படும். ஹீமோகுளோபின் உடைய அளவு இந்த மயோகுளோபினோடு தொடர்புடையது என்பதை மருத்துவ துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை மாறாக ராகவன் வரதராஜன் தன்னுடைய துகள் இயற்பியல் நானோ கருவிகளின் மூலம் கண்டறிந்து வெளியிட்டார்.

இவற்றை கண்டறிய புரத மடிப்பு எனும் இயற்பியல் செயல்முறையை முழுமையாக நாம் கற்க வேண்டும். இதன்மூலம் ஒரு புரதம் அமினோ அமிலங்களின் நேரியல் சங்கிலியாக ஒரு ரைபோசோம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு ஒரு நிலையற்ற சீரற்ற சுருளாக மாறுகிறது. இது ஒரு முப்பரிமான அமைப்பு இப்படி அமையும் பொழுது மட்டும் தான் புரத்தை அது உயிரியல் ரீதியில் செயல்பட அனுமதிக்கிறது. இயற்பியலில் புரத இயக்கவியல் என்னும் துறை இதற்காகவே செயல்படுகிறது. செல்லின்  செயல்பாட்டுக்கு சரியான முப்பரிமான அமைப்பு அவசியம் இருந்தாலும் செயல்பாட்டு புறங்களில் சில பகுதிகள் விரிவடையாமல் போகலாம் ஒரு புரத்தின் கட்டமைப்பு மடிக்க தவறுவது பொதுவான செயலற்ற புரதங்களை உருவாக்கி விடும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் தவறாக மடிக்கப்பட்ட புரதங்கள் மாற்றி அமைக்கப்பட்ட அல்லது நச்சு செயல்பாட்டைக் கொண்டுள்ளன. நீரோ- ஜெனரேட்டிவ் நோய்கள் என்பவை இப்படி தவறாக மடிக்கப்பட்ட புரததங்களால் ஏற்படும் நோய்களாகும்.

ராகவன் வரதராஜன் புரத ஏற்பிகளின் மூன்று அடிப்படை சோதனை உண்மைகளை வெளியிட்டு இருக்கிறார்.

1. புரதங்கள் ஒரு விதியாக செயல்படுகின்றன நன்கு வரையறுக்கப்பட்ட முப்பரிமான கட்டமைப்பாக செயல்படுகின்றன.
2. புரத சங்கிலிகள் சுய ஒழுங்கமைக்கும் திறம் கொண்டவை அதாவது அவை தகுந்த சூழலில் தன்னிச்சையாக பூர்வீக கட்டமைப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன.
3. இந்த புரத சங்கிலிகளை தனது விரிந்த நிலையில் இருந்து அனைத்தையும் அல் லது அனைத்தையும் இல்லை என்கின்ற இரண்டே மாற்றங்கள் மூலம் பிரித்து அறியப்படுகின்றன.

புற கட்டமைப்பின் உறுதித்தன்மையையும் அதன் செயல்பாட்டையும் பொறுத்து ஒரு மனிதனின் உடலின் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகிறது.

ராகவன் வரதராஜன் 1960 இல் பிறந்தார். கான்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் தனது பட்டப் படிப்பையும் முதுகலை பட்டங்களையும் இயற்பியலில் முடித்தார். ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் வென்றார். 1992 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கௌரவ பேராசிரியர் ஆனார். பெங்களூருவை தளமாகக் கொண்ட இந்திய அறிவியல் கழகத்தில் முதன்மை விஞ்ஞானியாகப் பணியாற்றுகிறார்.

இந்திய தொழில் மற்றும் அறிவியல் துறையின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, உயிரியல் அறிவியல் துறையின் ஜீ என் ராமச்சந்திரன் தங்கப் பதக்கம் உட்பட பல விருதுகளை பெற்றவர் அவர். இந்திய தேசிய அறிவியல் அகாடமி மற்றும் இந்திய அறிவியல் அகாடமியின் கௌரவ உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்டுரையாளர் :

உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அயன் பானர்ஜி | World renowned Indian Physicist Ayan Banerjee - Optical tweezers - Nano-Optics - https://bookday.in/
ஆயிஷா இரா. நடராசன்

 

 

 

 

 

 

 

 

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய இயற்பியலாளர் அயன் பானர்ஜி(Ayan Banerjee)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Dr.P.Sasikumar

    இயற்பியலில் புரத இயக்கவியல் என்ற துறை உயிரிகளோடு எவ்வளவு தொடர்புடையது என்பதை இவருடைய ஆராய்ச்சியை பற்றி அறிந்த பொழுது தெரிந்து கொண்டேன். நான் படித்த காலத்தில் கொடிய நோயாக இருந்த எச்ஐவி யின் தீவிரம் எப்படி குறைந்தது என்பதையும் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *