உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Indian Marine Scientist Syed Wajih Ahmad Naqvi) - கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி

உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Syed Wajih Ahmad Naqvi)

உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Syed Wajih Ahmad Naqvi)
தொடர் 94: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

கடல் விஞ்ஞானியான சையத் வாஜி அகமது நக்வி (Syed Wajih Ahmad Naqvi) தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் ஆவார். கடல்நீர் வேதியியல், உயிர் புவி வேதியியல், மற்றும் உயிரினங்கள் உடனான தொடர்புகள் குறித்த இவருடைய ஆராய்ச்சிகள் உலகெங்கும் பேசப்படுகின்றன. CSIR நிறுவனத்தின LOHAFEX என்று அழைக்கப்படும் கடலில் இருந்து இரும்பு தாதுக்களை எடுக்கும் பரிசோதனையில் வெற்றி கண்டு பெரிய அளவில் பேசப்பட்டவர்.

அகமது நக்வி கடல் ஆராய்ச்சியோடு நன்னீர் சுற்றுசூழல் அமைப்புகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார். இவர் 1954ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா எனும் ஊரில் பிறந்தார். அஜிஸ் பாத்திமா மற்றும் சிட்டே முகமது ஆகியோரின் ஏழு குழந்தைகளில் மூன்றாமவர் அவர். ஆரம்ப பள்ளியை தன்னுடைய அம்ரோஹாவிலேயே முடித்து பரேலியில் உள்ள FR இஸ்லாமியா கல்லூரியில் தன்னுடைய இளம் அறிவியல் பட்டத்திற்கு உயிரியலை எடுத்துக் கொண்டார். அங்கேயே முதுகலை பட்டமும் முடித்த பிறகு 1974 ஆம் ஆண்டு இயற்பியல் வேதியியல் துறையில் கவனம் செலுத்த தொடங்கினார். கோவாவில் அமைந்திருக்கும் நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஓஷன்கிராபி (NIO) கல்வி நிறுவனத்தில் CSIR ஆதரவுடன் ஜூனியர் ரிசர்ச் பெலோசிப்பை மேற்கொண்டார்.

அகமது நக்வி சார்ந்திருக்கும் துறை கடலில் உள்ள வேதி பொருட்களை ஆய்வு செய்யும் துறையாகும். தன்னுடைய ஆரம்ப ஆய்வு காலத்தில் அவர், டாக்டர் ஆர் சென்குப்தா எனும் பிரபல விஞ்ஞானியால் வழிநடத்தப்பட்டார். பூனா பல்கலைக்கழகத்தில் 1987 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Indian Marine Scientist Syed Wajih Ahmad Naqvi) - கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி

அரபிக்கடலில் ஆக்சிஜன் குறைந்தபட்ச மண்டலம் என்கிற ஒரு பகுதி உள்ளது. உயிரியல் ரீதியாக ஒரு வகையான வேதி மாற்றங்கள் மூலம் இங்கு உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்ததற்கான மைய புள்ளிகள் உள்ளன. அவர் ஆய்வுக்கு இறங்கிய கால கட்டத்தில் அவை அதிகம் அறியப்படவில்லை. இந்த பகுதியில் அரியவகை உயிரினங்கள் இருப்பதை அவர் உறுதி செய்தார். இந்த பகுதியில் டிநீட்ரி ஃபேகேஷன் வகையான அளவீடுகள் அதிகம் இருப்பதையும் அவர் உறுதி செய்தார். இதன்மூலம் இடம்சார்ந்த அளவுகளோடு உயிரினத்தினுடைய தற்காலிக மாறுபாட்டை பட்டியலிட்டார்.

சர் சார்லசு டார்வின் கேல ஃபோகஸ் தீவுகளில் ஒரு தீவிற்கும் இன்னொரு தீவுக்கும் இடையே ஆமைகளினுடைய அமைப்பு மாறுபடுவதை உறுதி செய்ததை போலவே, கடல் பிராந்தியத்தில் அரபிக் கடலின் குறைந்தபட்ச ஆக்சிஜன் மண்டலத்தில் உயிரினங்கள் ஒரு இடத்திற்கு இன்னொரு இடத்திற்கு அவற்றின் உடலியல் ரீதியில் மாறுபடுவதை பதிவு செய்தவர் அகமது நக்வி. இந்த ஆராய்ச்சி உலக அளவில் பிரசித்தி பெற்றது.

நக்வி அரபிக்கடல் உலகின் மிகப்பெரிய கடல்சார் நீக்கம் செய்யும் தளம் என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார், இது உலகளாவிய நீர் நிரலை நீக்குவதில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. அவரது முடிவுகள் கிழக்கு பசிபிக் பிராந்தியத்துக்கு முற்றிலும் மாறாக அதிகமான உயிரி பன்முகத்தன்மைங்கள் நிலவுகின்ற தீவிரமான டிநீட்ரி ஃபேகேஷன் மண்டலங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் இந்தப்பகுதி பெரும் ஆபத்தில் இருப்பதை அவரது ஆய்வுகள் உலகிற்கு வெளிப்படுத்தின.

உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Indian Marine Scientist Syed Wajih Ahmad Naqvi) - கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி | Iron Fertilization - Woods Hole Oceanographic Institution

OMZ என்கிற குறைந்தபட்ச ஆக்சிஜன் மண்டலம், மேலும் உயிர்க்காற்றின் குறைபாடுகளால் ஆபத்தான விளைவுகளில் சிக்கியுள்ளது, சுவாச விகிதங்கள் பாதிக்கப்படுகின்றன. மேல் பரப்பு அடுக்கிலிருந்து முழுகுகின்ற துகள்களால் வழங்கப்படும் கரிமப் பொருட்கள் இதற்கு மேல் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாகி வருகின்றன. இந்த கடல் பிராந்தியத்தின் நைட்ரஜன் சுழர்ச்சி எப்படி ஏற்படுகின்றது என்பதை நக்வி உலகிற்கு அறிவித்தார். பல்வேறு முறையில் இங்கு கரைந்திருக்கும் நைட்ரஜன் ஐசோடோப்புகளின் இயற்கையான மிகுதி குறித்த முதல் விரிவான தகவல்களை தரவுகளாக வெளியிட்டவர் அகமது நக்வி.

வட இந்திய பெருங்கடலில் கடல் உயிர் புவி வேதியியலின் உலகளாவிய மாற்றத்தின் தாக்கங்களை ஆராயும் அவரது முயற்சிகள் அடுத்ததாக அமைந்தன. எதற்காக உயிரை பணயம் வைத்து கடலுக்குள் கருவிகளுடன், ஆழத்திற்கு சென்று வேதிப்பொருட்களின் உடைய இருப்புகளை அவர் ஆய்வுக்கு உட்படுத்தினார். இந்த ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக அகமது நக்வி பசுமை இல்ல வாயுக்கள் கரியமில வாயு நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் விரிவான செயல்முறைகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

திறந்த கடல் மற்றும் பருவ கால முக்கிய புள்ளியாக திகழ்கின்ற கடலோர ஹைபுக்ஸ்க் என்னும் மண்டலத்தில் குறைந்தபட்ச ஆக்சிஜன் மண்டலம் உள்ளது. வட இந்திய பெருங்கடலின் இந்தப் பகுதிதான் உலகிலேயே மிகப்பெரிய குறைந்த ஆக்சிஜன் மண்டலம். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் கரியமில வாயு தீவிரம் காரணமாக வாழ்க்கை வளங்களை பாதிக்கிறது.

அவரது மூன்றாவது மிக முக்கியமான பங்களிப்பு, இந்தியாவின் CSIR நிறுவனம் முன்வைத்த LOHAFEX கடல் ஆய்வு ஆகும். இந்த ஆய்வு இந்தியா மற்றும் ஜெர்மனியிலுள்ள ஹெல்ப் ஹோஸ்ட்ஸ் அசோசியேஷன் எனும் அமைப்புடன் இணைந்து செயல்பட்ட கடலில் இரும்பு தாதுக்கள் எப்படி உற்பத்தி ஆகின்றன என்பது குறித்த முக்கிய ஆராய்ச்சியாகும்.

உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Indian Marine Scientist Syed Wajih Ahmad Naqvi) - கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி

அதுமட்டுமல்ல இரும்புத்தாது அதிகம் காணப்படும் இடங்களில் கடல் உயிரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. கடல் நீரில் உருவாகும் ஒரு வகையான பாசிகள் கரியமில வாயுவை உள்ளே இழுத்துக்கொண்டு காலப்போக்கில் இரும்புத் தாதுவாக மாறுகின்றன என்கிற அறிவியல் உண்மை சரிதானா என்பதை பரிசோதிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

2009 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தன்று இந்த சோதனை தொடங்கப்பட்டது. 48 டிகிரி மைய கோணத்தில் அந்த பகுதியில் ஒரு சூறாவளி சூழல் கருத்தரிப்பதாக அறிந்த பொழுது அந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. கடல் நீரில் கரைக்கப்பட்ட 10 டன் இரும்பு சல்பேட் 300 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு சூழலால் எடுத்துச் செல்லப்பட்டது. இது உலக அளவில் நடைபெற்ற மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றாகும். 38 நாட்களுக்கு கடல் மீதான இரும்பு சேர்க்கையின் விளைவுகளை அகமது நக்வி ஆய்வு செய்தார்.

கடலில் போடப்பட்ட இரும்பு பல வகையான வேதி மாற்றங்களுக்கு உட்பட தொடங்கியது. ஆனால் விரைவில் பாதிப்புகளை தூண்டி வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை உறிஞ்ச தொடங்கியது. இதனை முழுமையாக ஆய்வு செய்ய ஜெர்மனியின் POLARSTERN எனும் ஆய்வுக் கப்பல் அகமது நக்வி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பாசி பூக்கள் ALGAL BLOOM என்று அழைக்கப்படுகின்றன, ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இரும்புத் தாதுக்களின் மேல் தான் இந்த பாசிப் பூக்கள் முளைக்கின்றன என்பதை நக்வி கண்டுபிடித்து அறிவித்தார். பாசி பூக்கள் இரும்புத் தாதை உருவாக்கவில்லை இரும்புத் தாதுக்கள் தான் கடலிலுள்ள உப்போடு வினைபுரியும் போது அங்கு பாசிகளை உற்பத்தி செய்கின்றன.

எனவே செயற்கையாக பாசி பூக்களை கடலில் உற்பத்தி செய்வதை நிறுத்தி விடுமாறு, அவர் ஜெர்மன் அமைப்புகளுக்கு குரல் கொடுத்தார். இவ்வகையில் செயற்கையாக வளர்க்கப்படும் பாசி பூக்களால் கடலின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பது அவரது கருத்து அதனை ஏற்றுக்கொண்டு ஜெர்மன் அரசாங்கம் சோதனையை நிறுத்த உத்தரவிட்டது.

Prof Syed Wajih Ahmad Naqvi – Awarded – Vigyan Shri Award 2024 | Mpositive.in

சையத் வாஜி அகமது நக்வி (Syed Wajih Ahmad Naqvi) அவர்களின் அடுத்த ஆராய்ச்சி இந்தியாவின் நன்னீர் சுற்றுசூழல் அமைப்புகளான நிலத்தடி நீர் இயற்கை ஏரிகள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கங்கள் பற்றிய முறையான ஆராய்ச்சி ஆகும். அதிக எண்ணிக்கையிலான அணைகளில் உள்ள அவதானிப்புகள் ஒப்பீட்டளவில் விதமான யூடியூப்கேஷனை வெளிப்படுத்தியதை அவர் அறிவித்தார். கோடைக்கால அடுக்கின் பல வேதிப் பொருட்களின் நிலைத்தன்மை நீர்த்தேக்கங்களில் ஹைட்ரஜனின் வெளிப்படையான இழப்பை பதிவு செய்தார். இந்த இழப்பின் வழிமுறைகள் மற்றும் விகிதங்கள் எதனால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை ஆய்வுக்கு உட்படுத்தினார். இந்திய அணைகளில் இருந்து மீத்தேன் வெளியேறி விடுகிறது.

உயிரி புவி வேதியியல் எனும் புதிய துறையில் இந்தியாவினுடைய கவனத்தை செலுத்த வைத்து உலகிலேயே தலை சிறந்த ஒரு ஆய்வுக் குழுவை அவர் உருவாக்கிக் கொடுத்தார். ஏராளமான இளைஞர்களை இந்த துறைக்கு உட்படுத்தி இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் உள்ள நன்னீர் ஓடைகள், ஏரிகள், அணைகள் என்று உயிரி புவி வேதியலின் அடிப்படைகளை ஆய்வு செய்ய வைத்தார். இதற்காக அவர் 50 மிக முக்கியமான கடல் பிராந்திய ஆய்வு பயணங்களை மேற்கொண்டார். உலகிலேயே இத்தனை கடல் ஆய்வு பயணங்களை மேற்கொண்ட முதன்மையான விஞ்ஞானி என்று அவர் போற்றப்படுகிறார்.

சையத் வாஜி அகமது நக்வி (Syed Wajih Ahmad Naqvi) இந்தியாவின் மூன்றாவது அண்டார்டிகா பயண குழுவில் இடம் பெற்றார். அண்டார்டிகா பிராந்தியத்தில் மிக குறைந்த வெப்பநிலை நிலவுகின்ற பிராந்தியத்தில் பாசிகளின் இருப்பு குறித்த இவருடைய ஆராய்ச்சி உலகளவில் அங்கீகரிக்கப்பட்டது.

உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Indian Marine Scientist Syed Wajih Ahmad Naqvi) - கடல் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி

கடல் பாதுகாப்பு குறித்த சர்வதேச முக்கிய ஆய்வுக் குழுக்களில் இவர் இடம் பெற்றிருக்கிறார். சென்டர் ஃபார் ட்ராபிகல் மரைன் ஈகாலஜி ஜெர்மனியில் உள்ளது. இந்த அமைப்பிலும் இன்ஸ்ட்டிட்யூட் ஃபார் ஹைட்ரோஸ்பெரிக் அட்மோஸ்பெரிக் ஸைந்ஸஸ் என்கிற அமைப்பு ஜப்பானில் உள்ளது. இந்த நிறுவனத்திலும் எடுத்து அப்சர்வேட்டரி ஆஃப் கொலம்பியா பல்கலைக்கழகம் எனும் அமெரிக்காவினுடைய நிறுவனதிலும் வருகை தரும் ஆராய்ச்சியாளராக இன்றும் தொடர்கிறார்.

அகமது நக்வி பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். தன்னுடைய ஆராய்ச்சி முனைவர் பட்ட ஆண்டுகளிலேயே CSIR வழங்கும் இளம் விஞ்ஞானி விருது பெற்றவர். உத்தரப் பிரதேச அரசு வழங்குகின்ற விஞ்ஞான் ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது. உலகெங்கிலும் தலை சிறந்த விஞ்ஞான கடல் மாலுமியாக போற்றப்படும் அகமது நக்வி 1996 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். சமீபத்தில் ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்ட பொழுது இவருக்கு விஞ்ஞான் ஸ்ரீ விருது ஜனாதிபதியால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய உயிரியலாளர் சந்திரிமா சாஹா (Chandrima Shaha)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *