இந்திய நுண்ணுயிரி பூஞ்சையியலின் அறிஞர் சஞ்சீவா நாயக்கா (Sanjeeva Nayaka)
தொடர்- 24 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
உலகில் சிம் பயோடிக் உயிரினங்களை ஆய்வு செய்ய இழை பூஞ்சைகள் குறித்த ஒரு தனித்துறை உண்டு . LICHENOLOGY என்று அந்த துறை அழைக்கப்படுகிறது. இந்த துறையின் இந்திய வல்லுநர் தான் அறிஞர் சஞ்சீவா நாயக்கா. லக்னோவிலுள்ள CSIR நடத்தும் தாவர இயல் ஆராய்ச்சி கூடத்தில் முதன்மை விஞ்ஞானி சஞ்சீவா நாயக்கா ஆவார். அங்கு லிச்சினாலஜி (Lichenology) எனும் இந்த புதிய துறையினுடைய பொறுப்பாளராகவும் அவர் இருக்கிறார். இந்த துறையில் வெளிவந்து கொண்டிருக்கும் முக்கிய ஆய்விதழின் சர்வதேச ஆசிரியர் குழுவில் அவர் இடம் பெற்றிருக்கிறார்.
தாவரவியலில் பூஞ்சை ராஜ்யத்தில் லக்கெநோரூல்ஸ் என்கிற ஒரு வகுப்பு உள்ளது. இது லேகானா ரெஸி என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த இனத்தை குறித்து ஆய்வு செய்வது நம்முடைய விவசாயம் முதல் பூஞ்சைகள் எவ்விதம் விலங்குகளை தாக்குகின்றன என்பது வரை மிக மிக தேவையான ஒரு துறை ஆகும். இந்த துறையின் வல்லுநர் தான் விஞ்ஞானி சஞ்சீவா நாயகா. லைட்சங்கள் என்று அழைக்கப்படும் பூஞ்சைகளின் உலகம் வித்தியாசமானது. அவை விலங்கும் அல்ல தாவரங்களிலும் அல்ல. இவை உலகம் முழுவதும் உள்ளன. அவற்றின் மிக சிறிய வடிவம் மற்றும் அந்தஸ்து காரணமாக அவற்றை கவனிப்பது மிகக் கடினம் மினியேச்சர் தாவரம் என்று அழைக்கலாம் மிநியேசர் விலங்கு என்றும் அதை அழைக்கலாம்..
குறிப்பாக லை சங்கங்கள் என்பவை பூஞ்சையும் அல்ல, தாவரமும் அல்ல.. அவை இரண்டும் ஆகும். ஒரு லட்சனின் வெளிப்புற தோல் மற்றும் உள் அமைப்பு பூஞ்சை ஃபிஃபாவின் இழைகளால் ஆனது. லட்சன் உள்ளே உள்ள இழைகளுக்கு இடையில் ஆல்காவின் தனிப்பட்ட செல்கள் உள்ளன. இரண்டு வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையிலான தொடர்பை இவர்களால் ஏற்படுத்த முடியும். இவை பரஸ்பரம் தாவரங்களுக்கு இடையே வளர்ந்து இரண்டு வெவ்வேறு வகை தாவரங்களை ஒன்றிணைய வைக்கின்றன.
பூஞ்சைகளை நாம் தாவர ஒப்பந்தத்திற்கு பயன்படுத்தலாம். லைட் அண்ட் கூட்டு வாழ்வின் உள்ள பூஞ்சை பங்குதாரர் என்பவை பாசிகளுக்கு வாழ்வதற்கு ஒரு இருப்பிடத்தை வழங்குகின்றன. இது பாசிகளை வேட்டையாடும் விலங்கினத்தில் இருந்து ஒப்பீட்டளவில் ஒரு பாதுகாப்பை பாசிகளுக்கு வழங்குகிறது. இந்த வகையான ஒப்பந்தம் வினோதமானது ஆகும். கடுமையான வெயிலால் கூட பாசிகள் தங்களுடைய பச்சை-யத்தை இழக்காமல் இந்த பூஞ்சைகள் அவற்றை பாதுகாக்ககின்றன.. இது குறித்த சஞ்சீவா நாயக்கா எனும் இந்த விஞ்ஞான ஆய்வுகள் உலக பிரசித்தி பெற்றவையாகும்.
லட்சங்கள் என்பவை பொதுவாக குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வகை பாசிகளை தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் ஒரு பாசி பங்குதாரர் அந்தஸ்தில் இருக்கின்றன-அல்லது சயனோ பாக்டீரியா என்று அழைக்கப்படுகின்ற இனத்தை ஒன்றிணைப்புவையாகவும் அவை இருக்கலாம். இந்த கூட்டாண்மையில் உள்ள பாசி வகைகளைவிட பூஞ்சை இனங்களுக்கு.. லைக் கண்கள் பெயர் பெற்றவை.. உலகில் இந்த வகை சிறப்பு பூஞ்சைகளில் 18000 இனங்கள் உள்ளன. அனைத்து பூஞ்சை இடங்களில் சுமார் 30% வரை கூட்டாண்மை வாழ்விற்கு தயாரானவை ஆகும்.
இந்த வகையான பூஞ்சைகள் எவ்விதம் மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு பிரம்மாண்டமான சமூகமாக அந்த மலை முழுவதும் உள்ள தாவரங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்பதை ஆய்வு செய்தவர் தான் சஞ்சீவி நாயக்கா.-இமாச்சல பிரதேசத்தில் லைக் எண்களை ஆய்வுசெய்து தனது ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்ட பொழுது உலகம் வியந்தது லேனோரா இன்னும் ஒரு இனத்தை தனது ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு மாதவ் காட்கில் எனும் மாமனிதரின் கீழ் கீழே தனது முனைவர் பட்ட ஆய்வை அவர் மேற்கொண்டு பொழுது மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது காதல் கொண்டார்.. அங்கு வாழ்ந்து வருகின்ற 108 வகையான ஃப் பூஞ்சைகளை வகைப்படுத்தியுள்ளார்.
பூஞ்சைகளை தேடும் அவரது பயணம் மேற்கு தொடர்ச்சி மலையோடு நின்றுவிடவில்லை.. அவர் இரண்டு முறை அண்டார்டிகாவுக்கு பயணம் செய்தார்.. இந்த பூமியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம் பூஞ்சைகள் தான் என்கின்ற அடிப்படையில் அண்டார்டிகாவில் 96 டிகிரி செல்சியஸில் பூஞ்சைகள் வாழ்வதை கண்டுபிடித்தார். இல்ல மூலம் தன்னுடைய துறையை விட்டு விலகி சுற்றுசூழல் இயற்பியல் என்னும் துறைக்குள் நுழைந்தார். இதுவரை சஞ்சீவி நாயக்காவும் அந்த விஞ்ஞானி முதன்மை ஆய்வாளராக எட்டு ஆராய்ச்சி திட்டங்களை நம் இந்தியாவுக்காக கையாண்டிருக்கிறார். இணை ஆய்வாளராக 25 க்கும் மேற்பட்ட பூஞ்சை திட்டங்களில் அவர் இடம் பெற்றார். புலிகளின் சரணாலயத்திற்குள் நுழைந்து பூஞ்சைகள் எவ்விதம் புலிகளின் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பது குறித்து அவருடைய ஆய்வு மிக மிக முக்கியமானதாகும்.
லண்டன்ன் லில்லியன் சொசைட்டி அவரை ஒரு நிரந்தர வாழ்நாள் உறுப்பினராக ஏற்று கௌரவித்தது.. பூஞ்சைகளுக்கான சர்வதேச சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சஞ்சீவி நாயக்கா 1974 ஆண்டி கர்நாடகாவில் சிக்கமகளூர் மாவட்டத்தில் குப்பா என்னும் ஊரில் பிறந்தார். தனது பட்டப் படிப்புக்காக தாவரவியலை எடுத்துக்கொண்டு பொழுது அவர் பூஞ்சைகளின் ஆராய்ச்சிக்கு அறிமுகமானார். தங்கள் ஊரிலுள்ள ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் கோடைக்கால ஆராய்ச்சி பெலோஷிப் பெற்று பூஞ்சைகள் குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை அவர் தொடர்ந்தார். கூடவே முதுகலை பட்டமும் பெற்று. சாதனை படைத்தார்.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: நாம் அறிந்த இந்திய மூலக்கூறு வேதியலாளர் சஞ்சய் வாடேகான்கர் (Sanjay Wategaonkar)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உயிரே எரிபொருள் தொழில்நுட்பத்தில் பூஞ்சைகள் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்குதாரராக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வறட்சியையும் வெப்பத்தையும் தாங்கி வாழக்கூடிய தாவர இனமாக இதை கருதலாம். இவருடைய ஆராய்ச்சி இந்தத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.