உலகம் போற்றும் இந்திய மூலக்கூற்று கட்டமைப்பு உயிரியல் விஞ்ஞானி காயரத் சாய் கிருஷ்ணன் (Kayarat Saikrishnan)
– ஆயிஷா.இரா.நடராசன்
தொடர் : 56 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
காயரத் சாய் கிருஷ்ணன் (Kayarat Saikrishnan) பூனேவிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் (Indian Institute of Science Education and Research, Pune) நிறுவனத்தில் உயிரியல் துறையின் ஆராய்ச்சி பிரிவு டீன் ஆக செயல்பட்டு வருகிறார். பாக்டீரியாக்களின் உள்ளே இருந்து செயல்படுகின்ற புரத மரபணுக்களை, முற்றிலும் ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை புரிந்து கொள்வதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டு இன்று உலக அளவில் அவர் பேசப்படுகிறார்.

ஒரு காலத்தில் சாதாரண திரைப்படங்களை திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பதே மிகப்பெரிய அறிவியலின் அதிசயமாக கருதப்பட்டது. பிறகு ஒரு கட்டத்தில் முப்பரிமாண திரைப்படங்கள் எடுக்கப்பட்டன. இந்த முப்பரிமான திரைப்படங்களைப் பார்ப்பதற்கு தனியாக திரை அரங்குகளில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இது அடுத்த பேரதிர்ச்சி தரும் அதிசயமாக இருந்தது.
அதன் பிறகான காலகட்டம் டிஜிட்டல் யுகம் என்று அழைக்கப்படுகிறது. இப்போது நாம் கைபேசியில் திரைப்படங்களை பார்த்து கொண்டிருக்கிறோம்.. இணையத்தில் கிடைக்காத திரைப்படமே இல்லை. இப்படிப்பட்ட வளர்ச்சி நாம் அறிந்து நம் கண்முன்னே நடந்ததை போல. மூலக்கூறியல் துறையில் இதே மாதிரியாகவே பிரம்மாண்டமான மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைக்கு CRYO-ELECTRON MICROSCOPY என்கிற அதி செய்ய தொழில்நுட்ப உயிரியலாளர்களின் வேலைகளை எளிமைப்படுத்தி பாக்டீரியாக்களை முப்பரிமான நோக்கில் பார்த்து பதிவு செய்து ஆராய்வதற்கு உதவுகின்றது. இந்த அறிவியல் துறையின் உலக வித்தகர் தான் அறிஞர் காயரத் சாய் கிருஷ்ணன் (Kayarat Saikrishnan).

நியூக்ளிக் அமிலத்தை உள்ளடக்கிய உயிரியல் செயல்முறைகள் நீக்கு யோ சைட் டிரை பாஸ்பேட் என்றழைக்கப்படும் NTP நீராற்பகுப்புயினால் இயக்கப்படும் ஒரு வகை உடலியல் இயக்கங்களுக்கு காரணமான என்சைம்களை பயன்படுத்தி ஆராய்வது சாய் கிருஷ்ணனுக்கு கை வந்த கலை. இவற்றை உயிரியலாளர்கள் புரத இயந்திரங்கள் என்று அழைக்கிறார்கள். இந்த புரத இயந்திரங்கள் ஒரு குறிப்பிட்ட நொதிகளின் பல படிநிலை செயல்பாட்டு களங்களை கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட பணியை செய்வதற்கு திடீரென்று அவை இணைந்து செயல்படுகின்றன. இந்த புரத இயந்திரங்களின் ஒருங்கிணைப்பில் ஏற்படும் சிறு இடையூறுகள் ஒரு உயிரின் செல்லுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும். இந்த சிக்கலான நொதிகளின் பொறி முறையை ஆராய்ந்து அவற்றின் செயல்பாடு குறித்த தனிப்பெரும் துறையை உருவாக்கியவர் சாய் கிருஷ்ணன்.
பாக்டீரியாக்களை குறித்த அவருடைய நுண்ணிய ஆய்வுகள், நமக்கு ஆச்சரியம் தருகின்றன இயற்கை பாக்டீரியாவுக்கு வழங்கி இருக்கின்ற ஒரு வகையான என்சைம்களை RESTRICTION-MODIFICATION என்சைம்கள் என்று அழைக்கிறார்கள். இவை பாக்டீரியாக்களை தாக்க வருகின்ற வைரஸ்களை ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டை தாக்குகின்ற படைகளை தடுத்து நிறுத்தி, அவற்றை துவம்சம் செய்யும் போர் வீரர்களை போல செயல்பட்டு எப்படி தடுத்து நிறுத்துகின்றன என்பதை சாய்கிருஷ்ணன் உலகிற்கு அறிவித்து இருக்கிறார் காயரத் சாய் கிருஷ்ணன் (Kayarat Saikrishnan).

வைரஸ் என்பது ஒரு டிஎன்ஏவால் ஆனது. பாக்டீரியாவினுடைய செல்களுக்குள் இவை நுழையும் பொழுது RM என்சைம் இவற்றை நொடிப்பொழுதில் கண்டுபிடித்து விடுகிறது. அவற்றை கண்டுபிடிப்பது ஒரு அந்த வைரஸ் DNA அமைப்புகளை ஊடுருவி அவற்றை கண்ணுக்கு தெரியாத நானோ வடிவிலான சிறு சிறு துண்டுகளாக இந்த என்சைம் வெட்டி விடுகிறது. இதை செய்வதற்கு அந்த என்சைம்கள் உள்ள டிஎன்ஏ-க்களை முற்றிலும் துவம்சம் செய்கின்ற எந்த வகை வேதி பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை, சாய்கிருஷ்ணன் ஆய்வு செய்து அவற்றின் முப்பரிமாண கட்டமைப்புக்களை வெளியிட்டு மருத்துவ உலகிற்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார்.
பாக்டீரியாக்களுக்கு உள்ளிருந்து செயல்படும் இந்த RM என்சைம் இப்படி வருகின்ற வைரஸ்களை தாக்கி அழிப்பதற்கு என்றே கணினியை போல நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியம். இப்படிப்பட்ட விஷயங்களை ஆய்வு செய்வதற்காக கட்டமைப்பு உயிரியல் என்னும் துறையை ஏற்படுத்தப்பட்டுள்ளது. உயிர் வேதியியல் மற்றும் உயிர் இயற்பியல் கருவிகளை இந்த ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு செய்யும் மாதிரி அமைப்புகளில் ஒன்று மட்டும் தான் RM என்சைம் என்பது, இந்த நொதிகள் நான்கு செயல்பாட்டு களங்களில் தன்னுடைய செயல்பாடுகளை ஒருங்கிணைக்கின்றன என்பதை சாய் கிருஷ்ணன் ஆய்வுகள் உலகிற்கு அறிவித்துள்ளன.

அவை நியூக்ளிஸ், ஏகேஸ் போன்ற NT PHASE மோட்டார் அமைப்பு மற்றும் இலக்கு அங்கீகார டோ மைன் என்றழைக்கப்படும் TRD போன்ற தளங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது, மட்டுமல்ல அந்த நொடியின் முதல் படிக அமைப்பை சாய்கிருஷ்ணன் வெளியிட்டு உலகத்தின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார்.
காயரத் சாய் கிருஷ்ணன் (Kayarat Saikrishnan) பெங்களூரைச் சேர்ந்தவர். இளம் அறிவியல் பட்டத்துக்காக உயிரி தொழில்நுட்ப மையலை எடுத்து படித்த அவர் பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தில் மூலக்கூற்று உயிரியல் இயற்பியல் எனும் தனித்துறையில் 2005 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஒரு நுழைவுத் தேர்வின் மூலம் இங்கிலாந்திலுள்ள சவுத் மின்ஸ் என்கிற நகரில் கிளாஸ் ஹால் ஆய்வகத்தில் தன்னுடைய புற்றுநோய் ஆராய்ச்சிக்கான முதுகலை பட்டதாரியாக பணியாற்றினார். இங்கிலாந்தின் MRC ஏனும் பிரபல ஆய்வகத்தில் மூலக்கூறு உயிரியலின் வருகை தரும் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். பூனேவில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுத்துறை டீன் ஆக இருக்கும் சாய் கிருஷ்ணன். இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை 2019 ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் பருப்பொருள் இயற்பியலாளர் சுபோத் ரகுநாத் ஷெனாய் (Prof. #SubodhRaghunathShenoy)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

