இந்திய மருத்துவ வேதியியல் அறிஞர் தும்பாலா சீனிவாசன் (Dumbala Srinivasa Reddy)
தொடர் 92: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
தும்பாலா சீனிவாசன் அல்லது தும்பாலா சீனிவாச ரெட்டி உலகம் அறிந்த இந்திய மருத்துவ வேதியியல் விஞ்ஞானி ஆவார். ஹைதராபாத்தில் உள்ள CSIR-IICT இன்னும் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். ஜம்மு காஷ்மீரிலுள்ள. CSIR-IIIM அதாவது இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் இன் டேக்ரேட்டிவ் மேடிசன் ஆய்வகத்தின் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். லக்னோவிலுள்ள CSIR- DRUG ரிசர்ச் இன்ஸ்ட்டிட்யூட் எனும் நிறுவன ஆய்வகத்திலும் ஒரு வருடத்திற்கு ஆறு மாதங்கள் இவருடைய ஆய்வுகள் தொடர்கின்றன.
தும்பாலா சீனிவாசன் (Dumbala Srinivasa Reddy) சார்ந்திருக்கும் துறை மருத்துவ வேதியியல் என்று அழைக்கப்படுகிறது. மருந்து அல்லது மருந்து வேதியியல் என்பது மருந்துகளை வடிவமைத்து மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ள வேதியியல் மற்றும் நோய் தடுப்பு முறையும் குறுக்குவெட்டில் அமைந்திருக்கும் ஒரு முக்கிய அறிவியல் துறை ஆகும். மருத்துவ வேதியியல் என்பது சிகிச்சை பயன்பாட்டுக்கு ஏற்ற புதிய வேதிப் பொருட்களை அடையாளம் காணுதல், அவற்றை ஏற்றுக்கொள்ளத்தக்க மருந்துகள் ஆக மாற்றுவதற்கான ஆய்வக சோதனைகளில் ஈடுபடுதல், மருந்துகளாகப் பயன்படுத்த தக்க வேதிப்பொருட்களின் அளவு கட்டமைப்பு செயல்பாட்டு உறவுகள் இவற்றை குறித்த துறையாக விளங்குகிறது. அளவு கட்டமைப்பு செயல்பாடு மற்றும் உறவுகள் என்பதை QSAR என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த துறையானது உயிரி வேதியியல், கணக்கிட்டு வேதியியல், மருந்தியல், மூலக்கூறு உயிரியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் வேதியியல் இவற்றுடன் கரிம வேதியியலை ஒன்றிணைக்கும் புதிய நானோ தொழில்நுட்பத்துக்கு உட்படுத்த தகுந்த உயர் அறிவியல் துறையாகும். இந்த துறையின் வல்லமை மிக்க மூன்று அற்புத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர் தான் தும்பாலா சீனிவாசன் (Dumbala Srinivasa Reddy).
மருந்துகளாகப் பயன்படுத்தப்படும் சேர்மங்கள் பெரும்பாலும் கரிம சேர்மங்களாகும் இவை சிறிய கரிம மூலக்கூறுகளின் பறந்த வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. மருந்துகள் கனிம மற்றும் ஆர்கனோ மெட்டாலிக் சேர்மங்களாகவும் இருக்கலாம் பிளாட்டினம் லித்தியம், கேலியம் சார்ந்த மருத்துவமும் உண்டு. தும்பாலா சீனிவாசன் மருத்துவத்தில் உலோகங்களின் பங்கை ஆய்வு செய்தவர்.
இவரது துறை மருத்துவ வேதியியல் அதன் மிகவும் பொதுவான நடைமுறையில் சிறிய கரிம மூலக்கூறுகளில் கவனம் செலுத்துகிறது. செயற்கை கரிம வேதியியல் மற்றும் இயற்கை பொருட்கள் இவரோடு கணக்கிட்டு வேதியியலின் அம்சங்களை வேதி உயிரியல் மோதி இயல் மற்றும் கட்டமைப்பு உயிரியல் ஆகியவற்றுடன் இணைக்கின்ற பாலமாக இவரை போன்ற விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். ஏற்கனவே இருக்கக்கூடிய மருந்துகளை மேம்படுத்துவது புதிய மருந்துகளின் வளர்ச்சியை நோக்கமாக கொண்டு செயல்படுவது என இவர்களது செயல்பாடுகள் பறந்து விரிந்தவை.
![]()
மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடிய நோய்களுக்கான சிகிச்சை மருந்துகளை முன்வைத்ததில் பெரிய அளவில் வெற்றி கண்டவர் தும்பாலா சீனிவாசன் (Dumbala Srinivasa Reddy). இவர் அறிமுகம் செய்த சிகிச்சை முறை SILICON-SWITCH APPROACH என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையை பயன்படுத்தி நரம்பு மண்டல நோய்கள் மட்டுமின்றி நீரிழிவு நோயையும் குணப்படுத்துகிறார்கள். நீரிழிவு நோய்க்கு தற்போது பயன்படுத்தப் படுகின்ற மருந்துகளில் இந்த சிலிக்கான் ஸ்விச் முறையிலான மருந்துகள் மிகப் பிரபலமானவை ஆகும்.
சிலிக்கான் அடிப்படையிலான நேனோ பொருட்கள் கொண்டு நீரிழிவு நோயை ஆராய்ச்சி செய்வது மற்றும் சிகிச்சை இவை மிகப்பெரிய மாற்றத்தை அந்த நோய் சிகிச்சை முறையில் கொண்டு வந்துள்ளன. சிலிக்கா நானோ துகள்கள் மெட்ஃபார்மின் எக்ஸ்ஜனாடைட் மற்றும் கிளிமீர்பிராடு போன்ற நீரிழிவு எதிர்ப்பு மருந்துகளின் உடல் திற விநியோகத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படலாம். சிலிக்கா நானோ துகள்கள் உயிரி இணக்கத்தன்மை கொண்டவை மற்றும் சீர் செய்யக்கூடிய துணை அளவு கொண்ட துகள்கள் இவை நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த தீர்வாக அமைகின்றன என்கிறது தும்பாலா சீனிவாசன் அவர்களின் ஆய்வுக் கட்டுரை.

மனித உடலில் சிலிக்கான் நானோ வாய்கள் என்பவை ஒருவகை சென்சார்கள் ஆக பயன்படுத்தப்படுகின்றன. நாம் உள்ளே எடுக்கின்ற நீரிழிவு நோய்க்கான மருந்தை சீரான விதத்தில் உடலியல் பண்புகளைலுக்கு உட்படுத்த இவை பயன்படும். சிலிக்கான் ஆன் இன்சுலேட்டர் என்கிற ஒருவகை செதில்களை இந்த மருத்துவ துறைக்கு தும்பாலா சீனிவாசன் அறிமுகம் செய்துள்ளார். ஊசிகள் மூலம் செலுத்தாமல் நேரடியாக இன்சுலினை வாய்வழியே செலுத்தும் மருந்துகளை கண்டுபிடிப்பதுதான் மிகப்பெரிய சவாலாகும். குளுக்கோஸ் என்கின்ற ஒன்றுக்கு பதிலளிக்கும் சாதனங்களாக சிலிக் கான்கள் நானோ துகள்களாக பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மெட்ஃபார்மின் இது பெரும்பாலும் இரண்டாம் வகை நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் முதல் மருந்தாக உள்ளது. இதன் பின்னணியில் இருப்பவர் தான் தும்பாலா சீனிவாசன் (Dumbala Srinivasa Reddy).
இவரது அடுத்த முக்கிய பங்களிப்பு விவசாய துறையில் அமைந்தது விவசாய துறையினுடைய மாவு பூச்சி என்கிற வகை பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு செக்ஸ் பெரோமோன் எனும் பயிர் பாதுகாப்பு முறையை இவர் அறிமுகம் செய்தார். செல் ஓட்டுதல் தடுப்பான்கள் பாக்டீரியா எதிர்ப்பு அழற்சி எதிர்ப்பு மற்றும் உணவு பொருட்களில் இருந்து புற்றுநோய் தூண்டல்களை அப்புறபடுத்துகின்ற முக்கிய வேதி முகவர்களை அறிமுகம் செய்ததில் இவருடைய பங்கு மகத்தானதாக போற்றப்படுகிறது. 20 க்கும் மேற்பட்ட விவசாய ரசாயனங்களின் மொத்தத் தொகுப்பிற்கு இவர் பல வகையில் பங்களிப்பு செய்துள்ளார்.

மருந்து இயல் துறை மற்றும் விவசாய துறை சார்ந்த 27 கண்டுபிடிப்புகளின் உரிமங்களை தன்னகத்தே வைத்துள்ளவர் தும்பாலா சீனிவாசன். பல உயரிய விருதுகளின் சொந்தக்காரரான இவர். ஆந்திராவில் செகந்திராபாத்தில் 1971 ஆண்டு பிறந்தார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியியல் படிப்பை எடுப்பதற்கு முன் செகந்திராபாத்தில் உள்ள எஸ் பி கல்லூரியில் BSc வேதியியல் எடுத்து படித்தார். புகழ் பெற்ற வேதியியலாளரும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான கோவர்த்தன் மேத்தாவின் வழிகாட்டுதலின் பெயரில் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கு சென்று கரிம வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார் ஆண்டு 2000. அதே ஆராய்ச்சி குழுவில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட வித்யா ராமதாஸை அவர் சந்தித்தார். பின்னர் அவரை மணந்தார். வித்யா ராமதாஸ் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவர்.
திருமணத்திற்கு பிறகு சிக்காகோ பல்கலைக்கழகத்தின் சர்ஜி கோஷ்மின் எனும் பிரபலமான ஆய்வகத்தில் இரண்டாண்டுகள் மருந்தியல் தொடர்பான தீவிர ஆய்வுகளில் ஈடுபட்டார். 2003 ஆம் ஆண்டு மிக பிரபலமான டாக்டர் ரெட்டி மருத்துவ ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டார். அங்கிருந்து விரைவில் அவர் தேசிய வேதியியல் ஆய்வகத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். தற்போது மூன்று CSIR மருத்துவ ஆய்வுகூடங்களின் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வரும் தும்பாலா சீனிவாசன் (Dumbala Srinivasa Reddy) 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார். உலகெங்கும் இவர் கண்டுபிடித்துக் கொடுத்த நீரிழிவு நோய்க்கான மருந்துகள் பரவலாக பயன்படுத்தப்படுவது நம் அனைவருக்கும் பெருமை.
கட்டுரையாளர்:

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
