இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Indian Organic Chemist And Scientist) | Organic Chemistry (வேதியியல்)

இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே!

இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey)
தொடர் 91: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey) பூனாவிலுள்ள இந்திய தேசிய வேதியியல் ஆய்வகத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். ஒளியால் தூண்டப்பட்ட ஒற்றை எலக்ட்ரான் பரிமாற்ற எதிர்வினைகள் குறித்த தன்னுடைய ஆய்வுகளுக்காக உலகெங்கும் பேசப்படுகிறார். கரிம வேதியியலின் இருபத்தோராம் நூற்றாண்டுக்கான புதிய தரவுகளை நோக்கி பயணித்த ஒரு சில விஞ்ஞானிகளில் நம்பத் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு உலகின் கவனம் பெற்றவர் என்று இவர் பாராட்டப்படுகிறார்.

GP பாண்டே 1954 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்தார். போராட்டமான தன்னுடைய வாழ்க்கையின் தொடக்க நாட்களில் பள்ளி கல்வியில் மாநில அளவில் சாதனை படைத்து உயர் கல்விக்கான உதவித்தொகை கிடைக்கப் பெற்றார். டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான பட்டப் படிப்பில் இணைந்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காக அங்கிருந்து தேர்வாகி ஒளி உயிரியல் குறித்த தரவுகளை கரிம வேதியியலுக்கு பொருத்தி பார்க் கின்ற ஒரு விநோதமான துறையில் நிபுணத்துவம் பெற்றார்.

GP பாண்டே யோகார்னிக் அமிலத்தில் ஒளி உயிரியல் குறித்த தன்னுடைய ஆரம்ப ஆய்வுகளுக்காகவே அறியப்பட்டார். இதற்காக அமெரிக்காவிலுள்ள பவர் டூ பல்கலைக்கழகத்தில் ஹாரி மோரிஸன் என்பவரின் ஆய்வுக் கூடத்தில் உயிரி வேதியலின் புதிய இலக்குகளை அடைவதற்காக தீவிர ஆய்வில் ஈடுபட இவருக்கு ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய அவர் இந்திய வேதித் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒரு விஞ்ஞானியாக இணைந்தார்.

கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey) சார்ந்திருக்கும் துறை தாவரங்களில் ஏற்படும் ஒளிச்சேர்க்கை குறித்த வேதியியல் ஆகும். ஒளிச்சேர்க்கை எலக்ட்ரான் பரிமாற்றத்தால் தொடங்கப்பட்ட தீவிர அயனியாக்கத்தை ஆய்வுகளுக்கு உட்படுத்தியவர் அவர். இந்த வகை எலெக்ட்ரான்கள் PHOTOINDUCED ELECTRONS என்று அழைக்கப்படுகின்றன.

இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Indian Organic Chemist And Scientist) | Organic Chemistry (வேதியியல்)

இவைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வது என்பதை PHOTOINDUCED ELECTRON TRANSFER (PET) என்று அழைக்கிறார்கள். இது எலெக்ட்ரானிக் உச்ச தூண்டல் நிலையை விவரிக்கிறது இதன் மூலம் தூண்டப்பட்ட எலெக்ட்ரான் இதே போல தூண்டப்பட்ட ஏனைய அணுக்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. டெக்ஸ்டர் எலக்ட்ரான் பரிமாற்றம் என்கிற இந்த நிகழ்வு தாவரங்களின் உடைய ஒளிச்சேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தவர்தான் கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey).

இது போன்ற எலெக்ட்ரான்களை ஒளிச்சேர்க்கையில் பயன்படுத்தப்படும் உயிரியல் அமைப்புகளை நாம் தனியே உருவாக்க முடியும். இத்தகைய பொருட்களில் பல சூரிய மின்கலங்களை தயாரிக்கவும் செய்கிறார்கள். பொருத்தமான எலெக்ட்ரான் அயனியாக்க உரிஞ்சித்ல்கள் மற்றும் ரேடாக்ஸ் நிலைகளை கொண்ட சிறிய மூலக்கூறுகளை ஆய்வகத்திலேயே உருவாக்குவது GP பாண்டே அவர்களின் உத்தியாகும்.

ஒளியினுடைய துகள் ஆன ஒரு ஃபோட்டான் ஒரு மூலக்கூறை தூண்டும் பொழுது தரைநிலை சுற்றுப்பாதையில் உள்ள எலெக்ட்ரான் அதிக ஆற்றல் கொண்ட சுற்றுப்பாதைக்கு மாறுமாறு தூண்டப்படுகிறது. இந்த தூண்டல் நிலை எலெக்ட்ரானை வழங்க காத்திருக்கும் அணுக்களால் மீண்டும் நிரப்பக்கூடிய தரைநிலை வெற்றிடங்களை உருவாக்குகிறது. எலக்ட்ரான் ஏற்பி இதனை ஏறக்குறைய நன்கொடையாக பெறுகிறது. இந்த வகையில் ஒரு ஒளிச்சேர்க்கை மூலகூறு ஒரு நல்ல ஆக்ஸிஜனேற்ற முகவராக தாவரத்திற்கு பயன்படுகிறது.

இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Indian Organic Chemist And Scientist) | Organic Chemistry (வேதியியல்)

ஒளிச்சேர்க்கை ஆக்ஸிஜனேற்றம் என்பதை பல நூற்றாண்டுகளுக்கு புரிந்து கொள்ளாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தபொழுது குவாண்டம் வேதியலின் மூலம்.. அதற்கு சரியான ஒரு விளக்கத்தை கொடுத்ததோடு, அது எப்படி நாம் ஏனைய அறிவியல்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதையும் கோடிட்டு காட்டிய பெருமை கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey) அவர்களின் ஆய்வுகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தியாவின் தேசிய வேதியியல் ஆய்வகத்தில் ஒரு குறிப்பிட்ட விஞ்ஞானிகளின் குழுவை அறிஞர் பாண்டே வழி நடத்துகிறார். அவர்கள் இயற்கை பொருட்கள் மற்றும் உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்களில் பயன்பாட்டு இலக்குக்கு சார்புடைய தொகுப்பு பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுகின்றனர். கார்பன் – கார்பன் பிணைப்பை உருவாக்குகின்ற எதிர்வினைகளை புதிய புதிய முறையில் கண்டுபிடித்து தொழில் துறைக்கு அவர்கள் உதவுகிறார்கள். பாண்டேவின் தீவிர வழிகாட்டுதலின் பெயரில் அவருடைய மற்றொரு மிக முக்கிய பங்களிப்பு கிளைக்கோசைட் ஹைட்ரோலேஷ் என்கிற சிக்கலான சர்க்கரை வகைகளின் கிளைக்கோசைட்டிக் பிணைப்புகளை உருவாக்கி நீரார் பகுப்பை ஊக்கப்படுத்துகின்ற புதிய என்சைம்களை உணவு உற்பத்தி துறைக்கு வழங்கியது ஆகும்.

இந்திய கரிம வேதியியலாளர் கணேஷ் பிரசாத் பாண்டே (Indian Organic Chemist And Scientist) | Organic Chemistry (வேதியியல்)

இயற்கையில் இருந்து எடுக்கப்படுகின்ற அதிக வேதி மாற்றத்திற்கு உட்படாத பாக்டீரியா எதிர்ப்பு உத்திகளில் இம்மாதிரியான என்சைம்கள் பயன்படுகின்றன. இந்த வினையூக்கிகள் நோய்க்கிருமி தடுப்பிலும் சாதாரண செல்லுலார் செயல்பாட்டில் உணவுக்கான சுவை ஊட்டவும் இரட்டைத்தன்மையோடு புதிய பிணைப்புகளின் மூலம் வேதிமுறையில் உருவாக்கப்படுகின்றன.

இந்த நொதிகள் தாவர பொருட்களின் சிதைவு உட்பட பல்வேறு பயன்பாடுகள் கொண்டுள்ளன செல்லுலோஸை குளுக்கோஸாக குறைக்கும் செல்லுலேஸ்கள் இவை. எத்தனால் எனும் வேதிப்பொருளின் உற்பத்திக்கு பயன்படுகின்றன. உணவு உற்பத்தி மருத்துவத்துறை இவற்றை தவிர காகிதங்கள் தயாரிப்பு துறையிலும் GP பாண்டேவின் கண்டுபிடிப்புகள் இன்று பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

தேசிய வேதியியல் ஆய்வகத்தை தவிர, அறிஞர் கணேஷ் பிரசாத் பாண்டே (Ganesh Prasad Pandey) அவர்கள் சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜூவேட் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் ஸைந்ஸஸ் என்னும் நிறுவனத்தினுடைய மூலக்கூறு அறிவியல் ஆய்வகத்திலும் வருகை தரும் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். 1990 ஆம் ஆண்டு அவர் பி எம் பிர்லா அறிவியல் விருது பெற்றார்.

இந்திய தேசிய அறிவியல் அகாடமி மற்றும் இந்தியன் அகாடமி ஆஃப் ஸைந்ஸஸ் ஆகியவற்றில் கௌரவ உறுப்பினராக அவர் தேர்வு பெற்றுள்ளார். 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரசித்தி பெற்ற டி ஆர் சேஷாத்ரி நினைவு விருது பெற்றார், அதே ஆண்டில் இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது அவருக்கு வழங்கப்பட்டது. உலக அளவில் புகழ் பெற்ற வேதியியல் ஆய்வு இதழான டெட்ராஹைட்ரோன் எனும் இதழின் முதன்மை ஆசிரியராகவே அவர் செயல்பட்டு வருவது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்தியாவின் சூரிய இயற்பியல் விஞ்ஞானி பி.கே. மனோகரன் (Dr. P.K. Manoharan)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *