இந்திய இயற்பியல் வேதியல் நிபுணர் கல்யா ஜெகன்நாத ராவ் (Kalya Jagannath Rao)
தொடர் : 33 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
கண்ணாடிகள் மற்றும் ஜீரோமிக்ஸ் துறையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த விஞ்ஞானி தான் கல்யா ஜெகன்நாத ராவ். இவர் பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்னுடைய எமிரேட்ஸ் பேராசிரியர் கௌரவத்தை பெற்றவர். கல்யா ஜெகன்நாத ராவ் @ K.J. ராவ் (Kalya Jagannath Rao) என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த அறிஞர் சர்வதேச அளவில் செராமிக்ஸ் அறிவியல் துறையில் இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஜரா மிக்ஸ் என்னும் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக செயலாற்றி வருபவர். பிரான்ஸ் அரசாங்கத்தின் உயரிய விருதாகிய ORDRE DES PALMES ACADEMIQUES எனும் விருதை பெற்ற ஒரே இந்திய விஞ்ஞானி எனும் சிறப்புடையவர்.
K.J. ராவ் (Kalya Jagannath Rao) பல ஆராய்ச்சிக் குழுக்களில் ஒரு பகுதியாக இருந்துள்ளார். கண்ணாடிகள் மற்றும் மண்பாண்டங்கள் குறித்த ஆய்வுகளுக்காக பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பெரிய அளவில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். துத்தநாக ஆக்சைடு NANO கட்டமைப்புகள் பற்றிய ஆய்வுகளுக்காக இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு ஆய்வகத்தை நிறுவியவர் அவர். NANO பொருட்களை ஆய்வு செய்வதற்காக குவேம்பு பல்கலைக்கழகத்தில் ஏநாயக் என்பவருடன் இணைந்து பணியாற்றியவர். மட்பாண்டங்கள் மற்றும் கண்ணாடிகள் பற்றிய வேதி கட்டமைப்பு மாதிரிகளை உருவாக்கி NANO வேதியியலில் பெயர் சொல்லும் அளவிற்கு உழைத்த ஒரு விஞ்ஞானி அவர்.

நானோ கட்டமைப்புகள் என்பவை யாவை.. அதற்கும் ஜராமிக்ஸ் துறைக்கும் என்ன சம்பந்தம்.. அதில் K.J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்களின் பங்களிப்பு என்ன.. கண்ணாடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தற்போதைய விஞ்ஞான போக்குகள் குறித்து 290 ஆய்வுக் கட்டுரைகள் சக மதிப்பாய்வு செய்யத்தக்க அரிய சாதனைகளின் சொந்தக்காரர் ஆன K.J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்கள் இந்திய ஃப்ரென்ச் ஆய்வகத்தில் கண்ணாடியின் நானோ தொழில்நுட்ப பயன்பாடுகள் குறித்த விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டு உலக பிரசித்தி பெற்றவர்.
அமெரிக்காவிலுள்ள PERDUE பல்கலைக்கழகத்தில் A.R. கூப்பர் எனும் விஞ்ஞானியோடு இணைந்து கண்ணாடின் நினோ தன்மைகள் குறித்து 1972லேயே ஆய்வு செய்து பல சாதனைகள் படைத்தவர் K.J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்கள். நானோ பொருட்கள் என்பவை வழக்கமான கண்ணுக்கு தெரியும் பொருட்களில் இருந்து வேறுபடுகின்றன. இவை ஒன்று மற்றும் 100 nm எனப்படும் நானோ மீட்டர் அளவுகொண்ட துகள்களை குறிக்கின்றன. மைக்ரோ பேபிரிகேஷன் என்று ஆராய்ச்சி துறைக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டுள்ள மெட்டீரியல் மெட்ரோ தொகுப்பு ஆகியவற்றில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் நானோ பொருட்கள் குறித்து ஆராய்ச்சி வளர்ந்து வருகிறது. சாதாரண கண்ணுக்கு புலப் படுகின்ற ஒரு உலகம் அதன் அணுக்களின் கூட்டமைப்பில் மூலக்கூறுகளாக நம் முன் விரிகிறது. ஆனால் அவற்றை துகளாக.. பிளந்தபடி மேலும் சிறிதாகிக் கொண்டே சென்றால் ஒரே ஒரு மூலக்கூறை நாம் அடையலாம். இந்த ஒரு மூலக்கூறை தனித்தெடுத்து ஆய்வு செய்வதுதான் நானோ பொருட்கள் குறித்த ஆராய்ச்சி ஆகும்.
நானோ தொழினுட்பத்திற்கான ஒரு பொருளில் அறிவியல் என்பது அடிப்படையில் அணுவை ஆராய்ச்சி செய்யும் துறையாகும் இந்த NANO அளவுக்கு சுருக்கப்பட்ட ஒரு பொருள் நானோ துகள் ஆக ஒன்றினையும் பொழுது வேறுவிதமாக நடந்து கொள்கிறது NANO அளவிலான கட்டமைப்பு கொண்ட பொருட்கள் பெரும்பாலும் தனித்துவமான கண்ணாடி எலெக்ட்ரானிக் தேர்மோ ஃபிசிக்ஸ் கல் அல்லது மெக்கானிக்கல் பண்புகளை கொண்டுள்ளன.
இந்த துகள் ஆக்கப்பட்ட கண்ணுக்கு தெரியா மூலக்கூறுகளை ஒன்று சேர்க்கும் பொழுது புதிய வகை உலகம் நமக்கு கிடைக்கிறது. நானோ பொருட்கள் மெல்ல மெல்ல வணிகமாக்கப்பட்டு பண்டங்களாக அன்றாட உபயோகப் பொருட்களாக வெளிவருகின்றன நானோ அளவில் ஏதேனும் வெளிப்புற பரிமானத்துடன் கூடிய பொருள் அல்லது உள் கட்டமைப்பு அல்லது நேனோ அளவில் மேற்பரப்பு அமைப்பு கொண்ட ஒரு பொருள் என்று நானோ பொருட்களை வகைப்படுத்துகிறார்கள்.
K.J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்கள் உலக அளவில் இன்று ஒரு நானோ பொருளின் பின்வரும் வரையறையை வெளியிட்டவர். துகள்களைக் கொண்ட இயற்கையான தற்செயலான அல்லது உற்பத்தி செய்யப்பட்ட நானோ பொருள் என்பது வரம்பு இல்லாத நிலையில் மொத்தமாகவோ அது ஒரு கூட்டாகவோ நானோ துகள்களை ஒன்றிணைப்பது குறித்ததாகும்.

ஒன்று பொருளின் உள்கட்டமைப்பில் இவை துகள்களாக NANO அளவிற்கு சுருக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது ஒரு பொருளின் மேல் பூச்சில் மட்டும் நானோ துகள்களாக சுருக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டு இருக்கலாம். நானோகட்டமைப்பு பொருட்கள் பெரும்பாலும் அவை கொண்டிருக்கும் பொருளின் நைனோ உலக பண்புகளை கொண்டிருக்கின்றன. உலக அடிப்படையிலான நானோ துகள்கள் கனிம NANO பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன அவற்றின் சுவாரசியமான ஒளியியல் நிறமாலை குறித்த K. J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்களின் கண்டுபிடிப்புகள் உலகளவில் பேசப்படுகின்றன.
இவர் கண்டுபிடித்து கொடுத்து இருக்கும் நானோ கண்ணாடிகள் ஆர்கானிக் சோலார் செல்களாக.. சூரிய ஒளி மின்னாற்றலாக மாற்றும் விஷயத்தில் நேரடியாக பயன்படுகின்றன. அவர் எழுதிய கண்ணாடிகளின் கட்டமைப்பு வேதியியல் குறித்த புத்தகங்கள் மிக பிரபலமானவை. மனித குலத்திற்கு அவர் வழங்கி இருக்கும் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு துத்தநாக ஆக்சைடு நானோ கட்டமைப்புகள் தொடர்பானதாகும்.
துத்தநாக ஆக்சைடு நானோ கட்டமைப்புகள் என்பது நானோ மீட்டர் அளவில் குறைந்த பட்சம் ஒரு பரிமாணத்தை கொண்ட கட்டமைப்புகள் ஆகும். முக்கியமாக துத்தநாக ஆக்சைடால் ஆனவை பல்வேறு தொழில்நுட்பங்களில் பயன்படுத்துவதற்கான NANO கட்டமைப்புகளின் வேதியியல் செயல்பாட்டை அவை முன் வைக்கின்றன ஒப்பீட்டளவில் மலிவான மற்றும் எளிமையான நடைமுறைகளை பயன்படுத்தி துத்தநாக ஆக்சைடிலிருந்து பல்வேறு NANO பொருட்களை உருவாக்கும் முக்கியமான தொழில் முறைகளை K. J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்கள் முன்மொழிந்தார் இந்த துறை மிக வேகமாக வளர்ந்து வரும் ஆராய்ச்சி துறை ஆகும் சூப்பர் கப்பாசிட்டர்கள் உள்ளிட்ட மின் பொருட்களும் சூரிய மின்கலங்கள் லிட்டியம் இரும்பு பேட்டரிகள்.. பயோ சென்சார்கள் நானோ சென்சார்கள் உட் பட பலவற்றை இன்று நான்காம் தொழில் புரட்சி தொழிற்சாலைகளுக்கு ஏற்றார்போல கண்டுபிடித்து வழங்கிய பெருமை K.J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்களை சேரும்.
K.J. ராவ் (Kalya Jagannath Rao) அவர்கள் 1940ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் நாள் கர்நாடகாவிலுள்ள கல்யா எனும் கிராமத்தில் பிறந்தார் மைசூர் பல்கலைக்கழகத்தில் 1960ஆம் ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு இயற்பியலில் முடித்தவர். பிறகு தன் முதுகலை படிப்புக்காக இயற்பியல் வேதியியல் ஐத் தேர்வு செய்தார். பெங்களூரிலுள்ள தேசிய கல்லூரியில் வேதியியல் துறையில் விரிவுரையாளராக ஆரம்பத்தில் பணிபுரிந்தார். கான்பூரில் உள்ள ஐஐடி-யில் தனது முனைவர் பட்ட படிப்புக்காக புகழ்பெற்ற வேதியியலாளர் C.N.R. ராவ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நானோ செராமிக்ஸ் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். 1984ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் சார்பாக அவருக்கு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்திய நியூட்ரினோ- சிதைவு பரிசோதனைகளின் முன்னோடி பேராசிரியர் நாபா குமார் மொண்டல் (Naba Kumar Mondal)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

