இந்தியாவின் கால்நடை மருத்துவ-யியல் விஞ்ஞானி டாக்டர் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Indian Veterinary Scientist Dr. Vinayagamurthy Balamurugan)

இந்தியாவின் கால்நடை மருத்துவயியல் விஞ்ஞானி டாக்டர் விநாயகமூர்த்தி பாலமுருகன்!

இந்தியாவின் கால்நடை மருத்துவயியல் விஞ்ஞானி டாக்டர் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan)
தொடர் 95: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

உத்தரகாண்டில் உள்ள நைனிடால் நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த ஆய்வு நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருபவர் தான் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan). பெங்களூரிலுள்ள நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் வெட்டரினரி எபிடமாலஜி நிறுவனத்திலும் இவர் முக்கிய விஞ்ஞானியாக பங்காற்றி வருகிறார்.

விநாயகமூர்த்தி பாலமுருகன் சார்ந்திருக்கும் துறை கால்நடை மருத்துவ இயல் என்று அழைக்கப்படுகிறது. உணவுக்காகவும் ஏனைய வேளாண் துறைக்காகவும் வளர்க்கப்படுகின்ற விலங்குகளின் நோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு குறித்த மருத்துவ இயல் இது. சமீபகாலங்களில் அதிகம் வைரஸ்கள் தாக்கப்பட்டு உணவு கோழிகள் மரணம் அடைவதும் இந்த கொடிய சம்பவங்களிலிருந்து மனிதர்களுக்கு அந்த வைரஸ் நோய்கள் தொற்றிக் கொள்வதும் பரவலாக நாம் அறிகின்ற மிகப்பெரிய சிக்கலாகும். இந்த சிக்கலுக்கு இந்திய அளவில் தீர்வு கண்ட அற்புத விஞ்ஞானி தான் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan).

About Us | ICAR-NIVEDI

மனிதரல்லாத விலங்குகளில் வைரஸ்களின் தாக்குதல் பற்றிய ஆய்வுத்துறை தான் கால்நடை வைராலஜி என்பது, கால்நடை மருத்துவத்தின் நவீன முக்கிய கிளையாகும். இவற்றில் குறிப்பாக ரப்தோ வைரஸ்கள் தாவரங்கள் மற்றும் பூச்சிகள் முதல் மீன் மற்றும் பாலூட்டிகள் வரை பரவலான கால்நடைகளை பாதிக்கும் இன்றைய மிக முக்கிய நோயாகும். இது ஒருவகை RNA வைரஸ்களின் பல தரப்பட்ட குடும்பங்களின் அங்கமாக உள்ளது. ரபிடே குடும்ப வகைகளை உள்ளடக்கியது என்பதை கண்டறிந்தது மட்டுமின்றி இவற்றில் இரண்டு சைடோராப்டு வைரஸ்கள் மற்றும் நியூகிளியோராடோ வைரஸ்கள் ஆகிய இரண்டும் தாவரங்களை மட்டுமே பாதிக்கின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார். இந்த தாவரங்களை உணவுக்காக உட்கொள்கின்ற கால்நடைகள் அந்த நோய் தொற்றில் இருந்து தப்பவே முடியாது.

விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan) தமிழ்நாட்டிலுள்ள நம் சென்னையில் 1973 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் சர் முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்விகற்று தமிழ்நாட்டின் கால்நடை மற்றும் விலங்குகளுக்கான அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளம் விலங்கு மருத்துவ கல்வியான BVsc., முடித்தார். இஷ்டா நகர் எனும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை பட்டம் பெற்றார் அப்போது ஜெர்மனியில் உள்ள ஊர்சுர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை விலங்கு வைராலஜி துறையில் மேற்கொள்வதற்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ஜெர்மனியில் உள்ள வைராலஜி மற்றும் யு நோ பயோலஜி நிறுவனத்தின் பயோடெக்னாலஜி பிரிவில் கடுமையாக பணி செய்து அவர் முனைவர் பட்டம் பெற்றார் விநாயகமூர்த்தி பாலமுருகன் கால்நடை உயிர் இயல் என்னும் துறையின் வல்லுநராக மிளிர்கிறார்.

Outbreaks Of Buffalopox In India: Latest update | Drishti IAS English - YouTube

கால்நடையாக வளர்க்கப்படும் நாட்டு ஆடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு பரவி மரணத்தை ஏற்படுத்தும் PPR என்கிற PEST DES PETITS RUMINANTS எனும் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் சிகிச்சை முறைகளையும் அறிமுகம்செய்து உலக அளவில் பெயர் பெற்றார். PPR தொற்றின் தன்மை மற்றும் இறப்பு விகிதங்களால் வகைப்படுத்தப்படுகிறது. ஆசியாவின் பெரும் பகுதிகளில் அதிக பொருளாதார தாக்கத்தை இது ஏற்படுத்துகிறது பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மனச்சோர்வு கண் மற்றும் மூக்கு வெளியேற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த நோய் பாதிக்கப்பட்ட ஆடுகள் எந்த உணவும் அருந்த முடியாது ஏனெனில் வாய் புண்களினால் முற்றிலும் பாதிக்கப்படுகின்றன. இந்த விலங்குகள் கடுமையான நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிப்படைந்து மரணத்தை அடைகின்றன. PPR உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள கொடுமையான நோய்களின் பட்டியலில் உள்ளது. பிறந்த உடனேயே ஆடுகளுக்கு கொடுக்க தகுந்த இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்து அறிமுகம் செய்தவர் விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan).

விலங்குகளை தாக்கும் மூன்று முக்கிய நோய்களை முற்றிலும் அகற்றுவதற்கான சிகிச்சை முறைகளையும் அவற்றுக்கான தடுப்பு ஊசிகளையும் கண்டுபிடித்து வழங்கியதில் அவர் உலக அளவில் பிரசித்தி பெற்றவர் ஆவார். அவற்றில் ஒன்று விலங்கு பாக் வைரஸ் என்று அழைக்கப்படுகிறது. ANIMAL POX இன்னும் இந்த வைரஸ் இரட்டை இழைகள் கொண்ட டிஎன்ஏ வைரஸ் ஆகும். இது மிகப் பெரிய விலங்கு வைரசுகளில் ஒன்று இதை ஒளி நுண்ணோக்கியை பயன்படுத்தி மட்டுமே பார்க்க முடியும் இந்த பாக்ஸ்வைரஸ் செங்கல் வடிவிலோ அல்லது முட்டை வடிவிலோ இருக்கிறது. பாக்ஸ் வைரஸ்கள் மூச்சு உள்ளிழுத்தல் தோல் அல்லது கடித்தல் போன்றவற்றின் மூலம் பரவுகிறது ஃபாக்ஸ் வைரஸ் ஒரு விலங்கின் வெளியே தெரியாத புண்களை ஏற்படுத்தும் பொருட்கள் மற்றும் கொப்பளங்கள் வழியே இது வெளிப்படும்.. இந்திய எருமை மாடுகளை பாதிக் கின்ற BUFFALO POX வைரஸ் இவருடைய அடுத்த முக்கிய இலக்காக மாறியது இவற்றை தவிர நம்முடைய தார் பாலைவனங்களில் வளர்க்கப்படுகின்ற ஒட்டகங்களில் பரவுகின்ற CAMEL POX இரட்டை இழையூடன் கூடிய டி என் ஏ வைரஸ்.. ஒட்டகத்தின் பொதுவான மோசமான நோயாக மாறுகிறது.

Camel Disease – National Veterinary Institute

இந்த மாதிரி வைரசுகள் தோல் புண்கள் மற்றும் பொதுவான தொற்று நோயை ஏற்படுத்துகின்றன தோராயமாக 25 சதவீத ஒட்டகங்களையும் எருமைகளையும் இந்த நோய் கொன்றுவிடுகிறது. அரிதாகத்தான் என்றாலும் கூட ஒட்டங்களுடனும் எருமைகளுடனும் நெருக்கமாக வேலை செய்பவர்களின் கைகளுக்கு இந்த தொற்று பரவுகிறது. இந்த மூன்று வகை கொடிய நோய்களுக்கும் சிகிச்சை முறையையும் தடுப்பூசிகளையும் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை விஞ்ஞானி பாலமுருகனை சேரும். CELL CULTURE முறையின் நிபுணத்துவம் மிக்கவராக கருதப்படும் பாலமுருகன் விலங்கு மருத்துவர்கள் பொதுவாக பயன்படுத்தி கின்ற நோய் கண்டுபிடிப்பு கருவிகள் பலவற்றை உள்ளடக்கிய மருத்துவப் பெட்டியையும் தடுப்பூசிகளையும் வழங்கியவர் ஆவார்.

நாய்கள் குறித்துண்ணிகள் மற்றும் பல வளர்ப்பு விலங்குகளை பாதிக்கின்ற லெப்டோஸ்பிரோசிஸ் இன்னும் நோய்க்கான அடிப்படை ஆய்வகம் ஒன்றை ஏற்படுத்தி உலகத் தரத்திற்கு இந்தியாவிற்காக அதை வடிவமைத்து வழங்கியவர் விஞ்ஞானி பாலமுருகன். நுரையீரலில் ரத்தப் போக்கு அல்லது மூளைக் காய்ச்சல் வரை இந்த நோய் ஒருவரை கொண்டு விட்டுவிடும். பாதிக்கப்பட்ட நபருக்கு முதலில் மஞ்சள் காமாலை ஏற்படும் தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன சிறுநீரக செயலிழப்பு மற்றும் ரத்தப்போக்கு தொடருகிறது. இதற்கான மாற்றுப் பெயர்கள் எலிக்காய்ச்சல் வயல் காய்ச்சல் என்பதாக இந்திய மக்களிடையே பரவியுள்ளது. ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் சாதாரண காய்ச்சல் என்று தவற விடப்படும் இந்த நோய் போகப் போக மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் இரண்டுமே இந்த நோயை பரப்பலாம்.

Article - About Leptospirosis * Regency Ranch Golden Retrievers

விலங்குகளுக்கு இந்த நோயை குணப்படுத்தாமல் நாம் மனிதர்களை குணப்படுத்துவது கடினம். இந்த நோய் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான உலகத் தரத்திற்கான லெப்டோஸ்பிரோசிஸ் ஆய்வகத்தை ஏற்படுத்தி உலக விலங்கு சுகாதார நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தவர் விஞ்ஞானி பாலமுருகன். இதைத் தவிர விலங்குகளுக்கான தடுப்பூசிகளுக்கான தரக் கட்டுப்பாடு என்கிற துறையில் தனிப்பெரும் கோட்பாடு ஒன்றை விநாயகமூர்த்தி பாலமுருகன் (Dr. Vinayagamurthy Balamurugan) வகுத்து வழங்கியிருக்கிறார்.

விலங்குகளுக்கான நோய் தடுப்பு கட்டுப்பாடு என்பது குறித்து இவருடைய பங்களிப்புகள் ஒரு பெரிய குழுவை இவருக்கு கீழ் கடுமையாக அறிவியல் ஆய்வுகள் செய்யும் அளவிற்கு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட மிக முக்கியமான இவருடைய அறிவியல் ஆய்வு கட்டுரைகள்.. உலகெங்கிலும் உள்ள முன்னணி ஆய்வு இதழ்களில் வெளிவந்துள்ளன. இவர் சார்ந்திருக்கின்ற ஆய்வகத்திற்கு எஸ் ஓ தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. உலகஅளவில் விலங்கு சுகாதார சர்வதேச நிறுவனத்தின் ஆலோசனைக் குழுக்களில் இடம்பெற்றுள்ள பாலமுருகன் 22 ஆண்டுகளில் தன்னுடைய கடும் உழைப்பின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ICAR 2005 ஆம் ஆண்டிலேயே இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி கௌரவித்தது. 2008 ஆம் ஆண்டு அதே நிறுவனம் குழுவாக அமைந்து ஆய்வு செய்து நோய் வெற்றி கண்டதற்கான குழு ஆராய்ச்சி தலைமை விருதை அளித்தது. இந்தியன் வைராலஜி சொசைட்டி அமைப்பில் இவர் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். இந்தியா கால்நடை மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில் முதன்மை ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார்.. காய்ச்சல் உள்ளிட்ட கால்நடை நோய்களுக்கான இவருடைய சிகிச்சை முறைகள் உலகம் முழுவதும் பின்பற்றப்படுவது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் அறிந்த இந்திய கடல் விஞ்ஞானி சையத் வாஜி அகமது நக்வி (Syed Wajih Ahmad Naqvi)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *