உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (Indian Virologist and Physician Kanta Subbarao Article By Ayesha Natarasan)

உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ்

உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao)
தொடர் 79: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

உலக சுகாதார நிறுவனம் WHO தனக்கு உதவிகரமாக இருப்பதற்காக உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பு மையங்கள் எனும் பெயரில் சுகாதாரம் உணவு பாதுகாப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பு போன்ற துறைகளின் இணைந்து செயல்படும் மையங்களை 80 நாடுகளில் உருவாக்கி உள்ளது. இந்த மையங்களில் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மையத்தின் இயக்குனராக இருப்பவர் தான் காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao) எனும் இந்திய மருந்தியல் துறை விஞ்ஞானி.

காந்தா சுப்பராவ் ஒரு வைராலஜிஸ்ட் ஆவார். வைராலஜி (Virology) என்பது உயிரியல் வைரஸ்கள் பற்றிய அறிவியல் ஆய்வுத்துறை ஆகும். இது நுண்ணுயிரி இயலின் ஒரு துணை புலமாக கருதப்படுகிறது. வைரஸ் தாக்குதல்கள் ஏற்படும் பொழுது ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை முறைகளுக்கும் இந்த துறை பொறுப்பு ஏற்கிறது. வைரஸ்கள் பற்றி ஆய்வுகள் மிக மிக முக்கியமானவை. ஏனெனில் பெரும்பாலான தாவரங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வைரஸ் தாக்குதலினால் பல வகையான தொற்றுநோய்களை அனுபவிக்கிறார்கள். வைரஸ் நோய் கிருமி தாக்குதலின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு உலகெங்கும் இறந்து போகும் மனிதர்களின் எண்ணிக்கை விபத்துகள் மற்றும் யுத்தத்தால் இறந்து போகும் மனிதர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அதன் சமீபத்திய உதாரணம் தான் கோவிட் 19 வைரஸ் தாக்குதல்.

உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (Indian Virologist and Physician Kanta Subbarao Article By Ayesha Natarasan)

இதனால் இந்த ஆய்வுத்துறை தாவர வைராலஜி, விலங்கு வைராலஜி மற்றும் மனித அல்லது மருத்துவ வைராலஜி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மனித அல்லது மருத்துவ வைராலஜி (Virology) துறையை சார்ந்தவர் காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao). வைரஸ் தாக்குதலை கண்டறிவதில் பல அணுகுமுறைகள் உள்ளன. அவற்றில் வைரஸ் துகள்களை துல்லியமாக அறிகின்ற ஆண்டிஜென்கள் அல்லது நியூக்லிக் அமில முறைகள் எனபதில் புதிய மூன்று வகையீடுங்களை அறிமுகம் செய்திருக்கிறார் காந்தா சுப்பாராவ்.

வைரஸ் உயிரணுக்களுக்குள் உள்ள ஒட்டுண்ணிகள் என்பவை ஒரு மனிதனை தாக்கும் பொழுது அந்த மனிதனின் உயிரணுக்களுக்குள் மட்டுமே இனப்பெருக்கம் செய்வதால் அவற்றை ஆய்வகத்தில் வளர்த்து ஆய்வு மேற்கொள்வது என்பது மிக சிரமமான ஒன்றாகும். எனவே இந்த துறையில் விலங்குகளை பாதிக்கும் வைரஸ்களுக்கு என்று தனியாக வைரஸ் கலாச்சாரங்கள் என்று அழைக்கப்படும். கூட்டமாக வைரஸ்களை ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் வளர்க்கிறார்கள்.. இவ்வகை வளர்க்கப்படும் வைரஸ்களை ஆய்வு செய்து கொண்டிருக்கும் பொழுதே இந்த விஞ்ஞானிகளை அந்த வைரஸ்கள் தாக்குகின்றன.

உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (Indian Virologist and Physician Kanta Subbarao Article By Ayesha Natarasan)

இதற்கு மாற்றாக கருவுற்ற கோழி முட்டைகளில் கருவை சுற்றியுள்ள ஜவ்வுகளில் வைரஸ்கள் வளர்க்கப்படும் முறையை காந்தா சுப்பாராவ் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த முறை பல தடுப்பூசிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. பாக்டீரியாவை பாதிக்கும் வைரஸ்களுக்கு பாக்டீரியோபேகஸ் என்று பெயர். இவற்றை சோதனைக் குழாய்களில் வளர்க்க முடியும். தாவர வைரஸ்களுக்கு இயற்கையாகவே வளர்ப்பதற்கு ஆய்வு செய்வதற்கு தாவரங்களையே பயன்படுத்த முடியும். ஆனால் மனிதர்களை தாக்குகின்ற வைரஸ்களுக்கு மனிதர்களை ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்துவதற்கு மாற்று வழிகளை கண்டறிந்த பெருமைக்குரியவர் தான் காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao).

காந்தா சுப்பாராவ் தன்னுடைய வைரஸ்கள் குறித்த ஆய்வுகளோடு குழந்தை மருத்துவம் மற்றும் குழந்தை தொற்றுநோய்களின் சிறப்பு பயிற்சி பெற்ற ஆய்வாளராகவும் இருக்கிறார். தொற்று நோய் மற்றும் கடுமையான சுவாச நோய்கள் குறித்த மத்திய கிழக்கு நாடுகளின் வைரஸ் தாக்குதல் நோய்களை ஆய்வு செய்து, அதற்கான தனித்துவமான தீர்வுகளை வெளியிட்டவர். அவர் மேலும் வைரஸ் உயிரியல் மற்றும் நோய்க்கிருமி உருவாக்கம் நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி ஆகியவற்றில் கடுமையாக ஆய்வுகள் மேற்கொண்டு முன்கூட்டியே நோய்க்கான நோய் எதிர்ப்பு தன்மையை ஒரு குறிப்பிட்ட பகுதியில் நோய் தாக்குவதற்கு முன்னரே மனிதர்களுக்கு வழங்குகின்ற திட்டத்தை ஐ.நா சபைக்கே முன்மொழிந்தவர் காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao).

உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (Indian Virologist and Physician Kanta Subbarao Article By Ayesha Natarasan)

விஞ்ஞானி காந்தா சுப்பாராவின் சமீபத்திய முக்கிய பங்களிப்பு உலகளவில் பேசப்படும். அவருடைய கோவிட் 19 தடுப்பூசிகள் குறித்த கட்டுரை ஆகும். இந்த விஷயத்தில் அவர் மூன்று முக்கியமான கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். ஏனைய தடுப்பூசிகள் போல இல்லாமல் கோவிட் 19 தடுப்பூசியின் பாதகமான விளைவுகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு அந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களை பாதிக்கும் என்பது அவருடைய பார்வை. ஊசி போட்ட இடத்தில் சிவத்தல் சொறி போல வருதல் வீக்கம் ஆகியவை முன்பே தெரிவிக்கப்பட்டன. அதன் பக்கவிளைவுகளாக சோர்வு, தலைவலி, தசை வலி, மூட்டு வலி போன்றவையும் அடங்கும்.

ஆனால் இவை மட்டுமின்றி…. அணாபிலாக்ஸிஸ் என்கிற முக்கிய சிக்கல் ஏற்படுகிறது. mRNA வகை தடுப்பூசியின் இரண்டாவது டோஸுக்குப் பிறகு, பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் தற்காலிக மாற்றங்கள் பதிவாகியுள்ளன. இதைத் தவிர விஞ்ஞானி காந்தா சுப்பாராவின் முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு தான் கோவிட் 19 தடுப்பூசிகள். மயோ கார்டிடிஸ் மற்றும் பெரி கார்டிடிஸ் ஏனும் இரண்டு வகையான இருதய சிக்கல்களுக்கு வழிவகுக்கவும் வாய்ப்புள்ளது என்பதாகும். இப்படியான பக்கவிளைவுகள், இதய தசையின் வீக்கம் எப்படி சரிசெய்ய முடியும் என்பதையும் கண்டறிந்து உலகிற்கு அறிவித்து இருக்கிறார் காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao)..

உலகம் போற்றும் இந்திய மருத்துவ இயல் விஞ்ஞானி காந்தா சுப்பாராவ் (Indian Virologist and Physician Kanta Subbarao Article By Ayesha Natarasan)

இந்தியாவில் வேலூரில் பிறந்த காந்தா சுப்பாராவ், அங்கிருக்கும் கிருத்துவ மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பெற்றார். பிறகு இறுதி ஆண்டு படிக்கும் பொழுதே ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் தொற்று நோயியல் துறையில் முதுகலை மருத்துவ பட்டம் படிப்பதற்கு இடம் கிடைத்தது. மூலக்கூற்று மரபியல் நிபுணரான காந்தா சுப்பாராவ் சுவாச ஒத்திசைவு வைரஸ் திட்டத்தில் இணைந்தார். நேஷனல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் அலர்ஜி அண்ட் இன்ஸ்பெக்ஷிஎஸ் டிசீசஸ் என்று அழைக்கப்படுகின்ற-NIAID அமெரிக்காவினுடைய கல்வியகத்திற்கு சென்று மேரிலாந்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டார். அதே நிறுவனத்தின் தலைமை பதவியை அடையும் வரையில் அங்கு இரண்டு பத்தாண்டுகள் கடுமையாக அவர் உழைத்தார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள பீட்டர் டோஹெர்ட்டி எனும் மிக பிரபலமான மருத்துவ ஆய்வு பல்கலைக்கழகத்தில் மெல்போனில் காந்தா சுப்பாராவ் (Kanta Subbarao) வருகை தரும் பேராசிரியராக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ராயல் மருத்துவ கழகம் இங்கிலாந்தின் லண்டன் ராயல் கல்வியகம் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் அவரை நிரந்தர கௌரவ உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டுரையாளர்:

இந்திய மரபணுவியல் வித்தகர் Dr.குமாரசாமி தங்கராஜ் (Dr. Kumarasamy Thangaraj) மானுடவியல் மரபணுவியல் (Human Genetics)

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும் : உலகம் அறிந்த இந்திய வனவிலங்கு சூழலியல் விஞ்ஞானி அபராஜிதா தத்தா (Aparajita Datta)

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com

Click to Join WhatsApp Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. HariKrishnan S

    மனிதர்களை தாக்குகின்ற வைரஸ்களுக்கு மனிதர்களை ஆய்வுக் கூடங்களில் பயன்படுத்துவதற்கு மாற்று வழிகளை கண்டறிந்த பெருமைக்குரியவர் முனைவர்.திருமதி.காந்தா சுப்பாராவ் அவர்கள். அவரது உலகளாவிய பங்களிப்பை மிகச்சிறப்பாக நம் மக்களுக்கு அறிமுகம் செய்து எழுதியிருக்கிறக்கிறீர்கள்.

    மிக்க நன்றி ஐயா.🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *