India's bio-nanobiologist Subba Rao Setty article by Ayesha Era Natarasan

இந்தியாவின் நானோ உயிரியலாளர் சுப்பாராவ் காங்கி

இந்தியாவின்  நானோ உயிரியலாளர் சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi)

தொடர் : 63 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi) பெங்களூரிலுள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் செயன்ஸ் நிறுவனத்தில் நுண் உயிரியல் மற்றும் செல் உயிரியல் ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வருகிறார். மனித செல்கள் பில்லியின் கணக்கான புரத மூலக்கூறுகளை எப்படிக் கையாளுகின்றன என்பதை நானோ தொழில்நுட்பத்தின் உதவியோடு தீவிரமான ஆய்வில் ஈடுபட்டு பல்வேறு உயிர் அணு ரகசியங்களை உலகிற்கு அறிவித்தவர்தான் சுப்பாராவ் காங்கி செட்டி.

சுப்பாராவ் காங்கி செட்டி ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து தன் குடும்பத்தின் முதல் பட்டதாரி எனும் பெருமையை போராடிப் பெற்றவர். திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டத்திற்கு உயிரி தொழில் நுட்பத்தை எடுத்துப் படித்தார். வாரணாசியில் உள்ள மிகப் பிரபலமான பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்திற்கு முதுகலைப் பட்டம் பெறுவதற்கு ஒரு நுழைவுத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டார். சண்டிகரில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான அய்யம் டேக் என்னும் ஆய்வகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவர் அவர், சீரற்ற அதிகம் வருமானம் அற்ற ஒரு குடும்பத்தில் பிறந்து நம்முடைய நாட்டில் அரசாங்கத்தினுடைய உதவித்தொகைகளின் மூலம் கல்வி கற்று விஞ்ஞானியான மாமனிதர் சுப்பாராவ் காங்கி செட்டி.

இந்தியாவின் உயிர் நானோ உயிரியலாளர் சுபாராவ் காங்கி | India's bio-nanobiologist Subba Rao Setty - Melanin - Ayesha Era Natarasan - https://bookday.in/

உயிரணு உயிரியல் என்பதுதான் அவர் சார்ந்திருக்கும் துறை. மனித உயிரணுக்களில் உள்ள லைசோசோம் (lysosome) என்னும் சிறப்புடைய ஒரு விஷயத்திற்குத் தொடர்பான உறுப்புகள் மெண்டோசாக் என்று அழைக்கப்படும் உயிர் இயக்கத்தை ஏற்படுத்துகின்ற செயல்களின் உடைய வேலைகள் இவற்றைத் தொடர்ந்து அவர் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். தன்னிடம் வருகின்ற அனைத்து வகையான சத்துக்களையும் எப்படி செல்களுக்கு உள்ளே உள்ள அமைப்புகள் தங்களுக்குள் பிரித்து கையாளுகின்றன என்பதைத் துல்லியமாக வெளியிட்டவர். அவர் நோயுற்ற நிலையில் ஒரு மனிதனின் செயல்கள் எவ்விதச் செயல்களைச் செய்ய தடுமாறுகின்றன என்பதையும் நம் கவனத்திற்குக் கொண்டு வந்தவர் அவர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட ஆய்வுகளுக்காக அங்குள்ள நுண் உயிரியியல் ஆய்வகத்தில் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்து பலவகையான கண்டுபிடிப்புகளை வெளியிட்டு உலக அளவில் புகழ் பெற்றவர் சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi) அவர்கள். மனிதனுடைய செல் என்பது அதிக மற்றும் அதீத கூட்டம் கொண்ட ஒரு பேருந்து நிலையத்தைப் போல இருப்பதை அவர் அற்புதமான நம்முடைய கற்பனைக்கு உட்படுத்துகிறார். ஒரு ஆய்வுக் கட்டுரையில் இதுகுறித்து வாசித்த பொழுது நான் அசந்து போனேன் என்ன அழகான வர்ணனை!

இந்தியாவின் உயிர் நானோ உயிரியலாளர் சுபாராவ் காங்கி | India's bio-nanobiologist Subba Rao Setty - Melanin - Ayesha Era Natarasan - https://bookday.in/

இந்த பயங்கரமான கூட்டத்தில் சில பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்துகளில் அவசரம் அவசரமாகப் புரத மூலக்கூறுகள் ஏறிக்கொள்கின்றன. இந்த புரத மூலக்கூறுகள் மிகச் சரியான தன்னுடைய பேருந்தைக் கண்டுபிடித்து தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் சரியான நேரத்தில் சென்று அடைய வேண்டும். சரி ஒரு புரத மூலக்கூறு அவ்விதமாகத் தான் செல்ல வேண்டிய பேருந்தில் ஏறாமல் விட்டுவிட்டால் என்ன ஆகும். கிட்டத்தட்ட 1,20,000 புரத மூலக்கூறுகள் ஒரு நொடிக்கு ஏறக்குறைய 15,000 பேருந்துகளில் ஏறி பயணிக்க வேண்டும். இந்த இடத்தில் குவாண்டம் அறிவியல் செயல்படுகிறது. சில சமயம் ஒரே புரத மூலக்கூறு இரண்டு பேருந்துகளில் பயணம் செய்கிறது. இது மிகவும் அதிசயமான விஷயம், ஆனால் அறிவியலைப் பொறுத்தவரையில் அனைத்தும் சாத்தியமே.

சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi) அவ்விதம் புரத மூலக்கூறுகள் பயணிக்காமல் போகும் பட்சத்தில் ஏற்படுகின்ற மிகப்பெரிய குழப்பத்தைக் குறித்து ஆய்வு செய்கிறார். மரபணு நோய்கள் இவ்விதமாக ஏற்பட்டுவிடுகின்றன. ஒரு முறை தான் தவறவிட்ட பேருந்தை மறுமுறையும் தவற விடுகின்ற புரத மூலக்கூறுகளும் உண்டு அவ்விதம் நடக்கும் பொழுது ஏற்படுகின்ற ஒரு வகை நோய்தான் ஆட்டோசோமால் ரீசீசிவ் கோளாறு (autosomal recessive disorder), ARD என்று அது வர்ணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தனக்கு வந்து சேராத புரத மூலக்கூறுகளைத் தானே உருவாக்கிக் கொள்ள சில மரபணுக்கள் தங்களைப் பதப்படுத்திக் கொள்கின்றன. இவ்வகையான நோய்கள் உடனடியாக மரணத்தைக் கொண்டு வருவதில்லை. ஆனால் இளமைப் பருவத்தில் இதுபோல பலமுறை நடந்ததால் அது முதுமையில் பல வகையான சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் உயிர் நானோ உயிரியலாளர் சுபாராவ் காங்கி | India's bio-nanobiologist Subba Rao Setty - Melanin - Ayesha Era Natarasan - https://bookday.in/

விஞ்ஞானி சுப்பாராவ் காங்கி-ன் அடுத்த முக்கியமான ஆய்வு மெலானின் என்ற அழைக்கப்படுகின்ற கருநிற ஹார்மோன் சம்பந்தமானது ஆகும். இந்த மெலானின் என்கிற ஹார்மோன் உயிர் மூலக்கூறுகளின் தனிக் குடும்பமாக விளங்குகின்றது. இது மற்ற செயல்பாடுகளுடன் பல உயிரினங்களின் நிரப்பங்களை உற்பத்தி செய்கிறது. மெலானோ சைட்டுகள் என்று அழைக்கப்படுகின்ற உயிரணுக்களின் சிறப்புக் குழுவை தன் தனித்துவமிக்க ஆய்வுகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi) அவர்கள். மெலானின் அல்லது மெலடோனின் ஒரு இருள் புரதம், இது சுரப்பதனால் தான் நம்மால் உறங்க முடிகிறது. அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, ஆனாலும் இரவில் வெகு நேரம் நாம் கைப்பேசிகளை நோண்டுவது, ஆளும் ஏற்படுகின்ற பின்விளைவுகளில்  ஒன்று மெலடோனின் சுரக்காமல் உறக்கத்தை நாம் இழப்பது ஆகும்.

ஒருவருடைய உடலில் மெலானின் சுரக்காமல் போனால் என்ன ஆகும் என்பதுதான் இவருடைய முக்கியமான ஆய்வுகளின் அடிப்படை. அப்படிச் சுரக்காமல் போகின்ற பொழுது மிக மோசமான பின் விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனென்றால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் நம்மை தாக்குகின்ற பொழுது அது நம்மைப் பாதிக்காமல் மெலானின் பார்த்துக் கொள்கிறது. இது முதல் முக்கியமான விஷயம் மெலானின் சுரக்காத உடலின் தோல் பகுதிகளில் நீங்கள் தழும்பு போன்ற அடையாளங்களைப் பெறுகிறீர்கள். பிறகு தோல் முற்றிலும் பாதிக்கப்பட்டு அரிப்புகள் தோன்றுகின்றன. இந்த மெலானின் சுரக்காமல் விடும் பொழுது காலப்போக்கில் உங்களுக்கு காதுகள் கேட்காமலே போகும் உங்களுடைய கண்பார்வை மங்கி விடுகிறது.

இந்தியாவின் உயிர் நானோ உயிரியலாளர் சுபாராவ் காங்கி | India's bio-nanobiologist Subba Rao Setty - Melanin - Ayesha Era Natarasan - https://bookday.in/

இந்தியாவைப் பொறுத்தவரையில் OCULOCUTANEOUS ALBINISM என்னும் வகையான மரபணு சிதைவு நோய்களை இந்த மெலடோனின் சிக்கல் ஏற்படுத்துகிறது. இதை அனுபவிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தாங்களே சுய மருத்துவம் பார்த்துக் கொண்டு மருத்துவரிடம் போகாமலேயே இருந்து விடுகிறார்கள். சுப்பாராவின் ஆய்வு பேருந்துகளைத் தவிர விடுகின்ற இலக்குகளைத் தவற விடுகின்ற புரதங்கள் தான், இந்த நோய்க்குக் காரணம் என்பதைக் கோடிட்டு காட்டுகிறது. மெலனோ சைடாஸ் என்றழைக்கப்படும் செல்களின் பகுதிகள் மெலடோனின் என்கின்ற இந்த ஹார்மோனை சுரக்காமல் போவதால் ஏற்படுகின்ற ஒரு சிக்கல்தான் இது என்பதை அவருடைய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதற்காக சிறப்பாக தயாரிக்கப்படும் மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான நானோ தொழில்நுட்ப ஆய்வுகளை அவருடைய ஆய்வகம் தொடர்ந்து முயற்சி செய்கிறது.

பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தின் உயிரி தொழில்நுட்ப ஆய்வகத்தின் முதன்மை விஞ்ஞானியாக செயல்பட்டு வரும் சுப்பாராவ் காங்கி (Subba Rao Gangi) 2019 ஆம் ஆண்டுக்கான எஸ் ராமச்சந்திரன் தேசிய உயிரி அறிவியல் விருது பெற்றவர். உலகளவில் இன்று மெலடோனின் குறித்த சிகிச்சைகளுக்கு சுப்பாராவ் முறை பயன்படுத்தப்படுகிறது என்பது நமக்கெல்லாம் பெருமை.

கட்டுரையாளர்:

இந்தியாவின் உயிர் நானோ உயிரியலாளர் சுபாராவ் காங்கி | India's bio-nanobiologist Subba Rao Setty - Melanin - Ayesha Era Natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகம் போற்றும் இந்திய கோட்பாட்டு இயற்பியலாளர் தீபக் தார்

ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *