உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India's finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)

உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால்!

உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India’s finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)
தொடர் 98: இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100

சங்கர் குமார் பால் கல்கத்தாவிலுள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராகவும் முன்னாள் இயக்குனராகவும் உள்ளார் இவர் இந்திய அரசின் தேசிய அறிவியல் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். விஞ்ஞானி பால் ஒரு கணினித் துறை வல்லுனர், இயந்திர நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்குபவர். கணினி துறையில் இவருடைய பங்களிப்பை பாராட்டி அவருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2013 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கினார்.

விஞ்ஞானி சங்கர் குமார் பால் (Computer Scientist Prof. Sankar Kumar Pal) பால் நிச்சயமற்ற தொகுப்பு கோட்பாடு எனும் இயற்பியலின் துறையில் தனக்கென்று முத்திரை பதித்தவர். இந்த வகை கோட்பாடுகள்தான் வருங்காலத்தின் குவாண்டம் கணினி உலகை வடிவமைக்க போகின்றன. கணினி அறிவியல் என்றாலே அது ஏதோ அமெரிக்காவில் உருவாக்கப்படுகின்ற ஒரு அறிவியல் தொழில்நுட்பம் என்கிற ஒரு மனநிலை நம் அனைவருக்கும் உண்டு. உலகில் முதல் கணினி அறிமுகப்படுத்தப்பட்ட 1950களிலேயே இந்தியாவுக்கு கணினி வந்து விட்டது என்பதுதான் உண்மை. ஆனால் நம் நாட்டில் செயற்கை நுண்ணறிவு என்கிற ஒரு விஷயத்தை அணுகுவதில் முதலில் நாம் இயந்திர நுண்ணறிவு என்பதை நோக்கி பயணிக்க வேண்டும். அப்படியான பயணத்தை இந்தியாவுக்கென்று தனியாக அறிமுகம் செய்தவர் தான் சங்கர் குமார் பால். 1993 ஆம் ஆண்டு இயந்திர நுண்ணறிவு மேலும் தனித்துறையை அவர் தோற்றுவித்தார். சர்வதேச அரங்கில் இந்த துறையில் இந்தியாவை முன்னணியில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர் அவர்.

உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India's finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)

NEURO-FUZZY NETWORK என்று அறியப்படும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் நியூரோ பூசி, மனித நரம்பியல் போலவே உள்ள நெட்வொர்க்குகளின் தெளிவற்ற தர்க்கத்தின் கலவையை குறிக்கிறது. நரம்பியல் போலவே தெளிவில்லாத கலப்பினம் ஆனது ஒரு கலப்பின அறிவார்த்த அமைப்பில் விளங்குகிறது. அது மனிதனை போன்ற தெளிவற்ற அமைப்புகளின் பகுத்தறிவு பணியை பின்பற்றுகிறது. நம்முடைய உடலில் நரம்பியல் நெட்வொர்க்குகள் எப்படி தெளிவற்ற தன்மையோடு ஒரு கலவையாக, ஆனால் அதே சமயத்தில் ஒரு முழுமையாக இயங்குகின்றனவோ அது போலவே இணையத்தை கட்டமைக்கின்ற மிக முக்கியமான ஒரு அமைப்பாக இதை கருதுகிறார்கள். நெட்வொர்க்குகளின் கற்றல் மற்றும் இணைப்பு அமைப்பு என்பதுதான் நியூரோ பூசி.

NEURO-FUZZY கட்டமைப்பில் இரண்டு உலகளாவிய அல்காரிதம்களை முன் வைத்த பெருமை விஞ்ஞானி சங்கர் குமார் பாலை சேரும் அவற்றில் முதன்மையானது IF-THEN என்கிற தெளிவற்ற விதிகளின் தொகுப்பாகும். IF-THEN தெளிவற்ற விதிகளின் தொகுப்பைக் கொண்ட ஒரு மொழியியல் மாதிரியின் மூலம் தெளிவற்ற அமைப்புகளில் மனிதனைப் போன்ற பகுத்தறிவு பாணியை ஒருங்கிணைக்கின்ற அல்காரிதம், இயந்திர கற்றலில் நரம்பியல் போலவே தெளிவற்ற அமைப்புகளின் முக்கிய பலம் என்னவென்றால் அவை மனிதனால் பல ஆண்டுகளுக்கு தீர்க்க முடியாத கணிதத்தின் படி நிலைகளை உலகளாவிய தோராயமாக விளங்கக்கூடிய IF-THEN போன்ற அல்காரிதம்களை பயன்படுத்தி சில நொடிகளில் பதில் அளிப்பது ஆகும்.

ஒரு நெட்வொர்க்கினுடைய அளவை அதிகரிப்பதற்கான தெளிவற்ற தர்க்கம் சார்ந்த அளவுகோல்களில், விஞ்ஞானி சங்கர் குமார் பால் (Computer Scientist Prof. Sankar Kumar Pal) கவனம் செலுத்த தொடங்கினார். இதன்மூலம் மல்டி லேயர் நரம்பியல் நெட்வொர்க்குகளின் செயல்பாடுகளை அவரால் ஒரு கோட்பாடாக முன் வைக்க முடிந்தது. சமீபத்திய ஆராய்ச்சினுடைய மிக முக்கியமான உலக அளவிலான தேடல் டேட்டா ஸ்ட்ரீம் மைநிங் இன்னும் அம்சத்தை நோக்கி இவருடைய கோட்பாடுகள் நம்மை அழைத்துச் சென்றன. நியூரோ பியூசி சிஸ்டம்கள் மேம்படுத்தப்பட்ட மாதிரியாக உருமாற்றப்பட்ட பொழுது சிஸ்டம் புதுப்பிப்புகள் அளவுகளின் சூழ்நிலை தழுவல் போன்றவை தரவுகள் அளிக்கப்பட்டால் அவை செயற்கை நுண்ணறிவின் உதவியோடு நாம் கேட்கின்ற விதமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு சில நொடிகளில் நமக்கு வழங்கப்படுகின்ற அல்காரிதம்களை உற்பத்தி செய்தது. இந்திய அளவில் இது ஒரு பிரம்மாண்ட சாதனையாகும்.

உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India's finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)

சங்கர் குமார் பால் சார்ந்திருக்கும் துறை SOFT-COMPUTING துறை என்று அழைக்கப்படுகிறது. சாஃப்ட் கம்ப்யூட்டிங் என்பது கணினி அறிவியலின் தீர்க்க முடியாத உயர்நிலை சிக்கல்களுக்கு தோராயமாக தீர்வுகளை உருவாக்கும் அல்காரிதம் வகைகளை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொது சொல்லாக்கம். பொதுவாக பாரம்பரிய ஹார்ட் கம்ப்யூட்டிங் அல்காரிதம்கள் சிக்கல்களுக்கு தீர்வுகளை உருவாக்க உறுதியான தரவு மற்றும் கணித மாதிரிகளை பெரிதும் நம்பியுள்ளன. சாஃப்ட் கம்ப்யூட்டிங் அப்படியல்ல சங்கர் குமார் பால் போன்றவர்களின் ஆராய்ச்சி ஒரு காலகட்டத்தில் மூன்று துறைகளில் புரட்சிகரமான சாஃப்ட் கம்ப்யூட்டிங் அறிமுகம் செய்தனர்.

தெளிவில்லாத தர்க்கம் என்பது ஒரு கணக்கிட்டு முன்னுதாரணமாகும் அது பைனரியில் திடமான 0 கள் மற்றும் 1 களை விட முன்பதிவுகளின் நிலைகளை பயன்படுத்தி தரவுகளின் உள்ள நிச்சயமற்ற தன்மைகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. மனிதனின் குறுக்கீடுகளை 90 சதவிகிதம் புரிந்துகொண்டு.. மூளை செயல்பாடுகளால் பாதிக்கப்படும் கணக்கிட்டு மாதிரிகளாக நெட்வொர்க்குகளை அவர் உருவாக்கினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் இன் சூழலில் எதார்த்த உலக நிச்சயமற்ற தன்மைகளை கையாளுவதற்கான கருவிகளை சாஃப்ட் கம்ப்யூட்டிங் உருவாக்கி வழங்குகிறது. அது வரையில் உலகின் பல நாடுகளில் இருந்து இது போன்ற கருவிகளை இந்தியா இறக்குமதி செய்து கொண்டிருந்தது. இவர் முன்வைத்த செயற்கை நுண்ணறிவுடன் இணைந்த கணக்கிட்டு வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் கலப்பின நுண்ணறிவு அமைப்புகள் இந்தியாவிலேயே இது போன்ற கருவிகளை உருவாக்குகின்ற வாய்ப்பை நமக்கு வழங்கியது. இது அவருடைய இரண்டாவது பிரம்மாண்ட சாதனையாகும்.

உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India's finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)

விஞ்ஞானி சங்கர் குமார் பால் (Computer Scientist Prof. Sankar Kumar Pal) அவர்களின் மூன்றாவது மிக முக்கிய பங்களிப்பு PATTERN RECOGNITION,  என்றழைக்கப்படுகின்ற வடிவ அங்கீகாரம் என்று தமிழில் அழைக்க தகுந்த பேட்டர்ன் அங்கீகாரம் என்பது குறித்ததாகும். பேட்டர்ன் அங்கீகாரம் என்பது தர பகுப்பாய்வு, சிமிகை செயலாக்கம், பட பகுப்பாய்வு, தகவல் மீட்டெடுப்பு, உயிர் தகவலியல், தரவுச் சுருக்கம் கணினி வரைகலை மற்றும் இயந்திர கற்றல் ஆகியவற்றின் பயன்பாடுங்களை ஒன்றிணைக்கிறது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் மிக தீவிரமாக கணினி துறையில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இந்தியாவின் புகழை நிலைநாட்டிய சங்கர் குமார் பால் 1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி எஸ்ஸி இயற்பியலை எடுத்து படித்தார். அதன் பிறகு பொறியியல் துறையில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக பீடக், மற்றும் எம் டெக் ஆகிய முக்கியமான பட்டங்களை ரேடியோ இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறைகளில் பெற்றார். ஆண்டு 1979… ராஜா பஜார் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் ஒரு மாணவராக ரேடியோ இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். முனைவர் பட்ட ஆண்டுகளில் ஊடாக லண்டன் பல்கலைக்கழகத்தின் இம்ப்ரியல் கல்லூரியில் மின் பொறியியல்ல் மேலும் ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டார். PATTERN RECOGNITION துறையில் IMAGE PROCESSING பிரிவில் உலகிலேயே முதன்முதலில் PhD பட்டம் பெற்றவர் என்கிற பெருமையை அவர் 1982 ஆண்டு பெற்றார்.

லண்டனில் அவருக்கு காமன்வெல்த் ஸ்காலர் இன்னும் பெல்லோஷிப் வழங்கப்பட்டது. கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு சென்று ..கணினியியலில் அடுத்த கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்தார். நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் அவருக்கு ஆறு ஆண்டுகள் அங்கு பணிபுரியும் அங்குள்ள கணினிகளை மேம்படுத்தவும் வாய்ப்பு வழங்கியது. அமெரிக்காவினுடைய நேஷனல் அகாடமி ஆஃப் செயன்ஸ் மற்றும் நேஷனல் ரிசர்ச் லெபாரட்ரி போன்ற ஆய்வகங்களில் அவர் கணினி உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.

உலகம் போற்றும் இந்திய கணினியியல் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (India's finest Computer Scientist Prof. Sankar Kumar Pal)

ஆனால் விரைவில் அவர் இந்தியா திரும்பினார் கொல்கத்தாவில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க CSIR நடத்தும் இந்திய புள்ளியியல் நிறுவனம் ISI கழகத்தின் முழு நேர பேராசிரியராக அவர் 1987 ல் இணைந்தார். இந்தியாவில் பல வகையான கணினி குறித்த கல்வியையும் இயந்திர கற்றல் தொடர்பான முக்கிய நிறுவனங்களையும் உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. விரைவில் அவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவராகவும் இயக்குநராகவும் பொறுப்பேற்றார். பெரும் தரவு என்று அழைக்கப்படும் BIG DATA இன்றைய கணினி துறையில் GRANULAR COMPUTING என்கிற முக்கிய அம்சத்தை கொண்டு வந்த பெருமைக்கு உரியவர் அவர். இவர் கண்டுபிடித்துக் கொடுத்த PATTERN RECOGNITION என்னும் அல்காரிதத்தை பயன்படுத்தி தான் இந்தியர்கள் அனைவருக்கும், அதாவது 112 கோடி மக்களுக்குமான ஆதார் அடையாளங்களை இந்திய அரசு ஒரு பெரிய தரவு குவியலாக உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.

உலகெங்கிலும் பாட புத்தகமாக பயன்படுத்தப்படும் 20 க்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர் அவர், சற்றேறக்குறைய 32 சர்வதேச உரிமங்களை தன்னிடம் வைத்திருக்கிறார். உலகின் தலைசிறந்த கணினியியல் தொடர்பான ஆய்வு இதழ்களின் ஆசிரியர் குழுக்களில் இடம்பெற்றிருக்கிறார். அவருடைய புத்தகங்கள் பல ரஷ்ய மொழி சீன மொழி ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு அல்காரிதம்களை பயன்படுத்தி கணினிகளை புரிந்துகொள்ளவும் செயற்கை நுண்ணறிவு நோக்கிய பாதையை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.

2004 ஆம் ஆண்டு இவர் உருவாக்கி கொடுத்த CSCR சென்டர் ஃபார் சாஃப்ட் கம்ப்யூட்டிங் ரிசர்ச் நிறுவனம் ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்ப துறைசார்ந்த செயற்கை நுண்ணறிவு குறித்த தனி ஆய்வகம் ஆகும். இவர் இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த காலத்தில் தான். அந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் தலைசிறந்த அறிஞர் பேராசிரியர் மெகல்நோபிஸ் என்னும் அறிஞரின் பிறந்தநாளை இந்திய பிரதமர் தேசிய புள்ளி இயல் தினம் என்று அறிவித்தார். லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது முதல் ஆயிரக்கணக்கான மாணவர்களை கணினியியல் நோக்கி ஈர்த்த பெருமைக்குரியவர் விஞ்ஞானி சங்கர் குமார் பால் (Computer Scientist Prof. Sankar Kumar Pal).

எல்லாவற்றிக்கும் மேலாக நாசாவின் ஜான்சன் ஸ்பேஸ் சென்டர் அவருக்கு பச்சை அட்டை வழங்கி அமெரிக்காவினுடைய, பிரஜா உரிமை பெற்று தங்களது ஆய்வகத்தில் இணைவதற்கு கோடிக்கணக்கான டாலர்கள் பேரம் பேசிய பொழுது அதனை மறுத்து தான் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் இந்தியா மண்ணிற்காக உழைப்பதற்காக பிறந்தவர் என்றும் உறுதிபட தெரிவித்து இந்தியாவிலேயே ஆய்வுகளை தொடர்வது என்று முடிவு செய்த நம் நாட்டின் நாட்டுப்பற்று உதாரணம் அவர்.

சங்கர் குமார் பால் பல்வேறு விருதுகளின் சொந்தக்காரர். ஜவகர்லால் நேரு பெல்லோஷிப், விக்ரம் சாராபாய் ரிசர்ச் விருது, நாசாவினுடைய நாசா டெக் விருது, ஜே சி போஸ் ஃபெலோஷிப் உட்பட பல விருதுகள் பெற்றவர். G D பிர்லா விருதை 1999 பெற்றார். கணினித் துறையில் இவருடைய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது அவருக்கு 1990 ஆண்டு வழங்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு இந்திய ஜனாதிபதி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தார். உலகெங்கும் இன்று பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கணினியிலும் இவருடைய கண்டுபிடிப்பு உள்ளது என்பது இந்திய மண்ணிற்கு பெருமை.

கட்டுரையாளர்:

கோட்பாட்டு இயற்பியலாளர் வெங்கட்ராமன் பாலகிருஷ்ணன் - V.BalakrishnanIndian theoretical physicis - ayesha era natarasan - https://bookday.in/

ஆயிஷா இரா. நடராசன்

தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த அணுவியல் துறையின் பாதுகாப்பு விஞ்ஞானி பலராமமூர்த்தி (K. Balaramamoorthy)


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. Savitha

    It’s been such a enlightening journey to follow through the whole course of 100 indian scientists. My salutes to Dr Ayesha Natarajan’s unwavering sincerity and diligence. I hope he will compile this series into a book.

    Today’s episode is especially touching to me, as an AI enthusiast. It’s lovely to see the efforts from Dr Pal of ISI for his influence in educating Indians on AI. Lovely! Thank you, Dr AE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *