இந்தியாவின் முதல் அறிவியல் விஞ்ஞானி கமலா சோகோனி.. கட்டுரை – பேரா.சோ.மோகனா

இந்தியாவின் முதல் அறிவியல் விஞ்ஞானி கமலா சோகோனி.. கட்டுரை – பேரா.சோ.மோகனா
பெண் விஞ்ஞானிகள்..?
நண்பர்களே..உங்களில் யாராவது ஒரு 10 பெண் விஞ்ஞானிகளின் பெயர்களை சொல்லுங்களேன். ஹூஹூம். ஹூஹூம். சொல்லவே மாட்டோம். முடியாது என்பதே உண்மை.. நினைவுக்கு வரவில்லையா. அல்லது தெரியவே இல்லையா. தெரியாதும் என்பதும் உண்மையே. ஏனெனில் நமக்கெல்லாம் விஞ்ஞானி என்றதும் மனக்கண்ணில் வட்டமிடுவது நரைத்த தாடி மீசை வைத்த வெள்ளைக் கோட்டு போட்ட ஆண் விஞ்ஞானிகளே. இந்த மாதம் புத்தகம் பேசுது இதழில் வந்த முனைவர் இந்துமதியை நாம் யாராவது டக்கென்று விஞ்ஞானி என்று சொல்வோமா. சொல்லியிருக்கிறீர்களா? நாம் இன்னும் அவ்வளவு பக்குவபடவில்லை.

இந்திய பெண் விஞ்ஞானிகள்..!
நாம் பெருமைப்படத்தக்க இந்திய பெண் விஞ்ஞானிகள் யார் தெரியுமா?, டாகடர் ஆனந்த்பாய் ஜோஷி, முனைவர்கள் ஜானகி அம்மாள், கமலா சோகனி, அண்ணா மணி, அஷிமா சட்டர்ஜி, ராஜேஸ்வரி சட்டர்ஜி, தர்ஷன் ரங்கநாதன், மகாராணி சக்கரபார்த்தி, சாருசிதா சக்கர்பர்த்தி, மங்கள நர்லிகர் போன்றவர்கள் பெண் விஞ்ஞானிகள் இருக்கத்தான், இவர்களை நாம் கண்டுகொள்வதும் இல்லை.. நம் கண்களில்தான் தென்படுவதும் இல்லை.

கமலா சோகோனி ..
1800-1900 காலகட்டத்தில், பெண்கள் அதிகம் படிக்கவில்லை. உலகம் முழுவதும் இதே நிலைமைதான்.. ஆண்களில் கூட மேல்தட்டு மக்களே படித்தனர். 1900களில் இந்தியாவில் ஏராளமான மாற்றங்கள் பிரிட்டிஷ் அரசு மூலம் வந்தது. ஆனால் பெண்கள் படிக்கவில்லை. காந்தியும் கூட பெண்கல்விக்கு எதிரானவர்தான். இந்த நேரத்தில் மும்பையில் , 1912ல், பிறந்தவர் கமலா சோகனி. இந்தியாவில், முதன்முதல் அறிவியல் துறையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கிய முதல் பெண், எப்படிப்பட்ட உயரிய பட்டம் தெரியமா? மலைவாழ் மக்கள், ஏழைகள் உண்ணும் உணவுப் பொருட்களில் ,மூன்று வகையான பொருட்களில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர். அதில் அவர்களுக்கு வேண்டிய சத்துகள் இருக்கின்றனவா என்ற சமூகவியல் நோக்கில் ஆய்வு செய்தவர் கமலா சோகோனி. கமலாதான் இவரது பெயர். சோகோனி இவரது இணையரின் பெயர்.

கனவு சிதறிய கமலா..
கமலாவின் பிறப்பு, இந்தியப்பெண்களின் இருண்ட காலமான1912ல். அவரது தந்தை நாராயணராவும், சகோதரர் மாதவராவும் சிறந்த வேதியலாளர்களாக இருந்ததால், கமலாவும் படிக்க நேர்ந்தது. அவரின் தந்தையும் சோதரர் மாதவராவும், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதல் நிலையில் படித்து தேரச்சி பெற்றவர்கள். எனவே கமலாவும் B.Sc ல் இயற்பியல்& வேதியலை சிறப்பாக மும்பையில் படித்து, பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவராக வெளிவந்தார். எனவே தனக்கு மேற்படிப்பு, எளிதில் தந்தை படித்த பெங்களூரு அறிவியல் நிறுவனத்தில் இடம் கிடைத்துவிடும் என்ற இவரது கனவு உடைந்து, சிதறி, தவிடுபொடியானது.

இராமன் நிராகரித்த கமலா..
ஏன் என்னாச்சு கமலாவுக்கு. 1933ல், கமலா இரு அறிவியல் துறைகளிலும் இளம் அறிவியல் பட்டம் வாங்கியாச்சு. அப்போது 1930ல், சர்.சி.வி.ராமன் வண்ணப்பிரிகைகளின் காரணம் கண்டறிந்து, ஏன் வானும் கடலும. நீலநிறமாக இருக்கின்றன என்பதற்கான காரணம் அறிந்து, அதறகாக நோபல் பரிசு பெற்றவர். அவரது ராமன் அறிவியல் நிறுவனத்தில் மேற்படிப்புக்கு கமலா விண்ணப்பித்தார். இயற்பியல் விஞ்ஞானியான இராமனுடன் இணைந்து பணிபுரிய விரும்பினார். ஆனால் இராமனும் கூட பெண்கலவிக்கு எதிரானவர், பிற்போக்குவாதி. பட்டம் பெற்ற கமலாவை, தன் அலுவலகத்தில் பணி செய்ய அனுமதிக்கவில்லை.. ராமன், கமலாவிடம் என்ன சொன்னார் தெரியுமா? ” நீ பெண். இங்கு பணிபுரிய முடியாது. உன்னை வேலைக்கு சேரத்தால், இங்கிருக்கும் ஆம்பிளப்பசங்க , வேல பாக்க மாட்டாங்க. உன்னையே சுத்தி வருவாங்க. அதனால் இங்க வேலை கிடையாது ” என்றார். மெத்தப. படித்த மேதையான, இந்தியாவுக்கு தன் கண்டுபிடிப்பால் பெருமை தேடித்தந்த அறிஞரின் கருத்தும் கூட, பெண்ணை பாலியல் பொருளாக பார்த்ததுதான். பல்கலைக்கழகத்தில், கல்வியில் முதல் மாணவியாக இருந்த போதும் பெண் என்ற ஒரே காரணத்துக்காக, நோபல் பரிசாளர் இராமனால் நிராகரிக்கப்பட்டார் கமலா. கமலாவின் நெஞ்சத்தில் வாழ்நாளில் மறக்க முடியா ரணமும், தழும்பும் ஏற்பட்டன.

சத்தியாகிரகம்.. செய்த முதல் பெண்..
இருப்பினும் கமலா நம்பிக்கை இழக்கவில்லை. தினந்தோறும் காலையில் இந்திய அறிவியல் நிறுவனத்துக்கு வருவார். வந்து இராமனின் அறை முன்னர் காலை முதல் மாலை வரை அமர்ந்து, வாய் பேசாமல் போராட்டம் நடத்துவார். இப்படியே கிட்டத்தட்ட 10நாட்கள் இந்த சத்யாகிரகம் தொடரந்த்து. இராமன் கோபம் அதிகரித்து அவமானமும் அடைந்தார். பின்னர் இராமன், கமலாவை சில கட்டுப்பாடுகளுடன் பணிபுரிய எடுத்துக் கொண்டார். 1.கமலா வெளியிலிருந்துதான் படிக்க வரவேண்டும். (Not a regular student) 2.கமலாவால் ராமன் அறிவியல் நிறுவனத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படக்கூடாது. 3. அவரின் இருப்பால் எந்த ஆணுக்கும் சிறு தொந்தரவு கூட வரக் கூடாது.. 4. ஒரு வருடம் மட்டுமே தாற்காலிக படிப்பு. கமலா அவமானத்தால் கூனிக்குறுகி வேதனைப்பட்டார் கமலா வேறு வழியின்றி, கல்வியை முன்னிட்டு பேசாமல் படிக்க சேரந்தார். இராமன் பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் எவ்வளவு குறுகிய மனம் உள்ளவர் என்பது தெரிகிறதா? இந்த மனவேதனை கமலாவுக்கு நெஞ்சில் சாகும் வரை உறுத்திக் கொண்டே இருந்த்து.

கல்வியில் கரைகண்ட கமலா
கமலா அறிவியல் நிறுவனத்தில் ஓராண்டு சிறப்பாக படித்து, ராமனிடம் நல்ல பெயர் எடுத்தார். அவரின் படிப்பிலும் செயல்பாடுகளிலும் இராமன் திருப்தி அடைந்தார். அதன் பின்னர், கமலாவை, regular மாணவராக, ஆராய்ச்சி செய்ய சேர்த்துக்கொண்டார். அது மட்டுமா? அதன் பின்னர், இராமன் பெண்களைப் படிக்க, ஆராய்ச்சி செய்ய சேர்த்துக்கொண்டார் இது எப்படி இருக்கு? கமலா ஒற்றையாளானாலும்,அவரின் சத்யாகிரக போராட்டத்தால், அவரது மன உறுதியால், அவருக்கு மட்டுமல்ல, பெண் இனத்துக்கே நியாயம் கிடைக்க விதை போடப்பட்டது. இது எவ்வளவு பெரிய. மௌன புரட்சி.பெண் என்பவள்.. கலவித் தளத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு தளத்திலும் தனித்துவிடப்பட்டு, நசுக்கப்படுகிறாள்.

பழங்குடிகளுக்கான ஆராய்ச்சி..
பெங்களூரு அறிவியல் நிறுவனத்தில் கமலா ஸ்ரீனிவாசையாவின் கீழ் உயிரிவேதியியலில் பணிபுரிந்தார். அவர் கமலாவிடம் அன்பு காட்டி, ஏராளமான வல்லுநர்களின் எழுத்துகளையும் படைப்புகளையும் படிக்குபடி ஏற்பாடு செய்தார். 1936ல், பருப்புகளிலுள்ள புரதம் பற்றி ஆராய்ச்சி செய்தார். கமலா இந்தியாவில், சதத்துக்குறைவால் வாடும் மக்களுக்காகப் பால், பருப்பு, மொச்சைகளிலுள்ள புரதம் பற்றி ஆராய்ந்தார். இதனை மும்பை பல்கலைக்கழகத்தில், M.Sc பட்டத்திற்குச் சமர்ப்பித்தார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று முனைவர் பட்டத்திற்குப் படித்தார்.

நோபல் பரிசாளர். வழிகாட்டியாய்.
நோபல் பரிசாளர் ஹாப்சனிடமும் பணிபுரிந்து 1939ல் முனைவர் பட்டத்துடன் இந்தியா திரும்பினார்.. புதுதில்லி Lady Hardinge College, ல் உயிரி வேதியியல் துறைத்தலைவராக பணிபுரிந்தார்.. 1947ல், M.V.சோகோனி என்பவரை திருமணம் முடித்து மும்பைவாசி ஆனார். முதல் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்தின் ஆலோசனையின் பேரில் மலைவாழ் மக்களின் பதின்ம வயது குழந்தைகள் & கருவுற்ற பெண்களின் உணவில் ஆராய்ச்சி செய்து அவர்களின் உடல்நலம் முன்னேறியதால், குடியரசு தலைவர் பரிசு வாங்கினார். தனது 86ம் வயதில், 1998ல் கமலா சோகோனி இவ்வுலக வாழ்வை மறந்தார்.


– பேரா.சோ.மோகனா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *