இந்திய இன்றைய விஞ்ஞானிகள் 100
இந்தியாவின் முதல் அறிவியல் ரத்னா கோவிந்தராஜன் பத்மநாபன் (Biochemist Govindarajan Padmanabhan)
பாரத ரத்னா விருதைப் போலவே அறிவியலுக்கு என்று விஞ்ஞான ரத்னா என்கிற விருதை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.. இந்த விருதைப் பெறுகின்ற வாழ்நாள் சாதனையாளர் தமிழகத்தைச் சேர்ந்த கோவிந்தராஜன் பத்மநாபன் (Biochemist Govindarajan Padmanabhan) எனும் மருத்துவ விஞ்ஞானி ஆவார்.. முந்தைய ஷாந்தி ஸ்வரூப பட்நாகர் விருதுக்கு மாற்றாக விஞான் ஸ்ரீ விருதுகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த விருதுகள் குறித்த அரசியல் பற்றி பிறகு பார்ப்போம்.. தற்போது நம்முடைய நோக்கம் ஜீ பத்மநாபன் என்னும் அந்த மாமனிதரை குறித்து அறிவது ஆகும்.. இந்தியாவின் மருத்துவ நிறுவனங்கள் மருந்தியல் துறை இவற்றை மேம்படுத்திய பெருமை அவருக்கு உண்டு. மஞ்சல் காமாலை நோய்களில் மிக மோசமானதான HEPATITS-B மற்றும் மலேரியா நோய்க்கான சிகிச்சை முறைகளையும் அதற்கான மருந்துகளையும் கண்டுபிடித்து உலக அளவில் பேசப்பட்டவர் அவர்.
இந்திய உயிர்வேதியியலாளர் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலாளர் கோவிந்தராஜன் பத்மநாபன் (Biochemist Govindarajan Padmanabhan) பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஆவார் தற்போது திருவாரூரில் இயங்கும் தமிழ்நாட்டின் மத்தியப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றுகிறார். தஞ்சையில் பிறந்து பெங்களூரில் குடியேறி பள்ளி படிப்பை முடித்துவிட்டு.. முதலில் அவர் எடுத்தது பொறியியல் கல்வியாகும். வீட்டிலிருப்பவர்களின் நிர்பந்தம் காரணமாக மற்றும் அந்த நாட்களில் பொறியியல் கல்லூரி கல்வியின்மீது சமூகத்தில் பரவி இருந்த ஈர்ப்பின் காரணமாகவும் பொறியியல் கல்லூரியில் இணைந்தாலும் அதில் ஆர்வமின்றி இரண்டாம் ஆண்டில் அவர் கல்லூரியை விட்டு வெளியேறினார்

சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தனக்கு மிகவும் விருப்பமான பாடமான வேதியியல் இளங்கலைப் பட்டத்தை எடுத்துப் படித்தார்.. தலை சிறந்த மாணவராக தேர்ச்சி பெற்று புது டெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் மண் வேதியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் வென்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் உயிரி வேதியியல் ஆய்வகத்தின் உதவிஆய்வாளர் எனும் இளம் விஞ்ஞானி பதவியில் இணைந்தார்.
ஆரம்ப நாட்களில் அவர் கல்லீரலில் யுகரி ஓடிக் மரபணுக்களின் டிரான்ஸ்கிரிப்ஷன் என்றழைக்கப்படும் புதிய தொழில்நுட்ப ஆய்வுகளில் ஈடுபட்டார் அப்போதுதான் மிக மோசமான மலேரியா நோய் பரவிக் கொண்டிருந்தது.. மலேரியாவை ஒழிப்பதற்கு DDT எனும் நச்சுக் கொல்லியை நீர்நிலைகளில் எல்லாம் போடுவது என்று அரசு முடிவு செய்தது இந்த நச்சுக் கொல்லி தண்ணீரை விஷமாக்கியது சுற்றுசூழலை அழித்தொழித்தது.. எனவே இதற்கு எதிராக பத்மனாபன் போன்றவர்கள் களத்தில் இறங்கினார்கள்..DDT தெளிப்பதற்கு எதிரான அவருடைய ஆய்வுக்கட்டுரைகள் உலகெங்கும் பேசப்பட்டன.. இந்தசூழலில் மலேரியாவுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க வேண்டும் என்று அவரது குழு தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியது.
மலேரியா என்பது கொசுக்களால் பரவும் தொற்று நோய் ஆகும் இது மனிதனின் முதுகெலும்பை பாதிக்கிறது மனித மலேரியா பொதுவாக காய்ச்சல் சோர்வு வாந்தி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளை கொண்டதாகும்.. மிக மோசமான சூழல்களில் இது மஞ்சள் காமாலை வலிப்பு கோமா அல்லது மரணத்தை ஏற்படுத்தும்.. இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்கள் மலேரியா நோய்க்கு பலியாகி கொண்டிருந்த 1970 களில் நோய்த்தொற்றுடைய அனாபிலஸ் கொசுவை ஒழிப்பதில் தான் அனைவரும் கவனம் செலுத்தினார்கள்.. ஆனால் கோவிந்தராஜன் பத்மநாபன் (Biochemist Govindarajan Padmanabhan) மலேரியாவுக்கான தடுப்பூசி ஒன்றை தாரிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

மலேரியா விஷயத்தில் மிகப்பெரிய சவால் என்னவென்றால் ஒருமுறை சிகிச்சை பெற்று சில மாதங்களுக்கு பிறகு மக்கள் நோயிலிருந்து மீண்டாலும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குப் பிறகு அந்த எதிர்ப்பு சக்தி குறைந்து முற்றிலும் மறைந்து மீண்டும் மலேசியாமலேரியா திரும்பத் தாக்குகிறது இரண்டாவதுமுறை தாக்கப்படும் மலேரியா கண்டிப்பாக மனிதனை மனத்தில்மரணத்தில் தள்ளும்.. மனித மலேரியா பிளாஸ்மோடியம் குழுவின் ஒற்றை செல் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது இது பாதிக்கப்பட்ட அனோபிலஸ் கொசுக்கள் குறிப்பாக பெண் கொசுக்கள் கடித்தால் கொசுவின் உமிழ் நீரிலிருந்து ஒட்டுண்ணிகள் ஒரு நபரின் ரத்தத்தில் நுழைந்து விடுகின்றன இந்த ஒட்டுண்ணிகள் நேரடியாக கல்லீரலுக்கு செல்கின்றன அங்கு அவை முதிர்ச்சி அடைந்து தீவிரமாக இனப்பெருக்கம் செய்கின்றன.. ஐந்து வகையான பிளாஸ்மோடியம் பொதுவாக மனிதர்களை பாதிக்கிறது.. மிகவும் கடுமையான நோய்களுடன் தொடர்புடைய மூன்று இனங்களை பத்மநாபன் கண்டுபிடித்தார் பெரும்பாலான மலேரியா இறப்புகளுக்கு காரணம் ஆன பிபால்ஸிபாரம் எனும் பிளாஸ்மோடியத்துக்கு எதிராக நம்முடைய ஊரில் விளையும் மஞ்சள் சிறப்பாக பயன்படும் என்று எதிர் சக்தியை அவர் கண்டுபிடித்தார்
மலேரியா ஒட்டுண்ணியிலுள்ள ஹேமபயோ சிந்தெடிக் மருத்துவ பாதையை சரியானது என்று அவரது ஆய்வு மருந்து இலக்காக காட்டியது தடுப்பூசி உருவாக்கும் துறையில் மஞ்சளிலிருந்து எடுக்கப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருளை மலேரியா எதிர்ப்பு பண்பு மற்றும் கூட்டு சிகிச்சையில் அதன் செயல்திறனை காட்டுவதில் பத்மனாபன் வெற்றி பெற்றார். குர்குமின் என்பது குர்குமா லாங்கா என்னும் இனத்தைச் சேர்ந்த தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒரு பிரகாசமான மஞ்சள் வேதிப்பொருள் இது இஞ்சி குடும்பத்தை சேர்ந்தது இது ஒரு மூலிகை சப்ளிமென்ட் ஒப்பனை செய்து கொள்ளும் பொருள்களிலும் இன்றைக்கு கலக்கப்படுகிறது. குர்குமின் வேதிமுறையில் C12 H20 O6 என்னும் வேதி சமன்பாட்டை கொண்டதாகும் வேதிமுறையில் சொல்லப்போனால் குர்க்குமின் ஒரு பாலிஃபீனால் . ஆய்வகம் மற்றும் மருத்துவ துறையில் குர்க்குமின் எந்த பயன்பாட்டையும் அப்போது யாரும் உறுதிபடுத்தவில்லை … ஆனால் சிறுவயதில் தன்னுடைய வீட்டில் சமையலறையிலிருந்து மஞ்சள் மருத்துவத் துறையில் பாட்டி வைத்திய முறையில் எத்தகைய பங்கை வகித்தது என்பதை நினைவுபடுத்திக்கொண்டு பத்மநாபன் களத்தில் இறங்கினார்.

குர்குமின் முதல் .. வேதி அமைப்பானது சின்னமிக் அமிலம் மற்றும் ஐந்து மலோநெய்ல்-கோஎ மூலக்கூறுகளால் சங்கிலி நீட்டிப்பு எதிர்வினையை உள்ளடக்கியது ஆகும் அவ இறுதியில் குர்குமின் நாடுங்களாக மாறுகின்றன …இது இரண்டாவது வேதி சங்கிலி ஆகும் இது இரண்டு சின்ன மேட் அழகுகளை பெறுகிறது இத்தகைய நிலையில் மலேரிய வைரஸை எதிர்த்து அது தீவிரமாக செயல்படுகிறது. சமையல் மஞ்சள்ல் இருந்து மருந்து கிடைப்பது உண்மைதான் என்றாலும் ஆய்வகத்தில் பலவகையான மாற்றங்களுடன் மட்டுமே மருந்தாக அதை உட்கொள்ள முடியும் என்று பத்மநாபன் எச்சரிக்கிறார்..
அவரது அடுத்த முக்கிய பங்களிப்பு மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசி ஆகும்.. வருடந்தோறும் மஞ்சள் காமாலை இன்னும் குடிநீர் வழியே பரவுகின்ற நோய்க்கு இந்தியாவில் லட்சக்கணக்கானவர்கள் மரணமடைகிறார்கள்.. அதிலும் குறிப்பாக HEPATITIS B எனும் மஞ்சள் காமாலையின் நோய் நிலை மிகமிக ஆபத்தானதாகும்.. இந்த நோய் கல்லீரலை பாதிக்கும் எபிட்டர்-பீ வைரஸால் பரவும் ஒரு தொற்று நோயாகும் இது கடுமையாக மற்றும் நாள் பட்ட தொற்று இரண்டையுமே ஏற்படுத்தக்கூடியது இந்த நோய்க்கான தனி அறிகுறிகள் என்று எதுவுமில்லை… சோர்வு ஏற்படலாம் உங்களுடைய தோல் மஞ்சள் நிறமாக மாறலாம் சிறுநீர்க் கருமையானதாக மாறுகிறது கடுமையான வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது ஆனால் எல்லாமே பொதுவான அறிகுறிகள் தான் இரைப்பை குடலை பெரிய அளவில் பாதிக்கும் இந்த கல்லீரல் நோய் வெளியில் தெரியாமலேயே மனிதனை பலமுறை மரணத்தை நோக்கி இட்டுச் சென்ற உதாரணங்கள் உண்டு

வெறும் தண்ணீரின் மூலமே பரவாமல் எப்படி டிஸ்பி என்பது நரம்புவழி போதைப்பொருள் பயன்பாடு மோசமான உடலுறவு மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை மூலமாகவும் பாதிக்கப்பட்ட நபரோடு சேர்ந்து வாழ்வதன் மூலமும் கூட பரவுகிறது.. எனவே இதற்கு எதிரான தடுப்பூசி என்பது மிகப்பெரிய தேவையாக உணரப்பட்டது.. அயல்நாடுகளில் கிடைத்து வந்த தடுப்பூசிகள் மிகவும் விலை உயர்ந்தவையாக இருந்தன.. HEPATITIS B பரவும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் என்று ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்ட இந்த தடுப்பூசி பிறகு படிப்படியாக பொதுமக்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் இந்தியாவில் ஏறக்குறைய இலவசமாக வழங்கப்பட்டது.. இந்த நோய்க்கான தடுப்பூசிக்கு மறுசீரமைப்பு டிஎன்ஏ நுட்பங்களை பத்மநாபன் அறிமுகப்படுத்தினார்.. நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான இந்தியா மையங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நோய் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசிகளைத் தவிர வேறு வழியே இல்லை ..இந்த தடுப்பூசியுடன் டிப்தீரியா டெட்டானஸ் பெர்டுசிஸ் போன்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளையும் இணைத்து உலக சுகாதார அமைப்பு மூன்றாம் உலக நாடுகள் முழுவதிலும் பத்மநாபன்ன் தடுப்பூசியை பயன்படுத்திக் கொண்டது..
வெறும் தடுப்பூசி கண்டுபிடிப்புவராக மட்டுமின்றி பத்மநாபன் இந்திய அளவில் மருத்துவ நிறுவனங்களை இந்திய அரசினுடைய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை ….தலைமை ஏற்று மேம்படுத்திய பெருமைக்கு உரியவர்.. சமரசமற்ற கடுமையான உழைப்பாளியான அவர் பெங்களூரின் இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநராக இருந்த பொழுது ஆயிரக்கணக்கான ஆய்வு மாணவர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.. ஜீ பி என்று அவருடைய மாணவர்களாலும் சக விஞ்ஞானிகளாலும் அன்போடு அழைக்கப்படுபவர்.. இந்தியாவின் மிக முக்கியமான மனிதர் என்று டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாம் இவரை வர்ணித்து இருக்கிறார்.. நேஷனல் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் இவரை இவருக்கு பெல்லோஷிப் கொடுத்து கௌரவித்துள்ளது.. 1991 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும் 2003 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் பெற்றார்.. தற்போது இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான விஞான் ரத்தினா விருதை அவர் பெறுவது சாலப் பொருத்தமாகும்
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: மனச்சிதைவு நோயின் உலக வித்தகர் தாரா ரங்கசாமி (Thara Rangaswamy)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Hepatitis-B தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதைத் கண்டுபிடித்தவர் இவர்தான் என இப்போதுதான் தெரிகிறது. நன்றி டாக்டர்.கோவிந்தராஜன் பத்மநாபன்.
சிறப்பு 💐
Pingback: இந்திய மரபணு உயிரியலின் சர்வதேச அடையாளம் நிஷா கண்ணன்