தொடர்- 9 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
இந்தியாவின் ஒப்பற்ற புவி இயற்பியலாளர் அபிஜித் முகர்ஜி [Abhijit Mukherje]
புவியியல் மற்றும் புவி இயற்பியல் என்பது மிக முக்கியமான அறிவியல் துறை ஆகும்.. பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பல்வேறு பொருட்கள் இவற்றோடு பூமியின் வளிமண்டலம் மற்றும் கிரகங்களின் அறிவியல் இவற்றை உள்ளடக்கிய துறையின் இந்திய வல்லுநர் தான் அபிஜித் முகர்ஜி. தற்போது காரக்பூரில் உள்ள IIT சுற்றுசூழல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் ஆய்வகத்தின் தலைவர்.. இந்தியாவில் நிலத்தடி நீர் குறித்த முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டு இன்று உலக அளவில் வல்லுநராகத் திகழ்பவர் அவர். ஆர்சனிக் என்னும் வேதிப்பொருளின் துகள்கள் இந்திய மண்ணின் நிலத்தடி நீரில் கலந்திருப்பதை அரசுக்கு எச்சரிக்கையாக விடுத்தவர்.
அபிஜித் முகர்ஜி தெற்காசியாவில் நன்கு அறியப்பட்ட நிலத்தடி நீர் வல்லுநர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் கால அடிப்படையிலான நண்ணீர் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் அபூர்வமான ஆராய்ச்சியாளர் இந்தியா முழுவதும் பயணித்து நிலத்தடி நீர் ஆதாரங்களை ஒரு தனி வரைபடமாக வெளியிட்ட பெருமை அவரைச் சேரும்… சமீபத்தில் இந்தியாவில் நிலத்தடி நீர் ஆராய்ச்சியின் முக்கிய முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தவர் அவர்.. சிந்து கங்கா பிரம்மபுத்ரா நதிப்படுகைகளில் நிலத்தடி நீர் எவ்விதம் மாசடைந்துள்ளது என்பது குறித்த அவருடைய கண்டுபிடிப்புகள்மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தின… ஆர்சனிக் பூச்சிக்கொல்லி மாசுபாடு நம்முடைய நிலத்தடி நீரில் கலந்துள்ளதையும் நுண் நெகிழி என்று அழைக்கப்படும் MICRO PLASTIC நிலத்தடி நீரையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டு உலகை அதிர்ச்சி அடைய வைத்தார்.
இந்தியா தொடர்ந்து பூவி குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது..
இந்தியா முழுவதும் பல்வேறு புகைப்படங்களை வானிலிருந்து இந்த செயற்கைக்கோள்கள் நமக்கு அனுப்புகின்றன இந்த செயற்கைக்கோள்கள் நமக்கு அனுப்புகின்ற தரவுகளை வைத்து நம் நாட்டில் பல வகையான தாதுக்கள் முக்கியமான வேதிப்பொருட்கள் எங்கெல்லாம் கிடைக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது அதேசமயத்தில் நிலத்தடி நீர் ஆதாரம் எங்கெல்லாம் அதிகம் காணப்படுகிறது என்பதையும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது மில்லியன் கணக்கான இந்திய மக்களுக்குக் குடிநீர் சேவை வழங்குவது என்பது ஒரு பிரம்மாண்ட பணியாகும்.. இந்த பணியில் தனது குழுவை அர்ப்பணித்துக் கொண்டு செயற்கை நுண்ணறிவின் மூலம் செயற்கைக்கோளின் உடைய தரவுகளை எவ்விதம் ஆய்வுசெய்து சரியாக… விவரத்தை எடுப் பது என்பதற்கு .. முகர்ஜி ஒரு கணினி மென்பொருளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்..ABIJIT PROGRAMMING என்று பிரபலமாக அது அழைக்கப்படுகிறது.
இன்று புவியில் கிடைக்கும் நன்னீரில் 30 சதவிகிதம் நிலத்தடி நீர் ஆகும் .. புவியின் அடியில் உள்ள பாறைகளின் இடைவெளிகளிலும் புவிக்கு அடியில் இருக்கும் நீர் ஊற்றுகளிலும் இருந்து இவ்வகையான நீர் நமக்கு கிடைக்கிறது .. புதிதாக நிலத்தடி நீர் என்பது ஆழமற்ற நீர் நிலைகள் வழியாகப் பாயும் நீராக கருதப்படுகிறது ஆனால் தொழில்நுட்ப ரீதியில் அது மண்ணின் ஈரப்பதம் உறைந்த மண்ணின் அளவு மிகக் குறைந்த ஊடுருவக்கூடிய அடித்தளத்தில் ஆசையா நிலையில் உள்ள நீர் ஆழமான புவி வெப்ப அல்லது எண்ணெய்களை உருவாக்கும் அமைப்பைக் கொண்ட நன்னீர்கள் என்று பல வகையாக அறியப்படுகின்றன.. நிலத்தடி நீர் மிகவும் மலிவானது ஆனால் மனிதனின் தேவைக்கு ஏற்ப குறைந்த அளவு அதை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது .. மேற்பரப்பில் இருக்கிற நீர் நிலைகளை விட நிலத்தடி நீரின் மாசு மிக மிக குறைவு.. நிலத்தடி நீரைக் கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூன்று கருவிகளை புதுமைகள் செய்து அபிஜித் அறிமுகம் செய்தார் நீர்நிலை மீட்டர்கள் நீர்நிலை லாங்வர்கள் மாதிரி எடுப்பதற்கான PILE.. சுத்திகரிப்பு PUMP .. மற்றும் நீரின் PH அறிவதற்கான அமைப்பு, மின்சார கடத்துதிறன், கரைந்துள்ள ஆக்ஸிஜனின் அளவு இவர்களையெல்லாம் ஆய்வு செய்யும் ஒற்றை கருவியை அபிஜித் அறிமுகம் செய்தது தான் மிகப்பெரிய பங்களிப்பாகும்.
அபிஜித் முகர்ஜியின் பங்களிப்புகளையிலேயே நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் நம்முடைய இந்தியாவின் தார் பாலைவனத்தில் எங்கெல்லாம் நிலத்தடி நீர் ஆதாரங்கள் உள்ளன என்பது குறித்த ஐந்தாண்டுகளுக்கு களத்தில் நேரடியாகச் சென்று அவர் சேகரித்த மிக முக்கியமான தரவுகள் ஆகும்..PLANETARY SCIENCE அதாவது கிரக அறிவியல் ஏனும் துறையில் மட்டும் தான் பாலைவனங்களைக் குறித்த விரிவான ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.. பூமியினுடைய சந்திரன்.. மற்றும் சூரிய குடும்பத்திலுள்ள ஏனைய சிறு கிராமங்கள் பாலைவனங்களை ஒத்த பகுதிகளை கொண்டுள்ளன.. பாலைவனங்கள் குறித்த கல்வி இந்த துறையின் ஒரு இடை நிலை துறை என்று அழைக்கப்படுகிறது.. விண்வெளி இயற்பியலையும் சூரியன் குறித்த கல்வியையும் பூவி குறித்த கல்வியையும் இணைக்கின்ற ஒரு பாலமாக செயல்பட்டால் மட்டும் தான் பாலைவனங்கள் குறித்த மர்மங்களை நாம விடுவிக்க முடியும்..
GEO PHYSICS இன்று தனித் துறையாகவே வளர்ச்சி அடைந்துள்ளது.. இயற்கை அறிவியலை இயற்பியல் ஓடு இணைக்கும் அற்புதம் நிகழும் பொழுது பாலைவனம் குறித்த மர்மங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.. எரிமலைகளினுடைய இருப்பு மாக்மகளின் தலைமுறை காந்தப்புலங்களை மின்காந்த வெளிகள் இவற்றைக்கடந்து பாலைவனத்தில் நிலத்தடி நீர் இருப்பதை கண்டுபிடித்து முகர்ஜி உலகிற்கு அறிவித்தார்.. பிறந்தது செயற்கையான பாலைவனச் சோலைகள் எனும் புதிய சுற்றுலா துறை அபிஜித் முகர்ஜி கல்கத்தாவைச் சேர்ந்தவர் அவர் சவுத் பாயிண்ட் உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.. முகர்ஜி புவியியல் பாடத்தில் இளம் கலை அறிவியல் பட்டம் பெற்றவர்..1999 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார் மேற் படி ஆய்வுகளுக்காக முகர்ஜி கனடாவில் பல ஆண்டுகள் பணிபுரிந்தால்.. கென்டக்கி KENTUCKY பல்கலைக்கழகத்தில் நிலத்தடி நீர் துறைக்காகவே தனியாக ஒரு முதுகலைப் பட்டம் பெற்றார் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வையும் முடித்தார்.
2016 ஆம் ஆண்டு தற்போது தான் சார்ந்திருக்கும் காரக்பூர் ஐ ஐ டி யில் பேராசிரியராக இணைந்தார். அவர் அமெரிக்க சர்வதேச புவியியல் குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டார் அல்பர்ட்டா புவியியல் ஆய்வு. அல்பெர்டா அரசாங்கத்தின் ஆற்றல் வளங்கள் பாதுகாப்பு வாரியத்தில் நீர் நிலவியர் நிபுணராக அங்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். நம்முடைய நாட்டின் நிலத்தடி நீர் வளங்களை பாதுகாக்க தனி சட்டங்களை இயற்ற வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் போர்க் குரலாகும். அவருக்கு 2020 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: இந்திய குவாண்டம் கணினியியலின் தந்தை அருண் குமார் பதி (Arun K. Pati)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: மனச்சிதைவு நோயின் உலக வித்தகர் தாரா ரங்கசாமி